😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

பாசம்

1.3K 59 24
By creativeAfsha

கண்களை மூடி பழைய நினைவில் ஆழ்ந்திருந்த ஆதியை பார்த்த ஜீவாவின் மனம் வலித்தது. நெற்றியின் சுருக்கங்கள் அவன் உறங்காமல் தீவிர சிந்தனையில் இருக்கிறான் என்பதை உணர்த்த அவன் சிந்தனை நிச்சயமாக அபூர்வாவை சுற்றி தான் இருக்கும் என்பதை புரிந்துகொண்டவன் முகம் ஒரு வறன்ட புன்னகை சிந்தியது.

அபூர்வா ஆதித்யின் அன்பு தங்கை.ஆதியும் ஜீவாவும் பள்ளி பருவத்தை ஒன்றாகவே முடிக்க அவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.அன்றிலிருந்து இன்றுவரை இணைபிரியா நண்பர்களாக இருந்தபோதிலும் ஜீவாவிற்கு தெரியாதவை ஆதியின் வாழ்வில் நடந்திருக்கிறது என்பதை உணரும்போது ஜீவாவின் மனம் வலிக்கவே செய்தது.

மனம் தன் போக்கில் யோசிக்க கைகள் வாகனத்தை சென்னையை அடைய செய்தது.

" ஆதி...எந்திரி...." என்று கூறியபடியே வண்டியை பார்க்க செய்தான் ஜீவா.கண்களை திறந்து பார்த்த ஆதிக்கு தான் இருக்கும் இடம் சூழல் எல்லாம் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது.கண்களை கசக்கிக்கொண்டு வெளியே வந்தவன் கார் நிற்கும் இடத்தை பார்த்து அதிர்ந்தான்.

" டேய் என்னை ஏன்டா ஹாஸ்பிடல் கூண்டிட்டு வந்திருக்க நான் முதல்ல நிலாவை பார்கனும்."

" என் கூட அமைதியா வா."என்றபடி ஜீவா முன்னே நடக்க ஆயிரம் குழப்பங்களுடன் ஆதி அவனை பின் தொடர்நதான்.மருத்துவமனையினுள் நுழைந்த ஜீவா நேராக மூன்றாவது தளத்திருந்த ஒரு அறைக்குள் நுழைய ஆதியும் அவனை பின்தொடந்தான்.அறையினுள் கட்டிலில் வாடிய மலரைபோல் கண்கள் மூடி இருந்த நிலாவை பார்த்தவன்," நிலா......." என்ற கேவலுடன் அவள் அருகே சென்று அவளது மேனியை தன் கைகளால் தடவ துவங்கினான்.

" நிலா...நிலா...கண்ண திறந்து பாருமா அப்பா வந்திருக்கேன் மா..நிலா..." என்று புலம்ப அந்த நேரம் உள்ளே வந்த ஒரு செவிலியர்," சார் குழந்தைக்கு தூக்க மருந்து கொடுத்திருக்கோம் நைட் எல்லாம் அழுது பொலப்பிட்டே இருந்தா டிஸ்டர்ப் பண்ணாம வெளிய வெயிட் பண்ணுங்க."

" சிஸ்டர் இவன்தான் அவளோட அப்பா இப்ப தான் வந்தான்." அவ்வளவுதான் அந்த செவிலியரின் முகம் கோபத்தால் சிவந்து விட்டது," இத்தனை நாளா அந்த பாப்பா வ விட்டு எங்க சார் போனீங்க ,"

" இல்லை சிஸ்டர் எனக்கு ஆபிஸ் வேற ஊருல இருக்கு."

" இருக்கட்டுமே உங்க குழந்தையை உங்ககூட வைச்சுக்கோங்க இல்லை அவங்க அம்மாகிட்ட விடுங்க அத விட்டு இப்படி அவளை தவிக்க வைக்கிறீங்களே."

" சிஸ்டர் அவன் ஒன்னும் தனியா விடலை அவனோட அப்பா அம்மா கிட்ட அதாவது பாப்பாவோட தாத்தா பாட்டிகிட்டதானே விட்டுட்டு போனான் இதை எப்படி நீங்க தப்பு சொல்லலாம்."
ஜீவா பொங்கிவிட்டான்.

" இந்த குழந்தை அப்பா வேணும் அப்பா வேணும்னு நைட்டெல்லாம் தூங்காம புலம்பிட்டே இருந்தது. ஜீரம் இறங்காம உடம்பு அனலா கொதிச்சது இதெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே.அப்பவே இவர ஒரு ஃபோன் போட்டுவரவழைச்சு இருக்கலாமே?இதெல்லாம் உங்க குடும்ப விஷயம் ஒரு நர்ஸா என் கடமையை.நான் செஞ்சேன் ஆதங்கத்தை நான்சொன்னேன் அவ்ளோதான்."
என்று.கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார் அந்த செவிலியர்.

தன் மகளின் அருகே அமர்ந்து அவளின் தலையை கோதிக்கொண்டே இருந்த ஆதியை பார்த்த ஜீவாவிற்கு அவன் நிலை.புரிந்தாலும் நிலாவை பற்றி அவனிடம் கூறியாக வேண்டிய கண்டாயமும் புரிந்தது.

" நிலா தூங்கட்டும் ஆதி எங்கூட வா,"

" இவ தனியா இருக்க மாட்டா ஜீவா நான் அவ கண் முழிக்கிற வரை இங்கயே இருக்கேன்."

" இவ்ளோ நாள் அவளை பார்த்திகிட்டிருந்த நான் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்க மாட்டேனா அவ்ளோ அக்கறை இருந்தா அவளை ஏன் விட்டுட்டு போகனும்," என்றவாறு உள்ளே வந்தார் அன்று மருத்துவமனையிலிருந்து நிலுவை வாங்கி கொண்ட போன ஆதியின் அன்னை துளசி.

" அம்மா....."

" ஜீவா அவனை எங்கூட்ட பேச வேணாம்னு.சொல்லு இவனை கூட்டிட்டு வெளிய போ ராத்திரி யெல்லாம் தூங்காம இவ இப்பதான் கண்மூடியிருக்கா," என்றவறை சமாதானம் செய்ய உகந்த நேரம் இதுவல்ல என்று புரிந்து கொண்டவன் மேற்கொண்டு.எதுவும் கூறாமல் எழுந்து வெளியே சென்றான்.

சோர்ந்து.போயிருந்த தன் நண்பனை.தொடர்ந்து வெளியே வந்த ஜீவா அவனை கேன்டீன் அழைத்து சென்று வற்புறுத்தி சிறுது உண்ண செய்தான்.பின் இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொள்ள ஜீவா பேச்சை துவங்கினான்.

" அந்த நர்ஸ் கிட்ட உன்னை சப்போர்ட் பண்ணதால நீ பண்ணது தப்பு இல்லைனு உன் மேல கோபம் ஆகிடாது.உன் மேல நிறைய.கோபம் இருக்கு ஆனால் மூனாவது மனுஸங்க கிட்ட சொல்லி புலம்புற அளவு நான் இன்னும் என் தரம் கீழ போகலை."

" எனக்கு உன்னை பத்தி தெரியாதா என்கிட்ட இதெல்லாம் சொல்லனுமா? நிலாக்கு என்ன ஆச்சு ஜீவா ? என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலை?"

" உன்கிட்ட எப்படி சொல்ல முடியும்? நீ எங்க இருக்கனு எங்க யாருக்கும்.தெரியலை சொல்ல போனா உன்னை.நாலு மாசமா நான் தேடறேன்."

" சாரி இப்படி ஆகும்னு நான் நினைக்கலை நிலா என் கூட இருந்தா என்னோட கஷ்டம் அவளையும் பாதிக்கும்னு தான் நான் அப்பா அம்மாகிட்ட விட்டுட்டு போனேன்," என்று கூறிய ஆதியை தப்பு கூறவும் இயலவில்லை அவனால்.

ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்த ஜீவா,"நீ போனதும் இவளை எங்களால சமாளிக்கவே முடியலை. நீ அவங்க அம்மாக்கு துணையா இருக்கனு சொல்லிசொல்லி கொஞ்ச நாள் ஓட்டியாச்சு ஆனா அதுக்குமேல அவ யார் சொல்றதையும் கேட்க தயாரா இல்லை.காலையில எந்திரிச்சதில இருந்து அப்பா அப்பா அப்பா தான்.அவளை கஷ்டப்பட்டு சமாதான படுத்தி ஸ்கூலுக்கு அனுப்புவாங்க திரும்ப சாயந்திரம் வந்ததும் அப்பா புராணம். சாப்பிடாம தூங்காம அவளோட உடம்பு ரொம்ப வீக் ஆகிடுச்சு.போனவாரம் நல்ல ஜீரம் வேற மாத்திரையும் சாப்பிட மாட்டேனு சொல்லி பிடிவாதம்.நாலு நாளைக்கு முன்னாடி வந்து ஹாஸ்பிடல்ல சேர்தோம்.இப்ப கொஞ்சம் பரவாயில்லை ஆனால் அப்பா வை தேடி புலம்புறது மட்டும் நிக்கலை அதனால டாக்டர் அவளுக்கு தூக்கத்துக்கு மருந்து கொடுத்தாருக்காங்க." என்று நீளமாக பேசி முடிக்க அவன் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஆதிக்கு தன் மீது கோபம் வந்தது.

அதே நேரம் ஜீவாவின் செல் பேசி அழைக்க அதை உயிர்பித்தவன்," சொல்லுங்க ஆண்டி ?"

" ..........."

" அப்படியா? இதோ ." என்று கூறியவன்," ஆதி நிலா கண்ணு முழிச்சிட்டாளாம்," அவன்வாக்கியத்தை கூட நிறைவு செய்யவில்லை ஆதி மருத்துவமனைக்குள் விரைந்தாருந்தான்.

ஒரு புன் சிரிப்புடன்.அவனை தொடர்ந்தான் ஜீவா.

நிலா என்ற பெயரை கேட்ட மாத்திரத்தில் ஆதி அவசரமாக அவளது அறையினுள் நுழைந்தான். அங்கே நிலா கண்கள் மூடி காற்றினில் கைகள் துலாவ "அப்பா அப்பா..."என்று புலம்புவதை பார்தவன் நெஞ்சம் குற்ற உணர்வு கொள்ள," நிலா......." என்று அவள் அருகே செல்ல , அவன் குரலை கேட்ட அடுத்த நொடி வேகமாக கண்களை திறந்த நிலா," அப்பா...." என்று அவனை தாவி அணைத்துக்கொண்டாள்.

அந்த குழந்தையை இறுக பற்றியிருந்தவனின் விழிகளில் நீர் வடிய நிலாவின் முகத்தை பற்றி மாறி மாறி முத்தமழை பொழிந்தான்.இடை இடையே ," சாரி டா சாரிடா அப்பாவை மன்னிச்சிடுடா சாரிடா ,"என்ற வாசகம் அவன் கூறிக்கொண்டே இருந்தான்.

" எங்க போனீங்கபா நிலா உங்களை காணோ காணோனு தேடிட்டே இருந்தேன்."

" அப்பாக்கு கொஞ்சம் முக்கியமான வேலை வந்திடுச்சுடா அதான் உங்களை பாட்டி தாத்தாகிட்ட விட்டுட்டு போனேன்."

" அப்பா அம்மா எங்க?"

அந்த கேள்வி அங்கிருந்த அனைவரையும் மௌனமாக்க , சரி சரி உங்க அப்பாவை கொஞ்சுனது போதும் வா சாப்பிட," என்று அழைத்தார் ஆதியின் அன்னை துளசி அவர் கையிலிருந்த தட்டில் இட்லியும் சாம்பாரும் இருந்தது.

" பாட்டி எனக்கு அப்பாதான் ஊட்டி விடனும்."

" ஏன் இவ்ளோ நாள் நான்தானே ஊட்டி விட்டேன்."

" ஆனால் இப்போ அப்பா வந்தாச்சே."

நிலாவின் பேச்சை கேட்ட ஆதி புன்சிரிப்புடன் அவளை கட்டிலில் அமர வைத்துவிட்டு கைகழுவ எழுந்தான்.அவனை மீண்டும் இறுக பற்றியவள்," எங்க போறீங்க பா,"

" கை கழுவிட்டு வந்திடறேன்டா."

" என்னையும் துக்கிட்டு போங்க அப்பறம் நீங்க திரும்ப என்னைவிட்டு போயிட்டா நான் என்ன பண்ணுவேன்? ," அழும் நிலாவை பார்த்த அனைவரின் மனமும் கலங்கியது.

அவள் கண்களை துடைத்த ஆதி," இப்ப என்ன நிலா பாப்பா அப்பாகூட வரனும் அவ்ளோதானே இதுக்கு போய் அழுவாங்களா பேட் பேபிஸ் தான் அழுவாங்க ,"

" நான் அழழ அப்பா இதோ பாருங்க நிலா சிரிக்கிறேன்....." தன் மொத்த பற்களையும் வெளியே காட்டி சிரித்த அந்த குழந்தையை வாரி அனைத்துக்கொண்ட ஆதி
அவளுக்கு முகம் கழுவி பல் விளக்கிவிட்டு காலை உணவையும் மாத்திரையும் கொடுக்க அவன் மடியிலேயே அமர்ந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

அவளது மனநிலை புரிந்துகொண்ட ஆதியும் அவளை தன்னை விட்டு பிரியாமல் பார்த்துக்கொண்டான்.இருவரின் நிலையும் அழகான ஓவியம் போல இருக்க அங்குள்ளவர்கள் மனம் நிறைந்தது.

************

தன் காதுகளில் கீச்...கீச் என்ற ஒலி மிக அருககே கேட்க தூக்கத்தில் இருந்த மது மெதுவாக கண்கள் திறந்து பார்த்தாள்.முந்திய நாள் இரவு நிலவை ரசித்துக்கொண்டே பால்கனியின் மூங்கில் ஊஞ்சலில் உறங்கியது நினைவு வர அசையாமல் கண்கள் மட்டும் திறந்து தன் அருகே அமர்ந்திருந்த இரு கிளிகளை நோக்கினாள்.

அந்த பறவைகள் யாரும் அருகிலில்லை ஈன்ற நினைவில் இயல்பாக அமர்ந்து கத்திக்கொண்டிருந்தன.அவைகள் தொந்தரவு செய்ய விரும்பாத மதுவும் புன்சிரிப்புடன் அவைகளை நோக்கினாள்.

இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்த பறவைகள் திரும்பி மிக அருகில் மதுவை பார்க்க அடுத்த நொடி சிறகடித்து பறந்து விட்டது.

மிகவும் ரம்மியமான உணர்வுடன் வெகு நாட்களுக்கு பிறகு சந்தோஷ மனநிலையுடனும் காலை கடன்களை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல தன் கைப்பையை எடுத்த மது அதிலிருந்து கீழே விழுந்த விசிட்டிங் கார்டை யோசனையுடன் எடுத்தாள்.

பெங்களூர் வந்த புதிதில் தன் பள்ளி தோழியை சில வருடங்கள் கழித்து ஒரு மாலில் சந்திக்க நேர்ந்தது.அவளுடனான உரையாடலை நினைவு கூர்ந்தாள் மது.

சில மாதங்கள் முன் ஒரு உயர்ரக ப்ரான்ட் அவுட்லெட்டிலில் தனக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டிருந்த மது தன்னை யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பினாள்.
அங்கே," ஹேய்.....மது.....?? "

வினவியவளை குழப்பத்துடன் பார்தாள் மது," நீங்க......எனக்கு தெரியலையே....?"

" அட என்னை ஞாபகம் இல்லையா நான்தான் ஷர்மிளா...?"

ஒரு சில வினாடிகள் யோசித்த மது," ஷர்மிளா...ஜெய்....??"

" அப்பாடி ஒரு வழியா கண்டு பிடிச்சிட்ட இல்லைனா நான் மூன்றாம் பிறை கமல் மாதிரி குரங்கு வித்தையெல்லாம் காட்டனுமோனு நினைச்சேன்."

" ஹா.....ஹா.....வித்தையெல்லாம் காட்ட வேணாம் சும்மாவே அப்படிதான்இருக்க." தோழிகள் இருவரும் வழக்கமான நல விசாரிப்பிற்கு பிறகு,' ஆமா நீ கோயம்புத்தூர் தானே இங்க என்ன பண்ற?"

"நான் இங்க பாட்டியோட கம்பெனியில வெர்க் பண்றேன்."

" நீ எங்க இங்க உனக்கு மதுரை பக்கம்தானே??"

" ம்...ஆமா என் ஹஸ்பன்டுக்கு இங்கதான் வெர்க் அதான் நானும் இங்கயே ஜாய்ன் பண்ணிடேன்."ஷர்மி.

" சரி மது நான் இப்ப உடனே போகனும் இந்தா என் கார்ட் மறக்காம கால் பண்ணணும் ஃபிரியா இருந்தா கண்டிப்பா மீட் பண்ணணும், "என்று கூறியவாறு கார்டை வாங்கிவிட்டு இருவரும் பிரிந்தனர்.

இன்று

அன்று வாங்கிய அந்த கார்டை பைக்குள் போட்டவள் இன்று தான் நினைவு வந்து மீண்டும் பார்க்கிறாள்.பார்த்தவள் ஒரு நிமடம் அதிர்ந்தாள் காரணம் அதில் ஷர்மிளா சுந்தரம் மன நல மருத்துவர் என்று குறிப்பிட்டிருந்தது.

Continue Reading

You'll Also Like

68.5K 6.1K 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும்...
15.7K 781 14
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும்...
88.3K 2.7K 16
ஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி...
202K 9.2K 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம்...