மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 29

7K 293 56
By Aarthi_Parthipan

மாயா அவளுக்கு கொடுக்க பட்ட நேரத்தில் அனைத்து ஆடைகளையும் மிக அழகாக வடிவமைத்து இருந்தாள். மாறனும் வள்ளியும் அவளை பாராட்டினர்.

ஆடைகளை பார்த்துவிட்டு அவள் தோழி அவளை அழைத்திருந்தாள். "மாயா!!!" அவள் குரல் உற்சாகமாக ஒலித்தது. "மது! ட்ரெஸ் எல்லாம் பிடிச்சு இருக்கா?" மாயா ஆவலாக வினவ, "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப தேங்க்ஸ் மாயா! இவ்வளவு கம்மியான நேரத்துல இப்படி ஒரு படைப்ப நான் எதிர் பார்க்கவே இல்ல. தேங்க் யூ சோ மச்!" தோழியின் உற்சாகம் அவளையும் மகிழ்ச்சி அடைய வைத்தது.

"சரி! அத விட முக்கியமான விஷயம், நீயும் அண்ணாவும் கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே வந்திடனும். நான் உங்களை எதிர்பார்த்துட்டு இருப்பேன்" மது கண்டிப்புடன் கூற, "நாங்க கண்டிப்பா வந்திருவோம்! கவலை படாதே!" என்றாள் மாயா குறுநகையுடன்.

அன்று மதியம் மாறனுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வயலை அடைந்தவள் அங்கே மாறன் இல்லாததை கண்டு குழப்பமடைந்தாள். "வா மா! உன்னோட ஆடைகள் எல்லாம் ரொம்ப அழகா வடிவமைச்சிட்டனு மாறன் சொன்னான். வாழ்த்துக்கள் மா! நீ உன் துறையில இன்னும் மேல மேல வளரனும்" சங்கர் அவளை மனதார வாழ்த்தினான்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா! ஆமா அவரு எங்க போயிட்டாரு?" அவள் கண்கள் மாறனை தேட, "அவன் கொஞ்சம் வேலையா டவுனுக்கு போய் இருக்கான் மா, இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவான். நீ சாப்பாடு வச்சிட்டு போ! அவன் வந்ததும் நாங்க சாப்பிட்டுகிறோம்" சங்கர் கூற, "அண்ணா எனக்கும் வீட்டுல இப்போ எந்த வேலையும் இல்ல. நானும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன்" அவள் கேட்க, அவனும் ஒப்புக்கொண்டு, அவன் வேலையை தொடங்கினான்.

"அண்ணா! நானும் இந்த வேலை எல்லாம் செய்யலாமா?" மாயா ஆர்வமாக கேட்க, சங்கர் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

"என்ன மா! நீயா இப்படி கேட்கிற?" அவன் ஆச்சரியத்தை வாய்விட்டு கேட்டுவிட, "ஆமா! அண்ணா. சொல்லுங்க நானும் இந்த வேலை எல்லாம் செய்ய முடியுமா?" அவள் மேலும் ஆர்வமாக வினவினாள்.

"கண்டிப்பா எல்லாரும் செய்யக் கூடிய வேலை தான் மா! ஆனா நீ எதுக்கு இத செஞ்சு கஷ்டப்படனும், நாங்க இதை எல்லாம் பாத்துக்கிறோம், நீ கஷ்டப்பட வேண்டாம்" அவன் அக்கறையாக கூற, "இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்ல அண்ணா, நான் ஆர்வமாதான் கேக்குறேன். பிளீஸ்!" அவள் மீண்டும் கேட்க, அவனாலும் மறுக்க முடியவில்லை.

"சரி மா! அங்க பாரு!" அவன் நாத்து நட்டுக் கொண்டிருந்த பெண்களை காட்டினான். அவளும் ஆர்வமாக அவர்களை பார்த்தாள்.

"ராசாத்தி அக்கா! இங்க கொஞ்சம் வாங்க" சங்கர் அங்கே வேலை செய்து கொண்டு இருந்த பெண்ணை அழைத்தான். அவரும் புன்னகையுடன் இவர்கள் நின்றிருந்த திசை நோக்கி வந்தார்.

"இது யாருனு தெரியுதா?" அவன் மாயாவை காட்டி கேட்க, "தெரியாம என்ன! இதுதான் நம்ம மாறன் தம்பி சம்சாரம்" அவர் மலர்ந்த முகத்துடன் பேச, மாயா அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.

"இவுங்களும் உங்களோட சேர்ந்து நாத்து நடனும்னு நினைக்கிறாங்க, நீங்க அவுங்களுக்கும் சொல்லி கொடுங்க" சங்கர் அவரிடம் கேட்க, "அட என்னமா நீங்க! நீங்க தான் இந்த மொத்த வயலுக்கும் சொந்தகாரங்க! நீங்க ஏன் இதுல வேலை செஞ்சு கஷ்டப்படனும். நீங்க வெயில் படாம நிண்ணு இங்க இருக்க எல்லாரையும் அதட்டி வேலை வாங்கனும்" அவர் மாயாவை பார்த்துக் கூற, "அப்படி இல்ல மா, நீங்க எல்லாரும் கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், உங்களை அதட்டி வேலை வாங்குற அளவுக்கு நான் பெரியவ இல்ல. எனக்கும் இந்த வயல்ல இறங்கி வேலை செய்யணும்னு ஆசை. இப்போ நீங்க தான் அதை நிறைவெத்தி வைக்கணும்" அவள் அவரிடம் உரிமையாக கேட்க, "மாறனுக்கு ஏத்த பொண்ணு தான். சரி மா! நீங்க செருப்ப கழட்டி வச்சிட்டு வயலுக்குள்ள வாங்க" என்று கூறி அவளை அழைத்துச் சென்றார்.

மாயா ஆர்வமாக அவருடன் சென்றாள். அவர்கள் குறிப்பிட்டவாறு வேலைகளை தொடர்ந்தாள். சிறிது கடினமாக இருந்த போதிலும் அவள் ஆர்வமாக அந்த வேலையை செய்ய, அங்கு இருந்தவர்கள் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.

சிறிது நேரத்தில் மாறனும் வந்து விட்டான். சங்கர் கூறியதை கேட்டு அவனும் ஆச்சர்யமாக வயலுக்கு சென்று பார்த்தான். மாயா அங்கே வேலை செய்பவர்களுடன் சேர்ந்து வயலில் வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அவன் மனம் மகிழ்ந்தது.

மாறனை கவனித்த மாயா, அவனை பார்த்து புன்னகைத்தாள். "சாப்பிட வா!" என்று அவன் செய்கையில் அழைக்க, அவளும் ஆர்வத்தில் வேகமாக நடந்து வர, "ஏய்! மாயா! பார்த்து வா" அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே அவள் கால் இடறி கீழே விழுந்து விட்டாள்.

"இந்த பொண்ண வச்சுக்கிட்டு!" அவன் மனதில் எண்ணிக் கொண்டு அவளை நோக்கி விரைந்து சென்றான். "பாத்து வரணும்னு தெரியாதா உனக்கு? இங்க இடம் முழுசா சேரா இருக்கு அது தெரியல? வா! கை குடு" என்று அவளை கடிந்துக் கொண்டே தூக்கி விட்டான். அவள் சோகமாக அவன் முகம் பார்க்க, "சரி சரி அப்படி பாக்கதே! செய்யுற வேலையில கொஞ்சம் கவனம் இருக்கணும்! சரியா" இந்த முறை அவன் கனிவாக சொல்ல, அவளும் தலை அசைத்தாள்.

அவன் அவளை வாய்காலுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு உதவி செய்தான். அவன் முகத்தில் புன்னகை பரவி இருந்ததை அவள் கவனித்தாள். "எதுக்கு சிரிக்குறீங்க? நான் கீழ விழுந்தத நினைச்சா?" அவள் பாவமாக முக பாவனை செய்ய, "ஹேய்! அப்படி எல்லாம் இல்ல. நீ வயல்ல இறங்கி வேலை செஞ்சத நினைச்சேன் அதான்" அவன் பதில் அளிக்க, "அதுல சிரிக்க என்ன இருக்கு" அவள் புரியாமல் வினவினாள்.

"அது சிரிப்பு இல்ல, சந்தோசம் ஆச்சரியமும் கூடத்தான். எனக்கு தெரிஞ்சு உனக்கு இந்த மாதிரி வேலை எதுவும் பிடிக்காது, அப்படி இருக்க, நீ எப்படி வயல்ல இறங்கி வேலை செயனும்னு நினச்சே?" அவன் ஆச்சரியம் வெளிப்பட வினவ, "ஆனா நீங்க இந்த வேலைய தானே தினமும் செய்யுறீங்க, அதான் அந்த வேலை எப்படி இருக்குனு நானும் செஞ்சு பார்க்க ஆசைப்பட்டேன். எனக்கு எந்த வேலையும் பிடிக்காம இல்ல, இது எல்லாம் முன்ன எனக்கு பழக்கம் இல்ல அவ்வளவுதான்" அவள் துடுக்காக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றாள்.

தினமும் அவளின் ஒவ்வொரு செயல்களாலும் அவனை வியக்க செய்துக் கொண்டு இருக்கும் அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் மாறன்.

"மாமா! பகல் கனவு கண்டது போதும் இப்போ சாப்பிட வாங்க" அவள் கலகலவென சிரிக்க, அவனும் சிரித்து விட்டான். "சங்கர் வா டா" என்று நண்பனையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

மாயா இருவருக்கும் உணவு பரமாறினாள். "டேய்! இந்த பொண்ண பாத்தியா! வயல்ல எல்லாம் இறங்கி வேலை செய்ய ஆரமிச்சுடாங்க! இனி எனக்கும் உனக்கும் இங்க வேலை இருக்குமானு  பயமா இருக்கு?" சங்கர் கலவரமாக கூற, மாயா வாய் விட்டு சிரித்தாள். "சும்மா இருங்க அண்ணா!" என்று கூறி அவளும் அவனோடு சேர்ந்து சிரிக்க, மாறன் அதையும் ஆச்சர்யமாக பார்த்தான்.

எதை சொன்னாலும் முகத்தை திருப்பிக் கொண்டு, எந்நேரமும் சிடுசிடுவென்று இருக்கும் மாயாவா இது என்று தோன்றியது அவனுக்கு.

"பாருங்க அண்ணா, இவரு மறுபடியும் கனவு காண போயிட்டாரு" அவள் மாறனை சுட்டிக் காட்டி நகைக்க, அவனும் அவளோடு சேர்ந்து மாறனை கேலி செய்தான். "என்ன மாப்பிள்ள! பகளையே கனவா?" அவன் நகைத்தான். "கொஞ்ச நேரம் சும்மா இருங்க டா!" என்று கூறி அவன் அமைதியாக சாப்பிட்டான்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மாயா வீடு திரும்பினாள். வள்ளியிடம் வயலில் நடந்தவற்றை கூறினாள். அவரும் அவள் கூறியவற்றை ஆர்வமாக கேட்டுக் கொண்டார். அவள் கீழே விழுந்ததை பற்றி கூற, அவர் பதற்றமானார்.

"என்னமா நீ! நீ எதுக்கு அந்த வேலை எல்லாம் செய்யுற? கீழ விழுந்து அடி பட்டா என்ன பண்ணுறது? கொஞ்சம் இரு நான் எண்ணெய் எடுத்துட்டு வரேன். எங்கே அடி பட்டுச்சுனு சொல்லு" அவர் பதற்றமாக எழுந்திரிக்க, "அத்த எனக்கு எதுவும் இல்ல! சாதாரணமா தான் விழுந்தேன். நீங்க பயபடுற அளவுக்கு எதுவும் இல்ல" என்று கூறி அவரை சமாதானப் படுத்தினாள்.

"சரி அத்த, உங்களுக்கு என்ன பிடிக்கும்? நீங்க மாமா வயலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வர வரைக்கும் தனியா தானே இருப்பீங்க? அந்த நேரத்துல என்ன செய்வீங்க?" அவள் ஆர்வமாக வள்ளியை கேட்க, "எனக்கு புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும் மா, மாறன் வர வரைக்கும் எதாவது ஒரு புத்தகம் படிப்பேன். அப்புறம் இந்த வீட்டு தோட்டத்தை பராமரிப்பேன், இங்க இருக்க வாயில்லா ஜீவன்களும் எனக்கு குழந்தைகள் மாதிரி தான், அதை எல்லாம் பாத்துக்கரதும் எனக்கு ரொம்ப பிடிச்ச செய்யுற ஒரு வேலை தான்" அவர் மகிழ்ச்சியோடு பதில் அளிக்க, மாயா ஆச்சரியப் பட்டாள்.

வாயில்லா ஜீவன்களையும், வயல் வரப்பையும் மனிதர்களுக்கு நிகராக நேசிக்கும் நல்ல மனங்களை அவள் அந்த ஊரில் தான் பார்த்திருக்கிறாள்.

அன்று மதியம் அமர்ந்து வள்ளிக்காக ஒரு சேலையை வடிவமைத்து கொடுத்தாள். "எனக்கு எதுக்கு மா இதெல்லாம்?" அவர் மறுக்க, "எனக்காக வாங்கிக்கோங்க அத்த" என்று கூறி அவரிடம் அதை கொடுத்தாள். அவரும் வேறெதுவும் சொல்லாமல் அதை பெற்றுக் கொண்டார்.

மாறன் இரவு உணவு முடித்து விட்டு சங்கரோடு சேர்ந்து வெளியில் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். அவன் இல்லம் திரும்பிய பொழுது வள்ளி உறங்கி இருந்தார். அவனும் உறங்க மாடிக்கு சென்றான்.

அந்த சமயம் மாயாவும் மாடியில் நின்றிருந்தாள். அவன் கண்கள் அவளை கண்டதும், அவன் கால்கள் நகர மறுத்து அதே இடத்தில் நின்றன.

சந்திரனை சூழ்ந்திருந்த கருமேகங்கள் மெதுவாக விலக, அந்த இடமே சந்திரனின் வெள்ளி ஒளியில் மிளிர்ந்தது. நிலவுக்கு நிகராக இருந்த அவள் ஒளிமுகம், சந்திர ஒளியில் மேலும் பிரகாசமாக தெரிந்தது. காற்றோடு சேர்த்து அசைந்து கொண்டிருந்த அவளது நீண்ட கரிய கூந்தல் அழகுக்கு அழகு சேர்த்தது. அவள் அவன் வருகையை உணர்ந்து அவனை ஏறிட்டு பார்த்தாள்.

இருண்ட அவள் கருவிழிகள், அவனைக் கண்டதும் விண்மீன் போல் மின்னின; அழகிய உதடுகள் புன்னகை செய்தன. "மாமா!" அவள் ஆசையாக அழைக்க, அவன் சுயநினைவுக்கு வந்தான்.

"நீ இன்னும் தூங்களையா?" அவன் கனிவாக கேட்க, "இல்ல மாமா! தூக்கம் வரல, அதான் கொஞ்ச நேரம் இங்க இருக்கலாம்னு வந்தேன். முழுநிலவு ரொம்ப அழகா இருந்துச்சு, அதான் அதை பாத்துட்டு இருந்தேன்" அவள் பதில் சொல்ல, "சரி சரி" அவனும் ஒப்புக்கொண்டு அவளுக்கு அருகில் நின்று கொண்டான்.

"நிஜமாவே மேகம் நகர்வத பாத்தா பைத்தியம் பிடிக்குமா?" அவள் விழிகள் விரிய கேட்க, அவனுக்கு சிரிப்பு வந்தது. "அப்படி எல்லாம் எதுவும் இல்ல, நான் சும்மா உன்ன வம்பிழுக்க அப்படி சொன்னேன்" அவன் புன்னகை மாறாமல் பதில் அளித்தான்.

"என்ன வம்பிழுக்க உங்களுக்கு என்ன அவ்வளவு பிரியம்? மீனா, வினிதா, அஜய், ரமேஷ் அண்ணா, இவ்வளவு பேர் இருக்காங்க, அப்பவும் நீங்க ஏன் என்ன மட்டும் எப்ப பாரும் வாம்பிழுத்தீங்க? என்கூட மட்டும் எதுக்கு எப்பவும் வாக்குவாதம் செஞ்சு சண்ட போட்டீங்க?" அவள் விழிகளை உருட்டி கேள்வி கேட்க, அது அவனுக்கு மேலும் சிரிப்பை வரவைத்தது.

"நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன் நீங்க பதில் சொல்லாம சிரிக்குறீங்க! நான் போறேன்" என்று உதட்டை பிதுக்கி குழந்தை போல் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்ல முற்பட்டாள். அந்த சமயம், அவன் வலிமையான கரங்கள் அவளின் மெல்லிய கரத்தை பிடித்து தடுத்து நிறுத்த, அவள் பேச்சற்று நின்றாள்.

"கேள்வி கேட்டுட்டு பதில் சொல்லுறதுக் குள்ள எங்க போற?" அவன் புருவம் உயர்த்தி கேட்க, "நீங்க பதில் சொல்லாம சிரிச்சிட்டு இருந்தீங்க, அதான் நாளைக்கு வந்து பதில் தெரிஞ்சுக்கலாம்னு கிளம்பிட்டேன்" அவள் வேறு புறம் திரும்பி பதில் அளிக்க, அவன் சிரிப்பை மறைத்து கொண்டு, "மத்தவங்களை விட நீ எனக்கு பிரத்யேகமானவ அதான் உன்கிட்ட மட்டும் அப்படி நடந்துக்கிட்டேன். அப்புறம் எனக்கு இருந்த ஒரே ஒரு மாமா மக நீதானே! உன்கிட்ட தானே வம்பிழுக்க முடியும் அதான்" அவன் கண் அடித்து பதில் அளிக்க, அவள் திகைத்து போய் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் மனம் படபடத்தது.

Hi friends,

29ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

அன்பே சிவம்!
அனைவருக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

Continue Reading

You'll Also Like

23.3K 910 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
452K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
53.5K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.