மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

By Aarthi_Parthipan

498K 16.8K 3.2K

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை.. More

💕
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 29
அத்தியாயம் - 30
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 32
அத்தியாயம் - 33
அத்தியாயம் - 34
அத்தியாயம் - 35
அத்தியாயம் - 36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் - 39
அத்தியாயம் - 40
அத்தியாயம் - 41
அத்தியாயம் - 42
அத்தியாயம் - 43
அத்தியாயம் - 44
அத்தியாயம் - 45
அத்தியாயம் - 46
அத்தியாயம் - 47
அத்தியாயம் - 48
அத்தியாயம் - 49
அத்தியாயம் - 50
அத்தியாயம் - 51
அத்தியாயம் - 52
அத்தியாயம் - 53
அத்தியாயம் - 54
அத்தியாயம் - 55
அத்தியாயம் - 56
அத்தியாயம் - 57
அத்தியாயம் - 58
அத்தியாயம் - 59
அத்தியாயம் - 60
Amazon Kindle இல் இலவசமாக படிக்க

அத்தியாயம் - 10

7.8K 268 48
By Aarthi_Parthipan

பறவைகளின் கூச்சல் ஒலி மெல்லிசைப் பாடல்கள் போல அவள் காதில் விழ, குறும் புன்னகையுடன் கண்களைத் திறந்தாள் மாயா. ஒரு நிமிடம் தான் இருக்கும் இடம் அறியாமல் விழித்தாள், மறுகணம் அத்தை வீட்டில் இருப்பதை நினைவு கூர்ந்தாள். அயர்ந்து உறங்கியதால், அவள் சூழலை மறந்துவிட்டாள். அவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மீனாவை காணவில்லை, அதனால் அவள் தாமதமாக எழுந்துவிட்டோம் என்று உணர்ந்தாள்.

வெளியில் சென்றவள் வள்ளியின் குரல் கேட்டு அத்திசையில் நடந்தாள். "அத்தை! எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிடடாங்கலா?" அவள் சோம்பலாக கேட்க, "ஆமா டா தங்கம். நீ ராத்திரி தாமதமா வந்தே அதான் உன்ன எழுப்ப வேண்டாம்னு சொன்னேன்" அவர் கனிவாக கூறினார்.

"நானும் கிளம்பி போறேன் அத்த. இப்போ அசதி எதுவும் இல்ல" அவள் புன்னகைத்து கூறி விட்டு தன் அறைக்கு சென்றாள்.

மாறன் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் திறம்பட நடந்துக்கொண்டு இருந்தன. அன்று குலதெய்வ வழிபாடு இருந்தது. மாறனும் குடும்பத்தினரும் கோவிலுக்கு செல்ல, வள்ளி வீட்டில் இருந்து வரும் விருந்தினரை கவனித்து கொண்டு இருந்தாள்.

மாயாவும் விரைவாக தயாராகி கோவிலை அடைந்தாள். கோவிலில் சில சடங்குகள் முடிந்து அனைவரும் குலதெய்வத்தை மனதார வழிபட்டனர். மாயா முதல் முறையாக மாறன் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

அவர்கள் குடும்பத்தில் இந்த தலைமுறையின் முதல் திருமணம் என்பதால் அனைவரின் முகமும் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அனைவரும் தம்பதியின் இனிய திருமண வாழ்விற்காக வேண்டிக்கொண்டனர்.

பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, வேறு சில வேண்டுதல்களையும் முடித்தனர்.

அன்றைய தினத்திற்கு பிறகு, மீனாட்சி அவனை சந்திக்க வேண்டும் என்று அவனை கேட்கவில்லை. அவனும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வபோது கைபேசியில் அவளுடன் பேசினான்.

கோவிலில் அனைத்து சடங்குகளையும் முடித்த பிறகு, அவர்கள் வீடு திரும்பினர். வள்ளியின் மேற்பார்வையில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து உணவு வகைகளும் சுவையாக இருந்தன, எல்லோரும் மதிய உணவை அனுபவித்து சுவைத்து உண்டு மகிழ்ந்தனர்.

திருமணத்திற்கு முன் செய்யும் சடங்குகள் அனைத்தும் மாறனுக்கு செய்யப்பட்டது. திருமண நாள் நெருங்க நெருங்க அவன் மனம் அலைபாய்ந்தது, அவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்திருந்தான். தான் விரும்பிய பெண்ணே தனக்கு வாழ்க்கை துணையாக வரபோவதை எண்ணி அவன் மனம் பூரித்தது.

மீனாட்சி இல்லத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் தடா புடலாக நடந்துக் கொண்டிருந்தது. அவளுக்கு செய்யும் அனைத்து சடங்குகளையும் அவள் குடும்பத்தினர் மனதார செய்துக் கொண்டிருந்தார்கள்.

மூன்று நாட்கள் மூன்று நோடிகளை போல் வேகமாக ஓட, அனைவரும் எதிர்பார்த்த மாறன் மீனாட்சி திருமண நாள் வந்தது.

அல்லி, மல்லிகை மலர்களின் பூச்சரம் நுழைவாயிலை மிகவும் கவர்ச்சிகரமானதாக காட்டியது. உறவினர்கள் நிறைந்த வீடு இன்னும் அழகாக மாறியது. குழந்தைகளின் சத்தம் மிருத்தங்கம் மற்றும் நாதஸ்வரம் இசையில் ஆதிக்கம் செலுத்தியது. அனைத்து பெண்களும் பாரம்பரிய உடையில் பூமியில் உதித்த தேவதூதர்களைப் போல தோற்றமளித்தனர், சிறுவர்கள்ளும் பாரம்பரிய உடைகளில் மிகவும் அழகாக இருந்தார்கள்.

ஒரே மாதிரியான பச்சை வண்ண பட்டு புடவையில் மாயாவும் மீனாவும் ரதியை போன்ற அழகுடன் வந்து நிற்க, வள்ளி அவர்களை ஆசையாக பார்த்து "என் செல்லங்கள் என் கண்ணே பட்டுரும் போல இருக்கு" என்று கூறி அவர்களுக்கு நெற்றி முறித்தாள்.

பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் அணிந்து, புன்சிரிப்புடன் மணவறையை அடைந்தான் மாறன். புதிதாக பூத்த ரோஜா இதழ்களால் ஆன மாலையை அவனுக்கு அணிவித்தார் ராஜாராம். அவனுக்கே உண்டான கம்பீரத்துடன் மணவறையில் அமர்ந்தான்.

மணக்கோலத்தில் அவனை காண வேண்டும் என்ற வள்ளியின் நீண்ட நாள் கனவு நிறைவுற்றதை உணர்ந்தாள் வள்ளி. கண் குளிர தன் மகனை கண்டு மன மகிழ்ச்சி அடைந்தார்.

மீனாவும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டு இருந்தாள். அவள் அவன் அருகில் அமர்ந்துகொண்டு அவனை கேலி செய்து கொண்டு இருந்தாள்.

அவன் அவள் செய்யும் கேலியில் செய்வதறியாது மந்திரங்களை தவறாக உச்சரிக்க தொடங்கினான். புரோகிதர் மந்திரத்தை தெலவாக சொல்ல வேண்டும் என்று கூற, மீனா அவனை பார்த்து மேலும் நகைத்தாள்.

"மீனு, கல்யாணம் முடியட்டும் அப்புறம் உன்ன பாத்துக்கிறேன்" என்று கூற "அப்போ அதுகெல்லாம் நேரம் இருக்காது மாமா" அவள் கிடலாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடி விட்டாள்.

"அய்யோ, எல்லாரும் எவ்வளவு வாய் பேசுறாங்க" என்று மனதில் எண்ணியவன் புரோகிதர் உரைத்த மந்திரங்களை சரியாக உச்சரிப்பதில் கவனம் செலுத்தினான்.

"அம்மா, பெண் வீட்டுல இருந்து யாரும் இன்னும் வரல. நாங்க போய் அழசுட்டு வரட்டுமா?" என்று வள்ளியின் உறவினர் ஒருவர் கேட்க அப்பொழுது தான் வள்ளியும் அதை கவனித்தார்.

"ஆமா, முகூர்த்த நேரம் நெறுங்கிருச்சு. பொண்ணுக்கு இன்னும் சில சடங்குகள் செய்யணும், இன்னும் ஏன் அவர்கள் யாரும் வரல?" வள்ளி புரியாமல் வினவினாள்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல வள்ளி மா, நா போய் என்னனு பாக்குறேன்" இவர்கள் உரையாடலை கேட்ட ராஜாராம் பேசினார்.

"சரிங்க அண்ணா, நேரம் ஆச்சு, நீங்க ஒரு எட்டு போய் ஏன் தாமதம்னு பாத்துட்டு வாங்க" அவள் சிறு வருத்தத்துடன் கூற, "இதோ கிளம்புறேன் மா" என்று கூறி ராஜாராம் ஓரடி எடுத்து வைத்தார். வைத்தவர் அங்கு வந்த மீனாட்சியின் தந்தையை பார்த்து நின்றார்.

"வாங்க சம்மந்தி, ஏன் தாமதம் ஆச்சு? பொண்ணு வந்துட்டு இருக்கா தானே?" வள்ளி பல கேள்விகளை கேட்க, அவர் பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தபடி நின்றிருந்தார். வள்ளியின் மனதில் இனம் புரியாத ஒருவித பதட்டம் ஏற்பட்டது. "என்னாச்சு சம்மந்தி, ஏன் எதுவும் பேசாம நிக்குரீங்க?" வள்ளி பதட்டத்துடன் கேட்க அவர் கண்ணீருடன் அவரை நிமிர்ந்து பார்த்தார்.

ராஜாராமும் அச்சமயம் பதட்டம் அடைந்தார். "என்ன ஆச்சுன்னு சொல்லுங்க" அவர் சிறு கடுமையாக கேட்க.

"ராசாத்தி மாதிரி வாழ்க்கை கிடைச்சும் அதை இப்படி கெடுத்துக்குவானு நாங்க நினைக்கவே இல்லைங்க" அவர் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். ராஜாராமுக்கு ஓரளவு விஷயம் என்னவாக இருக்கும் என்று புரிய, அதிர்ச்சியில் உறைந்து நின்றுக் கொண்டு இருந்த தன் தமக்கையை பார்த்தார்.

"இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்த உங்க பிள்ளை பிடிக்கலைனு வீட்ட விட்டு ராத்திரியே எங்கயோ போய்ட்டா மா அந்த படு பாவி. என்ன மண்ணிச்சிருங்க மா" என்று அவர் வள்ளியின் பாதங்களை பிடித்து கதறி அழுதார்.

பெரும் இடி வந்து தாக்கியதை போல் உணர்ந்தார் வள்ளி. கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருக்கிட, அதே இடத்தில் அமர்ந்தார்.

"அம்மா வள்ளி, உனக்கு என்னாச்சு மா!" என்று ராஜாராம் அவரை தன் தோலில் சாய்த்துக்கொண்டார்.

அண்ணன் மேல் சாய்ந்த வள்ளி, வெடித்து அழுதாள். "அண்ணா, என் பையனுக்கு வந்த நிலமையை பாத்திங்களா?" என்று கூறி மேலும் அழுதாள். "பொறுமையா இரு மா என்னானு பாக்கலாம்" அவர் சமாதானம் கூற முயல, "இன்னும் என்ன அண்ணா இருக்கு?" அவர் மேலும் அழுதார். ராஜாராமும் கண் கலங்கினார்.

"அம்மா!" என்று மணக்கோலத்தில் வந்து நின்ற மாறனை பார்த்து அவர் அழுகை அதிகரித்தது. அவன் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவரை நோக்கி வந்தான்.

"என்ன மண்ணிசிருங்க தம்பி. அந்த பாவிய பெத்ததுக்கு, என்ன தூக்குல தொங்குற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டா!" மீனாட்சியின் தந்தை அழுதுக் கொண்டு மாறன் முன் கைகூப்பி நின்றார். மீனாட்சி எழுதியதாக ஒரு கடிதத்தை யாரோ எடுத்து வர, அதை படித்த மாறன் அதிர்ச்சியில் உரைத்தான்.

"என்னை மன்னித்து விடுங்கள். நான் படித்த பெண், என் படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு மாப்பிள்ளையை தான் நான் எதிர் பார்க்கிறேன். இந்த கிராமத்தில் ஒரு விவசாயியை திருமணம் செய்துக் கொண்டு வயலிலும் அடுப்படியிலும் என்னால் கஸ்ட்டப்பட இயலாது. எனக்கு பிடித்த வாழ்வை வருங்காலத்தில் நானே அமைத்து கொள்கிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருக்க, வாயடைத்து போய் தாயின் அருகில் அமர்ந்தான் மாறன்.

"உன்னோட வாழ்க்கை என்னுடைய அவசரத்தால் இப்படி ஆயிருச்சே பா" அவன் கைகளை பற்றி அவர் விம்பி அழுதார். "அம்மா அழாதிங்க" அவன் அவரை தேற்ற முயன்றான்.

"இதுக்கு தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொன்னேன், விவசாயம் விவசாயம்னு போற இவன கொஞ்சம் கண்டிச்சு வேற வேலைக்கு போக சொல்லுங்கனு. யாராவது என் பேச்சை கேட்டிங்களா? இப்போ என்ன ஆச்சு ஊர் கூட்டி அவமான பட்டாசு" அஜய் வெந்த புண்ணில் வேலை பாய்க்க, "நீ உன் வேலைகளை போய் பார் அஜய், தேவை இல்லாம என்ன பேச வைக்காத" ராஜாராம் எச்சரிப்பதை போல் கூறினார்.

"மாப்பிள்ளையை சொன்ன உடனே வக்காலத்து வாங்க வருவிங்கனு தெரியும். இப்போ எல்லாரு மூஞ்சியிலும் கரிய பூசிட்டு அந்த பொண்ணு போய்ட்டாளே, இந்த அவமானத்தை எங்க போய் தீர்த்திக்க போரிங்க" அவன் மேலும் பேச, ஆத்திரம் அடைந்த ராஜாராம் அவனை அடிக்க கைகளை ஓங்கினார்.

"அண்ணா, என்னோட பையன் பேசினதுல என்ன தப்பு இருக்கு. இங்க எல்லாரும் உங்க முகத்துக்கு பின்னாடி பேசிட்டு இருக்கிறத அவன் வெளிப்படையா பேசிட்டான் அவ்வளவுதான். இவன் வாய அடைக்க இப்போ இவன அடிக்க கை ஓங்குறிங்க. மொத்த ஊரும் பேசுதே அவுங்கள என்ன செய்வீங்க" ஒரு வாளி குளிர் நீரை முகத்தில் அறைந்தாற்போல் உணர்ந்தார் ராஜாராம். இவ்வாறு கடுமையாக பேசுவது தன் தங்கை தானா என்ற சந்தேகமும் எழுந்தது அவருக்கு.

"விடுங்க மா, இவனுக்கு அப்பா இல்ல. அவர் இருந்திருந்தா இவன இந்த வழில போக விடாம வேற நல்ல துறைய தேர்ந்தெடுக்க சொல்லி கண்டிசிருப்பாரு. இவன் சித்திய ஏமாத்திட்டு சுலபமா இருக்க துறைய எடுத்துட்டு ஊர ஏமாத்திட்டு இருந்தான். இவரும் அவன் வளர்ச்சி அடைய கூடாதுனு அவன என்கரேஜ் பண்ணாரு. இப்போ எல்லாரையும் அந்த பொண்ணு நல்லா கேள்வி கேட்டுட்டு போய்ட்டா! இப்பவும் இவுங்க செஞ்ச தப்ப ஒத்துக்காம நாடகம் ஆடிட்டு இருக்காங்க. வாங்க இங்க இருந்தா நம்ம மானமும் சேர்ந்து போகும்" என்று அவன் நடக்க, பூங்குழலியும் அவனோடு நடந்தாள்.

"இன்னும் எதுக்கு என்ன உயிரோட வச்சு இருக்க கடவுளே? இந்த வார்த்தைகளை கேட்க என் உயிரவே நீ எடுத்துக்கோ. இதுக்கு மேல என்னால முடியாது" என்று கூறி கதறி அழுதார் மீனாட்சி. அதை பார்த்தவர்கள் நெஞ்சம் வேதனையில் துடித்தது. கஸ்தூரி அவரை அரவணைப்போடு அனைத்துக் கொண்டாள்.

பொறுமை இழந்த ராஜாராம், அஜயை நோக்கி நடந்தார். "என்னடா சொன்ன ராஸ்கல், போனா போகட்டும்னு பாத்தா நீ எல்லை மீறி பேசிட்டே. உன்ன.." என்று அவன் சட்டையை பிடித்தார் ராஜாராம். "போதும் நிறுந்துங்க, ஒரு அடி அவன் மேல விழுந்துச்சு மரியாதை கெட்டிரும். அவன் சொன்னது தான் நிஜம். நீ ஊருக்கு உபதேசம் பண்ணுறியே, இங்க நடந்தத பாத்துட்டு தானே இருந்தே! இப்போ ஆச்சும் அந்த பொண்ணு போனா என்ன என் பொண்ண உனக்கு கட்டி வைக்கிறேன் டா மருமகனேனு நீ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நீ நல்லவன்.

உன் பொண்ணுக்கு மட்டும் நல்லா படிச்சு பெரிய உத்யோகத்தில் இருக்குற பையன் வேணும், ஆன ஊரான் வீட்டு பொண்ணுங்க இந்த பட்டிக் காட்டுலயும் வயல்லயும் கிடந்து கொடுமைய அனுபவிக்கனும்.

அவனுக்கு விவசாயம் பண்ணுறதுதான் பிரியம்னா இந்த மாதிரி அழகான படிச்ச பொண்ணுங்க மேல அவன் ஆசையும் பட்டிருக்க கூடாது" அவள் சரசர வென்று பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.

தன் அன்னையின் வார்த்தைகளை சற்றும் எதிர்பாராத அஜய், அவளை வியப்பாக பார்த்தான்.


Hi friends,

10ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

கதை எப்படி போகுது? Bore or Good???

Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
62.7K 4.2K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
53.4K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.