பகுதி 40

Start from the beginning
                                    

"ஓ அப்போ வேறெனனெல்லலாம் டீ இருக்கு?"

"அது நிறைய இருக்கு கண்ணு.ஏலக்காய் போட்டா ஏலக்காய் டீ இஞ்சி போட்டா இஞ்சி டீ எல்லாம் சேர்ந்து மசாலா போட்டா மசாலா டீ புதினா தட்டி போட்டா புதினா டீ இது மாதிரி நிறைய இருக்கு நான் உங்களுக்கு ஒன்னு ஒண்ணா சொல்லி தரேன் சரியா "

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கா. "

"இதுல தேங்க்ஸ் சொல்ல என்ன இருக்கு கண்ணு எனக்கு தெரிஞ்சு தான் நான் உனக்கு சொல்லி தரேன். ஆமா என்ன திடீர்னு சமையல் மேல இவ்வளவு ஆர்வம்?"

"பெருசா ஒன்னும் இல்லக்கா சும்மா கத்துக்கணும்னு தோணுச்சு அவ்வளவுதான் சரிக்கா நான் வரேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு," என்று கூறியவாறு சரோஜா அக்காவிடம் இருந்து விடைபெற்ற சென்றாள் மதுமிதா.

மதுமிதா காலேஜ் செல்ல தொடங்கி இன்றுடன் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நிலாவிற்கு ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்தது 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு என்னென்ன சாப்பாடு சமைத்து கொடுக்க வேண்டும் என்பதை ஆன்லைனில் ஆராய்ந்து கொண்டிருந்த மதுமிதாவுக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது ,"நாம் ஏன் சமைத்துக் கொடுக்க கூடாது பாவம் தாயில்லாக் குழந்தை தானே," என்று யோசிக்க எனக்கு சமையல் தெரியாது என்பது அப்போதுதான் மதுமிதாவின் தலையில் உரைத்தது. அதன் முதல் படியே இன்று சமையலறை சென்று சரோஜாவிடம் சமையலை கற்றுக் கொள்ள தொடங்கியிருந்தாள்.

இந்த இரண்டு மாதங்களும் இரண்டு நிமிடங்களாக ஓடிவிட மதுமிதா காலை 9 மணி தொடங்கி ஒரு மணி வரை டே கேரிலும் பின்பு மூன்று மணி தொடங்கி 8 மணிவரை காலேஜிலும் என மாறி மாறி அவளது நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. ஆயினும் அவள் மனதளவில் மிகவும் முன்னேறி இருந்தாள் தன் கவலைகளை மறந்து சிரிக்கக் கற்றுக் கொண்டாள் மனம் ஒதுங்கி இருப்பதை மறந்து மற்றவருடன் கலந்து பேச தொடங்கியிருந்தாள் தன் கூட்டை விட்டு வெளிவர தொடங்கியிருந்தாள். இவை எல்லாம் அவளுக்கு சந்தோஷமாகவே தோன்றியது இதற்கு காரணமான நிலாவை அவள் மிகவும் நேசித்தாள்.

😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)Where stories live. Discover now