மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

497K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 46

6.7K 268 70
By Aarthi_Parthipan

"இப்போதான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு மாமா! எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு" மனதார கூறி, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் மாயா. மீனாவை டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டு, மாறனும் மாயாவும் அன்று காலை தான் அவர்கள் ஊருக்கு திரும்பி இருந்தனர்.

"அப்புறம் மாயா, மீனா சிவா கல்யாணம் பத்தி யாருக்கும் தெரிய வேண்டாம். நம்மோட நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு கூட தெரிய வேண்டாம். தேதி முடிவு பண்ணிட்டு எல்லாருக்கும் சொல்லிக்களாம்" மாறன் கூற, மாயாவும் சம்மதித்தாள்.

"உங்களோட இந்த குணத்த பாத்து தான் முதல் முறை உங்க மேல காதல் வந்துச்சு மாமா" அவள் அவன் முகம் பார்த்து கூற, அவன் ஆச்சரியமாக அவள் முகம் பார்த்தான்.

"உங்களுக்கு ஞாபகம் இருக்கானு தெரியல, ஒருமுறை நீங்க ஒரு பொண்ணுக்கு உதவி செஞ்சீங்க, அவள ஒரு பையன் தொல்ல செய்யுறானு தெரிஞ்சதும், அவன் பெரிய இடத்து பையன், அவன கண்டிச்சா பிரச்சனை வரும்னு தெரிஞ்சும், அந்த பொண்ணுக்காக அவன கண்டிச்சீங்க.

அந்த நிகழ்வுக்கு அப்புறம் அந்த பொண்ணு உங்கள தேவமாவே பாக்க ஆரமிச்சுட்டா" மாயா அவள் மனதில் இருந்தவற்றை கூற, மாறனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

"ஹேய்! அது எப்படி உனக்கு தெரியும்?" அவன் அதே ஆச்சரியத்துடன் கேட்க,

"அந்த பொண்ணு என்னோட ப்ரெண்ட், நான் இங்க வந்தப்போ அத அவ என்கிட்ட சொன்னா. அந்த நிமிஷமே, உங்க மேல எனக்கு ரொம்ப பெரிய மரியாதை வந்துருச்சு. நீங்க என்னோட மனசுல ரொம்ப உயரத்துக்கு போயிட்டீங்க.

ஆனா, மறுநாள் கல்யாணம் ஆக போகுற உங்கள, வேற எந்த நினைப்போடவும் பாக்க கூடாதுனு தான் எனக்குள்ள எழுந்த அந்த உணர்வுகளை எனக்குள்ளேயே வச்சுகிட்டேன்" அவள் கூற,.

"என்ன இந்தளவுக்கு காதலிச்சவ, ஏன் கல்யாணம் ஆனப்போ என்ன சுத்தமா வெறுத்த?" அவன் புரியாமல் குழப்பத்துடன் கேட்டான்.

"என்னோட அப்பா மீனாவ உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க போறதா தான் சொன்னாரு. அதான், குழந்தை மாதிரி நினைச்ச பொண்ண எப்படி நீங்க கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சீங்கனு உங்க மேல எனக்கு கோபம் வந்துச்சு.

சுயநலம் இல்லாம, மத்தவங்க நலன விரும்புற, நல்ல குணத்தை பாத்து என் மனசுல வந்த மதிப்பு, அதெல்லாம் பொய்னு ஆகும் போது, எந்தளவுக்கு வேதனை பட்டிருக்கும்னு யோசிச்சு பாருங்க? அதுதான் என்னோட வாழ்க்கைலயும் நடந்துச்சு.

எனக்கு ரொம்ப பிடிச்ச உங்கள, வெறுப்போட தான் கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டேன்.

ஆனா, என்னால உங்கள முழுசா வெறுக்க, முடியல. ஒவ்வொரு முறை உங்கள வேதனை படுத்தின போதும், உங்கள விட அதிகமா நான் தான் வேதனைய அனுபவிச்சேன்" அவள் கண்களில் கண்ணீர் பெருகியது,

"மாயா!..." அவன் ஏதோ சொல்ல வர, அவள் அவனை தடுத்தாள்.

"நான் சொல்லி முடிச்சிடுறேன் மாமா. உங்க மேல கோபம் எனக்கு குறையவே இல்ல. கொஞ்ச நாள் கழிச்சு தான் அப்பா என்கிட்ட நடந்தத சொன்னாரு, அவரு சொன்னத கேட்டதும் என்னோட மனசுல உங்க மேல இருந்த கோபம் எல்லாம் போயிருச்சு. உங்கள கஷ்ட படுத்துனதுக்காக, என் மேல எனக்கே கோபம் வந்துச்சு.

அப்புறம் கொஞ்ச நாள் உங்கள காதலிக்கிற அளவுக்கு எனக்கு தகுதி இல்லைனு தோணுச்சு. உங்கள பிரிஞ்சிருந்த நாள் எல்லாமே இதே எண்ணங்கள் தான் என்னோட மனசுல மாறி மாறி தோணிட்டு இருந்தது.

ஆனா மூணு வருஷம் கழிச்சு, உங்கள மறுபடி பாத்த நிமிஷம், மத்த எல்லாம் மறந்து போய் உங்க மேல நான் வச்ச காதல் மட்டும் தான் என்னோட மனசுல நிலைச்சு இருந்துச்சு. உங்க கூட இருக்க தான் என்னோட மனசு துடிச்சுது.

எப்படியும் உங்க மனச ஜெய்ச்சிருவேனு ஒரு நம்பிக்கைல தான் இங்க வந்தேன். உங்க கூட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷதையும் பொக்கிஷமா, மனசுல வச்சுக்கிட்டேன்.

நீங்க விளையாட்டா பேசினது, என்மேல காட்டின அக்கறை, பாசம் எல்லாம் சேர்ந்து, ஒவ்வொரு நாளும் என்னோட காதல அதிகரிச்சுது.

ஆனா, ஒவ்வொரு சமையம் உங்க மனசுல என் மேல காதல் இல்லைனு தோணும், அதுக்கு காரணம் நான் ஆரம்பத்துல உங்க மேல காட்டின வெறுப்புதானும் தோணும்.

அப்படி நினச்சு தான் நான் உங்கள விட்டு போக முடிவு பண்ணி, அம்மா அப்பா கூட ஊருக்கு கிளம்பினேன்.

மாமா! என்னோட செயல் உங்கள காயப் படுத்தி இருக்கும்னு எனக்கு தெரியும். ஐ அம் சாரி மாமா! என்ன மண்ணிச்சிடுங்க" அவள் கண்களில் கண்ணீர் மேலும் பெறுக, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவன் அவளை அரவனைப்பாக அணைத்துக் கொண்டான்.

அவள் கண்களில் வழிந்த கண்ணீரை அவன் கரங்களால் மென்மையாக துடைத்து விட்டான்.

"இப்போ எதுக்காக நீ வருத்தப்படுற மாயா? உன்னால நான் என்னைக்கும் வேதனை பட்டது இல்ல. உண்மைய சொல்லனும்னா எப்படியோ போயிட்டு இருந்த என்னோட வாழ்க்கைக்கு வண்ணம் பூசி அத இந்த அளவுக்கு அழகா மாத்தினவளே நீதான்.

உன்ன தவிற வேற யாரும் என்ன சந்தோஷப்படுத்த முடியாது மாயா. இப்போ என்ன எந்த அளவுக்கு காதலிக்கிறேனு சொன்னியே, இத விட சந்தோசமான தருணம் எனக்கு வேற என்ன இருக்க முடியும் சொல்லு?

உன்னோட மனச கஷ்ட பட வச்சுட்டேங்குற குற்ற உணர்வுல தான் நான் உன்கிட்ட சரியா பேச முடியாம இருந்தேன்.

என்மேல காதல் எந்த தருணத்தில வந்துச்சுனு நீ சொல்லிட்டே, ஆனா என்னால அப்படி சொல்ல முடியாது மாயா.

உன்ன அந்தளவுக்கு எனக்கு பிடிக்கும். என்னதான் நம்ம கல்யாணம் எதிர்பாராம நடந்து இருந்தாலும், உன்ன முழு மனசோட மனைவியா ஏத்துக்கிட்டு தான் உன் கழுத்துல தாலி கட்டினேன்.

நீ காட்டின கோபம் கூட எனக்கு அழகா தான் தெரிஞ்சுது. அதுல இருந்த நியாயமும் எனக்கு நல்லாவே புரிஞ்சு இருந்துச்சு.

நம்ம வாழ்க்கைல இருக்க எல்லா கசப்பான தருணத்தையும் நம்ம காதலால மாத்தனும்னு ஒவ்வொரு நாளும் கனவு கண்டேன். நீ இங்க வர நாளுக்காக ஏக்கத்தோட காத்திருந்தேன்.

நீ வந்ததும் தான், என்ன விட்டு பிரிஞ்சிருந்த என்னோட பாதி உயிர் மறுபடியும் கிடச்ச மாதிரி உணர்ந்தேன் மாயா.

நீ என்ன வெறுத்த போதே உன்ன நேசிச்சேன், எப்போ உன்னோட காதல் எனக்கு புரிய ஆரமிச்சுதோ, அப்போ இருந்து என்னோட காதல் ரெட்டிப்பாயிருச்சு.

ஆனா, காதல் வந்ததும் அத காதலி கிட்ட சொல்லிரனும்னு இல்லைனா அதுவே அவ மனச வருத்தப் பட வைக்கும்னு நீ இங்க இருந்து கிளம்பினதும் எனக்கு புரிஞ்சிருச்சு, அதான் அப்போவே கிளம்பி வந்துட்டேன்.

ஞாயமா! நீதான் என்ன மன்னிக்கணும். மன்னிப்பயா?" அவள் முகத்தை உள்ளங்கைகளில் ஏந்தியவாறு அவன் கேட்க, அவள் அவன் கரங்களில் மென்மையாக இதழ் பதித்தாள்.

"இனிமேல் இந்த மாதிரி மன்னிப்பெல்லாம் கேக்க கூடாது. எந்த ஒரு ஒளிவுமறைவும் நமக்குள்ள இனி இல்ல!

லவ் யூ மாமா!" என்று கூறி அவன் மார்போடு அவள் ஒன்றிக்கொள்ள, அவள் கூந்தலை கோதி விட்டு, உச்சந்தலையில் முத்தம் கொடுத்து அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
.
.

மறுநாள்,

அதிகாலையிலேயே, மாறன் வயலுக்கு சென்று விட்டான். மாயா காலை உணவை அவனுக்காக தயார் செய்து வைத்து விட்டு அவனுக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவன் வந்து சேர, அவள் அவனுக்கு ஆசையாக பரிமாறினாள். மாறனும் அதை மனதார பாராட்டி சுவைத்தான்.

"மாயா! இன்னிக்கு மதியம் சாப்பாடு எடுத்துட்டு வர வேண்டாம். நான் கொஞ்சம் வெளிய போறேன், அங்கேயே சாப்பிட்டுட்டு வந்திருவேன்" மாறன் கூற, அவளும் சரி என்று ஒப்புக் கொண்டாள்.

அன்று மதியம் மாயாவிற்கும் ஆடை வடிவமைப்பு வேலைகள் இருந்தன. மாறன் புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டு சென்றான்.

"டேய்! அஜய் எங்க டா போயிட்ட? ரொம்ப நாளா ஆளையே காணோம்?" சரண், அஜசியின் நண்பன் அவனை விசாரிக்க, "டெல்லிக்கு போய் இருந்தேன் டா. கொஞ்சம் வேலை இருந்துச்சு" அவனும் உணர்ச்சிகள் அற்ற முகத்துடன் பதில் அளித்தான்.

மீனாவை சந்திக்க அவன் டெல்லிக்கு சென்ற வேளையில் அவள் இங்கே கிளம்பி வரக் கூடும் என்று அவன் நினைக்கவில்லை. அதனால், மிகுந்த எரிச்சலில் இருந்தான்.

"டேய்! அங்க பாரு. அது மாறன் தானே? பின்னாடி இருக்க பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கே?" சரண் கூற, "பொண்ணா?" அஜய் அவர்களை திரும்பி பார்த்தான்.

"மீனாட்சியா?" அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன, அதைவிட மாறனும் அவளும் ஒன்றாக செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தான்.

"மாயாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ முன்னாள் காதலி கூட சேந்து இப்படி ஊர் சுத்திட்டு இருக்கானா இவன்? இது ஒன்னு போதும் டா, உன்னோட பேர், புகழ், வாழ்க்கை, என் மாமனார் உன் மேல வச்ச நம்பிக்கைனு எல்லாத்தையும் உடைக்குறதுக்கு" அவன் வேகமாக அவன் வண்டியை எடுத்து மாறன் அறியாத வண்ணம் அவர்களை பின் தொடர்ந்தான்.

மாறன் மீனாட்சியை அவள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வயலுக்கு சென்றான்.

"அந்த மாயா ஏதோ உலகத்துலேயே அவளுக்கு தான் ரொம்ப நல்ல புருசன் கிடச்சதா நினச்சுட்டு இருக்காளே! அந்த நினப்ப இன்னிக்கே சுக்கு நூறா உடைக்குறேன்" நமட்டு சிரிப்புடன் அவன் மனதில் எண்ணிக் கொண்டான்.

"ஏன் டா லேட்டு? வெளிய எங்கயாச்சும் போயிட்டு வரியா?" மாறனை பார்த்ததும் சங்கர் வினவ, "இல்ல டா! வர வழியில மீனாட்சிய பாத்தேன். சந்தைக்கு போயிட்டு பையெல்லாம் கஷ்ட பட்டு தூக்கிட்டு நடந்து வந்துட்டு இருந்துச்சு, அதான் வீட்டுல விட்டுட்டு வந்தேன்" மாறன் கூற, சங்கரும் ஒப்புக் கொண்டு வேலை செய்ய தொடங்கினர்.

மதியம் ஒரு மணி அளவில் மீனாட்சி வயலுக்கு வர, மாறனும் சங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்ன மா! இவ்வளவு தூரம்?" மாறன் கேட்க, "உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். சாப்பிட வாங்க" என்று பாசமாக அழைத்தாள். அவர்களும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவள் அருகில் வந்தனர்.

"உனக்கு எதுக்கு வீன் சிரமம்?" அவன் வினவ, "எனக்கு எந்த சிரமமும் இல்ல மாமா. நீங்க ரெண்டு பேரும் செஞ்ச உதவினால தான் நான் என்னோட படிப்ப முடிச்சேன். இன்னிக்கு தான் ரிசல்ட் வந்துச்சு. நான் டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணி இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் நன்றி சொல்லுற விதமாதான், நானே சமச்சு எடுத்துட்டு வந்திருக்கேன். எந்த மறுப்பும் சொல்லாம சாப்பிடுங்க, பிளீஸ்" அவள் இருவரையும் வேண்டி கேட்டுக் கொள்ள,

அவர்களாலும் மறுக்க முடியாமல் சம்மதித்தனர். "நீ பாஸ் பண்ணினது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் மீனாட்சி. நீ இன்னும் பல உயரங்களுக்கு போகனும்" சங்கர் மனதார வாழ்த்த, அவள் அவனுக்கு நன்றி தெரிவித்தாள்.

மீனாட்சி அவர்கள் இருவருக்கும் உணவு பரிமார்க் கொண்டு இருந்தாள்.

"ஓ! விருந்து உபச்சாரம் எல்லாம் நடக்குதா? இதுதான் சரியான தருணம்" என்று எண்ணி வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் அஜய்.

மாயா மகிழ்ச்சியாக ஆடைகளை வடிவமைத்துக் கொண்டு இருந்தாள். வண்டி சத்தம் கேட்டு, மாறன் தான் வந்திருக்கிறான் என்று எண்ணி ஆசையாக வாயிலுக்கு சென்றாள்.

அங்கே அஜய் நின்றிருக்க, அவள் குழப்பமடைந்தாள். "வா அஜய்! உள்ள வா!" அவள் கூற, "மாயா பேச நேரம் இல்ல. என்கூட வா! ரொம்ப முக்கியமான விஷயம்" அவன் படபடப்பாக கூறினான்.

"என்னாச்சு?" மாயாவிற்கு எதுவும் புரியவில்லை. "மாயா, இப்போ நான் எத சொன்னாலும் நீ நம்ப மாட்ட. அதான் எல்லா உண்மையும் உனக்கு நேர்ல காட்டி புரியவைக்க தான் வர சொல்லுறேன். அங்க வந்து பாரு உனக்கே எல்லா விஷயமும் புரியும்" அவன் புதிராக பேச மாயா மேலும் குழப்பமடைந்தாள்.

"சரி! உன்னோட ஆருயிர் கணவன் எங்கே?" அவன் எரிச்சலாக கேட்க, "அவரு வயலுக்கு போய் இருக்காரு. அதுக்கு என்ன இப்போ?" அவளுக்கும் கோபம் வந்தது. "இந்நேரம் நீ சாப்பாடு எடுத்துட்டு போய் இருக்கணும்மே! ஏன் இன்னும் கிளம்பல?" அவன் கேட்க,

"இன்னிக்கு சாப்பாடு வேண்டாம்னு அவரு சொல்லிட்டு தான் போனாரு. இங்க பாரு அஜய், இதெல்லாம் எதுக்கு இப்போ தேவை இல்லாம கேட்டுட்டு இருக்க! என்ன சொல்லனுமோ, அத நேரடியா சொல்லு" அவள் பொறுமை இழந்து அவனிடம் பேச,

"ஓஹோ! உன்ன சாப்பாடு கொண்டு வர வேண்டாம்னு சொல்லிட்டு அங்க அவரோட  காதிலிய வர சொல்லி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரா அவரு?" அஜய் மேலும் பேசுவதற்குள், "வார்த்தைய அளந்து பேசு அஜய், அவர பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல" மாயா கோபத்தில் பொறிந்தால்.

"அதான் சொன்னேனே! நீ நம்ப மாட்டே! நேர்ல கூட்டிட்டு போய் நிருபிக்குறேனு. கிளம்பு, இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே உன்னோட கணவன பத்தி தெரிஞ்சுக்குவ" அவன் ஆனவமாக கூற, "அவரு மேல நம்பிக்கை இல்லாம இப்போ நான் உன்கூட வரல. என்னோட புருஷன் எந்த அளவுக்கு நல்லவர்னு எனக்கு தெரியும். இத்தன பேருக்கு முன்னாடி இப்படி நீ பேசினதுனால தான் அதெல்லாம் பொய், நீ ஒரு பொய்யானவனு நிரூபிக்க தான் வரேன். போகலாம்!" என்று கூறி மாயா அவனுடன் சென்றாள்.

"பாயசம் சூப்பர் மீனாட்சி!" சங்கர் பாயாசத்தை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருக்க, மாறனும் புன்னகையுடன் அதை உற்கொண்டான். அவர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்த நேரத்தில், அஜயும் மாயாவும் அங்கே வந்து சேர்ந்தனர்.

அவர்களை பார்த்த மாயாவின் விழிகள் விரிந்தன. எதுவும் பேசாமல் அவர்களை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

"அங்க பாரு? உன்னோட கணவன பாரு, முகத்துல எவ்வளவு சந்தோசம்! பக்கத்துல இருக்குறது யாருனு தெரியுதா? அவ தான், உன்னோட கணவன் உருகி உருகி காதலுச்ச பொண்ணு, மீனாட்சி.

என்னமோ! உன் கணவன் உத்தமன், அது இதுனு என்னென்னவோ சொன்னியே! இப்போ ஏன் எதுவும் பேசாம வாயடாச்சு போய் நிக்குற? இப்போ பேசு?

இது தான் நடக்குது இங்க. நீ பாட்டுக்கு உன்னோட வீட்டுல போய் இவ்வளவு வருஷம் இருந்துட்ட, இங்க பாரு என்னெல்லாம் நடந்துட்டு இருக்குனு!

கல்யாண நாள் அன்னிக்கு ஓடி போன பொண்ண, மறுபடி பாத்தா எந்த ஒருத்தனாச்சும் இப்படி இருப்பானா?

எனக்கு என்னவோ அன்னிக்கு நடந்த எல்லாமே இவனோட திட்டம்னு தோணுது. மாமா சொத்துக்காக ஆசப் பட்டு உன்ன கல்யாணம் செஞ்சுகிட்டானு நினைக்கிறேன்" அஜய் அவன் மனதில் இருந்த விசத்தை வார்த்தைகளாய் உதிர்க்க, மாயாவின் கண்களோ அதிர்ச்சி கலந்த கோபத்தில் சிவந்திருந்தது.

Hi friends,

46ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Continue Reading

You'll Also Like

58.6K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
94.6K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
152K 6.4K 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
12.3K 828 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2