தோழன்

1.8K 96 18
                                    

மாத்திரையின் உபயத்தினால் இரவு நன்றாக தூங்கிய மது காலையில் கண் விழிக்கும் பொழுது சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் உணர்ந்நாள்.தன்னை சுற்றி நோக்கியவளின் மனதில் முதல் நாள் மாலை சம்பவங்கள் ஒன்றொன்றாக நினைவு வர அதை புறம் தள்ளியவள் தன் தாயை நோக்கினாள்.அவரோ வீட்டிற்கு செல்வதற்கான ஆயத்தங்கள் செய்துகொண்டிருப்பது உணரமுடிந்தது.மெதுவான குரலில் ," மாம்....."என மது அழைத்த அடுத்த நொடி பரபரப்புடன் அருகே வந்தவர்.

" என்னமா முழிச்சிட்டியா?? எதுவும் வேணுமா??"

" ம்...நான் ரெப்ரெஷ் ஆகனும்,"

" ம்...சரிமா இதோ உன் ட்ரெஸ் கூட இருக்கு இந்த புடவைய கூட மாத்திக்க,"

" என் ட்ரெஸ் யாரு கொண்டுவந்நா??"

" காலையில அப்பா வந்தாருமா மாத்திக்க ட்ரெஸ் வேணும் இல்லையா அதான் அப்படியே அதுவும் கொண்டுவந்து கொடுத்தாரு,"தாயின் வார்த்தையை கேட்டுக்கொண்டே தன்னை ஆராய்ந்தாள் முதல் நாள் பொறுத்தப்பட்டிருந்த சலைன் அகற்றப்பட்டிருந்தது. தலையில் பெரிய கட்டும் கைகளில் சிறு பிளாஸ்டரும் இடம் பெற்றிருந்தனர்.தன்னால் எழ முடியும் என்று தோன்றவே படுக்கையை விட்டு எழுந்தவள் தள்ளடியபடி மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.
அதை பார்த்து பதறிய அவளின் தாய் ," பார்த்துமா....,"என கூறி அவளை நெருங்க முயல ," நத்திங் மாம் ஐ கேன் மேனேஜ், நேத்து முழுக்க படுத்திருந்தனால அப்படி இருக்கு," என கூறி மேலும் முயன்று மெதுவாக தன் கால்களை தரையில் ஊன்றினாள் அவளின் விரல் நகங்களின் வெறுமை மீண்டும் அவள் மனதை குழப்ப அதை புறம் தள்ளியவள் தாய் கொடுத்த மாற்றுடையை வாங்கிக்கொண்டு ஃபெரெஷ் ஆக உள்ளே சென்றாள்.

அதுவரை தன் நிழலுருவத்தை காணாத மது அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன்னை நோக்கினாள்," அழகான பிங்க் நிறத்தில் சில்க் காட்டன் ஆங்காங்கே சில இரத்த துளிகள் மைதீட்டாத விழி த்ரெட்ங் செய்யப்படாத புருவங்கள் சாயம் பூசாத உதடு கழுத்தில் மெலிதாக ஒரு தங்க செயின் அதில் ஒரு சிறிய வைர டாலர் மற்றும் பெரிதாக ஒரு தங்க செயின் அதில் கோர்க்ப்பட்டிருந்த தாலி. இது தான் தானா?? என்ற சந்தேகம் மீண்டும் மனதில் வலுவாக ஊன்றி நிற்க அதன்.விடைதெரிய வேண்டும் என்றால் அதற்கு முதலில் மருத்துவமனையை விட்டு வெளியேறுவது மிகவும் முக்கயம் என்பதை உணர்ந்தவள் வேகமாக தன் வேலையை முடித்து வெளிவந்தாள்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now