மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

497K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 19

7.6K 286 58
By Aarthi_Parthipan

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

அன்பான வாசகர்களுக்கு,
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

பொங்கும் பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நேசமும் பொங்கி வழிய வாழ்த்துக்கள்.. நண்பர்களே😍

உழவர்களை போற்றி,
உழவு தொழிலை போற்றி,
உழவுக்கு உறுதுணை ஆகும் ஆவினங்களையும் ஆதவனையும் போற்றி,
உதிக்கின்ற திருநாள்களில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும் வளமும் பொங்கிட உங்கள் இனிய சகோதரியின் வாழ்த்துக்கள்..🌾🌾

"மாயா! மாயா!" அவன் அவளை எழுப்ப முற்பட்டான், ஆனால் அவளோ ஆழ்ந்தத் தூக்கத்தில் இருந்தாள். "இப்படியே இரவு முழுவதும் தூங்கினா கழுத்து பிடிச்சுக்குமே! இப்போ என்ன செய்யுறது?" என்று எண்ணியவாறு அவள் முகம் பார்த்து நின்றிருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை எழுப்பவும் மனம் வரவில்லை அவனுக்கு, இருப்பினும் மறுநாள் அவள் உடல் நிலை பாதிக்கப்படும் என்பதை எண்ணி அவளை எழுப்ப முற்பட்டான்.

அவள் தோள்களை குலுக்கி எழுப்பினான். அவளிடம் அசைவேதும் தென்படாததால், இறுதியாக அவளை தூக்கி கட்டிலில் உறங்க வைக்க முடிவெடுத்தான். ஒரு கையால் அவள் தோள்களையும் இன்னொரு கரத்தில் அவள் கால்களையும் பற்றி சிறு குழந்தையை தூக்குவது போல எளிதாக தூக்கி விட்டான். அவளும் சிறு குழந்தை போல் தூங்கிக் கொண்டிருக்க, அவன் மெதுவாக கட்டிலை அடைந்து அவளை கட்டிலில் கிடத்தினான்.

மாயாவிடம் சிறு அசைவு தெரிய, அவன் அசைவற்று நின்றான். "மாட்னோம்! இப்போ கண் விழிச்சு கத்த போறா! இப்போதா எதோ நல்லா பேச ஆரம்பிச்சா, இனி அதுவும் இல்ல" என்று எதேதோ எண்ணிக் கொண்டு அவளை பார்க்க அவளோ தூக்கத்தில் புரண்டு படுத்தாள். அவன் தப்பித்தோம் என்று என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவள் கைகள் அவன் கரத்தை பற்றின, அவன் அதிர்ச்சியுடன் அவள் முகம் பார்த்தான்.

அவள் தூக்கத்தில் அவன் கரங்களை பற்றி இருந்தது புரிந்தது. அவன் கையை தன் கரங்களுக்குள் சிறை வைத்து விட்டு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்க அழகாக இருந்தது. சிலக் கணங்கள் என்ன செய்யவதென்று தோன்றாமல் அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான்.

இப்பொழுது கைகளை எடுத்தால் அவள் உறக்கம் கேட்டு விடும் என்று எண்ணி, அவளாக விடுவிக்கும் வரை அவ்வாறே அமர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

இரவு வெகுநேரம் ஆகியும் அவள் அவன் கரத்தை விடுவிக்கவில்லை. ஒரு சமயம் ஜன்னல் வழியே வந்த பனி காற்று அவள் சிகையை கலைத்து அவள் உறக்கத்தை தொந்தரவு செய்ய, அவன் தன் இன்னொரு கரத்தினால் அதனை மெல்ல விலக்கி அவள் உறக்கம் கலையாமல் பார்த்துக் கொண்டான்.

வெகு நேரம் கழித்து அவள் இன்னொரு புறம் புரண்டு படுக்கையில், அவன் கரத்தை விடுவித்தாள், அவனும் புன்னகைத்து விட்டு போர்வையை அவளுக்கு போர்த்திவிட்டு விட்டு அறையில் இருந்து வெளியில் சென்றான்.

சூரிய ஒளி அவள்மீது விழ, கண்களை கசக்கிக் கொண்டு சோம்பலாக விழித்தாள் மாயா. இயல்பாக சோம்பல் முறித்துவிட்டு எழுந்தவள் தான் கட்டிலில் இருப்பதை உணர்ந்து ஆச்சர்யத்தில் விழிகளை உருட்டி அறை முழுவதும் சுற்றி பார்த்தாள்.

"எப்படி இங்க வந்தோம்? ஜன்னல் பக்கத்துல தானே இருந்தோம்? அப்புறம் எப்படி?" இரவு நடந்ததை நின்விற்கு கொண்டு வர எண்ணினால். ஆனால் அவளுக்கு கட்டிலில் படுத்த நினைவே இல்லை.  "அச்சச்சோ!! தூக்கத்தில நடக்க ஆரமிச்சுட்டோமா🙄?" என்று எண்ணிக் கொண்டு அறையில் இருந்து வெளியில் சென்றாள். அங்கும் யாரும் தென்படவில்லை எனவே அவளாக தான் இரவு கட்டிலில் படுத்தாள் என்று எண்ணி மனதை தேற்றி கொண்டு மற்ற வேலைகளை கவனித்தாள்.

மீனா முந்தைய நாள் போல் இல்லாமல் இயல்பாக இருப்பதை பார்த்து மனம் மகிழ்ந்தாள். "மீனா! இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?" மாயா பறிவாக கேட்க, "நல்லா இருக்கேன் மாயா. கொஞ்சம் குழப்பமா இருந்தேன் மாமா என் குழப்பத்தை தீர்த்துட்டாரு. அத்தோட என் தலைவலியும் போயிருச்சு" அவள் மனதார கூற, மாயா புன்னகைத்தாள். "உன்ன இப்படி சந்தோசமா பாக்க எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா? நீ இப்படியே இரு, இதுதான் அழகு" என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மீனாவும் சிரித்துக் கொண்டு தலையசைத்தாள். மாயா மாறன் மீது தனக்கு இருந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர்ந்தாள்.

"சரி நான் ஒன்னு கேக்குறேன், நீ பதில் சொல்லுறிய?" மீனா கேட்க, அவளும் தலையசைத்தாள்.

"உனக்கு ஏன் மாமாவ பிடிக்காது?" அவள் சட்டென்று கேட்க, மாயா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவளை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள். ஆழ்ந்து யோசித்து பார்த்தால் அவனை வெறுப்பதற்கு அவள் மனதில் எந்த ஒரு காரணமும் இல்லை என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது. இருப்பினும் அவள் சுயகௌரவம் அதை ஏற்க்க மறுத்தது.

"ஒருத்தர பிடிக்கதான் காரணம் இருக்கும் மீனா, பிடிக்காததுக்கு எந்த காரணமும் இருக்காது" என்று கூறி அவள் வேறேதும் கேட்பதற்குள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

"போ! உன்னோட மனசு சீக்கிரம் மாறிடும்" மீனா அவள் சென்ற திசை பார்த்துக் கூறினாள்.

ஒரு வாரம் ஒரு நாள் போல் சென்றது, பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடி விட்டு மாயாவும் அவள் குடும்பத்தினரும் அன்று அவர்கள் இல்லம் திரும்பினர். மாயா அங்கிருந்த நாட்களில் அவனிடம் கோபம் கொள்ளவில்லை என்பதை அவள் மனம் உரைத்தது. அவள் முதல் முறையாக அவன் இல்லம் விட்டு பிரிந்து வந்ததை எண்ணி வருந்தினாள்.

"என்னாச்சு எனக்கு, ஏன் அங்க இருந்து வந்த அப்புறமும் அங்க இருக்க மாதிரியே இருக்கு. நான் யாரையாவது மிஸ் பண்ணுறேனா?" அவள் மனது அவளிடம் கேள்வி கேட்க, அவளுக்கு பதில் என்ன வென்று தெரியாமல் அந்த எண்ணத்தை மாற்ற எண்ணி மற்றவைகளில் கவனம் செலுத்தினாள்.

"மாயா!!" கஸ்தூரி அழைக்க, "வரேன் மா!" என்று கூறிக் கொண்டு கீழே சென்றாள். "மாயா அடுத்த வாரம் நீ ஃப்ரீ தானே?" அவர் ஆர்வமாக கேட்டார். "இல்ல மா, எனக்கு அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு. ஏன்?" அவள் கேட்க, "அடடா! அடுத்த வாரம் என்னோட அண்ணா பொண்ணு கல்யாணம். நா உனக்கு ஏற்கனவே சொல்லி இருந்தேனே! மறந்துட்டயா?" அவள் கேட்க, அப்பொழுதுதான் அவளுக்கும் நினைவு வந்தது.

"ஐய்யோ ஆமா மா. நான் அதை சுத்தமா மறந்துட்டேன். சரி மா நீங்க போய்ட்டு வாங்க, நான் இங்க இருந்துப்பேன்" அவள் உறுதியாக கூற, "உன்ன தனியா விட்டுட்டு எப்படி மா போறது?" அவர் கவலையானார்.

"அம்மா ஒன்னும் பிரச்சனை இல்ல, நீங்க போய்ட்டு வாங்க நான் சுமிய என்னோட இருக்க சொல்லிக்கிறேன்" அவள் அவரை சமாதானம் செய்ய முற்பட்டாள். ராஜாராம்மும் அந்த சமயம் அங்கு வந்து சேர்ந்தார். "என்ன மா என்ன ஆச்சு" அவர் வினவ, கஸ்தூரி நடந்தவற்றை கூறினார்.

அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, "சரி அப்போ மாறன வந்து இங்க மாயாவுக்கு துணையா இருக்க சொல்லிடலாம்" அவர் கூற மாயா திடுக்கிட்டு அவர் முகம் பார்த்தாள். "ஆமாங்க அதுவும் ரொம்ப நல்ல யோசனை" கஸ்தூரியும் அதை ஆமோதிக்க மாயா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

"என்ன பாக்குறே? அப்பா சொன்னது தான் சரி, மாறன் இங்க வந்து உனக்கு துணையா இருக்கட்டும்" கஸ்தூரி உறுதியாகவே கூறினார். "அம்மா அவரு எதுக்கு இங்க வரனும். எனக்கு தனியா இருக்க தெரியும், எனக்கு யார் துணையும் வேண்டாம் நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல" அவள் கடுகடுத்தாள்.

"இங்க பாரு மா, உன்ன தனியா விட்டுட்டு கண்டிப்பா அவ்வளவு நாள் எங்களால அங்க நிம்மதியா இருக்க முடியாது. இங்க நீ தனியா இருக்கனு மனசு அடிசுக்கிட்டே இருக்கும். மீனாவையும் இங்க விட்டுட்டு போக முடியாது. அது உன்னோட அம்மா சொந்த அண்ணன் பொண்ணு கல்யாணம். அதனால மாறன் இங்க வரதுதான் சரியா இருக்கும். நீ எதுவும் மறுப்பு சொல்லாதே" அவர் மென்மையாக எடுத்து கூறினார்.

"அப்பா இந்த சின்ன விஷயத்துக்காக அவரு இங்க வரணுமா? அவருக்கு அங்க வேலை இருக்கும். அதெல்லாம் விட்டுட்டு ஒரு வாரம் இங்க வந்து அவரு என்ன பண்ணுவாரு?" அவள் எதோ காரணம் கூற, "சரி அவரிடமே கேக்கலாம்" என்று கூறி கைப்பேசியில் அவனை அழைத்தார்.

அவர் அவனிடம் நிலமையை விளக்கி அவனுக்கு வேறு முக்கிய வேலைகள் எதுவும் உள்ளதா என்று வினவினார். அவன் பதில் அளித்ததும், "சரிங்க மாப்பிள்ளை" என்று கூறி கைபேசியை அணைத்தார். அவன் என்ன பதில் கூறி இருப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள அவளுக்கு ஆர்வமாக இருந்தது.

"அடுத்த வாரம் அவருக்கு எந்த முக்கிய வேலையும் இல்லையாம். வரேன்னு சொல்லிட்டாரு" அவர் மகிழ்ச்சியுடன் கூற அவள் மனம் உள்ளூர மகிழ்ந்ததை அவள் ஏற்க்க மறுத்தாள். முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.

கஸ்தூரியும் அவர்கள் இருவரும் ஒரு வாரம் தனியாக இருந்தால், ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என்று எண்ணி மகிழ்ந்திருந்தார். ஆனால் அவளின் செயல்கள் அவருக்கு வேதனையை தந்தது. அவளின் மனம் மாறாமலே போய்விடுமோ என்று பயமாக இருந்தது அவருக்கு.

"என்னங்க இவ, எப்போதான் இவ மனசு மாறும்?" கஸ்தூரி கவலையாக கேட்க, "மாற தொடங்கிறுச்சு கஸ்தூரி" அவர் புன்னகையுடன் கூறினார். கஸ்தூரி ஆச்சர்யமாக அவர் முகம் பார்த்தார். "என்ன சொல்லுறீங்க!" அவள் ஆச்சர்யமாக வினவ, "நீ வேணும்னா பாரு, இன்னும் கொஞ்ச நாள்ல அவ மனசு முழுசா மாறி மாப்பிள்ளைய மனசார எத்துக்க போறா" அவர் உறுதியாக கூற கஸ்தூரிக்கும் ஆனந்தமாக இருந்தது.

மாயா தன் அறையை அடைந்தாள், அவன் வருவதை தந்தை உறுதி செய்ததும் அவள் மனம் எல்லையில்லா மகிழ்ச்சியை உணர்ந்ததை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதுவே அவள் அவனை நினைத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதையும் அவளுக்கு விளக்கியது. இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை. அவள் உள்ளூர உணர்ந்ததை ஏற்றுக் கொள்ள அவள் விரும்பவும் இல்லை.

"அவரு வரதுக்கு எனக்கு எதுக்கு சந்தோசமா இருக்கு?" என்று எண்ணி அவளுக்கு எரிச்சலாக இருந்தது. "எனக்கு என்மேலயே கோபம் வருது" தலையில் அடித்துக் கொண்டாள்.
.
.

"என்ன மேடம், ரொம்ப குழப்பமா இருக்கீங்க போல?" சுமி புன்னகையுடன் வினவ, "ஒன்னும் இல்ல" மாயா சமாளித்தாள். "முகத்த பாத்தா அப்படி தெரியலையே?" அவள் புருவம் உயர்த்தி கேட்க, "அதான் எதுவும் இல்லனு சொல்லுறேனே, மறுபடியும் எதுக்கு கேள்வி கேக்குற" அவள் எரிந்து விழுந்தாள்.

"சரி, நான் எதுவும் கேட்கல, நான் படிக்கிறேன்! எனக்கு அடுத்த வாரம் எக்ஸாம் நினைச்சு இப்போவே பயமா இருக்கு" என்று கூறி அவளிடம் இருந்து இரண்டடி தள்ளி அமர்ந்துக் கொண்டாள். மாயா அவளிடம் எதுவும் பேசாமல் அவள் மனம் போகும் போக்கை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.

"ஒரு வாரத்தில் அவனை அவள் மனம் ஏற்றுக் கொண்டதா?" என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்க, "ஒரு வாரத்திலா? ஏன் உனக்கு அவனை அதற்கு முன் பிடிக்காதா?" என்று அவள் மனம் அவளிடம் கேள்வி எழுப்பியது. அந்த நினைவை மாற்ற எண்ணி சுமியிடம் சென்று பேசினாள். அவளும் இவளிடம் பேசிக் கொண்டிருக்க மற்றவற்றை அப்போதைக்கு மறந்திருந்தாள்.


Hi friends,

19ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ♥️

Continue Reading

You'll Also Like

369K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...
8.4K 818 43
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப்...
93.7K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
16K 1.5K 40
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...