மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

Aarthi_Parthipan tarafından

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. Daha Fazla

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 34

7.2K 297 69
Aarthi_Parthipan tarafından

"இந்த வயசுல நீங்க எதுக்கு டா என்கூட கோவிலுக்கு வரனும். எனக்கு தான் வயசு ஆயிடுச்சு, கோவிலுக்கு போகணும்னு ஆசை படுரேன், நீங்க ரெண்டு பேரும் அத புரிஞ்சுக்காம பேசுறீங்க! இங்க பாரு மா, என் வயசுல இருக்க எல்லாரும் வராங்க, நல்லபடியா நாங்க எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வரோம்.

நீங்க ரெண்டு பேரும் எதுக்கும் கவலை படாதீங்க. மாறா! நீ மாயாவுக்கு சொல்லி புரிய வை!" வள்ளி உறுதியாக கூறினார். "அதுக்கு இல்ல மா" மாறன் எதோ சொல்ல நினைக்க, "நீ எதுவும் சொல்ல வேண்டும். நான் நாளைக்கு கிளம்புறேன் அவ்வளவு தான்" அவர் உறுதியாக இருக்க, மாறனால் அதற்கு மேல் மறுக்க முடிய வில்லை.

வள்ளிக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க மாயா உதவினாள். அவள் முகம் சோகமாக இருந்ததை வள்ளி கவனித்தார். "மாயா! எதுக்கு மா இப்போ முகத்தை இப்படி உம்முனு வச்சிருக்க?" அவர் அவள் முகம் பார்த்து கேட்க, "நீங்க தனியா அவ்வளவு தூரம் போறத நினச்சு தான் அத்த. மாமா இங்க இருக்கட்டும் நான் வேணும்னா உங்க கூட வரட்டுமா?" அவள் சோகமாக கேட்டாள்.

"என்ன பொண்ணு மா நீ, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் நல்லபடியா போய்ட்டு வந்திருவேன். நீ அத நினச்சு கவல படாம, என் பையன நல்லபடியா பாத்துக்கோ. நீங்க ரெண்டு பேரும் போக வேண்டியது தேன்நிலவுக்கு. உன் புருசன் கிட்ட சொல்லி அதுக்கு எதாவது ஏற்பாடு செய்ய சொல்லு சரியா?

இந்த பாதை யாத்திரை, கோவில் குளம் எல்லாம் நாலஞ்சு பிள்ளைகள் பெத்ததுக்கு அப்புறம் போயிட்டு வருவீங்காளாம்" அவர் புன்னகையுடன் கூறி மாயாவை முகம் சிவக்க வைத்தார். அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், வெறுமனே தலை அசைத்தாள். வள்ளி அவள் முகம் பார்த்து புன்னகைத்தார்.

சிறு சிறு வீட்டு வேலைகளும், எளிதாக சமைக்க கூடிய உணவு முறைகளையும் மாயாவிற்கு கத்துக் கொடுத்தார் வள்ளி. மாயா அனைத்தையும் கருத்தாகக் கேட்டுக் கொண்டாள்.

மறுநாள் காலை வள்ளி கிளம்புகையில், "அம்மா பாத்து போய்ட்டு வாங்க! தினமும் போன் பண்ணுங்க" மாறன் சோகமாக கூற, "கவலை படாதே டா கண்ணா! நான் பாத்துக்கிறேன்" அவர் முழு மனதுடன் பதில் அளித்துவிட்டு இருவரிடமும் விடைபெற்று சென்றார்.

"மாயா! நீ வீட்ல தனியா இருந்துப்பயா?" அவன் கவலையாக அவளை வினவினான். "இருந்துப்பேன் மாமா! ஆனா இன்னிக்கு எனக்கு எந்த வேலையும் இல்ல. தனியா இருக்க போர் அடிக்கும். என்னையும் உங்களோட கூட்டிட்டு போறீங்களா?" அவள் ஆர்வமாக கேட்க, அவன் புன்னகையுடன் சம்மதித்தான்.

"இன்னிக்கு பனமரத்துல பதநீர் இறக்குவாங்க அங்க கொஞ்சம் போகனும். நீயும் அங்க வரியா?" அவன் கேட்க, "ம்ம்! வரேன் மாமா" என்று கூறி அவனுடன் சென்றாள்.

"பதநீர்னா என்ன மாமா?" மாயா புரியாமல் கேட்க, "பனை மரத்தில இருந்து கிடைக்குற உணவுப் பொருள்களில பதநீர் முதன்மையானது. இதுதான் கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. இது எல்லாம் உடலுக்கு ரொம்ப நல்லது" மாறன் பனை மரத்தின் பயன்களை சொல்ல, அவள் ஆர்வமாக கேட்டுக் கொண்டாள்.

"எப்படி மாமா! எல்லா விஷயமும் இப்படி பிங்கர் டிப்ல வச்சிருக்கீங்க? உங்கள பாத்தா எனக்கு ரொம்பவும் ஆச்சரியமா இருக்கு?" மாயா விழி விரிய கூறினாள்.

"நான் படிச்சது எம்.எஸ்.சி. அக்ரி, எனக்கு இந்த செடிகள் மேல ஆர்வம் வந்துதான் படிச்சேன், ஆனா இந்த மாதிரி பயன்கள் எல்லாம் எனக்கு என்னோட அம்மா தான் முதல் முறையா சொல்லி கொடுத்தாங்க. அப்போதான் இதுல எனக்கு ரொம்ப ஆர்வம் வந்துச்சு" அவன் அவள் கேள்விக்கு விளக்கம் அளித்தான்.

"சூப்பர் மாமா! ஆனா நான் இது எதையும் தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சதே இல்ல! புதுசு டிரெண்ட்னு எனக்கு புதுமையா தோனுறத மட்டும் தான் செய்வேன். அதான் எனக்கு நம்ம ஊர் பத்தி எதுவும் தெரியாம போயிருச்சு" அவள் உதட்டை பிதுக்கி கூற, அவனுக்கு சிரிப்பு வந்தது.

"அது எல்லாம் பெரிய விஷயம் இல்ல, இங்க தானே இருக்க போற, போக போக எல்லாம் கத்துக்குவ! கவலை படாதே!" என்றான். அவளும் தலை அடைத்துவிட்டு வயல் வெளிகளை ரசித்துக் கொண்டே அவனுடன் பயணித்தாள்.

மாறன் அவன் வேளைகளில் மூழ்கி போக, மாயா அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள். அங்கே வேலை செய்பவர்களிடம் அது என்ன இது என்ன என்று அவளுக்கு எழுந்த சந்தேகங்களை கேட்டுக் கொண்டாள்.

"மாமா! அது என்ன வெள்ளையா இருக்கு? பனை மரத்தில பால் எல்லாம் கிடைக்குமா?" அங்கு வந்த மாறனை பார்த்து அவள் வினவ, அது பால் இல்ல கள், சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுதான் பதநீர். கோடைகாலத்தில பதநீரை தினமும் அளவுடன் குடிச்சா உடல இருக்க உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தரும். வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது அது" மாறன் விளக்கினான்.

"ஓ!" மாயா அதை கேட்டுக் கொண்டாள். யாரோ அழைக்க மாறன் அங்கிருந்து சென்று விட்டான். மாயா அங்கு அடுக்கி வைத்திருந்த பானத்தை ஆச்சர்யமாக பார்த்தாள். "இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? இத குடிச்சு பாக்கணும் போல இருக்கு, ஆனா அவரு இதுல சுண்ணாம்பு தடவனும்னு சொல்கிறாரே!

சுண்ணாம்பு ரொம்ப காரமா இருக்கும்! அத சின்ன வயசுல சாப்பிட்டு வாயில நமக்கு புண்ணு வந்துச்சு! ஐய்யோ! சுண்ணாம்பு போடுறது குள்ள இத நாம டேஸ்ட் பண்ணிட வேண்டியது தான். மாமா கிட்ட சொன்னா, சுண்ணாம்பு போட்டா தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாரு, வாய் வெந்துருச்சுனா ரெண்டு நாள் எதுவும் சாப்பிட முடியாது. அதனால இத இப்படியே குடிச்சிருவோம்" என்று எண்ணி, ஒரு சிறிய கோப்பையில் வைத்திருந்த கள்ளை யாரும் கவனிக்காத நேரத்தில் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள். மாறனும் அதை கவனிக்கவில்லை.

அந்த சமயம் மீனாவிடம் இருந்து அழைப்பு வந்தது. மாயா ஆர்வமாக கைபேசியை எடுத்து பேசினாள். "மீனு எப்படி இருக்க?" அவள் ஆர்வமாக கேட்க, "ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?

அத்தமா கோவிலுக்கு போய்ட்டாங்கனு அம்மா சொன்னாங்க?" மீனா பதில் அளித்தாள்.

"ஆமா! நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காம தனியா போய்ட்டாங்க" மாயா வருத்தமாக கூற, மீனா அவளை சமாதானம் செய்யும் படி பேசினாள்.

இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். மாயா மாறனுடன் வயலுக்கு வந்திருப்பதை மீனாவிடம் கூறினாள். "சூப்பர், மாயா! சந்தோசமா என்ஜாய் பண்ணு. அந்த பனம் பழம், நுங்கு, பதநீர் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருந்துச்சுனு சொல்லு" மீனா ஆசையாக கூற, மாயா ஒப்புக்கொண்டு கைபேசியை அணைத்தாள்.

அவள் எடுத்து வந்த பானத்தை பார்த்தாள், "பாக்க நல்லாதான் இருக்கு" என்று எண்ணி அதை குடிக்க வாயருகில் கொண்டு சென்றாள். "வாசனை நல்லா இல்லையே!" என்று முகம் சுளித்தாள்.

"சரி! உடலுக்கு நல்லதுனா அப்படி தான் இருக்கும்! அட்ஜஸ்ட் பண்ணிட்டு குடிச்சிட வேண்டியது தான்" என்று எண்ணி, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு அந்த பானத்தை ஒரே முறையில் குடித்து விட்டாள்.

அதன் சுவை பிடிக்காமல் அதிகமாக இரும்பத் தொடங்கினாள். அவள் இருமல் சத்தம் கேட்டு மாறன் அவள் இருந்த இடத்தை அடைந்தான்.

"ஹேய்! மாயா என்ன ஆச்சு?" அவன் கவலையாக அவள் அருகில் அமர்ந்து வினவினான். "மாமா! இது நல்லாவே இல்ல! யுவக்!" அவள் முகத்தை சுளித்து கூற, அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது.

"அதை ஏன் குடிச்ச?" அவன் சிறு கடுமையுடன் கேட்க, அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் கண்களில் கண்ணீரை கண்டால் அவன் மனம் துடிப்பதை அவன் பல நாட்களுக்கு முன்பே உணர்ந்திருந்தான். இன்று அவள் கண்ணீரை பார்த்ததும் அவன் கோபம் அனைத்தும் காற்றில் கரைந்தது.

"அதை ஏன் குடிச்ச மாயா? நான் சொன்னேன் தானே? அதுல சுண்ணாம்பு தடவி அப்புறம் தான் குடிக்கணும்னு, நீ ஏன் இப்போவே குடிச்ச?" அவன் பொறுமையாகவே கேட்டான்.

"சின்ன வயசுல சுண்ணாம்பு சாப்பிட்டு என் வாயெல்லாம் புண் ஆயிருச்சு தானே மாமா? அதான் அத போடுறதுக்கு முன்னாடியே குடிச்சேன்! ஏன் திட்டுறீங்க?" அவள் உதட்டை பிதுக்கு குழந்தை போல் கேட்க, அவன் மனம் மேலும் இளகியது.

"இது அப்படியே சாப்பிட்டா அது ஆல்கஹால்க்கு சமம் மாயா! நீ அதை குடிக்குறதுக்கு முன்ன என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கணும்" அவன் பரிவாக விளக்கம் கூறினான். ஆனால் அவளோ அதை எதையும் புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை.

"அது நல்லாவே இல்ல மாமா! எனக்கு தூக்கம் வருது" அவள் வாய் குலரியது. "இவள என்ன பண்ணுறது? திட்டவும் மனசு வர மாட்டேங்குது! இன்னும் குழந்தையா இருக்காளே" மாறன் ஏதோ எண்ணிக் கொண்டு இருக்க, "மாமா!" அவளின் அதிர்ச்சி கலந்த குரல் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. அவன் அவள் முகத்தை பார்த்தான்

"மாமா! நீங்க எப்போ ரெண்டா மாருநீங்க? மா..மா... இதுல எது நீங்க?" மாயா கண்களை தேய்த்துக் கொண்டு அவனை பார்த்தாள். "இனியும் இங்க இருக்க கூடாது! இவள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட வேண்டியது தான்" என்று மனதில் எண்ணிக் கொண்டு எழுந்தான். ஆனால் அவளோ எழுந்து நடக்கும் நிலையில் இல்லை. அவன் ஒரு பெருமூச்சுடன் அவளை தன் கரத்தினாள் தூக்கிக் கொண்டான்.

தூக்கிக் கொண்டு அவன் வண்டியில் அமர வைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஒரு வழியாக வீட்டை அடைந்து விட்டனர். வழி முழுவதும் அவள் ஏதோ உலரிக் கொண்டே வந்தாள். அவன் அவளை படுக்க வைத்து விட்டு வெளியே செல்ல எழுந்தான். அவன் மேலும் முன்னேறி செல்லாமல், அவளின் கரங்கள் அவன் கரத்தை பற்றி இருந்தது.

அவன் திரும்பி அவள் முகம் பார்த்தான். "மாமா! என்ன விட்டுட்டு எங்க போறீங்க?" அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, "எங்கேயும் இல்ல டா, உனக்கு தண்ணி எடுத்துட்டு வர தான் போறேன்" அவன் அவள் முகத்தை வருடி பதில் அளித்தான். "எனக்கு தண்ணி வேண்டாம் மாமா! நீங்க என்ன விட்டுட்டு எங்கேயும் போகாதீங்க. இங்கேயே இருங்க" அவள் அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு கூற,

"சரி நான் எங்கேயும் போகல" என்று கூறி அவள் அருகில் அமர்ந்தான். "மாமா! நான் உங்க மடியில படுத்துக்கவா?" அவள் கேட்க, அவன் அவளை இழுத்து மடியில் படுக்க வைத்து கொண்டான். அவள் சிரித்து விட்டு அவன் முகத்தில் அவள் கைகளால் வருடிக் கொண்டு இருந்தாள்.

"மாமா! உங்க முகம் ரொம்ப அழகா இருக்கு!" அவள் முகத்தை வருடி கூற, அவன் புன்னகைத்தான். "நீயும் தான் ரொம்ப அழகா இருக்க" அவன் பதிலுக்கு கூற, அவள் எழுந்து அவனுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டாள்.

"மாமா! உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் உங்களை நிறையா தடவ சைட் அடிசிருக்கேன்! இத யார்கிட்டேயும் சொல்லிறாதீங்க? சரியா" அவள் அவன் காதருகில் ரகசியம் போல் சொல்ல, அவனுக்கு சிரிப்பு வந்தது இன்னொரு புறம் அவன் மனம் சிரகடித்தது.

"ஏன் யார்கிட்டேயும் சொல்ல கூடாது?" அவன் அவள் போக்கிலே கேள்வி கேட்க, "ஏன்னா நான் இது வரைக்கும் யாரையும் சைட் அடிச்சதே இல்லயே! இப்போ உங்கள சைட் அடிச்சேனு தெரிஞ்சா என் ப்ரெண்ட்ஸ் என்ன கிண்டல் பண்ணுவாங்க. அதான்!

ஆனா மாமா! நீங்க ரொம்ப கியூட் மாமா! எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்" என்று கூறி அவனே எதிர்பாரா விதமாக அவன் கன்னத்தில் அவள் இதழ் பதித்து விட, அவன் மனம் மேலும் படபடக்க தொடங்கியது. "யூ ஆர் மை கியூட் பேபி" என்று கூறி அவன் கன்னத்தை கிள்ளி இதழில் வைத்துக் கொண்டு அவன் முகத்தை பார்த்தாள்.

அவனுக்குள் எல்லையற்ற உணர்வுகள் பூத்துக் கொண்டிருந்தன. அவள் முகத்தை ஆசையாக பார்த்தான். அவள் அழகிய முகம் அவள் செய்யும் சிறு சிறு முகபாவங்களால் மேலும் அழகாக தோன்றியது. "நாள் முழுவதும் பார்த்துக் கொண்டு இருந்தாலும் ஒரு போதும் திகட்டாத பேரழகி" என்று எண்ணினான்.

"மாமா! எனக்கு தூக்கம் தூக்கமா வருது. நான் தூங்குறேன்" என்று கூறி அவன் மடியில் படுத்து கொண்டாள். அவனும் அவள் தலை கோதி அவளை உறங்க வைத்தான். படுத்து சிறிது நேரத்தில் நன்றாக அவள் உறங்கி விட, மாறன் அவள் முகத்தை ரசித்தவாறே அந்த அறையில் அமர்ந்திருந்தான்.

Hi friends,

34ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Okumaya devam et

Bunları da Beğeneceksin

205K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
56.4K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
95.4K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
12.7K 347 35
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்