மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

513K 16.9K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 44

6.8K 259 61
By Aarthi_Parthipan

"உன்ன எப்பவும் பாத்துக்கிட்டே இருக்கணும் போல தோணுது. இந்த பிரிவு இன்னும் எவ்வளவு காலம்னு தெரியல" சிவா சோகமாக பேச, "காலைல தான் பாத்தோம், அதுக்குள்ள என்னவோ பாத்து பல வருஷம் ஆன மாதிரி பேசுறீங்க" மீனா புன்னகையுடன் கேட்டாள்.

"ஏற்கனவே ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்துட்டோம் மீனா, இனிமேலும் இதை என்னால தாங்கிக்க முடியலை. உனக்கு அப்படி எதுவும் தோனலையா?" அவன் சோகமாக கேட்க, "தோணுது சிவா.! அது எப்படி தோனாம இருக்கும். ஆனா நாம கொஞ்ச நாள் பொறுமையா இருந்து தான் ஆகனும். முதல் நீங்க முழுசா குணமாகனும். அதுதான் இப்போ என்னோட ஒரே பிரார்த்தனை" மீனா அவள் மன எண்ணங்களை கூற, அவன் புன்னகைத்தான்.

"எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும். எதுவும் கவலை படாம, நீ நிம்மதியா இரு" அவன் கூற, "ம்ம்! நீங்களும் எதப் பத்தியும் யோசிச்சு கவலை படாம, நிம்மதியா ரெஸ்ட் எடுங்க. இப்போ போய் கொஞ்ச நேரம் தூங்குங்க. காலைல இருந்து நீங்க ரெஸ்ட் எடுக்கவே இல்ல, கோவிலுக்கு வந்து, டிராவல் பண்ணி, ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிட்டீங்க" அவள் அக்கறையாக பேசினாள்.

"சரிங்க மேடம்! உத்தரவு" அவன் பணிவாக கூற, அவள் புன்னகையுடன் கைபேசியை வைத்தாள். வெகு நாட்களுக்கு பிறகு அவள் மனம் எந்த சலனமும் இன்றி நிம்மியாக இருப்பதை உணர்ந்தாள் மீனா.

கஸ்தூரி எடுத்து வைத்திருந்த உணவை மாயா பரிமாற, மாறனும் மீனாவும் ஆனந்தமாக பசியாறினர்.

இரவு, மாயா அவள் அறைக்கு வருகையில் மணி பத்தை கடந்திருந்தது. அந்த சமயம் மாறன் பால்கனியில் நின்று கொண்டு இருந்தான். "மாமா! நீங்க தூங்கலையா?" மாயா அவன் அருகில் சென்றாள். "தூங்கனும்" அவன் முருவலுடன் கூறிவிட்டு வெறுமனே வானத்தை பார்த்து நின்றிருந்தான்.

"அப்படி என்ன தீவிர சிந்தனை?" அவள் அவன் அருகில் நின்றபடி கேட்க, "ஒன்னும் இல்ல மாயா, மாமா கிட்ட எப்படி மீனா காதல் விஷயத்தை சொல்லுறதுனு தான் யோசிச்சுட்டு இருக்கேன்" அவன் கவலையாக பதில் அளித்தான்.

"மாமா! நீங்க எதுக்கு இவ்வளவு பதட்டப் படுறீங்க. எல்லாமே நல்லாதாவே நடக்கும். என்ன நம்புங்க" அவள் அவன் கரங்களை பற்றி நம்பிக்கையாக கூற, அவனுக்கும் அது ஆறுதலாக இருந்தது.

"அது இருக்கட்டும் கோவில்ல ஏதோ சொன்னீங்களே?" அவள் முகபாவனை மாற, அவனுக்கு சிரிப்பு வந்தது. "என்ன சொன்னேன்?" அவன் தீவிரமாக யோசிபதை போல் பாவனை செய்ய, "இங்க எதுக்கு வந்தீங்கனு ஏதோ சொன்னீங்களே!" அவள் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள்.

"ஆமா! ஆமா! அதான் சொன்னேனே தேவாவ பாக்க வந்தேன்னு" அவன் சிரிப்புடன் பதில் அளிக்க, "ஓஹோ! அதுக்காக தான் நான் கிளம்பின அடுத்த நிமிஷமே கிளம்பி வந்து, நான் வெளிய வர வரைக்கும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா?" அவள் அவன் முகத்திற்கு மிக அருகாமையில் சென்று வினவ, அவனுக்குள்ளும் சிறு படபடப்பு ஏற்ப்பட்டது.

"அது என்ன ஒரே நாள்ள அவ்வளவு காதல்?" அவன் முகத்தின் அருகில் சென்று அவன் கலைந்திருந்த கேசத்தை அவள் கரங்களால் சரி செய்ய, அவன் வாயடைத்து போய் அவள் முகம் பார்த்து நின்றிருந்தான்.

"என்ன? பதிலயே காணோம்!" அவள் மீண்டும் கேட்க, அவன் பேச வார்த்தைகள் அற்று நின்றான். காரிருள் சூழ்ந்திருந்த வேளையில் முழுமதி போன்ற அவள் முகத்தை பார்த்த தருணத்தில் அவன் வாயடைத்து போனான். ரதியாய் அவன் அருகில் நின்றிருந்தவளிடம் இருந்து அவன் பார்வையை விளக்க, அவன் விழிகள் மறுத்தன.

"நைட் ஃபுல்லா இப்படியே பேசாம இருக்கலாம்னு நினச்சீங்களா? இன்னிக்கு பதில் சொல்லாம உங்கள விடுறதா இல்ல" அவள் கறாராக பேச, "அப்படி என்ன தெரிஞ்சுக்கணும் மேடம்" அவன் அவளை அவன் கைச்சிறையில் வைத்தவாறு வினவினான். அவன் ஸ்பரிசத்தில் மாயாவின் முகம் நாணத்தால் சிவந்தது.

"அதான் சொன்னேனே, அப்படி என்ன என் மேல திடீர் காதல்?" அவள் பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது.

"அத நான் சொல்லுறேன், அதுக்கு முன்னாடி நீ சொல்லு. உனக்கு எப்போ என் மேல காதல் வந்துச்சு? உனக்கு என்ன பிடிக்காதுனு எனக்கு தெரியும். ஆரம்பத்துல நீயும் அப்படிதான் இருந்த, ஆனா அதெல்லாம் எப்படி நீ மறந்து என்ன நேசிக்க ஆரம்பிச்ச?

மாயா, நீ என்ன எந்த அளவுக்கு காதலிக்கிறனு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா, இந்த காதல் உன் மனசுல எப்படி வந்துச்சு? இந்த கேள்வி என் மனசுல இருந்ததால தான் உன்கிட்ட என்னோட காதல வெளிபடுத்த நான் இவ்வளவு நாள் தயங்கி இருந்தேன். ஆனா நீ திடீர்னு என்ன விட்டு கிளம்பி வந்ததும் எனக்கு எதுவும் புரியல, உன்ன பிரிஞ்சு அங்க ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியல, அதான் நான் அடுத்த நிமிடமே கிளம்பி இங்க வந்துட்டேன்.

ஆனா, இப்பவும் என்னோட மனசுல இருந்த அந்த கேள்விக்கு பதில் கிடைக்கல?" அவன் மனதில் இருந்த அனைத்தும் வார்த்தைகளாய் வர, அவள் கோப படுவாலோ என்று எண்ணி அவன் தயக்கத்துடன் அவள் முகம் பார்த்தான்.

அவன் எண்ணியதற்கு மாறாக, அவள் முகத்தில் புன்னகை நிறைந்திருந்தது. "நீங்க நினைச்சது சரிதான் மாமா. ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி இந்த காதல் திடீர்னு வந்தது இல்ல" அவள் அவன் முகம் பார்க்க, அவன் குழப்பமாக அவள் முகத்தை பார்த்தான்.

"உங்கள முதல் முறையா பாத்த நாள்ல இருந்தே உங்கள காதலிக்க ஆரமிச்சுட்டேனு நினைக்கிறேன் மாமா" அவள் அவனை அணைத்துக் கொண்டு கூற, அவன் மேலும் திகைத்து போனான்.

"என்ன சொல்லுற?" அவன் அதே குழப்பத்துடன் வினவ, "சின்ன வயசுலயே உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா, ஆனா நீங்க என்கிட்ட அதிகமா பேச மாட்டிங்க, என்ன எப்பவும் கிண்டல் செஞ்சுட்டே இருப்பீங்க. அதான் உங்களுக்கு என்ன பிடிக்கலைனு நினைச்சுட்டு உங்ககிட்ட சண்ட போட்டேன்.

ஒரு தடவ உங்கள கல்லால அடிச்சேனே ஞாபகம் இருக்கா?" அவள் அவன் முகம் பார்த்து கேட்க, "அது எப்படி மறக்கும், இங்க பாரு, இந்த தழும்ப தினமும் கண்ணாடில பாக்குறப்போ அந்த சம்பவம் தான் ஞாபகம் வரும்" அவன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூற,

"ஆனா எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்ல, ஏனா நான் அத வேணும்னு தான் செஞ்சேன்" அவள் உதட்டை சுளித்து கூற, "அடி ராட்சசி, ஒரு பையன காயப்படுத்துனத நினச்சு இப்பக் கூட நீ இப்போக் கூட வருத்தப் படலையா?" அவன் அதிர்ச்சியாக கேட்க, "இல்லவே இல்ல. அன்னிக்கு என்ன நடந்துச்சுனு நான் இப்பவும் மறக்கல.." அவள் முகத்தை சுளித்து கூற, "அப்படி என்ன நடந்துச்சு?" அவன் குழப்பமாக கேட்டான்.

"ஆமா! அன்னிக்கு நீங்க உங்க எதிர் வீட்டு பொண்ணு ராகவி அழகா இருக்கா, அவள விட அழகான பொண்ணு இந்த உலகத்துலேயே இல்ல, பொண்ணுனா இப்படி இருக்கணும்னு சொல்லிட்டு அவகூடவே விளையாட போனீங்க. அது மட்டுமா என்னோட ஹேர்ஸ்டைல், ட்ரெஸ் பாத்து என்ன கிண்டல் பண்ணுனீங்க. அந்த கோபத்துல தான் உங்கள கல்லால அடிச்சேன். வேற யாரும் தடுக்காம இருந்திருந்தா, எனக்கு வந்த கோபத்துல உங்கள அன்னிக்கே கொன்றுப்பேன்" அவள் முகத்தில் இருந்த கொலைவெறியை பார்த்து அவன் ஒரு நிமிடம் பயந்தே போனான்.

"ஆனா, அப்போதான் உங்கள எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்கே புரிஞ்சுது! அது ரொம்ப சின்ன வயசு, அதனால அந்த உணர்வுக்கு பேர் எதுவும் தெரியல ஆனா உங்கள வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதுனு மட்டும் எனக்கு நல்லா புரிஞ்சுது.

அந்த விஷயத்துக்கு என்னோட அப்பா அடிச்சதுல கொஞ்சம் அப்செட் ஆயிட்டேன். அதான் உங்க மேல ரொம்ப நாள் கோபமா இருந்தேன். அப்புறம் அதெல்லாம் மறந்துட்டேன். என்ன அப்பா அதுக்கு அப்புறம் அங்க கூட்டிட்டு வரவே இல்ல, அதனால உங்கள பாக்க முடியல.

நீங்க இங்க வரதா அம்மா சொன்ன போது எனக்கு உங்கள பாக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. ஆனா அதே சமயம் நீங்க என்ன எப்பவும் கிண்டல் பண்ணினது ஞாபகம் வந்துச்சு. அதனால கொஞ்சம் கோபமும் வந்துச்சு. நான் நீங்க வரப்போ அத பாத்துக்கலாம்னு விட்டுடேன்.

அப்புறம் உங்கள வீட்டில பாத்தப்போ!! உண்மைய சொல்லனுமனா..... உங்கள முதல் முறை பாத்த போது, ஒரு நிமிஷம் அப்படியே என்னையே மறந்து போய்ட்டேன். எனக்கு வேற யார் மேலயும் காதல் வந்தது இல்ல. இந்த சைட் அடிக்கிறது எல்லாம் எனக்கு பிடிக்காது, ஆனா ரொம்ப வருஷம் கழிச்சு, உங்கள பாத்தப்போ ஒரு விதமான வித்தியாசமான ஃபீல் மனசுல வந்துச்சு. அத எப்படி சொல்லுறதுனு தெரியல... என்னையே மறந்து போய் உங்கள பாத்துட்டு இருந்தேன்" தட்டு தடுமாறி அவள் பேசி கொண்டு இருக்க, அவனுக்கு அவை அனைத்தும் கனவு போல் தோன்றியது.

அவள் அவனை சிறு வயதில் இருந்தே காதலித்து இருக்கிறாள் என்பதை எண்ணி எண்ணி அவன் மனம் பூரித்தது. அவள் கூறுவதை மேலும் கேட்க அவன் செவிகள் அவனை கெஞ்சின, "அப்புறம் என்ன நடந்துச்சு? சொல்லு?" அவன் ஆர்வமாகவும் ஆசையாகவும் அவளின் கரம் பற்றிக் கேட்க, அவள் அவன் முகத்தை பார்த்தாள்.

"நீங்க சரியான டியூப் லைட் மாமா! மத்தவங்க காதலை எல்லாம் புரிஞ்சுக்கிட்டு எல்லாரையும் சேர்த்து வச்சீங்க, ஆனா உங்க கூடவே இருந்த என்னோட காதல் உங்களுக்கு தெரியவே இல்ல! இதுல காதல் மன்னன்னு வேற சொல்லிகிட்டு இருந்தீங்க!" அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஹேய்! என்ன நீ எந்த அளவுக்கு காதலிச்சேனு நீ சொல்லி நான் கேக்குறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? அதெல்லாம் ஒரு தனி ஃபீல், அதை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. நீ மீதியையும் சொல்லு. பிளீஸ்! நீ என் செல்லம்ல" அவன் அவளை கெஞ்ச, அவளுக்கு அவன் முகத்தை பார்க்க ஆசையாக இருந்தது.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மாயா கதவை திறக்க சென்றாள்.

கஸ்தூரி தயக்கத்துடன் அங்கே நின்றிருந்தார், "என்னாச்சு மா?" மாயா அவரை கேட்க, "இல்லமா! மீனாகிட்ட உங்க அப்பா பேசிட்டு இருந்தாரு. இப்போ ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் உக்கந்து இருக்காங்க. ரெண்டு பேர் முகமும் சரியில்ல. அதான் உங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன்" அவர் சிறு பதட்டத்துடன் பேச, மாயாவிற்கும் மாறனுக்கும் என்ன நடந்திருக்கக்கூடும் என்று புரிந்துக் கொண்டனர்.

"அத்த, எதுவும் பதட்டப் படாதீங்க! நாங்க மாமாகிட்ட பேசுறோம்" என்று கூறி மாறன் கீழே செல்ல, மாயாவும் கஸ்தூரியும் அவனை பின் தொடர்ந்தனர்.

அவர்கள் கீழே வந்த நேரம் அங்கு ராஜாராம் இல்லை. "இந்த நேரத்துல எங்க போனாரு?" கஸ்தூரி மேலும் பதட்டமாக, "அம்மா பொறுமையா இருங்க, நான் மீனா கிட்ட பேசிட்டு வரேன்" என்று கூறி மீனாவின் அறைக்குள் சென்றாள் மாயா.

மீனா கண் கலங்கி அமர்ந்திருந்தாள். "மீனு! என்னாச்சு?" மாயா அக்கறையுடன் அவளை விசாரித்தாள்.

"அப்பா, என்கிட்ட இந்த கல்யாணத்துல விருப்பம் தான, அடுத்த வாரம் பையன் வீட்டுல இருந்து வர சொல்லட்டுமானு கேட்டாரு. என்னால இப்பவும் அமைதியா இருக்க முடியல மாயா, நான் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

அப்பா எதுவும் சொல்லாம, ரொம்ப வருத்தத்தோட வெளிய போயிட்டாரு மாயா! எனக்கு என்னவோ பயமா இருக்கு. அப்பா சிவாவ மாப்பிள்ளையா ஏத்துப்பாரா?" மீனா கண்ணீருடன் கேட்க, மாயாவிற்கு என்ன சொல்லுவதென்று தெரியாமல் அவள் முகத்தை மென்மையாக வருடினாள்.

"ஒன்னும் ஆகாது மீனா, எல்லாம் நல்லதே நடக்கும். நீ எதுக்கும் கவலை படாதே! நானும் மாமாவும் அப்பா கிட்ட பேசுறோம்" மாயா அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வெளியே வந்தாள்.

"என்னாச்சு மாயா?" மாறன் பதட்டமாக கேட்க, மாயா நடந்தவற்றை கூறினாள்.

"சரி மாயா! நீ அத்தைய பாத்துக்கோ. அவுங்களுக்கு நடந்தத சொல்லி அவுங்களுக்கு புரியவை. நான் மாமா எங்க போயிட்டாருனு பாக்குறேன்" என்று கூறி மாறன் வெளியே சென்று விட்டான்.

"இங்க என்ன நடக்குது மாயா?" கஸ்தூரி புரியாமல் குழப்பத்துடன் வினவ, மாயா அவரை சோஃபாவில் அமர செய்தாள்.

"அம்மா! நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. கோப படாதீங்க" மாயா புதிராக பேச, கஸ்தூரிக்கு குழப்பம் அதிகரித்தது.

மாயா நிகழ்ந்தவற்றை பொறுமையாக எடுத்து சொன்னாள். கஸ்தூரியின் மனம் வலித்தது. எந்த தாய்க்கு தான் மகள் காதலிக்கும் செய்தி சந்தோசத்தை கொடுக்கும், அதே போல தான் கஸ்தூரியும் உணர்ந்தார். மீனா மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார், அவள் அவ்வாறு செய்வாள் என்று அவர் ஒருப் போதும் எதிர்பார்த்திருக்க வில்லை.

"அம்மா! நீங்க கவலை படுற அளவுக்கு சிவா கெட்ட பையன் இல்ல மா. மீனாவுக்கு ரொம்ப பொருத்தமான மாப்பிள்ளை. நம்ம மீனா எதுவும் வயசு கோளாறு காரணமா இப்படி செய்யல, அவ மனசார அந்த பையன விரும்புறா. சிவாவ தவிர வேற யாரும் அவள சந்தோசமா பாத்துக்க முடியாது மா.

நம்ம மீனா ரொம்ப நல்ல பொண்ணு, நான் சொன்ன ஒரே காரணத்துக்காக மூணு வருஷம் அந்த பையன அவ பாக்கவும் இல்ல, அவன் கிட்ட பேசவும் இல்ல. சும்மா ஒரு ஈர்ப்பா இருந்திருந்தா, அது அவ மனசுல இருந்து அந்த மூணு வருஷத்துல மறந்து போய் இருக்கும். ஆனா, அவ காதல் ரொம்ப உண்மையானது, அதான் இவ்வளவு நாள் ஆன அப்புறமும் ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சு இருக்காங்க.

பிளீஸ் மா! அவளோட காதல ஏத்துக்கோங்க" மாயா கண்ணீருடன் பேசி முடிக்க, கஸ்தூரியின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

Hi friends,

44ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Continue Reading

You'll Also Like

20.4K 428 58
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பா...
205K 8.6K 81
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ...
85K 3.2K 15
மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤
106K 4.8K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...