😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

Von creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். Mehr

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

பிரிவு

1.1K 60 27
Von creativeAfsha

" என்ன அமைதியாகிட்ட ஆனந்த்?"

" ம்...ஒன்னுமில்லை பாட்டி ஏதோ யோசனைகள் ," என்று கூறியவன் பின்," பாட்டி மணி பாருங்க லேட் ஆகிடுச்சு வாங்க சாப்பிடலாம்," என்று எழுந்து கொண்டான்.

" அட ஆமா நானும் நேரத்தை கவனிக்கலை, சரி ஆனந்த நீ போய் மதுவயும் கூப்பிட்டு வா நம்மை சேர்ந்து சாப்பிடலாம்," என்று கூறி அவரும் எழுந்து கொள்ள ஆனந்த அங்கேயே நின்றான்.

" என்னாச்சு ஆனந்ந மதுவை கூப்பிடலையா?"

" இல்லை பாட்டி நீங்களே கால் பண்ணுங்க."

" ம்...சரியா போச்சு அப்பறம் நீ எப்படி அவகிட்ட நெருங்க முடியும்? இதோ பாரு உன் மொமைல எடுத்து அதிகார தோரணை இல்லாம அமைதியா சாப்பிட கூப்பிடு அவ வருவா," என்று அவனுக்கு எடுத்து கூறியவர் அவனுக்கு தனிமை கொடுத்துவிட்டு  டைனிங் ஹால் நோக்கி சென்றார்.

ஆனந்திற்கு அவள் சரியாக பதில் கூற மாட்டாள் என்பது தெளிவாக புரிந்தது இருப்பினும் பாட்டியின் பேச்சை மீற முடியாமல் மிகுந்த யோசனையுடன் செல்லை எடுத்து அவளை அழைத்தான்.

பெல் அடித்து முடியப்போகும் நேரம் அதை அட்டன்ட் செய்தவள்," சொல்லுங்க ஆனந்த் ," என்று சாதாரணமாக வினவினாள்.

" மது சாப்பிட வா பாட்டி உனக்காக வெயிட் பண்றாங்க,"

" அச்சோ பாட்டி இன்னும் சாப்பிடலயா இதோ இனண்டு நிமிஷத்தில வந்தர்றேன்."என்றவளின் குரலில் ஆச்சர்யப்பட்ட ஆனந்த் பாட்டியின் கூற்றில் இருந்த உண்மையை புரிந்து கொண்டான்.

" சாரி பாட்டி நேரத்தை பார்கலை ," என்று வருந்தியவள் அவர்களுடன் அமைதியாக உணவை முடித்துக்கொண்டு  அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

தன் அறை புகுந்தவள் லாப்டாப்பில் ஆழ்ந்து போனாள்.நேரத்தை கவனிக்காமல் ஆழ்ந்திருந்தவளை அதிரவைத்தது விக்ரமின் மெயில்.

அவனது மெயிலை பாரத்த மது தன் மொபைலை எடுத்து அவனை அழைத்தாள்.

************

மதுவை அவளது வீட்டின் அருகே இறக்கி விட்டவன் தனது வாகனத்தை அடையும் பொழுது கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.தன்னவளின் விளக்கங்களை கேட்டவனின் மனம் காயப்பட்டிருந்தது.அதை வெளிக்காட்ட வழிதெரியாமலே எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறினான்.தன் வாகனத்தில் ஏறி அமந்ததுமே கோபம் குறையாமல் இருந்தவன் மதுவை நோக்க அதுவரை அவனது பார்வைக்காகவே காத்திருந்தவள் போல புன்னகை பூசிக்கொண்டாள்.

அவனது கோபம் நொடியில் மறைய காரை கிளப்பி மீட்டிங் நடக்கும் சைட்டை நோக்கி விரைந்தான்.நினைத்ததை விட மீட்டிங் முடிய கால தாமதம் ஆனதால் மீண்டும் அவர்கள் மூவரும் அலுவலகத்தை அடையும்பொழுது நேரம் இரவு எட்டு மணியை தாண்டியிருந்தது.

" ரொம்ப லேட் ஆகிடுச்சே...மிஸ் ஜாக் நீங்க எப்படி போவீங்க?"
" நான் என்னோட டூவிலர்ல போய்குவேன் சார்."

" நீங்க மகேஷ் ?"

" நான் பஸ்தான் சார் என் வண்டியை சர்விஸ் விட்டிருக்கேன்."

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் பின்," நானே ரெண்டு பேரையும் ட்ராப் பண்ணிடறேன் லேட் நைட் நீங்க தனியா போக வேணாம்." என்று பொதுவாக கூறியவன் ," சீக்கிரம் உங்க திங்க்ஸ் எடுத்திட்டு வாங்க ," என்று கட்டளையிட்டுவிட்டு அலுவலகத்தில் காரை பார்க் செய்து விட்டு கீழே இறங்கியவனை வழிமறித்த நபரை கண்டு திடுக்கிட்டான்.

" என்ன மிஸ்டர் விக்ரம் அப்டியே திகைச்சு போய் பார்கறீங்க"

அவன் கேட்ட தருணத்திற்குள் தன்னை மீட்டெடுத்தவன்,"  " சே...என்னடா நீ உன்னை பார்ததுல எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே அவனை அவனை அணைக்க முயல விக்ரமின் கைகளை தட்டிவிட்டவன் " நடிக்காத ஆதி உன் மூஞ்சியே என்னை நீ இங்க எதிர்பார்க்கலைனு சொல்லுது," என்றவனை ," சே..சே...என்ன ஜீவா இது உன்னை போய் விட்டது பஅபடி நினைப்பேனா , ஒரு சந்தோஷ அதிர்ச்சி அதான் ஷாக் ஆகிட்டேன் , சரி அதை விடு ஊருல எல்லோரும் எப்படி இருக்காங்க? என்ன திடீருனு சொல்லாம வந்து நிக்கிற?"

"ஏன் உன்கிட்ட சொல்லாம உன்னை பார்க்க வர கூடாதா?"

" எல்லாத்துக்கும் குதர்க்கமா அர்த்தம் பண்ணா எப்படி ஜீவா, சரி வா வீட்டுக்கு போலாம்,"என்றவன் ," அச்சோ....'என்று யோசிக்களானான்.

" என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறதுல ஏதோ சிக்கல் போல தெரியுது,"

" சே..சே..அப்படியில்லை போற வழியில இரண்டு பேரை இறக்கி விட்டுட்டு போகனும் உன்கிட்ட ஃபிரியா பேச முடியாதேனு நினைச்சேன்,"என்றவன் அப்பொழுதுதான் ஜீவா தன்னிடம் சரியாக பேசாததை  கவனித்தான்," ஜீவா என்னாச்சு ஏன்.என்கிட்ட ஒரு மாதிரி பேசுற?"

அவனது கேள்விக்கு ஜீவா பதில் சொல்ல வாய் திறக்கும் நேரம் ஜாக் வந்து நின்றாள். அவளை ஏற இறங்க பார்த்த ஜீவா  ஆதியை திரும்பி முறைத்தான் ," இவங்களை தான் நீ ட்ராப் பண்ணணும்னு சொன்னியா? இது எத்தனை நாளா நடக்குது?" என குரலில் வெறுப்பு தெரிய முகத்தை சுழித்து வினவினான்.

அவன் கேள்வி ஜாக்கை முகம் கருக்க செய்தது அவளை நோக்கிய விக்ரம் ,"மிஸ் ஜாக் நீங்க உள்ள உட்காருங்க மகேஷ் வந்ததும் கிளம்பிடளாம் ," என்று சமாதானமாக கூறிவிட்டு " ஜீவா நீ இங்கயே இரு இரண்டே நிமிஷத்தில கிளம்பிடளாம்," என்றவன்  அவன் பதிலுக்கு காத்திராமல் வேகமாக அலுவலத்தினுள் சென்று மறைந்தான்.

காரின் உள்ளே அமர்ந்திருந்த ஜாக் அவமானத்தில் முகம் கருக்க அமர்ந்திருந்தாள்.தனியே விடப்பட்ட ஜீவாவோ குழப்பத்தில் இருந்தான் அவனை மேற்கொண்ட யோசிக்க விடா வண்ணம் மகேஷும்  விக்ரமும் வந்துவிட சில நிமிடங்களில் அவனது கார் அமைதியாக அந்த நால்வரையும் ஏற்றிக்கொண்டு அதன் பயனத்தை தொடங்கியது.

" எனக்கு வழியெல்லாம் தெரியாது உங்களுக்கு ரூட் தெரியும்ல?"

" தெரியும் சார் ," என்று பள்ளி குழந்தைகள் போல பின் சீட்டில் அமர்ந்திருந்த  இருவரும் கோரசாக பதிலளிக்க கார் முதலில் ஜாக்கின் வீடு நோக்கி விரைந்தது.

காரின் உள்ளே அமைதியான சூழல் இருந்தாலும் ஜாக்கின் மனதில் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது. மதியம் அவளும் மீராவும் கேன்டீனிலிருந்து திரும்பி வரும் வழியில் மதுவும் விக்ரமும் பேசிக்கொண்டிருந்ததை அவளால் சாதாரணமாக எண்ண இயலவில்லை. எவரையும் மதிக்காத மதுமிதாவிடம் அலுவலக ஊழியர் யாரும் நின்று பேச கூட தயங்க விக்ரம் மிக எளிகாக அவளை கை பிடித்து காரின் உள்ளே உட்கார செய்த காட்சி அவளது மனதில் பிரளயத்தையே உண்டு பண்ணியிருந்தது.

என்னதான் வாய்வழிக்க விக்ரமை காதலிக்கவில்லை என்று மீராவிடம் கூறினாலும் அது பொய் என்பதை ஜாக்கின் மனம் அறியும்.அப்படி உருவாகிய காதல் மலரும் போதே கருக அதை ஏற்றுகொள்ள ஜாக்கினால் இயலவில்லை. இப்பொழுது வேறு ஒருவருவனுடன் ஆதி காரசாரமான விவாதத்தில் இருந்தான் அந்த வேறு ஒருவன் ஜாக்கை பார்த்த பார்வையில் ஜாக் அவமானமாக உணர்ந்தாள்.அவனது பேச்சும் அவள் மனதை பாதித்தது.அவன் யார் எதற்கு தன்னை அவ்வாறு நினைத்தான் என்று பலவாறாக யோசித்தவளின்
எண்ண ஓட்டத்தை தடை செய்தது விக்ரமின் குரல்,"மிஸ் ஜாக் நீங்க சொன்ன ஏரியாவுக்கு வந்தாச்சு வீடு எங்க இருக்கு?" என்று அவளிடம்.கேட்டான்.

" இங்கதான்.சார் இரண்டாவது வீடு நான் இங்கயே இறங்கிக்கறேன்," என்று கூறியவள் அவனிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் மகேஷையும் இறக்கி விட்டவன் ஜீவாவுடன் தனித்து பயனிக்கத்தொடங்கினான்.

" ம்...இப்ப சொலீலு ஜீவா என்மேல உனக்கு என்ன வெறுப்பு?"

" நான் யாரு ஆதி உன்மேல.வெறுப்படைய?"

" ஜீவா நீ ஏன் இப்படி பேசற நான் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்க கூடாதுனு தானே தனியா வந்து கஷ்டப்படறேன்."

" அந்த யாருக்கும் அப்படீங்கிறதுல உன்னோட பொண்ணு நிலுவும் இருக்கால?"

நிலா என்ற பெயர் விக்ரமை செயலிழக்க செய்தது.நிலாவை அவன் நினைக்காத நொடி இல்லை இருப்பினும் அவள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறாள் என்ற நினைவே அவனை அமைதியடைய செய்து கொண்டிருந்தது.

" இப்ப நீ ஊருல இருந்து கிளம்பி வந்தது என்னை குத்தி காட்டுறதுக்காக வா?"

" நான் உன்னை குத்தி காட்டவே இல்லையே நிலாவுக்கும் தொந்தரவா இருக்க வேணாம்னு நினைச்சியா ஆதி," என்று கூறியவன் பின்நினைவு வந்தவனாக ,", புது ஊரு சரி , புது கம்பெனி சரி உன்னோட அடையாளத்தை ஏன் மாத்திகிட்ட? ஆதியா இருந்தவன் இங்க விக்ரமா ஏன் இருக்கிற?"

" நான் எதையும் வேணும்னு செய்யலை என்னோட பேரு விக்ரமாதித்தன் அப்படீனு உனக்கு தெரியும் அதுல என் பேரோட முன் பாதிய அவங்க கூப்பிடறாங்க சோ வாட் ஜீவா?"

அதற்கு மேல் ஜீவா எதுவும் பேசவில்லை.ஜீவாவின் மௌனம் ஆதியை பாதித்தது.ஜீவாவின் வருகை கூட ஆதிக்கு சரியானதாக படவில்லை," ஜீவா உங்கிட்ட நான் சொல்லிட்டுதானே வந்தேன்.சொல்லாம ஓடி வரலியே?"

" எங்கிட்ட சொன்ன சரி நிலாகிட்ட சொன்னியா?"

ஜீவா இவ்வாறு கேட்கவும் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன் ," நிலா எப்படி இருக்கா அவளுக்கு ஓன்னுமில்லையே??"குரல் நடுங்க கேட்டவனை பார்க்க பாவமாக இருந்தாலும் ," அதை பத்தி உனக்கு என்ன கவலை? நீ நிம்மமதியா இருக்கதானே யாருக்கும் எங்க போறேனு சொல்லாம தனியா வந்த , இப்ப என்ன திடீருனு அக்கறை?"

" ஜீவா ப்ளீஸ் விளையாடாத நிலா...நிலா நல்லா...தானே இருக்கா??" குரல் நடுங்க கேட்டவனை இரக்கமற்ற பார்வை பார்த்த ஜீவா மௌனம் சாதித்தான்.

" ஜீவா நான் உன்கிட்ட தான் கேட்குறேன் என் நிலா எப்படி இருக்கா?"

" அவ நல்லா இருக்கனும்னு நீ விரும்பினா உடனே கிளம்பி என்கூட வந்தாகனும்."

ஜீவா தன்னை ஊருக்கு அழைப்பான் என்பதை எதிர்பார்திருந்த விக்ரம் அவன் நிலாவை பற்றி கூறாமல் மறைப்பதுபோல தோன்றவே உடனே சம்மதித்தான்.விரைவாக வீடு வந்தவன் தன் லேப்டாபை திறந்து மதுவிற்கு இரண்டு தினங்கள் விடுமுறை வேண்டி மெயில் செய்தான். பின்  அவசரமாக முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு அடுத்த அரைமணி நேரத்தில் ஜீவாவுடன் தன் காரில் சென்னை நோக்கிய பயணத்தை தொடங்கினான்.

பத்து நிமிட பயணத்திற்கு பிறகு விக்ரமை பார்த்த ஜீவா ," காரை ஓரமா நிப்பாட்டு ," என கட்டளையிட்டான்.அவனை புரியாத பார்வை பார்த்த விக்ரமை ," சொன்னா புரியாதா காரை ஓரமா நிப்பாட்டு ," அவனுடன் வாதிடம் மனதிடமில்லாத விக்ரம் அவன் கூறியபடி வண்டியை ஓரம் கட்டினான்.

" நீ இந்த பக்கமா வா நான் வண்டி ஓட்டறேன் நீ ரொம்ப சோர்வா தெரியுற," என்று நண்பன் மேல் அக்கறையுடன் கூற வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கி மறுபுறம் அமர்ந்து கொண்டான்.அவனுக்கு அச்சமயம் மன அமைதி தேவையாக இருந்ததால் ஜீவாவுடன் மேலும் எதுவும் வாதாடவில்லை.சீட்டில் சாய்ந்து கண்களை மூடியவன் தன் கைபேசி சினுங்க அதை எடுத்து பார்தான்.அதில் மின்னிய பெயரை பார்த்தவன் ஜீவாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே செல்பேசியை கட் செய்து சுவிட்ச் ஆஃப் செய்தான்.

அவனின் செய்கையை பார்த்த போதும் ஜீவா அதை பற்றி எதுவும் கேட்காமல் இருந்தது விக்ரமிற்கு ஆறுதலாக இருக்க கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான். இரு நான்கு சக்கர வாகனம் சென்னை நோக்கி செல்ல விக்ரம் @ ஆதியின் மனமோ சில வருடங்கள் பின்னோக்கி செல்ல துவங்கியது.

Weiterlesen

Das wird dir gefallen

149K 5.4K 36
No1 : 29.4.2018 to 2.5.2018😍 hiii friends..!! ? This is my first story ... ? wattpad la stories read panna start pannathuku aprm nammalum eluthala...
255K 8.9K 39
அவள் புரியாத புதிர்
51.2K 3K 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
68.5K 6.1K 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும்...