😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.2K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

பகுதி 25

974 56 7
By creativeAfsha

" ஜீவா......." தன் நண்பன் தன்னை அடித்து விட்டதை நம்பமுடியாமல் பார்த்தான் ஆதி.

" ஆதி நீ என்ன காரியம் பண்ணியிருக்கனு புரியுதா உனக்கு?"

" நீ இவ்ளோ கோபப்படுற அளவு நான் எந்த தப்பும் செய்யலை."

" தப்பு செய்யலையா அப்போ நீ பண்ணி வெச்சிருக்கிறதுக்கு பேரென்ன??"

" ஜீவா கம் ஆன் நீ நினைக்கிற மாதிரி நான் எதையும் ப்ளான் பண்ணியெல்லாம் பண்ணலை. எல்லாமே அந்த அந்த நேரத்தில நடந்த விஷயங்கள் .அதையெல்லாம் ஒன்னு சேர்த்து பெரிய ப்ளான் போட்டு பண்ண மாதிரி ரியாக்ஷன் கொடுக்காத."

" ஆதி நீ சொல்றமாறியே அந்த அந்த நேரத்துல விஷயங்கள் நடந்திருக்கலாம் ஆனா மொத்தமா பார்க்கும்போது கண்டிப்பா நீ முன்னாடியே எல்லாமே யோசிச்சு பண்ண மாதிரித்தான் இருக்கும்."

" நீ என்னோட உயிர் நண்பன் உன்னாலயே என்னை புரிஞ்சுக்க முடியலையா?"

" ம்ம் அதான் நானும் சொல்ல வரேன் நான் உன் உயிர் நண்பன் எனக்கே தப்பா தான் தோணுது அப்ப மத்தவங்க எப்படி புரிஞ்சுக்குவாங்க சொல்லு??"

" ம்....."

" சரி உன் பேரை ஏன் மாத்தி விக்ரம்னு கொடுத்த?"

" ஹே....சத்தியமா அது மது வோட பாட்டி கம்பெனினு எனக்கு தெரியாது. நான் கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாம  இருக்கனும்னு நினைச்சுதான் சென்னையை விட்டே போனேன்.அப்பதான் பெங்களூர் ல ஒரு நல்ல கம்பெனியில ஆஃபர் வந்துச்சு நான் இண்டர்வியூ அட்டென்ட் பண்ணும்போது அவங்க என் பேரோட முதல் பாதிய கூப்பிட்டாங்க. நீங்க எல்லாரும் விக்ரமாதித்தன் அப்படீங்கிற என்னோட பேர்ல இருக்கிற கடைசி ஆதித்யன்னு கூப்பிடறமாதிரி அவங்க என் பேரோட.முதல் பாதி விக்ரம்னு கூப்பிட்டாங்க.நான் என்ன ஸ்கூல் படிக்கிற பையனா மிஸ் மிஸ் என்னை எல்லாரும்  ஆதி னு தான் கூப்பிடுவாங்க நீங்களும் அப்படியே கூப்பிடுங்கனு சொல்றதுக்கு.அதனால அதை நான் பெருசா எடுத்துக்கலை.அனட் மதுக்குதான் பழசு எதுவுமே ஞாபகம் இல்லையே அப்பறம் நான் எதுக்கு பேரை மாத்தனும் லாஜிக்கா யோசி.ஜீவா."

" ம்.....என் வாயில நல்லா வந்திரும் பாத்துக்க,"

" இப்ப ஏன்டா நீ கோபப்படுற அப்படி நான் என்ன தப்பு பண்ணுன்னு இப்படி பேசுற?"

" ம்...அவங்க பழச மறந்துட்டாங்கனு தெரிஞ்சதும் எதுக்கு அவங்க கழுத்தில தாலியை தொங்கவிட்டு வந்த?"

" அது...ஏதோ அவசரத்தில அப்படி பண்ணிட்டேன்."

" ஓ..இதை நான் நம்பனும்?"

" ம்...மதுக்கு.பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு ஆனால் நாலு வருஷமா நடந்தது ஞாபகம் இருக்குமா இருக்காதானு எனக்கு உறுதியா சொல்ல முடியலை.ஒரு.வேளை அவளுக்கு ஞாபகம் இல்லைனா என்ன பண்றது அதான் அவ கழுத்தில தாலி இருந்தா யாரோ நமக்காக காத்திருக்காங்கனு அவ புரிஞ்சுக்குவா இல்லையா அதான் அப்படி பண்ணேன்.மத்தபடி அவளை காயப்படுத்தனும்னோ கஷ்டப்படுத்தனேம் னோ  சத்தியமா எனக்கு எந்த எண்ணமும் இல்லை."

" நீ அதை மட்டுமா செஞ்ச ? ஹாஸ்பிடல்ல மதுமிதா ஆதித்யன் னு பேரு கொடுத்திருக்க ஆனால் வீட்டு அட்ரஸ் அவங்க அப்பாவோடதை கொடுத்திருக்க, இதுக்கு என்ன கதை வெச்சிருக்க?"

" ஏன் ஜீவா என் மனைவி அடி பட்டு இரத்த வெள்ளத்தில இருக்கும்போது கூடவா நான் ப்ளான் பண்ணியிருப்பேனு நீ நினைக்கிற?"

" கண்டிப்பா...."

" ம்.....நான் அவளோட பேரு மட்டும்தான் சொன்னேன். அவளோட ஐடி கேட்டாங்க அதை வாட்மேன் கிட்ட கொடுத்துவிட்டேன் அதில இருக்கிற அவங்க அப்பா வீட்டு அட்ரஸை அவங்க ஃபார்ம்ல ஃபில் அப் பண்ணி கிட்டாங்க,இதுலயும் என் தப்பு எதுவும் இல்லை ஆனால் நான் சொல்றதை நீ நம்ப மாட்டனு எனக்கு புரியுது, இந்த விசாரனையெல்லாம் இந்த காலை நேரத்தில கண்டிப்பா பண்ணுமா நான் வேணா உங்க ஸ்டேஷனுக்கு வரவா அங்க நீங்க என்னை தாராளமா எப்படி வேணாலும் விசாரிக்களாம்."கூறியவனின் குரலில் வேதனை இருந்தது.இரவு முழுவதும் தூங்காத களைப்பு கண்களில் பிரதிபலித்தது.

" ஆதி நீ ஏன் இப்படியெல்லாம் பேசுற? உன் மேல இருக்கிற அக்கறையில தானே உன்னை யாரும் தப்பு சொல்லிற கூடாதுனு தானே என்னை நான் தெளிவு படுத்த உன்னை கேள்வி கேட்டேன்."

" விடு ஜீவா உன் செயலுக்கு நீ எந்த  விளக்கமும் சொல்ல வேண்டாம் நீ என்ன பண்ணுவ உன் தொழில் அப்படி," என்று கூறியவன் பின்நினைவு வந்தவனாக ," ஆமா உனக்கு எப்போ சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ??"

ஒரு புன்னகை உதட்டில் தவழ," இரண்டு மாசம் ஆச்சு,"

" வாவ் நிஜமாவா?? அப்ப டிபார்ட்மென்ட் உதவியோடதான் என்ன கண்டுபிடிச்சியா??"

"ஆமா இவரை கண்டுபிடிக்க நான் டிபார்ட்மென்ட கூட.யூஸ் பண்ணணுமாக்கும் ஆனா நான் சென்னைக்கு வந்ததும் வந்த முதல் கேஸே வான்டட்தான் ஹா....ஹா....ஹா..."

"  என்னடா என்னமோ க்ரிமினல சொல்ற மாதிரி சொல்ற??"

" இல்லையா பின்ன நீ இப்ப பண்ணிட்டு இருக்கிறதே ஆள்மாறாட்டம் , திட்டம் போட்டு ஏமாத்திறது, இதெல்லாம் அப்ப நல்லவன் செய்ற வேலையா??"

"பாத்தியா திரும்பவும் அப்படியே சொல்ற நல்லா கேட்டுக்கோ ஜீவா. நான் தான் ஆதினு மதுகிட்ட சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது ஆனா நான் அப்படி செஞ்சா அவளோட ஹெல்த் ரொம்ப பாதிக்கும்னு நினைக்கிறேன்.இப்பவே திடீர் திடீர் மயக்கம் வருது மயக்கம் தெளிஞ்சு பார்க்கும்போது மயக்கம் வந்த விஷயமே மறந்து போயிடுது.இப்போதைக்கு எல்லாதுக்கும் மேல அவளோட உடல் நிலை தான் முக்கியம்னு நான் நினைக்காறேன்."

தன் நண்பனின் நீண்ட விளக்கத்தை கேட்ட ஜீவாவிற்கு  அவன் கூறுவது உண்மை என்றே தோன்றியது," ஹம்......." என்று பெருமூச்சுடன் நிறுத்திக்கொண்டான் ஜீவா.

" எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு மதுக்கு ஆதிங்கிற பேரை தெரியுமா  தெரியாதுனு சரியா தெரியாம நான் ஆதியா இருந்தா என்ன விக்ரமா இருந்தா என்ன அதுனால எந்த வித மாற்றமும் வரப்போறதில்லை."

தன் செயலில் இருக்கும் தவறு புரியாதவனாகவே இருக்கும் தன் நண்பனை நினைத்து கவலை கொண்ட ஜீவா," ஆதி இதோ பாரு நீ ஹாஸ்பிடல்ல  பேஷென்ட் பேரு மதுமிதா ஆதித்யன்னு கொடுத்திருக்க பத்தாததுக்கு அவங்க கழுத்தில தாலியும் கட்டியிருக்க இதை புரிஞ்சுக்கமுடியாத  அளவு மது தத்தியோ முட்டாளோ இல்லை.என் கனிப்பு சரியாயிருந்தா இந்நேரம் ஆதித்யனை தேடி மதுவோட பயணம் தொடங்கியிருக்கும்." என்று ஆருடம் கூறிய தன் ஜீவாவை அதிர்ச்சியுடன் வெறித்தான் ஆதித்யன்.

**********

காலை உணவை முடித்துவிட்டு தன் அறையில்  கண் மூடி அமர்ந்திருந்த மதுமிதா கதவு தட்டும் சத்தம் கேட்டு ," யெஸ் கதவு திறந்து தான் இருக்கு," என்ற வாறு கண்களை திறந்தாள். அங்கே தன் அன்னை அவளை யோசனையுடன் பார்பதை உணர்ந்தவள்," என்றாச்சு மாம் அப்படி பார்கறீங்க?"

" உன்னையே ஏன் இவ்ளோ வருத்திக்கிற? நைடெல்லாம் டிராவல் பண்ணது கொஞ்சம் தூங்க லாம்ல?|

" தூங்குறேன் தூங்குறேன் அந்த மெடிகல் ஃபைல் எங்க ? அப்பா உங்ககிட்ட கொடுத்திட்டு போனாங்களா?"

" ம்....இந்தா தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத," என்றவாறு அவளது தலையை ஆருதலுடன் தடவி விட்டார்.

" மாம் தேங்கஸ் மாம் அப்பா எங்க?"

" ஆஃபிஸ் போயிட்டாங்க,"

" அப்பாக்கு என் மேல கோபமெல்லாம் இல்லையேமா?"

இந்த கேள்விக்கு அவர் பதில் கூறாது,"சரி நான் கிளம்பறேன்," என்று எழுந்து கொண்டார். அவரை தடுக்கும் எண்ணமில்லாமல் சற்றுமுன் தன் அன்னை கொடுத்த ஃபைலை ஆராயத்தொடங்கினாள் மது.

சில நிமிடங்களில் அந்த ஃபைலை ஆராய்ந்தவள் பின் சில தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஏதோ ஏதோ பேசினாள் ,அவள் பேசி முடிக்கவும் அவளது தங்கை மதி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

" வா வா மதி நானே உன்னை கூப்பிடலாம்னு இருந்தேன்."

" என்னாச்சு கா?"

" இல்லை மதி அப்பா கொடுத்த ஃபல்ல இருந்து ஹாஸ்பிடல் பேரு கிடைச்சிருச்சு நான் அங்க நேர்ல போய் தான் விசாரிக்கனும்."

" என்னகா சொல்ற அது கோயம்புத்தூர் ல இருக்கிற ஹாஸ்பிடல் தானே அங்க இப்ப எப்படி நேர்ல போக முடியும்?"

"அதெல்லாம் பிரச்சினை இல்லை மதி நான் மதியம் ஒரு மணிக்கு  ஃபளைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன் .இப்ப கிளம்பினாதான் சரியா வரும்.ஆனால் இந்த விஷயம் அம்மா அப்பாக்கு தெரியாம பார்த்துக்கோ.இடையில எனக்கு கால் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வரும் பயந்திறட போறாங்க அதான் உன்கிட்ட சொல்லிட்டு போறேன்."

" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ பத்திரமா போயிட்டு  வாகா. எப்ப திரும்ப வருவ?"

" ரிடரன் டிக்கெட் ஏழு மணிக்கு போட்டிருக்கேன் நைட் குள்ள வந்திடுவேன்."

" சரிகா நான் பார்த்துக்கிறேன்.நீ கவலைபடாம போயிடாடு வா." என்று தன் தமக்கைக்கு விடை.கொடுத்தாள்.

வீட்டை விட்டு கிளம்பிய மது நேராக விமான நிலையம் சென்று கோயம்புத்தூர் நோக்கி பறந்தாள்.மதிய உணவை எடுத்துக்கொண்ட பிறகே அந்த பிரம்மாண்டமான "ஹெல்த்கேர் ஹாஸ்பிடல் " நோக்கி சென்றாள்.அவளை வரவேற்ற வரவேற்பறை பெண்ணிடம்," வணக்கம் என் பேரு மதுமிதா எனக்கு ஒரு பேஷென்ட் பத்தின டீடெய்ல்ஸ் தெரியனுமே ,"என்றவளை சிநேகமற்ற பார்வை பார்த்த அப்பெண் ," ஸாரி மேடம் பேஷென்ட் டீடெய்ல்ஸ் லாம் யாரகிட்டயும் சொல்ஐ முடியாது அது ஹாஸ்பிடல் ரூல்ஸ்க்கு அகெய்ன்ஸ்ட்." என்று கூறிவிட்டு தன் வேலையை தொடரலானாள்.

இந்த பதிலை ஒருவாறு எதிர்பார்த்திருந்த மது ," சரி இத பத்தி நான் மேற்கொண்டு பேசனும்னா யாரை பார்க்கனும்?"

" சாரி மேடம் அதுக்கு வழியில்லை."

" கம் ஆன் உங்க டீன் இல்லை சேர்மென் இப்படி யாரைமாவது மீட் பண்ண முடியுமா ப்ளீஸ் ரொம்ப முக்கியம்,"கிட்டதட்ட கெஞ்சினாள் இதுவரை கெஞ்சி பழக்கமில்லாத மதுமிதா.

" நான் வேணா ஹெ.ஆர் கிட்ட பேசி பார்க்கிறேன்," என்றவள் நம்பிக்கை இல்லாமலே யாரையோ தொடர்பு கொண்டு ஏதோ பேசினாள் பின் மதுவிடம் திரும்பி," செகன்ட் ப்ளோர்ல ரூம் நம்பர் 222 ல ஹெ.ஆர் இருப்பாரு அவரை போய் பாருங்க,"

" தேங்க்யூ சோ மச்," என்ற மது வேகமாக இரண்டாவது தளத்தை நோக்கி விரைந்தாள்.

இரண்டாவது தளத்தின் கூறிப்பட்ட அறையில் அமர்ந்திருந்த மதுமிதாவை வரவேற்க ," ஹாய் மேடம் ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?( How can I help you)"என் வினவ ," ஹாய் சார் எர் பேரு மதுமிதா..," என்றவள் பின் சிறு தயக்கத்திற்க்கு பிறகு ," மிஸஸ்.மதுமிதா ஆதித்யன் எனக்கு ஒரு.சின்ன உதவி வேணும்."

" சொல்லுங்க எங்களால முடிஞ்ச உதவியை நாங்க செய்றோம்."

" அதாவது ஒரு நாலு வருஷத்திற்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆச்சு அப்போ என்னை இந்த ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணியிருந்தாங்க. எனக்கு என்னோட அட்மிஷன் டீடெய்ல்ஸ் வேணும் சார்."

" உங்களோட அட்மிஷன் டீடெய்ல்ஸ் உங்களுக்கு எதுக்குனு நான் தெரிஞ்சுக்கலாமா??"

" அது கொஞ்சம் பெர்சனல் எனக்கு என்னை இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணது யாரு அவங்களோட கான்டாக்ட் டீடெய்ல்ஸ் இதை மட்டும் சொன்னீங்கனா போதும்."

" பட் அது ரூல்ஸ்க்கு அகென்ஸ்ட் ஆச்சே."

" இதோ பாருங்க நான் இங்க அட்மிட் ஆகி ட்ரீட்மெண்ட் எடுத்ததுக்கான எவிடென்ஸ் இந்த மெடிகல் ஃபைல் அன்ட் நான் தான் மதுமிதானு ப்ரூவ் பண்ண என்னோட ஐ.டி கார்ட் .ப்ளீஸ் இது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்."என்றவளை  பார்த்த அந்த ஹெ.ஆர் ," சரி மேடம் நீங்க ஒரு ரெக்வஸ்ட் லெட்டர் எழுதி கொடுங்க நான் என்னனு பார்க்கிறேன்."

" சார் நான் இந்த ஊரு இல்லை பெங்களூர் ல இருந்து வரேன் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க,"

" ம்...நான் டிசைட் பண்ண முடியாது மேடம் டீன் கிட்ட கேட்டு தான் சொல்ல முடியும்.நீங்க  முதல்ல லெட்டர் தாங்க நான் போய் பேசி.பார்க்கிறேன். ஆனால் என்னால உத்திரவாதம் கொடுக்க முடியாது."என பலவாறாக அவளை காக்க வைத்த அந்த நிறுவனம் வெகு.நேரத்திற்கு பிறகே அவள் கேட்ட விபரங்களை கொடுத்தது.

அவற்றை வாங்கிய மது நேரத்தை பார்க்க நேரமோ ஆறை.நெருங்கி கொண்டிருந்தது.ஃபைலை திறந்து பார்க்க நேரமின்றி விமான நிலையத்தை   நோக்கி சென்றாள்.தன் தேடலின் பதில் கிடைக்கும் என்று எதிர்பாரத்தது மேலும் தன்னை குழப்பபோவதை அறியாமல் அந்த ஃபைலுடன் சென்னைக்கு பயணமானாள்.





Continue Reading

You'll Also Like

1.3K 160 27
ஹாய்... ஹலோ... உளவியல் உண்மைகள் அதாவது Psychological facts. இது வரை நான் தெரிந்துக் கொண்டதை உங்களுக்கும் தெரியப்படுத்தலாம் என்ற முயற்சியில் தமிழில் உ...
15.7K 781 14
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும்...
64.4K 1.3K 8
காதலின் மௌனம்!!
141K 4.7K 54
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....