மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

Od Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. Více

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 30

7.7K 287 64
Od Aarthi_Parthipan

இதமான குளிர் காற்று அவளை வருடி செல்ல, அவள் கூந்தல் அழகாக காற்றுடன் சேர்ந்து அசைந்தது. "மீனாவும் தான் உங்களுக்கு மாமா பொண்ணு, என்னவோ நான் மட்டும் தான் மாமா பொண்ணுன்னு சொல்லுறீங்க?" அவன் அதற்கு என்ன பதில் சொல்ல போகிறான் என்று அறிந்திருந்தும், அதை அவன் வாயால் கேட்க நினைத்து அந்த கேள்வியை கேட்டாள்.

"மீனா எனக்கு ஒரு குழந்தை மாதிரி தான், அவளை ஒரு நாளும் என்னோட மாமா மகளா நான் பாத்ததே இல்ல, நீ அப்படி இல்ல. எனக்கு இருந்த ஒரே ஒரு முறை பொண்ணு நீதான். உன்ன மட்டும் தான் நான் அப்படி நினைச்சேன்" அவள் எதிர் பார்த்ததை அவன் கூறி விட, அவள் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்திருந்தது.

"சரி மாயா, ரொம்ப நேரம் ஆச்சு, நீ போய் தூங்கு. காலைல பாக்கலாம். இனிய இரவு வணக்கம்" அவன் புன்னகையுடன் சொல்ல, அவளும் புன்னகைத்து விட்டு அவள் அறைக்கு சென்றாள்.

அவள் எவ்வளவு முயன்றும் உறக்கம் வர மறுத்தது. அவன் இன்று அவளிடம் பேசிய வார்த்தைகள் அவள் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தன. வெகு நேரம் முயற்சித்து இறுதியில் உறங்கி விட்டாள்.
.
.

மறுநாள்,

"அத்த! நான் கொஞ்சம் பொருட்கள் எல்லாம் வாங்கனும். டவுனுக்கு எப்படி போகணும்னு அத்த? பஸ் எதாவது இருக்குமா?" மாயா வள்ளியிடம் கேட்க, "பஸ் எல்லாம் எதுக்கு மா! மாறன அழசிட்டு போக சொல்லுறேன். நீ கிளம்பி இரு" அவர் அவள் முகத்தை வருடு கூறினார்.

"சரி அத்த! நான் கிளம்புறேன்" என்று கூறி மாயா அவள் அறைக்கு சென்றாள்.

மாறன் காலை உணவிற்கு வீட்டுக்கு வர, "மாறா! இன்னிக்கு உனக்கு வேலை நிறையா இருக்கா?" அவர் எதார்த்தமாக கேட்க, "இல்ல மா! ஏன் இங்க எதாவது வேலை இருக்கா?" அவன் வினவினான்.

"இல்ல பா, மாயா தான் டவுனுக்கு போகணும்னு சொன்னா. அதான் கேட்டேன். நீ இன்னிக்கு அவள கொஞ்சம் டவுனுக்கு கூட்டிட்டு போய்ட்டு வா பா. இங்க வந்ததுல இருந்து நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போனது இல்ல" அவர் அவனிடம் கூற, "சரி மா! போய்ட்டு வரோம்" அவனும் ஒப்புக்கொண்டான்.

இவர்கள் இருவரும் இவ்வாறு இயல்பாக இருப்பதை பார்த்து வள்ளியின் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

"மாயா! மாயா!" மாறன் அவளை அழைக்க, மாயா அவனிடம் வந்தாள். "சொல்லுங்க மாமா" அவள் புன்னகையுடன் வினவ, "வெளிய போகணும்னு அம்மா கிட்ட சொல்லி இருந்தயா?" அவன் வினவினான்.

"ஆமா மாமா! கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் அதான் டவுனுக்கு போகணும்னு சொன்னேன். ஏன் மாமா! உங்களுக்கு எதாவது வேலை இருக்கா? வேலை இருந்தா இன்னொரு நாள் போலாம் மாமா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" அவள் படபடப்பாக பதில் அளித்தாள்.

"ஹேய்! எனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்ல. இனிமேல் வெளிய போகனும்னா நீயே என்கிட்ட சொல்லு. என்கிட்ட பேச உனக்கு எந்த தயக்கமும் வேண்டாம். அத சொல்லத்தான் கூப்பிட்டேன். இப்போ சீக்கிரம் கிளம்பி வா! நான் கீழ இருக்கேன்" அவன் புன்னகையுடன் கூறி விட்டு சென்றான். மாயாவும் உற்சாகமாக கிளம்பினாள்.

"மாமா! கார்ல வேண்டாம் பைக்ல போலாமா?" அவள் ஆர்வமாக வினவ, "ஏன்?" அவன் புரியாமல் கேட்டான். "எனக்கு பைக்ல போக ரொம்ப பிடிக்கும் அதான்" அவள் எதார்த்தமாக பதிலளித்தாள். "சரி" என்று அவனும் ஒப்புக்கொண்டு அவளை அழைத்துச் சென்றான். வள்ளி இருவரையும் மலர்ந்த முகத்துடன் வழியனுப்பி வைத்தார். இருவரும் ஜோடியாக செல்வதை பார்க்க மிகவும் அழகாக இருந்தது. "என் கண்ணே பட்டுரும் போல இருக்கு. சாயங்காலம் வந்ததும் சுத்தி போடணும்" என்று வள்ளி மனதில் எண்ணிக் கொண்டார்.

அவனோடு சேர்ந்து வெளியில் சென்றதில் அவள் மனம் எல்லையற்ற இன்பம் கண்டது. இருவரும் அரைமணி நேரத்தில் கடைதெருவை அடைந்திருந்தனர்.

"என்னோட ப்ரெண்ட்க்கு கல்யாண கிஃப்ட் வாங்கனும் மாமா. அந்த நகை கடைக்கு போகனும்" அவள் நகை கடையை காட்டி கூற, "சரி" என்று அவன் அவளை அழைத்து சென்றான்.

"மாறா!" ஒரு பெரியவர் அவனை அழைக்க, அவன் திரும்பி பார்த்தான். "நல்லா இருக்கீங்கலா பெரியப்பா?" அவன் அன்பாக பேச, அவரும் அவனிடம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்தார். மாயாவை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தான். "மாயா! இவரு நம்ம சொந்தகாரர். எனக்கு பெரியப்பா முறை பக்கத்து ஊர்ல இருக்காரு" என்று மாயாவிற்கும் பெரியவரை அறிமுகம் செய்து வைத்தான். மாயா அவரை விசாரித்து சில வார்த்தைகள் பேசினாள்.

"சரி மாயா நீ கடைல இரு, நான் இவர வழியனுப்பி வச்சுட்டு வரேன்" என்று கூறி அவருடன் அவன் சென்று விட, மாயாவும் நகை கடைகுள் சென்றாள்.

அவன் சிறிது நேரத்தில் வந்துவிட, அவள் தன் தோழிக்கு தேர்ந்தெடுத்து வைத்திருந்த அன்பளிப்பை காட்டினாள். "நல்லா இருக்கு மாயா. உனக்கும் எதுவும் வாங்களையா?" அவன் புன்னகையுடன் கேட்க, "இல்ல மாமா, எனக்கு எதுக்கு? ஏற்கனவே இருக்கிற நகை போதும்" என்று அவள் பதில் அளித்தாள்.

"அடுத்து துணி கடைக்கு போகனும் மாமா, அத்தைக்கு ஒரு சேலை வாங்கனும்" அவள் ஆர்வமாக கூற, "அம்மாவுக்கா? இப்போ எதுக்கு மாயா?" அவன் புரியாமல் கேட்க, "நான் முதல் முறையா வேலை செஞ்சு சம்பாதிச்சு இருக்கேன். என்னோட இந்த முதல் வருமானதுல என் மனசுக்கு பிடிச்ச எல்லாருக்கும் எதாவது வாங்கி தரணும்னு ஆசை படுறேன் மாமா" அவள் ஆசையாக கூறினாள்.

"சரி மாயா! உன்னோட விருப்பம் தான். அப்போ உனக்காக எதுவும் வாங்க வரலயா?" அவன் ஆச்சர்யமாக கேட்க, "இல்ல மாமா, எனக்கு ஏற்கனவே நிறைய இருக்கு. அதுவே போதும், வேணும்னா வாங்கிக்கிறேன்" அவள் புன்னகை மாறாமல் பதில் அளித்தாள்.

துணி கடைக்கு சென்று வள்ளி, அவள் அம்மா அப்பா மற்றும் மீனா அனைவருக்காகவும் பரிசுகள் வாங்கினாள். அவள் செய்வதனைத்தையும் அவன் ஆர்வமாக பார்த்தான்.

அவள் வாங்க நினைத்த அனைத்தையும் வாங்கி முடித்து விட, அவன் அவளை மதிய உணவிற்காக பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றான். "மாயா உனக்கு என்ன பிடிக்கும்? இந்த ஹோட்டல்ல அசைவம் நல்லா இருக்கும். உனக்கு என்ன பிடிக்குமோ அதை ஆர்டர் பண்ணு" அவன் மெனு கார்டை அவள் கையில் கொடுத்தான்.

அவளும் அவளுக்கு பிடித்தவற்றை ஆர்டர் செய்தாள். உணவு வகைகளை அவர்கள் மேசையில் வைத்து விட்டு அந்த பணியாளர் சென்று விட, மாறனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கு வைத்திருந்த அனைத்தும் அவனுக்கு பிடித்த உணவு வகைகளாக இருக்க, மாயாவை பார்த்தான். "சாப்பிடுங்க மாமா! எனக்கும் நல்ல பசி" என்று கூறி அவள் தட்டில் சாதத்தை பரிமாறிக் கொண்டு சாப்பிட தொடங்கினாள்.

"உனக்கு பிட்ச்சத ஆர்டர் பண்ண சொன்னா, எல்லாம் எனக்கு படிச்சதா இருக்கு!" அவன் புருவம் உயர்த்தி வினவ, "உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்னு அத்தை எனக்கு சொன்னாங்க, அதான் நானும் அதெல்லாம் டேஸ்ட் பண்ணி பாக்கலாம்னு ஆர்டர் செஞ்சேன்" அவள் அவன் முகத்தை பார்க்காமலே பதில் அளித்து விட்டு ஆர்வமாக சாப்பிடுவதை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் மேலும் எதுவும் பேசாமல் சாப்பிட தொடங்கினான்.

"சரி! அடுத்து எங்க?" அவன் சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது அவளிடம் கேட்டான். "எல்லாம் வாங்கியாச்சு மாமா, அடுத்து வீட்டுக்கு தான்" அவளும் எதார்த்தமாக பதிலளித்தாள்.

"இவ்வளவு தூரம் வந்தாச்சு! இப்போவே எதுக்கு வீட்டுக்கு? உனக்கு சினிமா பாக்க பிடிக்குமா?" அவன் ஆர்வமாக கேட்க, "பிடிக்கும் மாமா" அவளும் அதே ஆர்வத்துடன் பதிலளித்தாள். "தமிழ் படங்கள் எல்லாம் பாப்பியா? இல்ல ஹிந்தி கன்னடம் மட்டும் தானா?" அவன் கிண்டலாக கேட்க, "படிச்சது மட்டும் தான் அந்த மொழி, கொஞ்ச நாள் வேணும்னா அங்க தங்கி இருக்கலாம் ஆனா பிறந்தது நம்ம ஊர்ல தானே, அதனால எப்பவும் தமிழ் படங்கள் தான் நான் பாப்பேன். நம்ம தளபதி தான் என்னோட ஃபேவரைட் ஹீரோ" அவள் தன் சுடிதார் காலரை தூக்கிவிட்டு கூற, "பாரா! சரிங்க மேடம். அப்போ நாம படத்துக்கே போகலாம்" என்று கூறி பக்கத்தில் இருந்த தேட்டருக்கு அழைத்து சென்றான்.

"நீங்க யாரோட ரசிகர்?" அவள் ஆர்வமாக கேட்டாள். "நான் எப்பவும் தல ரசிகன் தான். அவரோட படம் எப்போ ரிலீஸானாலும் முதல் நாளே பாத்திருவேன்" அவனும் ஆர்வமாகவே பதில் அளித்தான். "ஓஹோ! எனக்கும் தளபதி படம் ஃபர்ஸ்ட் டேய் ஃபர்ஸ்ட் ஷோ பாக்கனும்னு ரொம்ப ஆசை தான். ஆனா இது வரைக்கும் அது நடந்ததே இல்ல" சிறிது சோகமாக சொன்னாலும் அடுத்த நிமிடமே,"இதுவும் நல்லா தான் இருக்கு. நான் தளபதி ஃபேன், நீங்க தல ஃபேன்" என்று அவள் புன்னகைக்க, அவனும் புன்னகைத்து விட்டு, "ஓ மை கடவுளே" படத்திற்கு டிக்கெட் வாங்கி கொண்டு வந்து அவளை உள்ளே அழைத்து சென்றான்.

மாயா ஆர்வமாக அந்த திரைபடத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். சில சமயம் அது அவளின் வாழ்க்கையை நினைவூட்டியது, ஆரம்ப நாட்களில் இருவரும் சண்டை போட்டு கொண்டு இருந்ததை நினைவு படுத்தியது.

இடைவேளையின் போது அவன் அவளுக்கு பிடித்தவற்றை வாங்கி வர, அவளோ எதோ சிந்தனையில் இருந்தாள். "மாயா!" அவன் இரண்டு முறை அழைத்த பின்னே அவனை பார்த்தாள். "என்ன யோசனை? இந்தா" என்று அவன் வைத்திருந்தவற்றை அவளிடம் கொடுத்தான்.

"என்ன ரொம்ப ஆழ்ந்து யோசிச்சுட்டு இருக்க?" அவன் மீண்டும் கேட்க, "ஒன்னும் இல்ல மாமா" என்று அவள் சமாளித்து விட்டு அவனோடு சேர்ந்து மீதி படத்தையும் பார்த்து முடித்து இருவரும் வெளியில் வந்தனர்.

"படம் பிடிச்சு இருந்துதா?" அவன் கேட்க, "ரொம்ப பிடிச்சுது மாமா" அவள் புன்னகையுடன் பதில் அளித்தாள். இருவரும் மாலையில் வீட்டை அடைந்தனர்.

வள்ளி இருவருக்கும் திருஷ்டி சுத்தி போட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். மாயா அவள் வாங்கி வந்த புடவையை ஆசையாக அவருக்கு கொடுக்க, வள்ளியும் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக் கொண்டார்.

இரவு மாறனுக்காக மாடியில் காத்திருந்தாள். "மாயா! தூங்கலையா?" அவன் வினவ, "உங்களுக்காக தான் காத்துட்டு இருந்தேன்" அவள் பதில் அளித்தாள். "எனக்காகவா! எதாவது பேசனுமா?" அவன் வினவ, "மாமா! கை காட்டுங்க!" அவன் கண்களை பார்த்து அவள் கூறினாள். எதற்கு என்று தெரியாமல் அவனும் கைகளை நீட்டினான்.

அவனுக்காக அவள் வாங்கி இருந்த பிரேஸ்லெட்டை அவன் கையில் அணிவித்தாள். "நல்லா இருக்கா? பிடிச்சு இருக்கா?" அவள் கேட்க, "நல்லா இருக்கு. ஆனா மாயா, எதுக்கு இதெல்லாம்?" அவன் வினவ, "அதான் காலையிலே சொன்னேனே, என் மனசுக்கு பிடிச்ச எல்லாருக்கும் எதாவது வாங்கணும்னு அதான்" என்றாள் புன்னகையுடன்.

"ஆமா! எனக்கு தெரியாம இத எப்போ வாங்கினே?" அவன் புரியாமல் கேட்க, "நீங்க பெரியப்பாவ விட போன போது வாங்கிட்டேன்" என்று அவள் சிரிப்புடன் பதில் அளித்தாள். அவன் அவள் முகத்தை பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தான்.

"நன்றி மாயா! இது ரொம்ப அழகா இருக்கு" அவன் கைகளை பார்த்தவாறு கூற, மாயாவிற்கு சந்தோசமாக இருந்தது.

இருவரும் சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டு இருக்க, மாயாவிற்கு அவள் மனதில் எழுந்த கேள்வி நினைவிற்கு வந்தது. "மாமா! நான் ஒன்னு கேக்குறேன், உண்மையான பதில் சொல்லுவீங்களா?" அவள் ஆர்வமாக அவனை பார்த்து வினவ, "சொல்லுறேன், என்ன கேள்வி?" அவனும் ஆர்வமாகவே கேட்டான்.

"இன்னிக்கு ஒரு படம் பாத்தோமே! அதுல நடந்த மாதிரி உங்களுக்கும் கடவுள் நம்ம கல்யாண சமயுத்துல அத மாத்துற மாதிரி ஒரு சான்ஸ் கொடுத்தா என்ன செய்வீங்க?" அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று தெரியாமல் அவனை ஆர்வமாக பார்த்தாள்.

அவன் அளித்த பதிலில் அவள் எதுவும் பேசாமல் வேகமாக அவள் அறைக்கு சென்று விட்டாள். "மாயா! நில்லு! மாயா!" அவன் அழைப்பதை கூட காதில் வாங்காமல் கண்களில் கண்ணீருடன் அவள் அறைக்குள் சென்று, கதவை அடைத்துக் கொண்டாள்.

Hi friends,

30ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Pokračovat ve čtení

Mohlo by se ti líbit

53.5K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
23.3K 910 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
139K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...