😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

பகுதி - 31

635 37 17
By creativeAfsha

" விக்ரம்....நான் எதுவும் சொல்லலை." என்றவளின் குரல் உள்ளே சென்றிருந்தது.

" ஹே....தப்பில்லை மது.அதுக்கு ஏன் நீ ஃபீல் பண்ற?"

" இல்லை விக்ரம் உங்க பேரு கூட யார்கிட்டயும் சொன்னதில்லை.அவ ஏன் இப்படி சொன்னானு எனக்கு புரியலை."

" மது கமான்...நம்ம இன்னும் டீன் ஏஜ் பசங்க இல்லை.வாய் வார்த்தையால சொன்னாதான் என் மனசு உனக்கு புரியுமா??"

" விக்ரம் ப்ளீஸ்..."

"மது எவ்வளவு நாள் உண்மைகிட்ட இருந்து உன்னால ஓடிப்போக முடியும்.என்னோட நடவடிக்கை செயல் எல்லாமே என்னோட உணர்வ உனக்கு புரியவச்சிருக்கும் அப்படீங்கிறதுல எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.அதே மாதிரி உன்னுடைய செயலும் நடவடிக்கை உன்னை எனக்கு அழகா வெளிக்காட்டிடுச்சு."

"இல்லை விக்ரம் எனக்கு உங்கமேல இருக்கிறது ஒரு விதமான  க்ரஷ்னு சொல்லலாம் மத்தபடி ஒன்னுமில்லை."

" என்னால உன்னை புரிஞ்சுகிட்ட அளவு கூட உன்னால உன்னை புரிஞ்சுக்க முடியலையா? பரவாயில்லை உனக்கு உன்னை புரியுறவரை நான் காத்திருக்கேன்."

" நீங்க காத்திருக்க தேவையில்லை விக்ரம் நான் என் பதில இப்பவே சொல்லிடறேன்." என்றவளை தடுத்த விக்ரம்," மது என்னோட உணர்வ நான் உன்கிட்ட பகிர்ந்து கிட்டேனே தவிர உன்னோட பதிலயோ உன்னோட உணர்வையோ நான் தெரிஞ்சுக்க விரும்பலை.எனக்கு உன் மனசு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுடுச்சு ஆனால் உன்னால உன்னோட மனச புரிஞ்சுக்க முடியலை.உனக்கு உன்னை புரியுர வரை நான் காத்திருக்கேன்."

" வேணாம் விக்ரம் எவ்வளவு நாள் கடந்து போனாலும் என் பதில் மாறாது.நீங்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை."

அவளை அதற்கு மேல் பேசவிடாமல் தன் ஆள்காட்டி விரலை அவளின் உதட்டின் மேல் வைத்தவன்," எனக்கு உன் பதில் தேவையில்லை மது. என் மனசுல உள்ள உணர்வ உனக்கு தெரியப்படுத்தினேனே தவிர உன் மனச நான் கேட்கலை.என் வாழ்க்கையில ஒரே ஒரு பொண்ணுக்கு தான் இடம் இருக்கு அது நீதான்.எத்தனை வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்திருப்பேன்.ஒரு வேளை உனக்கு உன் மனச கடைசி வரை புரிஞ்சுக்க முடியலைனாலும் என் காத்திருப்பு முடியாது என் மனசு மாறாது."

"நாம சந்திச்சு பத்து நாள் கூட ஆகாத நிலைமையில என் மேல.ஏன் இவ்வளவு பாசம் வச்சீங்க விக்ரம்?"

" பத்து நாளா???? ம்..... நான் உன்னை முதன்முதல்ல பார்த்தது ஆறு வருஷத்துக்கு முன்னாடி."

" என்ன?? "

" ம்..ஆமா என்னோட யு.ஜி முடிச்சிட்டு பி.ஜி பண்ண ஸ்டேட்ஸ் போயிருந்தேன்.அப்போதான் உன்னை ஒரு நாள் மெட்ரோல பார்தேன்."

"ஆனால் எனக்கு உங்களை பார்த்த நியாபகம் இல்லையே விக்ரம்."

" நான்தான் உன்னை பார்த்தேன்  நீ கண்ண மூடி ஏதோ யோசனையில இருந்த. மடியில உன்னோட பிங்க கலர் ஜெர்கின வெச்சிட்டு அழகான பிங்க் கலர் தேவதையா ஜொலிச்சிட்டு இருந்த உன்மேல இருந்து என்னால கண்ணை நகர்த்தவே முடியலை. ஆனால் உன்னை பின்தொடர முடியாம அவசரமா போக வேண்டியதால மிஸ் பண்ணிட்டேன்."

" என்னை அப்போவே தேடி வந்திருக்கலாமே விக்ரம்.அப்படி மட்டும் நடந்திருந்தா எத்தனையோ விஷயம் நடக்காமலே போயிருக்குமே.எனக்கும் இந்த நிலைமை வந்திருக்காதே." என்று கூறி கலங்கியவளை தேற்ற முடியாமல் நின்றவன்," உன்னை எங்கனு போய் தேட மது.அவ்ளோ பெரிய கலிஃபோனியால உன் பேரு உன் நாடு எதுவும் தெரியாம எங்கனு போய் தேட சொல்ற?"

" சாரி விக்ரம் எனக்கு புரியுது.உங்களை நான் தப்பு சொல்லலை ஏதோ ஆதங்கத்தில அப்படி சொல்லிட்டேன்."

" இல்லை மது நீ இன்னைக்கு கேட்டது எனக்கு எப்பவோ தோனிருச்சு.நீ உன்னை வருத்தப்படுத்திக்காத. நடந்தது யாராலும் மாத்த முடியாது. சரி நேரம் ஆகிட்டே இருக்கு வா கிளம்பலாம்,"என்றவனை மௌனமாக பார்த்த மதுமிதா," விக்ரம் இப்ப நான் சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்காம என்னை புரிஞ்சுப்பீங்களா??"என வினவினாள்.

அவள் முகபாவத்திலிருந்தே அவள் கூற வருவதை ஒருவாறு யூகித்த விக்ரம்," ம்....சொல்லு," என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

" நம்ம பழக ஆரம்பிச்சு பத்து நாள் கூட முழுசா முடியலை.அதுக்குள்ள நம்மகிடையில எப்படி இப்படி ஒரு பந்தம் உருவாச்சுனு எனக்கு புரியலை.அதனால...."

அவளை முடிக்கவிடாத விக்ரம்," மது என் மனச உன்கிட்ட வெளிப்படுத்தினேனே தவிர உன்னை நான் கட்டாயப்படுத்தவோ உன்னோட பதில கேட்கவோ இல்லை அதனால...."

"அதனால???"

" என் மனச தெரிஞ்ச சந்தோஷத்தோட அப்படியே விட்டுடு.எதுவும் ஆராய்ச்சி பண்ணாத.சரி வா கிளம்பலாம் நேரமாச்சு."

தான் கூற வருவது புரிந்தும் புரியாதது போல நடந்து கொண்ட விக்ரமின் மீது முதலில் கோபம் வந்தாலும்  அவனுக்கு புரியவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்ற ,"சரி விக்ரம் நான் அதைபத்தி எதையும் பேசலை.ஆனால் நீங்க முதல்ல கிளம்புங்க நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்னு விரும்புறேன்." என்றவளை பார்த்து பெருமூச்சுவிட்டவன்," வெரி வெரி சாரி மைடியர் இது ஆள் அரவமே இல்லாத பீச் இங்க உன்னை தனியா விட்டுட்டு போற அளவு எனக்கு தைரியம் இல்லை.சோ என் கூட கிளம்பு."

" விக்ரம் ப்ளீஸ் அட்லீஸ்ட் ஒரு பத்தே நிமிஷமாவது இங்க இருக்கேனே,"என்றவளை பார்த்து முறுவலித்தவன்," சரி ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வந்திடறேன் அது வரை நீ இங்க இரு ஆனால் எதாவது பிரச்சினை னா தனியா சமாளிக்கறேனு போகாம எனக்கு உடனே கால் பண்ணு புரிஞ்சதா??"என்று கூறியவனின் குரலில் தென்பட்ட அக்கறையில் மனம் கரைந்த மதுமிதா சரியெனு மேலும் கீழும் தலையாட்டினாள்.

அவள் தலையை செல்லமாக வருடிவிட்டு மதுமிதாவிற்கு தனிமை ஏற்படுதாதி கொடுத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான் விக்ரம்.

தனியே விடப்பட்ட மது நீண்ட ஆசுவாசமூச்சை வெளியேற்றி கடலிற்கருகே சென்று அமர்ந்துகொண்டாள்.

நேரம் மதியத்தை நெருங்கிய போதும் இதமான காற்று சுகமாக உடலை தழுவிசெல்ல மனதின் கவலைகள் மறந்து காற்றில் மிதப்போது போல உணர்வுகொண்ட மதுவின் மடிமேல் ஒரு குழந்தை வந்து விழ," ஹேய்...பாப்பா...என்னாச்சு பாத்துமா," என்றவாறு அவளை தூக்கிவிட்டாள் அந்த தேவதையோ தன் மழலையால்,"  சாடி ஆண்டி,"என்றாள்.

" பரவாயில்லை பரவாயில்லை உனக்கு ஏதும் அடி படலையே?"

" ம்ஹூம்...நிலா பாப்பா ட்ராங் பாப்பா ," என்றவாறு ஓடி விட அவள் கூறிய நிலா மதுவின் காதுகளில் ரீங்காரமிட்டது.நினைவுகள் எங்கேயோ அவளை இழுத்து செல்ல புரிந்தும் புரியாமலும் பல காட்சிகள் கண் முன்னே தோண்றி மறைந்தது.தலை விண் விண் என்று தெரிக்க இரு கைகளால் தவையை தாங்கி பிடித்தவள் வேதனையில் முகம்  சுறுங்கினாள்.காட்சிகள் மாறிமாறி தோன்ற திடீரென மதுமிதாவின் மனக்கண் முன் அவள் அமர்ந்திருக்கும் கடற்கரை தோன்றியது.அவள் மூளையில் பதிந்திருந்த மற்ற நினைவுகளை பின்னே தள்ளிவிட்டு கடற்கரை காட்சி இன்று நடப்பதுபோல அவளுக்கு நினைவுக்கு வந்தது.

மாலை நேர வெயில் உடலுற்குள் ஊடுருவி சென்று குளிர் ஏற்படுத்த தான் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை மேலே போர்த்தியவாரே தன் அருகே விளையாடிய நிலாவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் மதுமிதா.

" மா..மா...நம்ம கொஞ்ச நேரம் தண்ணியில கால் நனைக்கலாமா??"

" அம்மாடி உன்னை கூட்டிட்டு போக பயமா இருக்கே.இரு அப்பா வரட்டும்."

" அம்மா அம்மா ப்ளீஸ்...அப்பா வந்ததுக்கு அப்பறமா நிக்கலாம் இப்ப கொஞ்ச நேரம் நிக்கலாம் மா...ப்ளீஸ்....,"என கெஞ்சிய தன் மகளை கைகளில் வாரி அள்ளியவள் ," சரிடா ஆனால் அம்மா தான் உன்னை கையில வெச்சுப்பேன், சரியா??"

" ம்ஹூம்..மாட்டேன் மாட்டேன் நான் தண்ணியில கால் வைக்கனும்  ப்ளீஸ்....."

" ஆனால்..." என்று தயங்கியவள் பின் சரியென நிலாவை தரையில் இறக்கி விட்டு நிலாவின் கைகளை தன் கைகளுக்குள் பத்திரப்படுத்தி கொண்டு சந்தோஷமாக நீரில் இறங்கினாள்.

முதன் முதலில் கால்களில் நீர் பட்டதும் நிலாவின் உடல் சிலிர்பதை உணர்ந்த மது தானும் சந்தோஷம் கொண்டாள்.

" ஹையா....அம்மா அம்மா பாருங்களேன் தண்ணீ நம்ம பின்னால தள்ளி விடுது."

" ம்....ஆமாடா தண்ணீ நம்மளை பின்னாடி தள்ளி விடுது."கூறிக்கொண்டே மீண்டும் நிலாவுடன் இரண்டு எட்டு வைத்தாள்.இம்முறை கொஞ்சம் பெரிய அலை வருவதை உணர்ந்து கொண்ட மது கண்சிமிட்டும் நொடிக்குள் நிலாவை தூக்கி மாரோடு அணைத்துக்கொள்ள அப்பெரும் அலை மதுவின் கால்களில் புகுந்து அவளை தடுமாற வைத்தது.பிடிப்பதற்கு பிடிமானம் ஏதும் இல்லாததால் தடுமாறி விழப்போன மதுவை இரு வலிய கரங்கள் தாங்கி பிடித்து," பார்த்து மிது....," என்று உரைக்க வேகமாக திரும்பி அக்குரலின் சொந்தகாரனை காண எண்ணினாள்.

அப்படி அவள் திரும்பி நோக்க இரு வலிய கரங்கள் அவளை தாங்கிபிடித்து மீண்டும் ," பார்த்து மிதூ..."என கூறியது

முதலில் நினைவிலும் இரண்டாவது நிஜத்திலும் நடந்த அந்த நிகழ்வில் இருந்த ஒற்றுமை மதுமிதாவை குழப்ப கண்களை திறந்து பார்த்தாள்.அவளை கைகளில் தாங்கி முகத்தில் சொல்லொனா வேதனையோடு நின்றிருந்த விக்ரமையே... அவள் கண்கள் காண மதுமிதா ஸ்தம்பித்தாள்.

நினைவில் தான் கேட்ட குரலும் நிஜத்தில் இருக்கும் குரலும் ஒன்றாக இருக்க.அந்த தொடு உணர்விலும் ஒற்றுமை தோன்ற அதற்கு மேல் யோசிக்க முடியாமல் கண்கள் சொருகி மயங்கி சரிந்தாள் மதுமிதா.

Continue Reading

You'll Also Like

17.2K 1.3K 40
சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
214K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
202K 9.2K 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம்...