புதுமுகங்கள்

1.9K 74 34
                                    

பெங்களூரின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த அலுவலக வளாகம் மிகப்பெரிதாக இருந்தது. அந்த பெரிய வளாகத்திற்கு பொதுவானதொரு பெரிய இரும்பு கதவு பொருத்தப்பட்டிருக்க அதற்கு இரு காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இளஞ்சூரியனின் இதம் மறைய தொடங்கி வெயிலின் தன்மை அதிகரிக்க தொடங்கும் காலை வேளையில் அந்த அலுவலக வளாகத்தின் காவலாளிகள் ஐடி கார்டை சரிபார்த்து அங்கே ஊழியம் செய்பவர்களை மட்டும் உள்ளே அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

பெரிய இரும்பு கதவை தாண்டியதும் இருபது அடி தார் சாலை ஐநூறு மீட்டர் நேராக சென்று பின் மூன்றாக பிரிந்தது.  ஊழியர்கள் அனைவரும் இருபுறமும் செல்லாமல் நேரான பாதையில் சென்று நடுநாயகமாக அமர்ந்திருந்த அந்த அலுவலக கட்டிடத்தை அடைந்தனர்.

ஆறு தளங்களை தன்னகத்தே கொண்டு கம்பீரமாக நின்றிருந்த அந்த அலுவலக கட்டிடத்தில் A.K.HOMES என்று பெரிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

A.K. HOMES பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு புகழ் பெற்ற நிறுவனம்.இவர்களின் வேலை காலி மனையை வாங்குவதிலிருந்து தொடங்கி வாடிக்கையாளர்கள் மனதறிந்து  அழகிய இல்லமாக அதனைமாற்றி  அவர்களிடம் ஒப்படைத்ததும் முடிவடைந்துவிடும்.

ஒரு கட்டுமானத்திற்கு தேவையான அனைத்தையும் இவர்களே செய்து விடுவர்.தரை தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை நிறுவியவர்கள் முதல் தளத்தை தங்களின் சேல்ஸ் டிபார்ட்மென்டாக வடிவமைத்திருந்தனர், வீடு கட்டுவதன் முதல் படி முதல் தளத்தில் அமைந்திருந்தது. அரசாங்கத்தொடர்புகள் , அனுமதிகள் போன்றவற்றை  கவனிக்க தனி குழு இரண்டாவது தளத்திலும் , வீட்டின் ஃப்ளான் மற்றும் இன்டீரியர் டிசைனிங்(plan and interior designing) மூன்றாவது தளத்திலும், கட்டுமானத்திற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கும் அலுவலகம் நான்காவது தளத்தாலும், கட்டுமானம் நிறைவடைந்ததும் மின்சாரம் மற்றும்   நீர்நிலைகளிருந்து நீரை எடுத்து செல்ல தேவையான குழாய்கள் அமைக்கும் (electrical and plumbing) பிரிவு ஐந்தாவது தளத்திலும்.இவை அனைத்தையும் முடிவு செய்யும் அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன்(administration) பிரிவு ஆறாவது தளத்திலும் அமையப்பெற்றிருந்தது.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon