புரியாத புதிர்

3.5K 120 43
                                    

அந்த அழகிய அரண்மனை போன்ற வீடு தனது காலை நேர பரபரப்பை இழந்து நிதானத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தது. அந்த வீட்டின் தலைவரும் தன் கணவருமான  திரு சௌந்தரனை அலுவலகத்திற்கும் அந்த வீட்டின் குட்டி தேவதை மதியழகியை கல்லூரிக்கும் அனுப்பிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்த அந்த வீட்டின் தலைவி சரஸ்வதி தன் மூத்த மகள் மதுமிதாவின் வருகையை உணர்ந்து எழுந்து வெளியே வந்தார்.

" என்னடா...நீ எப்போ வந்த?? நான் உன்னை கவனிக்கலையே ?" என்று வாஞ்சையுடன் வினவியவர்  தன் மகளை ஆசையுடன் நோக்கினார், பேபி பிங்க் நிறத்தில் சில்க் காட்டன் புடவையில் அலங்காரம் எதுவுமில்லாமல் கழுத்தை சுற்றி கோல்டன் நிற துப்பட்டாவை சுற்றியபடி முகத்தில் ஒரு வித தயக்கம் குடிகொள்ள நின்ற தன் மகளை பார்த்த தாயின் மனது எப்பொழுதும் போல இப்பொழுதும் பெருமை கொண்டது.

மனதில் குற்ற உணர்வு எழுந்தாலும் அதை அடக்கியவள்," இப்பதான்மா வந்தேன் , அப்பறம் அம்மா .....நான் என் ஃபிரென்டோட கல்யாணத்துக்கு போகனும் னு கேட்டிருந்தேனே??அப்பா எதாவது சொன்னாங்களா?? என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

தன் மகளை பார்த்து சிரித்தவர் ," அப்பா உன்னை பத்திரமா போய்டு வர சொன்னாங்க , அடிக்கடி ஃபோன் பண்ணி பேச சொன்னாங்க  ," என்று கூறிவிட்டு பின் ஒரு சிறு இடைவெளி விட்டு," ஆறுமுகம் தாத்தாகிட்ட சொல்லிருக்காங்க அவரு உன்னை கொண்டு போய் விட்டுட்டு அங்கயே இருந்து இரண்டு நாளுக்கு அப்பறம் உன்னை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவாரு  ," என்று கூறினார்.
தன் அன்னையை ஒரு வித பயத்துடன் நோக்கிய மது பின்பு ஒரு வித தயக்கத்துடன் ," இல்லை மா அதுவந்து நான் என் ஃபிரெண்ட்ஸ் கூட போறேன் அவளோட கார்லயே போய்டு வந்திடறேனே ," என்று ஒருவிதமாக கூறி முடித்தாள்.

அவளது பதிலில் ஒரு நொடி திகைத்த சரஸ்வதி ," என்னடா இது புது பழக்கமா இருக்கு. அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க  மாட்டாங்கனு உனக்கு தெரியாது டா ," என்று சிறு கவலையுடன் வினவினார் .

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Wo Geschichten leben. Entdecke jetzt