புதுமுகங்கள்

Start from the beginning
                                    

ஆறு தளங்களுக்கும் தனி தனியே மேனேஜர் மற்றும் ஜி.எம்கள் இருக்க அனைத்து ஜி. எம் களுக்கும் தலைமை ஜி.எம்.ஆறாம் தளத்தில் இருந்தார்.அவருக்கு மேலே எம்.டி மற்றும் சேர்மன் இருந்தனர் .

அலுவலகம் ஒரே நிர்வாகத்தை சேர்ததாக இருந்தாலும் ஒவ்வோறு தளத்திலிருப்பவரும் அடுத்த தளத்திலுள்ளவரை உணவு இடைவேளையில் தான் காண முடியும்.தளத்திற்கும் தளத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது.

அந்த நிறுவனத்தின்  மூன்றாம் தளத்தினுள்ளே நுழைந்து கொண்டிருந்த ஜாக் உள்ளே அமர்ந்திருந்தவளை கண்டு கண்கள் விரிய," ஹே...மீரா.....வாட் எ ப்ளெசென்ட் சர்பரைஸ் நீ எப்படி இவ்ளோ சீக்கிரமே??" என்றுவினவியபடி வேகமாக வந்து மீராவை ஆரத்தழுவிக்கொண்டாள்.

" ஏய்....நீ நெக்ஸ்ட் வீக்தானே ஜாய்ன் பண்ணணும்? என்னை பார்க்காம இருக்க முடியாம இவ்வளவு சீக்கிரம் வந்துட்டியா?"

"ஆசைதான் உனக்கு ,அம்மா இந்த வீக் என்ட் (week end)வரதா இருந்துச்சு ஆனா நேத்தே வந்துட்டாங்க, அதான் நானும் இன்னைக்கே ஜாய்ன் பண்ணிட்டேன்,"

" மெடேர்னிட்டி(maternity )லீவ் மூனு மாசம் அதுல ஒரு வாரம் நீ எக்ஸ்ட்ரா கேட்டிருந்த அதுக்குள்ள என்னடி அவசரம் குட்டீஸ் கூட.இன்னும் ஒரு.வாரம் இருந்திருக்களாம்ல,"

" இருந்திருக்களாம் தான் ஆனால் நான் இல்லாமா ஒருத்தி மூனு மாசமா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா அவளுக்காக தான் வந்தேன்," என்று கூறிய மீராவை நன்றி ததும்பும் பார்வை பார்த்த ஜாக்," தேங்க்ஸ் எ லாட் டியர், நீ வந்தது பத்து யானையோட.பலம் வந்த மாதிரி இருக்கு,"

இருவரும் பணியாற்றுவது ஆர்கிடெக்ட கிளையில் அந்த கிளையில் அனைவருமே ஆண் ஊழியர்கள் இவர்கள் இருவரை தவிர. அதனால் விடுப்பு எடுத்தால் இருவரும் சேர்த்தே எடுத்தனர். இம்முறை மட்டுமே  மூன்று மாதங்கள் மீரா பேறுகால விடுமுறை எடுத்ததால் ஜாக் தனியாக இருக்க  நேர்ந்தது.

" சரி நீ  சீக்கிரம் வந்தத ரிப்போர்ட் பண்ணிட்டியா?"

"ம்...அதெல்லாம் பெரிய இடத்திலயே பேசியாச்சு,"

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now