பகுதி -45

Start from the beginning
                                    

கடிகார முள் அதன் வேலையை செவ்வனே செய்ய கடிகாரம் காலை மணி‌ ஆறு  என்று சுட்டி காட்டியது நேரத்தை மதுவிற்கு உணர்த்தும் விதமாக மதுவின் செல்பேசி அலாரமும் தனது கடமையை செய்ய படுக்கையிலிருந்து மெல்ல கண்களை திறந்தாள் மது.பின் நினைவு வந்தவளாய்  வேகமாக எழுந்து அறை முழுவதும் அவனை தேட அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. சோர்வாக வந்தமர்ந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தை துடைத்து யோசிக்க  புரிந்தது தான் கண்டது கனவென்று. இதயம் தாறுமாறாக துடிக்க கனவில் பார்த்த அவனது முகத்தை கண்முன் கொண்டுவர முயன்றாள்.பலன் தான் கிடைக்கவில்லை.

தனக்கு எதற்கு இப்படி ஒரு கனவு வந்தது என்று புரியாமல் தவித்த மதுவிற்கு ஒரு வேளை தான் வீட்டிற்கு தெரியாமல் யாரையேனும் காதலித்தோமா அதனால் அந்த காதலனின் நினைவுகள் கனவாக வருகின்றதோ என்றெல்லாம் பலவாறாக தன்னை குழப்பிக் கொண்டவள் நேரமாவது புரிய நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு  அவசரமாக எழுந்து  நர்ஸரிக்குகிளம்ப துவங்கினாள்.அங்ஙே அவளுக்கும் காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி புரியாமல்.

முதல் நாள் ஏற்பட்ட சோர்வு நீங்க நன்கு குளித்தவள் ஆலிவ் பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து  கண்ணுக்கு மை தீட்டி மெலிதாக ஒப்பனை செய்தாள். கூந்தலை மொத்தமாக அள்ளி ஒரு கிளிப் இல் அடைக்கியவள் தன் தோல் பையை எடுத்துக்கொண்டு நிலாவை பார்க்கும் ஆவல் கண்களில் தென்பட சந்தோஷமாக ஏதோ ஒரு பாடலின் ராகம் பாடிக்கொண்டு உணவு உண்ண கீழே இறங்கி வந்தாள்.

மேலிருந்து வானத்து தேவதை இறங்கி வருவதை போன்றிருந்த அந்த அழகான காட்சியை இரு ஜோடி கண்கள் விரிந்து பார்தது‌. முதல் ஜோடி கண்கள் அவளை பெருமையுடன் நோக்க அடுத்த ஜோடி கண்களோ காதலும் காமமும் கலந்து நோக்கியது.

உற்சாகத்துடன் படியிறங்க ஆரம்பித்த மது படியின் முடிவில் உற்சாகம் வடிந்தவளாக காணப்பட்டாள்.வரவேற்பறையில் அமர்ந்திருந்த இருவர்களில் ஒருவன் நேற்று தன்னை நோகடித்தவன் என்பதை புரிந்து கொண்டவள் அவனருகே அமர்ந்திருந்த அந்த வயதான பெண்மணியை அறியாத பார்வை பார்த்தாள்.இருப்பினும் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்பது நம் பண்பு என்பதற்காக உதட்டில் ஒரு செயற்கை புன்னகையை வரவழைத்துக்கொண்டு ,"வாங்க..." என்று பொதுவாக கேட்டுவிட்டு உள்ளே இருந்த  தன் தாயிடம் விரைந்தாள்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now