ஆராய்ச்சி

Magsimula sa umpisa
                                    

" ஏன்பா....அம்மா என்னை மறந்துட்டாங்களா??"

" உன்னை எப்படிமா அம்மா மறப்பாங்க அந்த மாத்திரை சாப்பிட்டா சீக்கிரம் சரியாகிடும் ஆனால் மாத்திரை சாப்பிடும் போது உங்க யாரையும் அவங்களுக்கு அடையாளம் தெரியாது உங்களுக்கு ஓகேவா னு டாக்டர் என்கிட்ட கேட்டாங்கமா. அப்பா என்ன சொல்லனும்னு நீங்க சொல்லுங்க பார்போம்."

" எனக்கு அம்மாக்கு சீக்கிரம் சரியாகி பழையமாதிரி நிலாகூட இருந்தா போதும்பா மாத்திரை சாப்பிடும்போது தானே நிலாவை தெரியாது பரவாயில்லை பா நான் வெயிட் பண்றேன்." என்று கூறி தன் கண்ணீரை துடைத்துக்கொண்ட அந்த பிஞ்சு குழந்தையை வாரி நெஞ்ஙசோடு அனைத்துக்கொண்ட ஆதியின் கண்களில் கலங்கியிருக்க இக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த மற்ற மூவரின் நிலை இதை விட மோசமாக இருந்தது.

நிலாவை சமாதினப்படுத்தியவன் அவளை சிறிது நேரம் வெளியே விளையாட அழைத்துச்சென்றான்.அவளது மனநிலையை வெற்றிகரமாக மாற்றியவன் இரவு உணவுன்ன செய்து தன் அருகே படுக்கவைத்துக்கொண்டான்.

மனதில் ஆயிரம் குழப்பங்களும் எண்ணங்களும் போட்டி போட தூக்கம் தொலைதூர கனவானது.இடையிடையே அழைத்த மதுவிடம் பேசியதால் எண்ணங்கள் சமநிலையை அடைய உதவியது என்பதை உணர்ந்தவனின் உள்ளம் மதுவின் மீதிருந்த காதலை அவனுக்கு எடுத்து சொல்லியது.பிடிவாதமாக தன் காதலை மறைத்தவன் அடுத்து செய்ய வேண்டியவைகளை யோசிக்களானான்.

யாருக்காகவும் காத்திராமல் உதயசூரியன் தனது கதிர்களை இப்புவி மீது பரவ தொடங்கினான்.காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுள்ள ஆதி இரவு முழுவதும் உறங்காத போதும் காலை பயிற்சியை தவிர்க்க விரும்பாதவன் வீட்டிலிருந்து வெளியேறினான்.

வழியில் எதிர்பட்ட தெரிந்த நபர்களை பார்த்து புன்முருவல் கொண்டவன் தன் நண்பன் ஜீவாவை கண்டு அவனிடம் சென்றான்.

" என்ன ஜீவா எனக்காக காத்திருக்கியா??"

" வேற வழி நீங்க பெரியாளா ஆகிட்டீங்க நாங்களா வந்துதானே உங்க கிட்ட பேசனும்."

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon