பிரிவு

Start from the beginning
                                    

அவனது கோபம் நொடியில் மறைய காரை கிளப்பி மீட்டிங் நடக்கும் சைட்டை நோக்கி விரைந்தான்.நினைத்ததை விட மீட்டிங் முடிய கால தாமதம் ஆனதால் மீண்டும் அவர்கள் மூவரும் அலுவலகத்தை அடையும்பொழுது நேரம் இரவு எட்டு மணியை தாண்டியிருந்தது.

" ரொம்ப லேட் ஆகிடுச்சே...மிஸ் ஜாக் நீங்க எப்படி போவீங்க?"
" நான் என்னோட டூவிலர்ல போய்குவேன் சார்."

" நீங்க மகேஷ் ?"

" நான் பஸ்தான் சார் என் வண்டியை சர்விஸ் விட்டிருக்கேன்."

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் பின்," நானே ரெண்டு பேரையும் ட்ராப் பண்ணிடறேன் லேட் நைட் நீங்க தனியா போக வேணாம்." என்று பொதுவாக கூறியவன் ," சீக்கிரம் உங்க திங்க்ஸ் எடுத்திட்டு வாங்க ," என்று கட்டளையிட்டுவிட்டு அலுவலகத்தில் காரை பார்க் செய்து விட்டு கீழே இறங்கியவனை வழிமறித்த நபரை கண்டு திடுக்கிட்டான்.

" என்ன மிஸ்டர் விக்ரம் அப்டியே திகைச்சு போய் பார்கறீங்க"

அவன் கேட்ட தருணத்திற்குள் தன்னை மீட்டெடுத்தவன்,"  " சே...என்னடா நீ உன்னை பார்ததுல எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே அவனை அவனை அணைக்க முயல விக்ரமின் கைகளை தட்டிவிட்டவன் " நடிக்காத ஆதி உன் மூஞ்சியே என்னை நீ இங்க எதிர்பார்க்கலைனு சொல்லுது," என்றவனை ," சே..சே...என்ன ஜீவா இது உன்னை போய் விட்டது பஅபடி நினைப்பேனா , ஒரு சந்தோஷ அதிர்ச்சி அதான் ஷாக் ஆகிட்டேன் , சரி அதை விடு ஊருல எல்லோரும் எப்படி இருக்காங்க? என்ன திடீருனு சொல்லாம வந்து நிக்கிற?"

"ஏன் உன்கிட்ட சொல்லாம உன்னை பார்க்க வர கூடாதா?"

" எல்லாத்துக்கும் குதர்க்கமா அர்த்தம் பண்ணா எப்படி ஜீவா, சரி வா வீட்டுக்கு போலாம்,"என்றவன் ," அச்சோ....'என்று யோசிக்களானான்.

" என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறதுல ஏதோ சிக்கல் போல தெரியுது,"

" சே..சே..அப்படியில்லை போற வழியில இரண்டு பேரை இறக்கி விட்டுட்டு போகனும் உன்கிட்ட ஃபிரியா பேச முடியாதேனு நினைச்சேன்,"என்றவன் அப்பொழுதுதான் ஜீவா தன்னிடம் சரியாக பேசாததை  கவனித்தான்," ஜீவா என்னாச்சு ஏன்.என்கிட்ட ஒரு மாதிரி பேசுற?"

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now