ஆராய்ச்சி

988 44 8
                                    

" அப்பா....எனக்கு அம்மா வேணும்....." என்று தொடங்கிய குழந்தையின் குரல் கேவலாக மாறி அழுகையாக உருவெடுத்தது.

" என்னாச்சு...நிலா......" என்றவாறு வீட்டிலிருந்த ஆதியன் தந்தை தாய் மற்றும் ஆதியின் நண்பன் ஜீவாவும் விரைந்து வர நிலாவின் அழுகை மேலும் அதிகமாகியது.

" பாட்டி..........எனக்கு அம்மா வேணும் நான் அம்மாட்ட போகனும்......." என்றவிறு பெருங்குரலெடுத்து அழுதாள் அக்குழந்தை.

" நிலா....நிலா....இதோ பாரு அப்பா பாரு...."

" ம்......அம்மா வேணும்......ஊ.......ஊ"

" நிலா நான் சொல்றத கொஞ்சம் கேளுமா....மொதல்ல அழுகையை நிப்பாட்டு."

" ம்.....அம்மா......அம்மா....."

" உனக்கு அம்மா வேணுமா வேணாமா..."

" வேணும்....வேணும்....."

" அப்ப மொதல்ல அழுகையை நிறுத்து அப்பதானே அப்பா சொல்றதை கேட்க முடியும்."

" ம்....ம்...." அழுகையை அடங்கி கேவலில் நிறுத்தினாள் நிலா.

" ம் இந்தா இந்த தண்ணியை முதல்ல குடி ," என்றவாறு அவளை சமாதானப்படுத்திய ஆதித்யன் அவளை நீர் பருக செய்தான்.அவளது மன நிலை சமநிலையை எட்டும் வரை காத்திருந்தவன் ," நிலாக்கு அம்மா ரொம்ப பிடிக்குமா??"

" ஆமா எனக்கு அம்மா ரொம்ப ரொம்ப பிடிக்கும்."

" உனக்கு ஞாபகம் இருக்கா நம்ம அம்மாவுக்கு அடி பட்டது."

" ம்...."

" அம்மாவுக்கு நிறைய அடி பட்டிடுச்சு அதனால டாக்டர் அம்மாவை நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. அம்மா இப்போ டாக்டரோட ட்ரீட்மென்ட் ல தான் இருக்காங்க."

" அம்மா இங்க வர மாட்டாங்களா நிலாவை பார்க்க மாட்டாஙக்களா?"

"இல்லைமா.....அம்மா இப்ப ட்ரீட்மென்ட் ல இருக்காங்க அதனால நம்ம யாரையும் பார்க்க வேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்கடா. அப்படி அவங்க இருந்தாங்கனா சீக்கிரமே சரியாகிடுமாம்."

" நீங்க கூட பார்க்க கூடாதா பா?"

" பார்கலாம் ஆனால் அவங்களுக்கு நம்மளை அடையாளம் தெரியாது நிலாம்மா."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now