மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 33

7.3K 290 44
By Aarthi_Parthipan

அவனை பார்த்தவள் விழிகள் அழகாக விரிந்தன, "மாமா!" அவள் கண்களை அவளே நம்ப முடியாமல் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள். அவள் அவனுக்காக வடிவமைத்து இருந்த உடையை அணிந்து அனைவர் மனதையும் கவரும் மணமதனை போல் அங்கு நின்றிருந்தான் மாறன். அவன் அந்த உடையை அணிந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவன் அது போன்ற உடை அணிந்த போதிலும் இன்று அவன் தோற்றம் அவளுக்கு புதிதாக தெரிந்தது. அவனின் விழிகளும் அவளின் மீது இருக்க, அவன் அருகில் வரவர அவள் இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கியது.

அவன் அவள் அருகில் வந்து ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்பது போல் அவளை பார்த்தான். அவளோ உலகையே மறந்து அவனை பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

அவள் தோள்களை பற்றி குலுக்கி அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தான். "என்ன அப்படியே நின்னுட்டு இருக்க, அங்க ஃபங்ஷன்க்கு போக வேண்டாமா?" அவன் அவள் முகம் பார்த்து கேட்க, "ம்ம்! போகலாம் மாமா" அவள் அவனுடன் சேர்ந்து நடந்தாள்.

அவர்களது ஜோடி பொருத்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. "வாவ்!! மாயா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க" சுமி இருவரையும் பார்த்து கண்கள் பளிச்சிட கூறினாள். இருவரும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு தம்பித்தியை வாழ்த்த சென்றனர். அங்கிருந்தவர்களும் மாயா மாறனின் ஜோடி பொருத்தத்தை பற்றி பேச, மாயாவின் முகம் சிவந்தது. அவள் மனம் எல்லையற்ற ஆனந்தத்தில் நிறைந்திருந்தது.

இனிமையான பாடல் இதமான அந்த சூழலை மேலும் அழகாக்க, அங்கிருந்த ஜோடிகள் அனைவரும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அவர்கள் உணர்வுகளை பரிமாறிக் கொண்டு இருந்தனர்.

"நாமும் நடனம் ஆடலாமா?" என்று மாறன் விழிகளாலே கேள்வி கேட்க, மாயாவிற்கு அது கனவா நினைவா என்று இருந்தது.

அவள் அவன் முகத்தை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு இருக்கையில், "ஹேய் ஹாண்ட்சம்! ஷேல் வீ டான்ஸ்?" நவநாகரீக உடை அணிந்து உண்மையான முகத்தை மறைக்கும் அளவுக்கு செயற்கை ஒப்பனை செய்து கொண்டு வந்திருந்த ஒரு பெண் மாறனின் கைகளை பற்றி கேட்டுக் கொண்டு இருக்க, "எக்ஸ்க்யூஸ் மீ! அவரு என்னோட கணவர். நீங்க வேற யாராவத தேர்ந்தெடுத்துக்கோங்க" கண்களில் நெருப்பு பொங்க, அந்த பெண்ணின் கைகளை தட்டி விட்டு விட்டு, அவனை அணைத்தவாறு அவன் அருகில் நின்று கொண்டாள் மாயா.

மாறனுக்கு உள்ளூர பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் புன்னகை அதை வெளிப்படுத்தியது. அவனும் அவளை தன் கைச்சிறையில் வைத்துக் கொண்டான்.

"வாங்க மாமா" என்று அவனை அழைத்துக் கொண்டு நடந்தாள்; இருவரும் நடன மேடையை அடைந்தனர்.

அவன் அவள் கரங்களை மென்மையாக பற்றிக் கொள்ள, அவள் அவன் கண்களில் தன்னை இழந்தால். அவன் ஒரு கரத்தினால் அவள் கரத்தை பற்றி இன்னொரு கரத்தினால் அவளை அவனோடு அணைத்துக் கொண்டான்; இருவரும் மெல்லிசைக்கு ஏற்ப நடனம் ஆட தொடங்கினர்.

அவளின் கண்கள் அவனின் கண்களுக்குள் ஊடுருவி இருக்க, அவனின் கரங்கள் அவளை மென்மையாக  அணைத்து இருந்தன; அவன் அருகாமையில் தன்னிலை இழந்தாள். முதல் முறையாக அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து அவள் உயிருக்குள் மின்னல் தாக்கியதாக உணர்ந்தாள்.

அவள் வசம் இழந்து அவன் கண்களிலே அவள் ஜீவனை கண்டாள் மாயா. மாறனின் நிலையும் அதுவே, தன்னவளின் ஸ்பரிசத்தில் தன்வசம் இழந்தான். இருவரும் விழிகளை விளக்க மனம் இன்றி, ஒருவரை ஒருவர் ஊடுருவும் பார்வையில் ஆழ்ந்திருந்தனர்.

மற்றவர்களின் கரவோசையில் மீண்டும் சுயநினைவுக்கு வந்தனர். "கண்டிப்பா வீட்டுக்கு போனதும் சுத்தி போட சொல்லுங்க. இங்க இருந்த எல்லார் பார்வையும் உங்க ரெண்டு பேர் மேல தான் இருக்கு, ரெண்டு பேரும் ஒருவருக்காக ஒருவர் பிறந்த மாதிரி இருக்கீங்க" சுமி கண்களை உருட்டி கூற, இருவரும் நகைத்தனர்.

இருவருக்கும் அந்த நிகழ்வு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அவர்கள் வாழ்நாள் முழுதும் மனதில் நீங்காமல் இருக்கும் என்று இருவருக்கும் தோன்றியது.

அவனின் பார்வையும் செயல்களும் அவனின் காதலை உணர்த்திய பொழுதும் அவளால் அதை முழுவதுமாக நம்ப முடியாமல் தவித்தாள். அந்த நிகழ்விற்கு பிறகு அவன் முகம் பார்க்கவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது.

அவன் உறங்கி விட்டானா என்று அறைக்குள் எட்டிப்பார்த்தாள். நல்லவேளையாக அவன் உறங்கி இருந்தான், அவள் நிம்மதி பெருமூச்சு விட்டு, அறைக்குள் நுழைந்தாள்.

அவன் உறக்கம் கலையாமல் அவன் அருகில் படுத்து களைப்பில் உறங்கி விட்டாள். அவள் அறைக்குள் வந்ததில் இருந்து அனைத்தையும் அவனும் கவனித்துக் கொண்டு தான் படுத்திருந்தான். அவள் உறங்கியதை உணர்ந்து கண் திறந்து அவள் முகத்தை பார்த்தான்.

"காதல மனசுல வச்சுட்டு எதுக்கு இப்படி என்ன பாத்து தயக்க படுர மாயா. இன்னும் உனக்கு நீ என்னோட மனைவிங்கர எண்ணமே வரலயே! என்கிட்ட ஏன் எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேங்குறே? இன்னிக்கு ஒரு பொண்ணு என் கைய தொட்டதும் கோப பட்டு அங்க வந்து நீ என் மனைவினு சொன்ன பாத்தியா! அதுதான் எனக்கு ரொம்ப சந்தோசமான தருணமா இருந்துச்சு.

நீ என்னோட பொண்டாட்டி டீ, அந்த உரிமையோடு தான் நீ எப்பவும் என் பக்கத்துல நிக்கணும், இவ்வளவு நாள் என்ன பிடிக்காம; ஏத்துக்க முடியாம இப்படி இருக்கேன்னு நினைச்சேன், ஆனா இப்போ உன் மனசுல நான்தான் இருக்கேன்னு எனக்கு புரிஞ்சிருச்சு. இப்பவும் நீ என்ன விட்டு விலகி இருக்கிறது தான் என்னால ஏத்துக்க முடியல.

அதனால உன்னோட புருஷன இனிமேலும் தண்டிக்காம சீக்கிரம் அவன ஏத்துக்கோ. சரியா?" அவள் முகம் பார்த்து அவன் மனதில் நினைத்ததை அவன் பேசிவிட்டு அவளை அவன் அணைப்பில் வைத்துக் கொண்டு உறங்கி விட்டான்.
.
.

மறுநாள் இருவரும் மாயாவின் வீட்டுக்கு சென்று அவளின் பெற்றோரை சந்தித்து விட்டு இரவு அவர்கள் இல்லம் திரும்பி இருந்தனர்.

அவர்கள் வீட்டை அடைகையிள் இரவு வெகு நேரம் ஆகியிருந்தது; வள்ளியும் உறங்கி இருந்தார். "மாமா! எங்க போறீங்க?" மாடிக்கு சென்றவனை மாயா தடுத்தாள். "தூங்க தான், நீயும் தூங்கு மாயா; ரொம்ப நேரம் ஆச்சு" அவன் கனிவாக கூற, "வெறும் வயிற்றில படுத்தா எப்படி தூக்கம் வரும்? ஒரு அஞ்சு நிமிசம் இருங்க, நான் எதாவது சாப்பிட ஏற்பாடு பண்ணுறேன்" என்று கூறி சமையல் அறைக்குள் நுழைந்தவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

"இவளுக்கு சமைக்க தெரியாதே!" மனதில் எண்ணினான் இருப்பினும் மறுப்பு எதுவும் சொல்லாமல் உடை மாற்றி வர சென்றான்.

அவன் வந்ததும் அவள் சமைத்திருந்த நூடுல்ஸை ஒரு தட்டில் வைத்து கொடுத்தாள். "சாரி மாமா! எனக்கு வேற எதுவும் சமைக்க தெரியாது" அவள் பாவமாக முகபாவனை காட்ட, அவனுக்கு சிரிப்பு வந்தது.

"பரவால்ல! வா நீயும் சாப்பிடு" என்று கூறி அவளுக்கும் ஒரு தட்டில் வைத்து கொடுத்தான். அவள் அதை புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

"சூப்பர் மாயா! ரொம்ப நல்லா இருக்கு" அவன் அவள் சமைத்தை சாப்பிட்டு விட்டு கூற, அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல், "மாமா! நூடுல்ஸ் யார் சமச்சாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்" என்று கூறி நகைக்க, அவனும் அவளோடு சேர்ந்து சிரித்தான்.

"அத்தை கிட்ட நாம இன்னிக்கு வரோம்னு சொல்லலையா?" அவள் வினவ, "இல்ல மாயா, சொன்னா அவுங்க தூங்காம நாம வர வரைக்கும் முளிச்சுட்டு இருப்பாங்க. அதான் நான் எதுவும் சொல்லல" அவன் பதில் அளித்தான். இருவரும் பேசிக் கொண்டே இரவு உணவை உண்டு முடித்தனர்.

மாயா அவள் அறைக்கு சென்று மஞ்சத்தில் படுத்து உறங்க முற்பட்டாள், ஆனால் அந்த இரண்டு நாட்களில் தனவனின் அருகாமையில் கண்களை மூடியவுடன் வந்த உறக்கம், இன்று அவள் எவ்வளவு முயன்றும் எட்டாக் கனியாகவே இருந்தது. இரண்டு நாட்களில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் மீண்டும் மீண்டும் எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தாள். அது அவள் தூக்கத்தையும் கெடுத்தது.

அங்கே மாறனின் நிலையும் அதுவாகவே இருந்தது. அவளின் அருகாமையை அவன் மனம் வேண்டியது. இருவரும் வெகு நேரம் விழித்திருந்து, பயண களைப்பில் உறங்கி போயினர்.

மறுநாள், மாயா விழிப்பதற்குள்ளே அவன் வயலுக்கு செல்ல தயாராக கீழே இறங்கி வந்தான். வள்ளி அவனை பார்த்து ஆச்சரியப் பட்டார்.

"மாறா நீ வர போறேன்னு சொல்லவே இல்ல?" மாறன் வயலுக்கு கிளம்பி செல்லும் போது வள்ளி அவனை கேட்க, "சொன்னா நீங்க தூங்காம இருப்பீங்கனு தான் சொல்லல மா" அவன் பாசமாக பதில் அளித்தான். "என்ன பா நீ! ராத்திரி சாப்பிடாம வெறும் வயிற்றில தூங்குநீங்களா ரெண்டு பேரும்?" அவர் வருத்தத்துடன் கேட்க,

"இல்ல மா! உங்க மருமக சூப்பரா ஒரு நூடுல்ஸ் செஞ்சு கொடுத்தா. ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு தான் தூங்கினோம். சரி மா, மத்தத சாயங்காலம் பேசலாம். இப்போ வயலுக்கு போக நேரமாச்சு நான் கிளம்புறேன்" என்று கூறி அவன் சென்று விட, வள்ளியின் மனம் மகிழ்ச்சி அடைந்தது. மகன் முகத்தில் இவ்வாறு ஒரு சிரிப்பை அவள் பார்த்து பல நாட்கள் ஆனது போல் இருக்க, மனதில் குலதெய்வதிற்கு நன்றி தெரிவித்தாள்.

சங்கரும் அந்த சமயம் வயலுக்கு வந்து விட்டான். "மாப்பிள! எப்படி டா இருக்க?" சங்கர் கேட்க, "இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா டா? ரெண்டு நாள் தானே நான் ஊர்ல இல்ல, என்னவோ ரெண்டு வருஷம் ஆன மாதிரி கேக்குற?" மாறன் சிரித்தான். "அதுவும் சரி தான்" சங்கரும் சிரிக்க, அப்பொழுது தான் மாறனுக்கு நினைவு வந்தது, "டேய்! மீனாட்சி அப்பா எப்படி இருக்காரு டா?" மாறன் வருத்தமாக கேட்க, "இப்போ பரவால்ல டா! நல்லா இருக்காரு. ரெண்டு பேரும் மதியம் போய் பாத்துட்டு வரலாம்" சங்கர் பதில் அளித்தான்.

"என்ன இவன் கோப படாம பேசுறான்" மாறன் மனதில் ஆச்சரியப் பட்டான். "என்னடா! நான் கோபப் படாம அமைதியா பேசுறேனு நினைச்சயா?" சங்கர் மாறன் மனதில் நினைத்ததை கூற, அவன் மேலும் ஆச்சர்யமாக அவனை பார்த்தான்.

"அந்த பொண்ணு மீனாட்சி பத்தி ரொம்ப தப்பா நினைச்சுட்டேன் டா. நான் உன்கிட்ட கோப படுறத பாத்துட்டு அந்த பொண்ணு நடந்த எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிருச்சு. இந்த வயசுல அந்த பொண்ணுக்கு வந்த நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது டா! அந்த பொண்ணு சொன்னத கேட்ட அப்புறம் தான் எனக்கு அவளோட சூழ்நிலை புரிஞ்சுது. அவ செஞ்ச ஒரு தப்புக்கு வாழ்க்கை முழுசும் தண்டனை அனுபவிக்கனும், ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த பொண்ண நினைச்சா" சங்கர் வேதனையுடன் பதில் அளித்தான்.

"இவ்வளவு கஷ்டத்தை அந்த பொண்ணுக்கு குடுத்த ஆண்டவன் கண்டிப்பா ஒரு நாள் சந்தோசத்தையும் குடுப்பான் டா! நீ வருத்தப் படாதே! மதியம் போய் மாமாவ பாத்துட்டு வரலாம்" மாறன் கூற, சங்கர் சரி என்று தலை அசைத்தான்.

மதியம் இருவரும் மீனாட்சியின் தந்தையை சந்தித்து அவர் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டு வீட்டுக்கு மதிய உணவிற்கு வந்தனர்.

"அண்ணா எப்படி இருக்கீங்க?" மாயா சங்கரை பார்த்து பாசமாக வினவ, "நல்லா இருக்கேன் மா! நீ நல்லா இருக்கியா?" அவனும் அவளை விசாரித்தான்.

வள்ளி அவர்களுக்கு மதிய உணவு பரிமாற, இருவரும் அமைதியாக உண்டனர்.

"மாறா! உன்கிட்ட ஒன்னு சொல்லணும் பா!" வள்ளி தயக்கத்துடன் கூற, "என்ன மா?" என்றான் மாறன் குழப்பமாக.

"நம்ம ஊர்ல இருந்து எல்லாரும் கோவிலுக்கு போறாங்களாம். நம்ம நாட்டுல இருக்க எல்லா முக்கியமான கோவிலுக்கும் புண்ணிய ஸ்தலங்களுக்கும் கூட்டிட்டு போறதா சொன்னாங்க பா.

நானும் போய்ட்டு வரேன். எனக்கு கோவில்கள் எல்லாம் பாக்கணும்" அவர் தயக்கத்துடன் கேட்டார்.

"அத்தமா! நீங்க ஏன் தனியா போகணும்னு சொல்லுறீங்க. தனியா நீங்க எங்கேயும் போக வேண்டாம். உங்களுக்கு எங்க போகணும்னு சொல்லுங்க, நானும் மாமாவும் உங்கள கூட்டிட்டு போரோம்; உங்கள தனியா எங்கேயும் அனுப்ப மாட்டோம்" அதுவரை அமைதியாக இருந்த மாயா பேச, மாறன் அவளை ஆச்சரியமாக பார்த்தான். அவன் மனதில் நினைத்ததை அவள் கூறி இருக்க, அவனுக்கு உள்ளூர சந்தோசமாக இருந்தது. இதைத்தான் மாறன் அவளிடம் எதிர்பார்த்தான்.

"மாமா! நான் சொன்னது சரி தானே?" மாயா மாறன் முகம் பார்த்து கேட்க, அவன் மலர்ந்த முகத்துடன் ஆம் என்று தலை அசைத்தான். "என்னோட மனசுல நினச்சதை தான் மாயா சொல்லி இருக்கா மா, உங்கள தனியா அவ்வளவு தூரம் அனுப்பிட்டு இங்க எங்களால நிம்மதியா இருக்க முடியாது" மாறனும் மாயா கூறியதையே கூற, வள்ளி ஒருபுறம் வருந்திய போதும் மறுபுறம் மகிழ்ச்சி அடைந்தார்.

Hi friends,

33ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Continue Reading

You'll Also Like

8.6K 818 43
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப்...
53.5K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
23.3K 910 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
13.4K 836 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2