மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 35

7.3K 296 62
By Aarthi_Parthipan

இதமான தென்றல் காற்று அவள் முகத்தை மெல்ல வருட, மாயா மெதுவாக கண்களை திறந்தாள். அவள் அறையில் இருப்பதை உணர்ந்தாள், தலை மிகவும் பாரமாக இருந்தது. தலையில் கை வைத்து அமர்ந்தாள். என்ன நடந்தது என்று அவள் நினைவிற்கு கொண்டு வர முயற்சித்து கொண்டு இருக்கையில், அறை கதவு திறக்கப் படும் ஓசைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

மாறன் புன்னகையுடன் அங்கே நின்று கொண்டு இருந்தான். "எழுந்திட்டயா?" அவள் அருகில் சென்றான். அவள் வெறுமனே அவன் முகம் பார்க்க, "இந்தா இத குடி" என்று அவன் கையில் வைத்திருந்த கோப்பையை அவளிடம் கொடுத்தான்.

மாயா அதை பெற்றுக் கொண்டாள் ஆனால் அவள் மனமோ என்ன நடந்தது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தது. "என்ன யோசனை? இத குடி, தலை வலி போயிடும்" அவன் கூற, "மாமா! என்ன நடந்துச்சு?" அவள் புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.

"நீ குடிச்சது பதநீர் இல்ல, கள். நீ தெரியாம அத குடிச்சதால கொஞ்சம் மயக்கம் ஆய்ட்ட" அவன் நடந்ததை கூற மாயாவிற்கு கூச்சமாக இருந்தது. "இப்படி செய்து விட்டாயே?" என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

"சாரி மாமா! நீங்க சுண்ணாம்பு தடவணும்னு சொன்னீங்க, சுண்ணாம்பு வெத்தல பாக்கு கூட வாய் சிவக்க தானே போடுவாங்க. இதுவும் அது மாதிரி தான் போலனு நினச்சு தான் அத குடிச்சேன்" அவள் நினைத்தை கூற, "உனக்கு நான் அத விளக்கமா சொல்லி இருக்கணும். சொல்லாம விட்டுட்டேன்.

ஒவ்வொரு பொருளும் அதுக்கு இணையான பொருள் கூட சேரும் போது ஒவ்வொரு விதமான பயன்களை தரும் மாயா. சேரவேண்டிய பொருகள் சரியான அளவுல சேர்ந்தா அது இந்த மாதிரி ஒரு இனிமையான பானம் ஆகுது. அதை தனி தனியா பயன் படுத்துனா உடலுக்கு தீமை ஆகுது. அத புரிஞ்சு நாம தான் சரியா பயன்படுத்திக்கனும்" அவன் விளக்கம் அளித்தான்.

"ம்ம்! கரெக்ட் ஆன கெமிக்கல் ரி-ஆக்சன் நடந்தா ஒவ்வொரு பொருளோட பயணும் மாறும்! அத நல்லா தெரிஞ்சுக்கிட்டு யூஸ் பண்ணனும்னு சொல்லுறீங்க. கரெக்ட் தானே?" அவள் ஆர்வமாக கேட்க, "ரொம்ப சரி! இதாவது இவ்வளவு எளிமையா புரிஞ்சுக்கிட்டயே! சந்தோசம். இந்த கசாயத்த குடிச்சுட்டு வெளிய கொஞ்சம் காத்தார நில்லு. தலை வலி எல்லாம் சரியா போயிடும்" என்று கூறி விட்டு அவன் வெளியே சென்றான்.

"இப்போ நான் எதை புரிஞ்சுக்கலைனு சொல்லிட்டு போறாரு" அவன் சென்ற திசையை குழப்பமாக பார்த்தாள்.

"மாமா! மதியம் சாப்பிட்டீங்களா?" அவள் வருத்தமாக கேட்க, "சாப்பிட்டேன். கவலப் படாதே" அவன் புன்னகையுடன் பதில் அளித்தான்.

"சரி இப்போ என்ன சமைக்கட்டும்?" அவள் ஆர்வமாக கேட்க, "உனக்கு சமைக்க தெரியுமா?" அவன் ஆச்சர்யமாக கேட்டான். "நேத்து அத்த ஈசியா சமைக்க சில டிஷ் சொல்லிக் கொடுத்தாங்க. நான் அத சமச்சு தரேன்" அவள் பெருமையாக பதில் அளித்தாள்.

"அப்படி என்ன ஒரு நாள்ல கத்துக் கொடுத்தாங்க?" அவன் சந்தேகமாக கேட்க, "உப்மா!" அவள் கண்கள் பளிச்சிட பதில் அளித்தாள். "என்னது உப்மா வா?" அவன் அதிர்ச்சி அடைந்தான். "ஏன்?" அவள் புரியாமல் கேட்க, "அம்மா! என்ன பழிவாங்க நீங்க இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சு வச்சிருக்கீங்கலா?" அவன் மனதில் எண்ணிக்கொண்டு, "எனக்கு உப்மா பிடிக்காது. நாம வேற எதாவது சமைக்கலாம்" அவன் பதில் அளித்தான்.

"ஓ! உங்களுக்கு உப்மா பிடிக்காதா? அப்புறம் ஏன் அத்தை அத எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க? ஆனா அது ஈசியா இருந்துச்சு" அவள் கவலையாக கூற, "ஒன்னும் கவல படாத! நான் சமைக்குறேன் நீ வந்து பாரு" என்று அவளை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
.
.

டெல்லி,

"அஜய்! நீ இங்க எப்படி?" மீனா எதிரில் அமர்ந்திருந்த அஜயை பார்த்து ஆச்சர்யமாக கேட்டாள். "இங்க ஒரு பிராஜக்ட் வேலையா வந்தேன் மீனா. நீ இங்க தான் இருக்கேன்னு தெரியும் அதான் உன்ன பாத்துட்டு போகலாம்னு வந்தேன்" அவன் இயல்பாக பதில் அளித்தான்.

"சரி! வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? வினிதா?" அவள் கேட்க, "எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்புறம் என்ன மன்னிச்சிடு! நான் உங்க அப்பாக் கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது" அஜய் மேலும் பேசும் முன், "அந்த விஷயத்துல எனக்கு ரொம்ப வருத்தம் தான். அவ்வளவு சீக்கிரம் அத மன்னிக்கவும் முடியாது. மாயா நீ மாறிட்ட வருத்த படுறேனு சொன்னா, அதான் நான் உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னு இப்போ பேசிட்டு இருக்கேன்.

இப்போ பேசுனது உனக்கு எதாவது காயப்படுத்தி இருந்தா, சாரி" அவள் மனதில் தோன்றியதை கூறினாள்.

"எல்லாத்துக்கும் சேர்த்து இருக்கு டீ! உன் குடும்பத்துக்கும் இருக்கு" மனதில் எண்ணிக் கொண்டான்.

"சரி மீனா! நீ ஒருநாள் புரிஞ்சுப்ப. இப்போ சாப்பிட்டயா?" அஜய் கனிவாக கேட்பது போல் வினவ, "ப்ரெண்ட் இருக்கா, அவ கூட சேந்து தான் சாப்பிடணும்" மீனா பதில் அளித்தாள். "ஓ! சரி! இந்தா" என்று அவன் வாங்கி வந்த டைரி மில்க் சாக்லேட்டை அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை மறுக்க முடியாமல் பெற்றுக் கொண்டாள். "அஜய்! இனிமேல் இந்த சாக்லேட் வாங்கிட்டு வராதே! நான் சாக்லேட் சாப்பிடறது இல்ல" அவள் அவன் மனம் வருந்தாத வண்ணம் கூறினாள். அவன் அவள் அறியா வண்ணம் பற்களை கடித்துக் கொண்டு அவன் சினத்தை அடக்கிக் கொண்டான்.

"சரி அஜய் நான் கிளம்புறேன்" என்று கூறி மீனா விடைபெற்று சென்று விட, "இவ்வளவு தூரம் உன்ன பாக்க வந்தா வேண்டா விருந்தாளி மாதிரி நடத்துறியா?

அந்த மாறன மாமா மாமான்னு எவ்வளவு மரியாதையா பேசுறீங்க அக்காவும் தங்கையும் ஆனா என்ன பாத்தா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா இருக்கு?" பற்களை கடித்துக் கொண்டான்.

"உன் வீட்ல உன்னோட அப்பா அம்மா உனக்கு மரியாதைனா என்னனு சொல்லிக் கொடுக்காமயே வளத்துட்டாங்க. சரி நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு மரியாதைனா என்ன! பெரியவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு நான் கத்து தரேன்" கபட சிரிப்புடன் அவள் சென்ற திசை பார்த்து அமர்ந்திருந்தான்.

சிறிது தூரம் சென்ற மீனா, அங்கே ஒரு சிறுவன் கோபமாக அமர்ந்திருப்பதை பார்த்தாள். அவள் மனம் அந்த சிறுவனிடம் செல்ல அவளை வற்புறுத்தியது. அவள் அவனிடம் சென்றாள்.

"ஹேய்! என்னாச்சு உங்களுக்கு? ஏன் கோபமா இருக்கீங்க?" அவள் அந்த குழந்தையின் கைகளை பற்றி கேட்க, "அம்மா அடிச்சுட்டாங்க" அவன் கோபமாக பதில் அளித்தான். "அச்சச்சோ! அம்மாவ நாம அடிசர்லாம், அதுக்காக இப்படி தனியா உக்காந்து இருக்க கூடாது. அம்மா எங்க?" மீனா அக்கறையுடன் வினவினாள்.

"அம்மா காணோம்!" அந்த சிறுவன் திடீரென அழ, மீனாவுக்கு பாவமாக இருந்தது. "சரி டா கண்ணா! அழாதே! அம்மா இங்க தான் இருப்பாங்க. நாம பாக்கலாம்" அவள் அவனை சமாதானம் செய்ய முயன்றும் அவன் செவிமடுக்க வில்லை.

மீனா அவளிடம் இருந்த சாக்லேட்டை அந்த சிறுவனிடம் கொடுத்தாள். அதை பெற்றுக் கொண்டு அவன் அமைதி ஆனான். மீனா அந்த சிறுவனின் பெற்றோர் அங்கே எங்காவது இருக்கிறார்களா என கண்களால் தேடிக் கொண்டு இருந்தாள். "சிவா!" பதட்டத்துடன் ஒரு பெண்ணின் குரல் கேட்டு மீனா திரும்பிப் பார்த்தாள்.

ஒரு பெண்மணி, அந்த சிறுவனிடம் வந்து அவனை அணைத்துக் கொண்டார். "உங்க பையனா சிஸ்டர்?" என்றாள், "ஆமா மா, திடீர்னு எங்கயோ போய்ட்டான். இவ்வளவு நேரம் தேடிட்டு இருந்தேன்" அவரின் நிலையை மீனாவால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

"இந்த அக்கா எனக்கு சாக்லேட் கொடுத்தாங்க" சிறுவன் அவன் அழகிய பற்களை காட்டி சிரிக்க, மீனாவும் புன்னகைத்தாள். "உங்கள காணோம்னு குழந்தை அழுதுட்டு இருந்தான் அதா சமாதானம் செய்ய சாக்லேட் கொடுத்தேன்" மீனா புன்னகையுடன் கூறினாள்.

"ரொம்ப தேங்க்ஸ் மா, அவன் வேற எங்கேயும் போய் இருந்தா, இவ்வளவு பெரிய இடத்தில அவன கண்டுபிடிச்சிருக்க முடியாது" அவர் மனதார கூற, "பரவா இல்லை" என்று கூறிவிட்டு, சிறுவனிடம் திரும்பினாள் மீனா. அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "இனி அம்மாகிட்ட சண்ட போட கூடாது" என்று கூறி விட்டு இருவரிடமும் விடைபெற்று அங்கிருந்து சென்றாள்.

"சிவா!" என்ற அவன் பெயரை கேட்டவுடன் அவள் மனம் முழுவதும் அவனின் நினைவுகளால் ஆட்கொள்ள பட்டது. "உன்னை விட்டு எவ்வளவு தொலைவு வந்தாலும், உன்னிடம் நான் கொண்ட காதல் ஒருபோதும் குறையாது" என்று மனதில் எண்ணியவள் கண்களில் காதலின் வெளிப்பாடாக கண்ணீர் வெள்ளமாக பெருகியது.
.
.

"மாமா! என்ன சமையல் செய்ய போறோம்?" மாயா ஆர்வமாக கேட்க, "முட்டை சாதம், முட்டை வறுவல்" அவன் புன்னகையுடன் பதில் அளித்தான்.

"சூப்பர் மாமா! கேட்கும் போதே எனக்கு சாப்பிடணும் போல இருக்கு" மாயா உச்சுக் கொட்டி கூற, அவன் புன்னகைத்தான்.

"சரி நீ வெங்காயம் வெட்டி வை. நான் முதல சாதம் வைக்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றான். மாயா அவன் கூறியவாறு வெங்காயத்தை வெட்டி வைத்தாள்.

"மாமா! மாமா! நீங்க சொல்லி கொடுங்க, நான் சமைக்குறேன் பிளீஸ்" அவள் கெஞ்சளாக கேட்க, அவனும் ஒப்புக் கொண்டான்.

அவன் அறிவுரைகள் கூற, அவள் அதற்கேற்ப சமைத்தாள். மாறனும் சிறு குழந்தைக்கு கூறுவது போல, ஒவ்வொரு செய்முறையையும் கூற, மாயா அதை கவனமாக கேட்டுக் கொண்டு சமைத்தாள்.

ஒரு மணி நேரத்தில் சமைத்து முடித்து அதை எடுத்து வைத்து விட்டனர். மாயாவின் முகம் சந்தோசமாக இருந்தது. முதல் முறையாக அவள் சமைத்ததை எண்ணி மகிழ்ந்தாள். அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் தாய் பலமுறை வற்புறுத்தியும் சமையல் அறைக்குள் செல்லாதவள், இன்று அவளாகவே ஆர்வமாக சமைத்ததை எண்ணி அவளுக்குள்ளே வியந்துக் கொண்டாள்.

மாறன் சாப்பிட அமர்ந்ததும் அவளே பரிமாறினாள். "மாயா! நீயும் உக்காரு ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்" அவன் மென்மையாக கூற, அவளும் அவன் அருகில் அமர்ந்தாள். அவனுக்கு பரிமாரிவிட்டு அவளுக்கும் போட்டுக் கொண்டாள்.

"சூப்பர் மாயா! சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு" ஒருவாய் சாப்பிட்டதும் அவன் உற்சாகமாக கூறினான். மாயாவிற்கு ஆனந்தமாக இருந்தது. கணவன் வாயால் கிடைக்கும் பாராட்டு மற்ற அனைத்தையும் விட அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்பது அவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. அவள் புன்னகைத்து விட்டு சாப்பிட தொடங்கினாள்.

"நீங்க தான் மாமா கூட இருந்து எனக்கு எல்லா குறிப்புகளும் சொன்னீங்க. இதுல உங்க பங்குதான் அதிகம், அதான் சாதம் டேஸ்டா வந்திருக்கு" மாயா அவனை பாராட்ட, "யார் வேணாலும் குறிப்பு சொல்லலாம் மாயா, ஆனா சமைப்பவர்களின் கைபக்குவம் தான் சாப்பாட்டுக்கு ருசியை தரும். இது உன்னோட கை பக்குவம். நீ முதல் தடவ செஞ்ச நூடுல்ஸ வச்சே எனக்கு தெரிய வந்திருச்சு. உன்னோட கை பக்குவம் ரொம்ப நல்லா இருக்கும்னு" அவன் அவள் மனம் முழுவதும் சந்தோசத்தை பரப்பினான்.

அவன் வார்த்தைகளில் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்திருந்து அவள் மனம். திடீரென இடித்த இடியில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. "மாயா! நீ இங்கேயே இரு, நான் போய் விளக்கு எடுத்துட்டு வரேன்" என்று கூறி மாறன் உள்ளே சென்றான்.

சிறிது நேரத்தில் கையில் விளக்குடன் வந்தான். "இந்த சீசன்ல மழை பெய்யுமா மாமா?" மாயா புரியாமல் கேட்க, "பருவ நிலைல ரொம்ப மாற்றம் வந்துருச்சு மாயா. பூமி வெப்பம் அதிகமா ஆய்ட்டு இருக்கு, அதான் இந்த மாதிரி சம்மதமே இல்லாத பருவத்தில மழை பெய்யுது" அவன் வருத்தமாக பதில் அளித்தான்.

மாயா மேலும் எதுவும் பேசாமல் சாப்பிட தொடங்கினாள். இருவரும் அமைதியாக சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

"சரி மாயா, நேரம் ஆச்சு நீ போய் தூங்கு. நானும் போய் தூங்குரேன்" என்று கூறி மாடிக்கு செல்ல முற்பட்டவன் கைகளை பற்றி மாயா தடுத்தாள். அவன் புரியாமல் அவள் முகம் பார்க்க, "இந்த மழைல எங்க போறீங்க மாமா?" அவள் சோகமாக கேட்டாள். அவனுக்கும் அப்பொழுதுதான் நினைவு வந்தது.

"மாமா! நீங்க நம்ம அறையிலேயே தூங்குங்க. அதுல எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல. ஆரம்பத்துல பேசுனத வச்சு இன்னும் அதையே செய்யாதீங்க பிளீஸ்" என்று கூறி விட்டு அவன் பதில் அளிக்கும் முன் சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

"அவளை ரொம்ப கஷ்ட படுத்துறோம். பாவம்! இவ்வளவு நேரம் சந்தோசமா இருந்த முகம் இப்படி வாடிபோக நானே காரணம் ஆய்ட்டேனே! சாரி மாயா! இனி நீ வருத்தப்படுற மாதிரி நான் எப்பவும் நடந்துக்க மாட்டேன்" என்று மனதில் எண்ணிக் கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.

மின்சாரம் இல்லாததால் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தான். மழைச் சாரல் அவன் முகத்தை மென்மையாக வருடி செல்ல, மண் வாசனையும் சேர்ந்து அவன் மனதை மேலும் லேசாக்கியது. ஜன்னல் வழியாக மழையை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

Hi friends,

35ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Continue Reading

You'll Also Like

110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
56.4K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
42.3K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
62.7K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...