பிரிவு

1.1K 60 27
                                    

" என்ன அமைதியாகிட்ட ஆனந்த்?"

" ம்...ஒன்னுமில்லை பாட்டி ஏதோ யோசனைகள் ," என்று கூறியவன் பின்," பாட்டி மணி பாருங்க லேட் ஆகிடுச்சு வாங்க சாப்பிடலாம்," என்று எழுந்து கொண்டான்.

" அட ஆமா நானும் நேரத்தை கவனிக்கலை, சரி ஆனந்த நீ போய் மதுவயும் கூப்பிட்டு வா நம்மை சேர்ந்து சாப்பிடலாம்," என்று கூறி அவரும் எழுந்து கொள்ள ஆனந்த அங்கேயே நின்றான்.

" என்னாச்சு ஆனந்ந மதுவை கூப்பிடலையா?"

" இல்லை பாட்டி நீங்களே கால் பண்ணுங்க."

" ம்...சரியா போச்சு அப்பறம் நீ எப்படி அவகிட்ட நெருங்க முடியும்? இதோ பாரு உன் மொமைல எடுத்து அதிகார தோரணை இல்லாம அமைதியா சாப்பிட கூப்பிடு அவ வருவா," என்று அவனுக்கு எடுத்து கூறியவர் அவனுக்கு தனிமை கொடுத்துவிட்டு  டைனிங் ஹால் நோக்கி சென்றார்.

ஆனந்திற்கு அவள் சரியாக பதில் கூற மாட்டாள் என்பது தெளிவாக புரிந்தது இருப்பினும் பாட்டியின் பேச்சை மீற முடியாமல் மிகுந்த யோசனையுடன் செல்லை எடுத்து அவளை அழைத்தான்.

பெல் அடித்து முடியப்போகும் நேரம் அதை அட்டன்ட் செய்தவள்," சொல்லுங்க ஆனந்த் ," என்று சாதாரணமாக வினவினாள்.

" மது சாப்பிட வா பாட்டி உனக்காக வெயிட் பண்றாங்க,"

" அச்சோ பாட்டி இன்னும் சாப்பிடலயா இதோ இனண்டு நிமிஷத்தில வந்தர்றேன்."என்றவளின் குரலில் ஆச்சர்யப்பட்ட ஆனந்த் பாட்டியின் கூற்றில் இருந்த உண்மையை புரிந்து கொண்டான்.

" சாரி பாட்டி நேரத்தை பார்கலை ," என்று வருந்தியவள் அவர்களுடன் அமைதியாக உணவை முடித்துக்கொண்டு  அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

தன் அறை புகுந்தவள் லாப்டாப்பில் ஆழ்ந்து போனாள்.நேரத்தை கவனிக்காமல் ஆழ்ந்திருந்தவளை அதிரவைத்தது விக்ரமின் மெயில்.

அவனது மெயிலை பாரத்த மது தன் மொபைலை எடுத்து அவனை அழைத்தாள்.

************

மதுவை அவளது வீட்டின் அருகே இறக்கி விட்டவன் தனது வாகனத்தை அடையும் பொழுது கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.தன்னவளின் விளக்கங்களை கேட்டவனின் மனம் காயப்பட்டிருந்தது.அதை வெளிக்காட்ட வழிதெரியாமலே எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறினான்.தன் வாகனத்தில் ஏறி அமந்ததுமே கோபம் குறையாமல் இருந்தவன் மதுவை நோக்க அதுவரை அவனது பார்வைக்காகவே காத்திருந்தவள் போல புன்னகை பூசிக்கொண்டாள்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now