மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

497K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 53

5.6K 227 50
By Aarthi_Parthipan

"மாறா! டாக்டர் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாரு பா. வா வீட்டுக்கு போகலாம்" பூங்குழலி பாசமாக கூற, "பெரியம்மா! சங்கர் கார் வரவச்சுட்டான், நீங்க வீட்டுக்கு போங்க. மாமா கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துருவாரு. வினி ரொம்ப பயந்து போய் இருக்கா, நீங்க ரெண்டு பேரும் சண்ட போட்டு இன்னும் அவள பதட்டப் பட வைக்காதீங்க" மாறன் அவருக்கு எடுத்து கூறினான்.

"நீ எப்படி பா தனியா போவ?" அவர் வினவ, "நான் பாத்துக்கிறேன் அத்த. நீங்க கிளம்புங்க" அவன் அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்களும் மருத்துவமனை விட்டு கிளம்பினர். மாறனும் ஒரு வண்டியை வரவழைத்து அவன் இல்லம் புறப்பட்டான். செல்லும் வழியில் மாயாவை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தான். இவ்வாறு ஒரு நிலையில் அவனை கண்டால் அவள் மிகவும் வருத்தப் படுவாள் என்று தோன்றியது அவனுக்கு. காலையில் கிளம்பும்போது கூட அவள் பதட்டமாக இருந்தாளே என்று எண்ணினான், அவனுக்கு கவலையாக இருந்தது.

அதே எண்ணங்களுடன் வீட்டை அடைத்தான். அவன் வீட்டை அடைந்த பொழுது, நேரம் ஒன்பதை நெருங்கி இருந்தது.

விளக்குகள் எதுவும் போடப் படாமல் இருட்டாக இருந்தது அவன் இல்லம். அவன் அனைத்து விளக்குகளையும் போட்டு விட்டு, அவன் அறைக்கு சென்றான்.

அறை கதவு திறக்கும் ஓசைக் கேட்டு, மாயா வந்திருப்பது அவன் தான் என்று உணர்ந்து கொண்டாள். அவன் முகத்தை பார்க்காமல் வேறு புறம் திரும்பி படுத்திருந்தாள்.

அவன் அவள் அருகில் சென்று, கட்டிலின் ஒருபுறம் அமர்ந்தான். "மாயா!" அவன் அழைக்க, அவள் திரும்பவில்லை. "மாயா! என்ன பாரு" அவன் கூற, அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

"உன்னுடைய கோபம் எனக்கு புரியுது. ஆனா என்ன நடந்துச்சுனு கேளு" என்று கூறி, அவள் கரங்களை பற்றிக் கொண்டான். "கைய விடுங்க. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் எதையும் கேக்கல" அவள் அழுதிருப்பது அவள் குரலில் தெளிவாக தெரிந்தது.

"மாயா! நான் என்ன..." அவனை மேலும் பேச விடாமல், "நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எந்த அளவுக்கு என்மேல அக்கறை இருக்குனு எனக்கு தெரிஞ்சிருச்சு. காலைல நீங்க கிளம்பும் போதே நான் எவ்வளவு தூரம் சொல்லி அனுப்பினேன், சீக்கிரம் வந்திருங்கனு. ஆனா நீங்க இவ்வளவு நேரம் கழித்து வந்திருக்கீங்க.

காலைல இருந்து எத்தனை முறை கால் பண்ணினேன், நீங்க ஒரு தடவை கூட எடுக்கவே இல்ல. சாயங்காலம் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. எனக்கு எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா? இப்போ வரைக்கும் எனக்கு உயிரே இல்லாத மாதிரி இருந்திச்சு. உங்களுக்கு அதை பத்தி எல்லாம் ஒரு கவலையும் இல்ல" அவன் முகம் பார்க்காமல் அவள் அழ, என்ன செய்வதென்று தெரியாமல் மாறன் அமர்ந்திருந்தான்.

"என்ன கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுங்க" அவள் கூற, அவன் அறையில் இருந்து வெளியேறினான். அவன் சென்ற பின், எழுந்து அமர்ந்தவள் மேலும் அழுதாள்.

கீழே சென்ற மாறன், சமையல் அறையை பார்த்து அவள் இன்று எதுவும் சமைக்கவில்லை என்று தெரிந்து கொண்டான். "காலைல இருந்து எதுவும் சாப்பிடாம இருந்திருக்கா" என்று எண்ணி, அவளுக்காக பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு வந்தான்.

"மாயா!" அவன் அழைக்க அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள். "மாமா! உங்களுக்கு என்ன ஆச்சு?" அவள் பதட்டமாக அவன் அருகில் வந்தாள். "ஒன்னும் இல்ல! பதட்டப் படாதே" அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே, அவள் மயங்கி கீழே விழுந்தாள்.

"மாயா! மாயா!" அவன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான். சிறிது நேரம் கழித்து மாயா கண் விழித்தாள். "மாமா! உங்களுக்கு என்ன ஆச்சு?" அவள் கண்களில் கண்ணீருடன் கேட்க, "அழாத டா, எனக்கு ஒன்னும் இல்ல. இது ரொம்ப சின்ன காயம் தான். சீக்கிரம் சரி ஆயிடும். நீ இதுக்காக வருத்தப் படாத" மாறன் அவளை சமாதானம் செய்ய முற்பட்டான்.

"காலைல நீங்க கிளம்பும் போதே கொஞ்சம் கவனமா இருங்கனு சொன்னேனே மாமா! இன்னிக்கு நீங்க எங்கேயும் போகாம வீட்டிலேயே இருந்து இருக்கலாம்" அவள் கண்ணீர் மேலும் பெருகியது.

"மாயா என்ன நடந்துச்சுனு தெரிஞ்சா, நீ இப்படி பேச மாட்ட" மாறன் கூற, "அப்படி என்ன தான் நடந்துச்சு மாமா?" மாயா வினவினாள்.

"நான் சொல்லுறேன் ஆனா அதுக்கு முன்னாடி இந்த பாலை குடி. காலைல இருந்து எதுவும் சாப்பிடாம இருக்க" என்று கூறி அவன் எடுத்து வந்த கிண்ணத்தை அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை வேகமாக குடித்து விட்டு, அவன் முகம் பார்த்தாள். மாறன் பொறுமையாக நடந்தவை அனைத்தையும் கூறினான். மாயா அதிர்ந்து போனாள். "மாமா! இப்போ வினி எப்படி இருக்கா?" அவள் கேட்க, "இப்போ எந்த பிரச்சனையும் இல்ல" மாறன் பதில் அளித்தான்.

"நீங்களும் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம் மாமா!" அவள் கண்கள் கலங்கின, "கவலை படாதே மாயா! வினிய கப்பாத்திட்டோம். இப்போ அத நினச்சு தான் நாம சந்தோஷப் படனும். அப்புறம் பெரியப்பாவும் மனசு மாரிட்டாரு. இனி அவரே எல்லா பிரச்சனையும் பாத்துப்பாரு, நீ எதுக்கும் கவலை படாதே" மாறன் அவளுக்கு ஆறுதல் கூறினான்.

"அந்த அஜய் இப்போவாச்சும் வந்து அவன் நபர்களை கண்டிச்சானா?" மாயா கேட்க, "எனக்கு தெரியல மாயா. எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன்க்கு தான் போய் இருக்காங்க. அங்க என்ன நடந்துச்சுனு தெரியல. சங்கர் ஃபோன் பண்ணுவான்" மாறன் பதில் அளித்தான்.

"தேவையில்லாத நட்புனால இன்னிக்கு எவ்வளவு பெரிய விளைவு வந்திருக்கு பாருங்க. மாமா சின்ன வயசுல இருந்தே அவன கண்டிச்சு வளர்திருக்கனும். இன்னிக்கு நம்ம வீட்டு பொண்ணுக்கு எதாவது ஆகி இருந்தா என்ன செய்யிறது" மாயா வருத்தப் பட, "இனி கண்டிப்பா அவன் மாறி தான் ஆகனும் மாயா. வினிக்கு இப்படி ஒரு கெடுதல் நடக்க இருந்துச்சேனு கண்டிப்பா அவன் உணர்துக்குவான்" மாறன் அவளை ஆறுதல் படுத்தி அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயன்றான்.

"சரி மாமா! நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க, நான் சமச்சு சாப்பாடு இங்கேயே கொண்டு வரேன்" என்று கூறி கீழே சென்றாள். மாறன் வேறொரு யோசனையில் மூழ்கி போனான்.
.
.

"அப்பா!" மயில் வாகனம் வீட்டுக்குள் நுழைந்ததும் வினித்தா அவரிடம் விரைந்து சென்றாள். "இவ்வளவு நேரம் என்ன செஞ்சிட்டு இருந்தீங்க அப்பா? நான் உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தேன்" அவள் கூற, "ஒன்னும் இல்ல மா, அங்க கொஞ்சம் வேலை இருந்துச்சு. அதான் வர தாமதம் ஆகிருச்சு" அவன் பாசமாக அவள் தலை கோதி அவர் பதில் அளித்தார்.

"சரி வாங்க அப்பா சாப்பிடலாம்" என்று கூறி அவரை சாப்பிட அழைத்து சென்றாள். சாப்பிட்டு விட்டு அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். அவள் உறங்க சென்றதும் மனைவியை பார்க்க வந்தார்.

பூங்குழலி வீட்டின் பின்புறம் அமர்ந்திருந்தாள். "பூங்குழலி" அவர் குரல் கேட்டு அவள் திரும்பினாள். "நீ சொன்னது சரி தான். எல்லாம் என்னுடைய தவறு தான். நான் செஞ்சது மிக பெரிய தப்பு. நம்ம பையன் வாழ்க்கை தடம் மாறி போக நானே காரணம் ஆயிட்டேன்" அவர் மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.

"எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகு வருத்தப் பட என்ன இருக்கு" அவர் வெறுமையாக பதில் அளிக்க, "உன்னுடைய கோபம் ரொம்ப நியாயமானது. கண்டிப்பா நான் அத குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்போ நான் என்னோட தப்ப உணர்ந்துட்டேன். அத நீ புரிஞ்சுக்கணும்" என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

"இவ்வளவு காலம் கழிச்சு இப்போ தான் நீங்க உங்க தவறை உணர்திருக்கீங்க. நம்ம பையன் அதை எப்போ உணருவானு எனக்கு தெரியல. இங்க இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு இன்னும் அவன் வீட்டுக்கு வரல, இதுதான் அவன் குணம். சுயநலவாதி! யாரை பத்தியும் அவனுக்கு கவலை இல்லை" என்று மனதில் எண்ணினார்.

"டேய்! நான் வீட்டுக்கு வந்துட்டேன் டா. அந்த அஞ்சு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்காங்க. இன்ஸ்பெக்டரே எல்லாம் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாரு. உன்னோட பெரியப்பாவும் கோபத்துல நாலு போடு போட்டாரு" சங்கர் நடந்தவற்றை கூற,

"உண்மையான குற்றவாளி அவுங்க இல்ல டா" மாறன் வேறொரு குண்டை தூக்கி போட்டான். "என்ன டா சொல்லுற?" சங்கர் அதிர்ச்சியாக கேட்க, "அவுங்க வெறும் வில்லு தான். அதை எய்த அம்பு வேற" மாறன் புதிராக பேச, "என்னடா சொல்லுற? நம்ம ஊருல உன்னை எதிர்க்க யாரு இருக்கா? உன்னோட பெரியப்பா தான் இவ்வளவு நாள் கோபத்துல அப்படி செஞ்சாரு. இப்போ அவரையே எதிர்க்க யாரு நினைப்பாங்க?" சங்கர் குழப்பமாக கேட்க, அடுத்து மாறன் கூறிய பதிலில் திகைத்து போனான்.

"மாமா! சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், வாங்க வந்து சாப்பிடுங்க" என்று கூறி மாயா அவனை அழைக்க, "வரேன் மா!" என்று அவளிடம் கூறி விட்டு, "மற்றதை காலைல சொல்லுறேன் டா. இப்போ நீ போய் தூங்கு" என்று கூறி கைபேசியை வைத்து விட்டான்.

"சங்கர் அண்ணாவா?" மாயா கேட்க, "ஆமா மாயா! வீட்டுக்கு வந்துட்டான் அதான் எனக்கு ஃபோன் பண்ணி இருக்கான்" மாறன் பதில் அளித்தான்.

"அங்க என்ன ஆச்சாம் மாமா? வினி கிட்ட வம்பு செஞ்ச எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன்ல தானே இருக்காங்க?" மாயா வினவ, "ஆமா மாயா, எல்லாரும் அங்க தான் இருக்காங்க. அந்த இன்ஸ்பெக்டர் பெரியப்பாவுக்கு தெரிந்தவர் தானாம், அதான் அவரே மத்த எல்லாம் பாத்துக்கிறேனு சொல்லிட்டாரு" மாறன் பதில் அளித்தான்.

"நல்லது. நாளைக்கு போய் வினிய பாத்துட்டு வரணும். பாவம் ரொம்ப பயந்து போய் இருப்பா" மாயா வருத்தமாக கூற, "ஆமா மாயா, நாம கண்டிப்பா போய் அவகூட கொஞ்ச நேரம் இருக்கணும்" மாறன் ஒப்புக் கொண்டான்.

"அது சரி! நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" மாயா அவன் முகம் பார்த்து கேட்க, "வினியை நினச்சு தான் வருத்தப் பட்டேன், வேற ஒன்னும் இல்ல" மாறன் அவளை சமாதானம் செய்தான். அவளும் மேலும் எதுவும் கேட்காமல், அவனுக்கு இரவு உணவை வழங்கினாள்.
.
.

"அம்மா மீனாட்சி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மா" மீனாட்சியின் தந்தை அவளை அழைக்க, அவளும் அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.

"சொல்லுங்க அப்பா!" அவள் பாசமாக கேட்க, "உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நான் ஆசை படுரேன் மா!" அவர் நேராக விசயத்தை சொல்லி முடித்தார். மீனாட்சியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

"எனக்கு தெரியும் மா! சங்கர் உன்ன விரும்புறாருனு" அவர் மேலும் அவளை அதிர வைத்தார். "அப்பா! அது!" மீனாட்சி தடுமாற, "மாறன் தம்பி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாரு மா. என்கிட்ட விருப்பத்தை கேட்டுட்டு தான் உன்கிட்ட பேச வந்தாரு" அவர் விளக்கினார்.

"இங்க பாரு மா, நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கு தெரியாது. என்னுடைய காலம் முடியரதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும்னு எனக்கு தோணுது மா" அவர் கூற, "அப்பா அப்படி எல்லாம் பேசாதீங்க. எனக்காக இருக்க ஒரே உறவு நீங்க மட்டும் தான். நீங்களும் இல்லைனா நா எங்க போவேன்" மீனாட்சி கண் கலங்கினாள்.

"அதான் மா நானும் சொல்லுறேன். எனக்கு அப்புறம் உன்ன பாத்துக்க உனக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும். உன்னோட சந்தோசம் தான் என்னோட நிம்மதி மா. யோசிச்சு நல்ல முடிவா எடு மா" என்று கூறி அவர் உள்ளே சென்று விட்டார். மீனாட்சி என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் சோகமாக அமர்ந்திருந்தாள்.
.
.

டெல்லி,

"முகத்தை இப்படி சோகமா வச்சிருந்தா நான் எப்படி கிளம்புறது?" சிவா அவள் முகம் பார்த்து கேட்க, "இன்னும் ரெண்டு நாள் இருப்பேன்னு சொல்லிட்டு இப்போ திடீர்னு கிளம்பினா, வேற எப்படி இருப்பாங்களாம்" அவள் சோகமாக பதில் அளித்தாள்.

"சாரி செல்லம்! எனக்கு வேற வழி இல்ல. கண்டிப்பா போய் தான் ஆகனும். அங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு" சிவா அவள் கரம் பற்றிக் கொண்டு கேட்க, "சரி!" அவள் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள்.

"ப்ளைட் வர டைம் ஆச்சு மீனு! நான் கிளம்புறேன். நீ சோகமா இருக்க கூடாது சரியா? பிளீஸ்! நான் கண்டிப்பா எல்லா வேலையும் முடிச்சிட்டு இங்க வரேன்" அவன் அவளிடம் வேண்டி கேட்டுக் கொள்ள, அவளும் சிறு புன்னகையுடன் தலை அசைத்தாள்.

"போயிட்டு வரேன்" என்று கூறி அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு விட்டு சென்றான். கண்களில் கண்ணீருடன் அவனை வழியனுப்பி வைத்தாள் மீனா. அவள் அறையை அடைந்ததும் அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.

ஆர்வமாக அதை எடுத்து பார்த்தாள், "இப்போவே உன்ன மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நாள் இப்படி உன்ன பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. சீக்கிரம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்கு அப்புறம், நாம இப்படி பிரிஞ்சி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. லவ் யூ சோ மச் அண்ட் மிஸ் யூ 😘" இவ்வாறு அவன் அனுப்பி இருக்க, அவளுக்கும் அதுவே சரி என்று தோன்றியது. அவளாலும் அந்த பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Hi friends,

53ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Continue Reading

You'll Also Like

451K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
164K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
117K 4.2K 68
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம...
49.3K 2.1K 55
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் ப...