பகுதி -46

Start bij het begin
                                    

"சரிபா நீங்க நிலாவை பிடிங்க நான் போய் டாக்டரை பார்த்துட்டே வரேன்."என்று கூறியவன் நிலாவை அவர் கைகளில் தர பாதி தூக்கத்தில் இருந்த நிலா பெரிதும் ஆர்பாட்டம் செய்யாமல் தன் தாத்தாவின் தோள்களில் படுத்துக்கொண்டாள்.

வெளியே வந்த மருத்துவரோ,"நீங்க பேஷண்டுக்கு என்ன ரிலேஷன்?"என்று வினவ ஆதியோ," நான் அவங்களோட பையன் டாக்டர்.அம்மா எப்படி இருக்காங்க?"

"சீரியஸ் ஒன்னும் இல்லை.அவங்களுக்க வந்தது மயில்ட் அட்டாக் (mild attack).ஆன்ஜியோகிராம் எடுத்து பார்த்ததில சின்னதா ஒரு அடைப்பு(block)இருக்கு."

"அதை கரைச்சுடலாம் ல டாக்டர்?"

"யெஸ் ரொம்ப சின்ன ப்ளாக் தான் அதை மாத்திரையிலே கரைச்சுடலாம்.ஆனாலும் அவங்க அதிகமா வேலை செய்யுறது கூடாது. கொஞ்சம் மனம் அமைதியான இடத்தில இருக்கிறது நல்லது. மனசுக்கும் உடம்புக்கும் ரெஸ்ட் தேவை.தேவையில்லாமல் அவங்களை கவலை பட வைக்காதீங்க."

"சரி டாக்டர்.அவங்களை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணலாம்."

"மெடிசென்ஸ் லாம் நான் ஏற்கனவே கொடுக்க சொல்லிட்டேன்.இன்னைக்கு ஒரு நாள் அப்சர்வேஷன் (observation) ல இருக்கட்டும் நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ் பண்ணலாம்."

"தாங்க்ஸ் டாக்டர்,"என்று விடைபெற்றவன் தன் தந்தையிடம் விரைந்தான்.அவர் நிலாவை தோளில் சாய்த்துக் கொண்டு எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார்.

"அப்பா....."

"ஆ....வந்துட்டியா பா . டாக்டர் என்ன சொன்னாரு?"

"பயப்பட ஒன்னுமில்லை பா. ஒரு சின்ன அடைப்பு இருக்கு அது மாத்திரை சாப்பிட்டா கரைஞ்சிடும்.இன்னைக்கு ஒரு நாள் இங்க இருந்துட்டு நாளைக்கு வீட்டுக்கு போகலாம் னு சொன்னாரு பா."

"நான் என்னமோ ஏதோ னு நினைச்சிட்டேன் பா. வயசாகிடுச்சுல அதான் மனசு கண்டதையும் கற்பனை பண்ணுது."

தன் தந்தையை நினைத்து மனம் வருந்திய ஆதி அதை மறைத்துக்கொண்டு," என்ன பா நிலா ஒன்னும் உங்களை தொந்தரவு பண்ணலயே?"

Je hebt het einde van de gepubliceerde delen bereikt.

⏰ Laatst bijgewerkt: May 25 ⏰

Voeg dit verhaal toe aan je bibliotheek om op de hoogte gebracht te worden van nieuwe delen!

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Waar verhalen tot leven komen. Ontdek het nu