மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 42

7K 278 69
By Aarthi_Parthipan

"மாமா, இது அவளோட வாழ்க்கை, நீங்க கண்டிப்பா அவள கேட்டு தான் ஒரு முடிவுக்கு வரனும். எனக்காக நீங்க மீனாவ கேட்டுட்டு மேல முடிவு எடுங்க" மாறன் வேண்டிக் கேட்டுக் கொள்ள, ராஜாராம் அதற்கு ஒப்புக் கொண்டார்.

"மீனா..!" அவர் அழைக்க, மீனா கீழே இறங்கி வந்தாள். வெளிறிய அவளின் முகத்தை பார்த்து மாறனுக்கு வேதனையாக இருந்தது. "மீனாவுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமா?" கண்களால் மாயாவிடம் அவன் உரையாட, "தெரியும்!" என்று மாயா பார்வையாலே அவனுக்கு பதில் அளித்தாள்.

மீனா என்ன சொல்ல போகிறாள் என்று தெரியாமல் மாறன் அவள் முகத்தை பார்த்தான். ராஜாராம் முகம் முழுவதும் புன்னகையுடன் மீனாவிடம் நடந்தவற்றை கூற, மீனா அவர் முகத்தை பார்த்தாள்.

"சொல்லு மா, உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானே?" ராஜாராம் நம்பிக்கையுடன் வினவ, "இல்லைனு சொல்லிரு மீனா" மாறன் மனதில் எண்ண, அவன் நினைத்ததற்கு மாறாக, "உங்க விருப்பம் பா! நீங்க எது செஞ்சாலும் என் நல்லதுக்காக தான் இருக்கும்" இடியாக வந்தது மீனாவின் பதில்.

மாறன் அவன் செவிகளை நம்ப முடியாமல் அவள் முகம் பார்த்தான். அவள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டு பேசுவது போல் தோன்றியது அவனுக்கு. அவன் மாயாவின் முகம் பார்க்க, அவள் விழிகளில் வடிந்த கண்ணீரும் அதையே அவனுக்கு உணர்த்தியது. வேறெதுவும் பேச முடியாத நிலையில் இருவரும் அங்கு அமர்ந்திருந்தனர்.

மீனா அவள் முடிவை கூறி விட்டு அங்கிருந்து சென்று விட, "இப்போ சரி தானே மாப்பிள்ளை. எனக்கு தெரியும் என்னோட பொண்ணு கண்டிப்பா சம்மதிப்பானு" அவர் பெருமிதமாக கூற, மாறன் எதுவும் பேசமுடியாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

"அப்புறம் என்ன மாப்பிள்ள, நான் என் நண்பனுக்கு நம்ம வீட்டுல எல்லாருக்கும் சம்மதம்னு சொல்லிடுறேன். ஒரு நல்ல நாளா பாத்து அவுங்கள பொண்ணு பாக்க வர சொல்லிடுறேன்" உற்சாகமாக பேசி விட்டு சென்றவரை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் அங்கே அமர்ந்திருந்தான் மாறன்.

"என்ன மாமா! நாம ஒன்னு நினைச்சா, இங்க என்னென்னவோ நடக்குது" மாயா வேதனையுடன் கூற, "ஆமா மாயா, இத நானும் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்ல" மாறன் பதில் அளித்தான்.

"சிவா என்ன சொன்னாரு?" மாயா கேட்க, "அவரு அத சொல்ல தொடுங்குற அப்போ தான் நீ போன் பண்ண, நானும் எதுவும் கேட்காம இங்க வந்துட்டேன்" அவன் சோர்வாக பதில் அளித்தான்.

"இப்போ கிளம்புங்க மாமா! என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கிட்டு வாங்க" மாயா கூற, "ஆனா இங்க நிலைமை தலைகீழ மாறி இருக்கே மாயா. இத எப்படி நான் சிவா கிட்ட சொல்லுவேன். மீனா ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தா? சிவா மேல கோபம் இருக்கும், அதுக்காக இப்படி யோசிக்காம முடிவு எடுதிருவாளா? ஏன் இப்படி செஞ்சா?" மாறன் புலம்ப, "அவளோட நிலையில யாராலும் இப்படி தான் இருக்க முடியும் மாமா. நீங்க அதையெல்லாம் நினச்சு கவல படாதீங்க. அத நான் பாத்துக்கிறேன். நீங்க போய் சிவாவ பாத்துட்டு வாங்க" மாயா அவனிடம் ஆறுதலாக பேசி அவனை அனுப்பி வைத்தாள்.

மாறன் பல யோசனைகளுடன் சிவா வீட்டை அடைந்தான். "என்னாச்சு மாறன்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" சிவா கனிவுடன் கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்ல சிவா. நீங்க சொல்லுங்க! நீங்க இப்போ சொல்ல போற விஷயத்துல தான் நிறைய சந்தேகங்கள் தீரும்" மாறன் அவனை கேட்டுக் கொண்டான்.

சிவா பெருமூச்சுடன் நடந்தவற்றை கூற தொடங்கினான். "மீனா படிப்பு முடிய நான் காத்துக் கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல தான் எனக்கு பிசினஸ்லயும் எதிரிகள் அதிகமாக தொடங்கினாங்க.

அதுலயும் ஒரு கம்பனி என்னோட வளர்ச்சிய மொத்தமா அழிக்கணும்னு திட்டம் போட்டுட்டு இருந்தாங்க. அப்போதான் எனக்கு ஒரு தகவல் கிடச்சுது.

நான் ஏமோஷன்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறவன். மீனா மேல நான் என்னோட உயிரையே வச்சிருக்கேனு அவுங்களுக்கு தெரிய வந்திருக்கு. என்னோட வளர்ச்சிய கெடுக்க, என்னோட கவனத்த மாத்த நினச்சவங்க மீனாவ அட்டாக் பண்ண போறதா எனக்கு தெரிய வந்துச்சு.

மீனாவுக்கு எதாவதுனா என்னால எப்படி தாங்கிக்க முடியும் சொல்லுங்க. அதான் என்னோட காதல இழந்தாலும் பரவாலைனு முடிவு பண்ணி, நானே மீனாவ அவாய்ட் பண்ணினேன். நான் நினைச்ச மாதிரியே மீனாவும் இங்க இருந்து வேற ஊருக்கு போய் அவ வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சுட்டா.

அவுங்க கவனத்த இன்னும் திசை திருப்ப தான் நான் ஃபாரின் போனேன். அவுங்க என்னோட நடவடிக்கைல தெரிஞ்ச மாற்றத்த பாத்து நானும் மீனாவும் பிரிஞ்சுட்டோம்னு நம்பிட்டாங்க. வேற விதமா என்ன அட்டாக் பண்ண நினச்சாங்க ஆனா பிசினஸ்ல என்ன எதுவும் செய்ய முடியல, அதான் இப்படி ஒரு ஆக்சிடென்ட் பண்ணி என்ன ஜெய்க்க நினச்சாங்க. ஆனா இதுலையும் நான் தப்பிச்சுட்டேன்.

ஆனா இந்த முறை அவுங்க மாட்டிக் கிட்டாங்க. இனிமேல் அவுங்களால எந்த ஒரு பிரச்சனையும் இல்லனு உறுதியா தெரிஞ்சதால தான் இதை எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன். இல்லைனா கண்டிப்பா இது யாருக்கும் தெரிய வந்திருக்காது. என்னோடு ப்ரெண்ட்க்கும் சேர்த்து தான்.

எனக்கு மீனாவ தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல. அவ தான் என்னோட உயிர், அவளுக்காக தான் நான் வாழ்ந்திட்டு இருக்கேன், அவளுக்கு ஒரு ஆபத்து அதுவும் என்னால வருத்துனு தெரிஞ்ச போது எனக்கு வேற எதுவுமே பெருசா தெரியல. அவள காப்பாதனும்னு மட்டும் தான் என்னோட மனசு நினச்சுது" கண்ணீருடன் சிவா சொல்லி முடிக்க, மாறன் கண்களும் கலங்கி இருந்தன.

மீனாவை இந்த அளவுக்கு காதலுக்கும் ஒருவனை விட வேறு யாராலும் அவள் வாழ்வில் சந்தோசத்தை கொடுக்க முடியாது என்று அவன் மனம் உணர்ந்தது.

"இப்போ சொல்லுறேன் சிவா, என்ன நடந்தாலும் உங்களையும் மீணாவையும் நான் சேர்த்து வைக்கிறேன். நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க, அங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன்" என்று கூறி மாறன் விடை பெற்றான். மனதில் இருந்தவற்றை அவனிடம் சொல்லி விட்டதும் சிவாவின் மனம் லேசானது.

நடந்தவற்றை மாயாவிடம் மாறன் கூறி முடிக்க, மாயா அதிர்ந்து போனாள். "என்ன மாமா சொல்லுறீங்க? இவ்வளவு நடந்து இருக்கா? ஆனா அவரு நம்ம மீனா உயிர காப்பாத்த அவரு உயிர கூட தர தயாரா இருந்திருக்காரே! நிஜமாவே இப்படி ஒருத்தர் கிடைக்க, நம்ம மீனா குடுத்து வச்சிருக்கனும்" மாயா அவள் மனதின் வார்த்தைகள் மறைக்காமல் அப்படியே கூற, "ஆமா மாயா! இங்க வேற எதுவும் நடக்கிறது குள்ள, நாம மீனா கிட்ட இத பத்தி பேசி அவளுக்கு புரிய வைக்கணும்" மாறன் உறுதியாக கூறினான்.

"ஆமா மாமா! இருங்க, நான் மீனாவ கூட்டிட்டு வரேன்" என்று கூறி மீனாவை அழைத்து வர சென்றாள். மாறன் அவர்கள் இருவரும் வருவதற்காக காத்திருந்தான்.

மாயாவும் மீனாவும் வந்து சேர, மாறன் மீனாவிடம் பேச தொடங்கினான்.

"மீனா நீ அவசர பட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்க. ஏன் இந்த திருமணத்துக்கு விருப்பம்னு சொன்னே" மாறன் வருத்தமாக அவளிடம் கேட்க, "என்னோட முடிவு இந்த விஷயத்துல தப்பாயிருச்சு, அவுங்களாவது சந்தோசமா இருக்கட்டும்" மீனா விரக்தியாக பதில் அளித்தாள்.

"மீனா நீ நினைக்கிற மாதிரி இல்ல மா, சிவா ரொம்ப நல்லவன். நீ அவர தப்பா..." அவன் பேசி முடிப்பதற்குள் மீனா அவனை இடைமறித்தாள், "போதும் மாமா! இதுவரைக்கும் நான் அனுபவிச்ச கஷ்டம் போதும் இதுக்கு மேலும் எதயும் நம்ப நான் தயாரா இல்ல" மீனா அவனை பேச விடாமல் அவள் மன எண்ணங்களை கூறினாள்.

"மீனா, மாமா சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கேளு. உனக்கு உன்னோட மாமா மேலயும் நம்பிக்கை போயிருச்சா" மாயா குறுக்கிட, "அப்படி எல்லாம் இல்ல கா" மீனா வேறெதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் சொல்வதை கேட்க தொடங்கினாள்.

"சிவா அன்னிக்கு உன்கிட்ட அப்படி பேசினது உன்னோட உயிர காப்பாத்த தான் மீனா" என்று கூறி, சிவா கூறிய அனைத்தையும் மாறன் கூறி முடித்தான்.

மீனா அவன் கூறியவற்றை பொறுமையாக கேட்டுக் கொண்டாள். ஆனால் அவள் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இன்றி, உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் அங்கு நின்றிருந்தாள்.

மாயாவும் மாறனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "இப்போ சொல்லு மீனா, சிவா அந்த சமையதுல செஞ்சது சரி தானே?" மாயா அவள் கரம் பற்றி கேட்க, மீனா வெறுமையாக புன்னகைத்தாள்.

"அது எப்படி கா சரி ஆகும்! எதாவது ஒரு காரணம் சொல்லி முறித்துக் கொள்வதற்கு, இது ஒன்னும் பிசினஸ் இல்ல மாயா. அன்னிக்கு அவரு உடைச்சது என்னோட மனச.

என்னோட உயிர காப்பாத்துறதா நினச்சு, என் மனச, என்னோட உணர்வுகளை, என்னோட காதல அவரு அன்னிக்கே கொண்ணுட்டாரு. இப்படி செஞ்சதுக்கு பதிலா என்னோட உயிர் அவருக்காக போய் இருந்தாலும் நான் சந்தோஷப் பட்டிருப்பேன் கா.

ஒரு காதல் ஆரம்பம் ஆகுறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போறத விட கொடுமையான வலி வேற எதுவும் இருக்காது அக்கா. அவ்வளவு வருஷமா அவர்மேல நான் வச்சிருந்த காதல ஒரு நோடில சுக்கு நூறா உடசிட்டு போய்ட்டாரு" மீனா கண்கலங்கி கூற, கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் கண்களும் கலங்கின.

"மீனா! உன்னோட உயிர காப்பாத்த தான் அவரு இவ்வளவும் செஞ்சாரு. நீ அத புரிஞ்சுக்காம, இப்படி பேசிட்டு இருக்கியே மா" மாயா கூற, "என்ன கா, என்னோட உயிர காப்பாத்த என்னோட காதல விட்டிருவாரா? அப்படி காப்பாத்த, என்னோட மனச உடச்சாரே, அந்த வேதனை தாங்க முடியாம, அன்னிக்கே நான் எதாவது செஞ்சு செத்து போய் இருந்தா, இப்போ நீங்க எல்லாரும் அவருக்கு சப்போட்டா பேசிட்டு இருப்பீங்களா? சொல்லு!" மீனாவின் வார்த்தைகளில் அவள் மனதின் ரணம் தெரிய, மாயா வாயடைத்து போய் நின்றாள்.

"என்ன மீனா! இப்படி எல்லாம் பேசாதே!" அவள் முகத்தை கையில் ஏந்திய படி மாயா கூற, "எனக்கு வேற என்ன சொல்லுறதுனு தெரியல அக்கா, அன்னிக்கு என்னோட நிலை நிஜமாவே அப்படிதான் இருந்துச்சு. நீ சரியான சமயத்துல வந்து என்ன சமாதானம் செஞ்ச, இல்லைனா நான் அன்னிக்கு என்ன ஆயிருப்பேனு எனக்கே தெரியாது.

காதலுக்காக எதை வேணும்னாலும் விட்டுக் கொடுக்கலாம் ஆனா எந்த ஒரு காரணத்துக்காகவும் காதல விட்டுக் கொடுக்க கூடாது அக்கா. அத அவரு ரொம்ப சுலபமா செஞ்சுட்டாரு. அன்னிக்கு அவரு பேசின பேச்சிலயே எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. இதுக்கு மேலயும் எங்களுக்குள்ள எதுவும் இல்ல" மீனா அவள் மன காயங்களை வார்த்தைகளாக கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

மாயா அவள் சென்ற திசை பார்த்து கண்ணீர் வடித்தாள்.

"என்ன மாமா, இவ இப்படி சொல்லிட்டு போறா! இதுக்கு மேல நாம என்ன சொன்னாலும் இவ கண்டிப்பா கேட்க மாட்டா. இப்படி ஒருத்தர் மேல இன்னொருத்தர் உயிரையே வச்சிருக்காங்க, ஆனா ரெண்டு பேரும் சேர முடியாம பிரிஞ்சி இருக்கிறத ஏத்துக்கவே முடியல மாமா" மாயா கண்ணீருடன் கூற, மாறன் அவளை சமாதானம் செய்தான்.

"ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப காதலிக்கிறாங்க மாயா. அதான் இப்படி ரெண்டு பேரும் விட்டுக் கொடுக்காம பேசுறாங்க. இப்போ மீனா சொன்னதுலையும் தப்பு எதுவும் இல்ல. அவ மனசு காயப் பட்டு இருக்கு, அதுக்கு மருந்து சிவா மட்டும் தான். நாம என்ன சமாதானம் சொன்னாலும் அவ மனசு மாற போறது இல்ல. இதுக்கு ஒரே வழி, ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கிறது தான்" மாறன் யோசனை கூற, மாயாவிற்கும் அது சரியாக பட்டது.

"அப்புறம், இந்த கல்யாண ஏற்பாடு செய்ய வேண்டாம்னு மாமாவுக்கு சொல்லி புரிய வைக்கணும் மாயா. நம்ம கல்யாணம் ரொம்ப எதிர்பாராம நடந்திருச்சு அதனால, மீனா கல்யாணத்த ரொம்ப சிறப்பா செய்யணும்னு அத்த மாமா ரெண்டு பேரும் நினைச்சிட்டு இருப்பாங்க. அதனால, அவுங்க மனசு கஷ்ட படாத படி நாம தான் அத சொல்லி அவுங்களுக்கு புரிய வைக்கணும்.

ஆனா அதுக்கு முன்னாடி, மீனா சிவா ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கணும்" மாறன் அவன் மன எண்ணங்களை கூற, மாயா அதை ஆமோதித்தாள்.

மாறன் சிவாவை அழைத்து அங்கிருந்த சிவன் கோவிலுக்கு வரச் சொன்னான். சிவாவும் சம்மதித்து, தேவாவுடன் ஆலயம் செல்ல தயாரானான்.

மீனா அவள் அறையை அடைந்ததும், அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுத்தது. அவள் வாழ்வில் நிகழ்ந்தவை அனைத்தையும் நினைத்துக் கண்ணீர் விட்டாள். அவனால், அவள் மனது அடைந்திருந்த காயத்தின் ஆழத்தை அவளால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடிந்தது.

காதல் மொழிகள் பேசிய கண்களில், வெறுப்பை காட்டி, வார்த்தைகளால் அவள் காதலை அழித்து, அவளை உயிருடன் கொன்ற அவனின் செயல்களை அவள் எவ்வாறு மறந்து போவாள். காலம் முழுவதும் அந்த காயம் ஆறாது என்று அவள் மனதில் தோன்றியது. அதே எண்ணங்களுடன் அவள் அறையில் அமர்ந்து இருந்தாள்.

Hi friends,

42ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

"அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்"

பயப்பட வேண்டியதற்கு பயம் இல்லாது இருப்பது அறியாமை.. எனவே, முன்னெச்சரிக்கையாக அரசு கூறும் விதிமுறைகள் எதையும் உதாசீனம் செய்யாமல், உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!! அது தான் நம் நாட்டின் நலனையும் காக்க போகிறது என்பதையும் மறவாதீர்!!

பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் குணமடையவும், மேலும் யாரும் பாதிக்கப் படாமல் இருக்கவும் இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன்!! நீங்களும் அவர்களின் நலனுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

Continue Reading

You'll Also Like

138K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
2.2K 176 20
Here is my second story Oru Kutty love story Love...... Love na Ypavume sweet ah pesitu Ypo paru love dialogue ah pesitu irukukavangaluku than v...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
23.2K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...