பதவியேற்பு

Start from the beginning
                                    

" ஆமா நான் கேள்விபட்டிருங்கேன் பட் பார்ததது இல்லை,"

" இப்ப இந்த மீட்டிங் எதுக்கு அதுவும் இவ்ளோ அவசரமா? என்று வினவிய விக்ரமை ஆச்சரிய பார்வை பார்த்தவர்," உங்களுக்கு தெரியாதா ஆறு மாசம் முன்னாடி வரை இவங்கதான் சேர்மன் அன்ட் எம்.டி. ஆறு மாசத்துக்கு முன்னாடி ," என்று அவர் கூறிக்கொண்டிருக்கையில்," குட் நூன்...ஆல்..."என்ற சத்தம் அவர்கள் முன்பு போடப்பட்டிருந்த மேடையில் இருந்து கேட்கத்துவங்கியது.

( தமிழகத்திற்கு வெளியே உள்ள அலுவலகம் என்பதாலும் அதில் பிற மாநிலத்தவரும் வேலை செய்வதாலும் அங்கே ஆங்கிலமே பிரதான மொழி...ஆனால் நான் இங்கு அதை நம் மொழியில் கூறுகிறேன்)

"குட் நூன் ஆல்....,நான் இந்த அலுவலத்தோட அட்வைஸர் மிஸ்டர்.ரெட்டி. நமது சேர்மன் திருமதி கற்பகதேவி எடுத்த சில அதிரடி முடிவுகளை உங்களிடம் கூறுவதற்காகவே இந்த அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அலுவலகத்தின்அட்வைஸர் என்ற முறையில் அவர்களின் முடிவு சரியாதென்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.," என்று கூறியவாறு மைகை திருமதி.கற்பகதேவியிடம் ஒப்படைத்தார்."

" வணக்கம்... நானும் என் கணவர் திரு.அருணாசலமும் இந்த A.K.HOMES நிறுவனத்தை முப்பது வருடத்திற்கு முன் கட்டிடம் கட்டும் நிறுவனமாகவே தொடங்கினோம். அதை இந்த முப்பது வருடத்தில் மல்டி டாஸ்க்(multi task)செய்யும் நிறுவனமாக மாற்றியது எங்களின் மூளைகளும் கடின உழைப்பும் மட்டுமே.என் கணவர் இருந்தவரை எம்.டியாக நானும் சேர்மனாக அவரும் செயல்பட்டோம்.அவரது மறைவுக்குபிறகு கடந்த இருபத்தைந்து வருடங்களாக இரு பொறுப்புகளையும் நானே கவனித்துக்கொண்டிருந்தேன் .இனி என் பதவியை அடுத்து வரும் சந்ததியினருக்கு பங்களிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.என் பேத்தி கடந்த ஆறு மாத காலமாக ஆக்டிங்(acting) எம்.டி.யாக இங்கே பணியாற்றியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.அவர் இனி A.K.HOMES இன் அத்தனை கிளைகளிற்கும் எம்.டி யாக செயல் படுவார்.இதை நான் அதிகார பூர்வமாக இங்கே அறிவிக்கிறேன். அலுவலகம் சம்மந்தமாக அவர் எடுக்கும் முடிவுகளே இனி இறுதியானது. "என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்," மேலும் எனது பேரன் கூடுதலாக என் பேத்தியை கைட் செய்யவும் பக்கபலமாக இருக்கவும் அவரை இந்த நிறுவனத்தின் ஆக்டிங் சேர்மனாக இன்று முதல் நியமிக்கிறேன்."என்று அவர் கூறி முடிக்கவும் கதவை திறந்து கொண்டு இருவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now