சந்திப்பு

Start from the beginning
                                    

அலுவலக நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்ட ஆதி காலைவேளை சுறுசுறுபுபுடன் காணப்பட்டான்.முந்திய நாள் நினைவு அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் முற்றிலும் காணமல் போக விசிலடித்தவாறே தன் வாகனத்தை பார்க் செய்துவிட்டு லிப்டை நோக்கி முன்னேறினான்.லிப்டின் கதவுகள் மூடப்போகும் கடைசி நொடி காலால் அதை தடுத்தவன் வேகமாக உள்நுழைந்து நிமிர தேவதையென மதுமிதா அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

அவளின் சிவந்த நிறத்திற்கு கருப்பு டாப்ஸ் மிகவும் பாந்தமாக பொருந்தியது அவளது அழகில் ஒரு நொடி தன்னை இழந்தவன் விரைவாக தன்னை மீட்டெடுத்து தான் செல்ல போகும் தளத்தின் எண்ணை அழுத்தினான்.

அலைகடலென பொங்கிய மனம் அமைதி நிறைந்திருக்க அவளது முகத்தை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.மதுமிதா ஏதேதோ கோபமா பேசிக்கொண்டிருந்தாள் அவை எதுவும் அவன் செவிகளில் ஏறவில்லை நீண்ட நாட்களுக்கு பின்னால் தன்னவளை மிக அருகில் பார்த்த சந்தோஷம் மட்டும் முகத்தில் பிரதிபலிக்க," காலையிலயே எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற மதுமா?? உடம்பு என்ன ஆகும்??ரிலாக்ஸ் ரிலாக்ஸ்," என கூற அதற்கும் அவள்," ஹவ் டேர் யூ என் பேர சொல்லி கூப்பிட?? என்று பொரிய ," உன் பேரை நான் சொல்லயே உன்னை ஷார்டாதான் கூப்டேன்,"

" யூ..யூ..உன்னை என்ன பண்றேனு பாரு," என சபதம் போட அவன் இறங்க வேண்டிய தளமும் வந்தது.

"பை டியர் அப்பறம் பார்கலாம் ," என்று  கூறி அவள் எதிர்பார்காத நேரம் கண்ணத்தை செல்லமாக தட்டிவிட்டு அவளை கொதிநிலையில் விட்டுவிட்டு கூலாக  இறங்கி  சென்றான் விக்ரமாதித்தன்.

(இந்த அலுவலகத்தில் அவனை அனைவரும் விக்ரமன் என்றே அழைப்பதால் நாமும் இனி அவனை விக்ரமன் என்றே அழைப்போம்..)

நல்ல மனநிலையின் வெளிப்பாடாக சிரித்த முகத்துடன் அலுவலகம் நுழைந்த விக்ரமன் எதிர்பட்ட ப்யூனின் காலை வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான்.

" இன்னும் நேரம் இருக்கு கந்தா நான் சீக்கிரமே வந்துட்டேன், உன் வாட்ச் சரியாதான் ஓடுது," என்று சொல்லிப்போவனை அசடு வழிய பார்த்தவன் ஹி...ஹி..,இளித்தான்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now