மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 15

8.2K 280 61
By Aarthi_Parthipan

முகிலில்லாத வானின் நீல வண்ண புடவையில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் பதித்தது போல் வெள்ளை கற்கள் பதிக்கப் பட்டு உயர்ரக எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்திருந்த அந்த அழகிய புடவையில் வானத்து தேவதை போல தோன்றினாள் மாயா. அந்த எளிய அலங்காரமே அவளை அதீத அழகாக காட்டியது. அலங்காரம் முடிந்து வந்து நின்ற மாயாவை பார்த்த மீனா அவளை அணைத்துக் கொண்டாள்.

"அக்கா, நீ ரொம்ப அழகா இருக்க" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் தோழிகளும் அதையே சொல்ல, வெட்க்கத்தில் அவள் முகம் சிவந்தது. அந்த நிகழ்வில் அவளுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லாத போதும் தன் பெற்றோருக்காக சம்மதித்து மகிழ்ச்சியாக இருப்பது போலவும் காட்டிக் கொண்டாள்.

மாயாவை பார்த்த கஸ்தூரி அவளுக்கு நெற்றி முறித்தாள். "என் கண்ணே பட்டுறும் போல இருக்கு டா தங்கம்" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள். மாயா புன்னகையுடன் மேடையில் நின்றாள்.

சிறிது நேரத்தில் மாறனும் மேடைக்கு வந்து சேர்ந்தான். அந்த கருப்பு நிற கோட்டும் சூட்டும் நீல நிற சட்டையும் அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. முகத்தில் ஒரு புன்முறுவலுடன் மேடைக்கு வந்த அவனை ஆச்சர்யமாக பார்த்தனர் மாயாவின் தோழிகள்.

"ஹே!! மாயா நிஜமாவே மாப்பிள்ளை சூப்பர் டி, நீ எதோ கிராமம்னு சொன்னதால வேஸ்ட்டி சட்ட போட்டுட்டு மைனர் மாதிரி இருப்பாருனு தப்பா நினச்சுட்டோம். இவரு ஹீரோ மாதிரி ஜம்முனு இருக்காரு. செம்ம லக்கி டி நீ" என்று அவள் தோழிகள் அவனை புகழ அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

"போதும் போதும்! இந்த இடத்தில இருந்து கிளம்புறீங்களா?" அவள் அதே எரிச்சலுடன் கூற, "மாப்பிள்ளைய சைட் அடிக்குரோம்னு கோப படுறா போல. சரி வாங்க போகலாம், இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இவ நம்மள கொண்ணுருவா போல இருக்கு" என்று கேலியாக பேசி சென்றனர்.

"இந்த வானரங்கள கூப்பிட்டு இருக்கவே கூடாது" என்று எண்ணி விட்டு மேடையில் அமைதியாக நின்றிருந்தாள். மாறன் அவள் அருகில் கம்பீரமாக நின்ற போது, அவளுக்குள் எதோ ஒரு வித இனம்புரியாத உணர்வு தோன்றியதை உணர்ந்தாள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவனுக்கும் அவளுக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை என்பது போல் நின்றிருந்தாள்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் அவர்கள் ஜோடி பொருத்தத்தை புகழ்ந்தனர். அதை கேட்டு கஸ்தூரியின் மனம் மகிழ்ச்சியில் குதித்தது. இருவரும் ஜோடியாக பார்பதற்கு மிகவும் அழகாக தெரிந்தனர்.

"பொண்ணுக்கு ஏத்த பையன தான் முடிவு பண்ணி இருக்கீங்க. ரெண்டு பேரும் ஒருவருக்காக ஒருவர் பிறந்ததை போல இருக்காங்க" என்று கஸ்தூரியின் உறவினர் ஒருவர் கூற, கஸ்தூரி பூரித்துப் போனார்.

சிறிதுநேரம் கழித்து புகைப்படம் எடுக்க போட்டோகிராபர் பணித்த போது மாறன் மறுக்க நினைத்தான். கஸ்தூரியும் அவனிடம் கேட்டுக் கொண்டதால் வேறு வழியின்றி சம்மதித்தான்.

"சார், மேடம் தோலில் கை போடுங்க" என்று அவன் கூற மாறன் அவனை முறைத்தான்.  "அப்படி எல்லாம் எதுவும் வேண்டாம், இப்படியே ரெண்டு மூணு ஸ்டில்ஸ் எடு அதுவே போதும்" என்றான் கடுப்பாக. அவனும் வேறெதுவும் பேச இயலாமல் சரி என்று தலை அசைத்தான். மாயாவும் சிறிதும் விருப்பமின்றி அங்கு நின்றிருந்தாள்.

அவன் புகைப்படங்கள் எடுத்து முடித்ததும் இருவரையும் சாப்பிட அழைத்தனர். மாயா முன்னே செல்ல மாறன் அவளை பின் தொடர்ந்து சென்றான். மேடையில் போடப் பட்டிருந்த கம்பளி சுருண்டு கிடந்ததை கவனிக்காமல் அதன் மேல் கால் வைத்தவள், இடறி விழ போனாள். ஆனால் அவள் கீழே விழும் முன் ஓர் வலிய கரம் அவளை பாதுகாப்பாக அனைத்திருந்தது. கீழே விழுந்து விடுவோம் என்ற பதற்றத்தில் அவள் இதய துடிப்பு அதிகரித்ததோடு அவள் கண்களையும் இருக மூடி இருந்தால்.

தனக்கு எதுவும் நேரவில்லை என்று உணர்ந்த பின் மெல்ல விழிகளை திறந்தாள், அப்பொழுது அவளை தன் கரங்களில் தாங்கி பிடித்திருந்தான் மாறன். அவன் மேடைக்கு வந்ததில் இருந்து அவன் முகத்தை ஏறிட்டு பார்க்காதவள் அருகாமையில் அவன் முகத்தை கண்ட பொழுது பேச்சற்று நின்றாள். கூர்மையான அவன் விழிகள் அவளுள் என்னவோ செய்தது. அவள் எதுவும் பேசாமல் மெதுவாக அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நடந்தாள்.

"ஃபென்ட்டாஸ்டிக்!! இப்படி ஒரு ஷாட் தான் வேணும்னு நெனச்சேன். அப்படியே போஸ் குடுத்துட்டாங்க" என்று மனதில் எண்ணிக் கொண்டு அந்த ஒரு சிறிய அழகிய தருணத்தை தன் கேமராவில் படம் பிடித்தான் அந்த போட்டோகிராபர்.

மாயாவும் மாறனும் ஒன்றாக அமர்ந்து உணவு உற்கொண்டனர். கஸ்தூரியும் ராஜாராமும் அவர்களுக்கு பாசமாக பரிமாறி மகிழ்ந்தனர். மீனாவும் வந்து மாயாவிற்கு ஊட்டிவிட, அவர்களை பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

அன்றைய நாள் மிகவும் நிறைவாக அமைய, அனைவரும் மனதார மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

அன்றிரவு, மாயா அறைக்குள் வர மாறன் காத்திருந்தான். மாயா உள்ளே நுழைந்து படுக்கையில் அவளின் இடத்தில் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

"மாயா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்?" என்று அவன் குரல் கேட்க, அவளும் எழுந்து அமர்ந்தாள். "இன்னிக்கு நடந்த ரிசப்ஷன் உன்னோட விருப்பத்தோடு நடக்கலைனு எனக்கு தெரியும். அது எனக்கு புரிஞ்சுது" அவன் முடிக்கும் முன்பே, "ஆமா விருப்பம் இல்லாம தான் நடந்துச்சு அதுக்கு என்ன இப்போ?"

"இது மட்டும் இல்ல, அன்னிக்கு உங்க கூட நடந்த திருமணமும் எனக்கு விருப்பம் இல்லாம தான் நடந்துச்சு. அது உங்களுக்கு தெரியல, இப்போ நடந்ததுக்கு ஃபீல் பண்றீங்க அப்படி தானே" அவள் பொறிந்தாள். "அப்படி இல்ல மாயா, நான் சொல்ல வருவது வேற.."

"போதும் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். ஆமா, இன்னிக்கு நடந்த எதுவும் எனக்கு பிடிக்கல. உங்க கூட செந்து நடக்கிற எந்த நிகழ்ச்சியும் எனக்கு எப்பவும் பிடிக்காது. நீங்க உங்க அம்மாக்காக ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கும் முன்னாடி எதுவும் யோசிக்கல. அதே மாதிரி தான் என்னோட அம்மா சந்தோஷத்துக்காக நானும் இந்த ஃபிங்ஷன்க்கு சம்மதிச்சேன், போதுமா? இதுக்கு மேல பேச எதுவும் இல்ல. எனக்கு தூக்கம் வருது என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்று கூறிவிட்டு வேறு புறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

"மாயா, எனக்கு உன்னுடைய நிலை புரியுது. ஆனா இந்த நிலை நிலையானது இல்ல. கண்டிப்பா மாறும். உனக்கு பிடிச்ச வாழ்க்கை உனக்கு கெடைக்கும். அதுக்கு நான் பொறுப்பு. உன்னோட கனவு ஆசை எல்லாம் என்னோட பொறுப்பு" என்று அவன் மனதில் எண்ணிக் கொண்டு தரையில் படுத்து உறங்கினான்.

அவன் மறுநாள் ஊருக்கு கிளம்புவதை கூறவே அவன் அவளை அழைத்தான். ஆனால் அவளோ அவன் மனதை மீண்டும் ஒரு முறை காயப் படுத்தினால். அவன் அவள் வார்த்தைகளை கடுமையாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு சிறு குழந்தையின் கோபமாகவே எடுத்துக் கொண்டான். அவள் மீது கோபமும் வரவில்லை அவனுக்கு.

நள்ளிரவு பன்னிரண்டு மணி இருக்கும், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு மாறன் கதவை திறந்தான்.

"ஹேப்பி நியூ இயர் மாமா" என்று கூறி மீனா அவன் முன் நிற்க அவன் சிரித்துக் கொண்டு, "புத்தாண்டு வாழ்த்துக்கள் குட்டி மா" என்றான் செல்லமாக. "அக்கா என்ன தூங்குறாளா?" என்று கேட்டுக் கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

அசதியில் படுத்ததும் உறங்கிவிட்டாள் மாயா. "ஹேப்பி நியூ இயர் மாயா" என்று அவள் காதில் கத்த, மாயா திடுக்கென கண்கள் விழித்தாள். "நான் பயந்துட்டேன்" என்றாள் போய் கோபத்துடன். "அக்கா நீ எப்படி தூங்கினே? நாம எப்பவும் இந்த நாள் தூங்காம தானே இருப்போம்" அவள் குறைப்பட,

"எனக்கு ரொம்ப களைப்பா இருந்துச்சு அதான் தூங்கிட்டேன். சரி வா, நாம கேக் கட் பண்ணலாம். அம்மா அப்பா எல்லாரும் முளிச்சுட்டங்களா?" என்று மகிழ்ச்சியாக கூறிக் கொண்டு அவளுடன் நடந்து சென்றாள்.

கீழே அவள் தந்தையும் தாயும் அவர்களுக்காக காத்திருந்தனர். இவர்கள் கீழே சென்றவுடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்லி விட்டு கேக் வெட்டி அதை கொண்டாடினார்கள். மாறனுக்கு அவை அனைத்தும் புதிதாக தோன்றியது. அவர்கள் ஆங்கில புத்தாண்டை எப்பொழுதும் கொண்டாடியது இல்லை. தமிழ் புத்தாண்டு அன்று அவன் ஊரே திருவிழா போல் காட்சி அளிக்கும்.

அவன் புன்னகையுடன் அவர்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடினான்.
.
.

மறுநாள்,

"அத்த மாமா என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று கூறி அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கினான். அவர்களும் மனதார அவனை வாழ்த்தினர்.

"சரி மாமா, நான் கிளம்புறேன். அப்பப்போ நானும் இங்க வந்து பாத்துக்கிறேன்" என்று கூறி விடைப் பெற்றான். "அம்மாவ கெட்டதா சொல்லு பா. பத்திரமா போய்ட்டு வா" என்று கூறி அவர்களும் வழியனுப்பி வைத்தனர்.

"இந்த மாயா இன்னும் கொஞ்ச நேரம் இருந்து மாப்பிள்ளையை வழியனுப்பி வச்சிட்டு போயிருக்கலாம். அதுக்குள்ள கிளம்பிட்டா" கஸ்தூரி வருத்தப்பட, "இங்க பாரு கஸ்தூரி. அவுங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க கொஞ்ச அவகாசம் தேவை. நம்ம நினைக்கிற மாதிரி உடனே எதுவும் நடக்காது. நடக்க வேண்டிய நேரத்துல எல்லாம் நல்ல படியா நடக்கும். இப்போ எத பத்தியும் யோசிச்சு நீ மனச குழப்பிக்காதே" என்று கூறி அவரை தெற்றினார். அவர் சொல்வது சரிதான் என்று கஸ்தூரியும் உணர்ந்து கொண்டார்.

Hi friends,
15ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

புதிதாய் பூத்த பூக்கள் புத்துணர்ச்சியையும் நறுமணத்தையும் உலகெங்கும் பரப்புவதைப் போலவே, பூத்திருக்கும் இந்த புதிய ஆண்டும் உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020🥰🥰🥰🥰! ”

Continue Reading

You'll Also Like

15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
25.6K 797 44
கல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும்...
56.4K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
8.6K 818 43
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப்...