😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

விரக்தி

2K 104 42
By creativeAfsha

தன் நண்பனிடம் கோபமாக பேசிய ஆதி விறுவிறுவென்று வீட்டினுள்ளே நுழைந்தான் அங்கே உணவு மேஜையில் சமைத்த உணவு திறக்கப்படாமல் இருப்பதை பார்தவனின் மனம் மீண்டும் அன்று மதியம் தான் மதியிடம் நடந்து கொண்ட விதத்தை நினைத்து வருந்தியது அவள் ஆசையாக சமைத்த உணவு பதார்த்தங்களை பார்தவனின் மனம் தன் மீதே வெறுப்பு கொள்ள வேகமாக வாசலுக்கு விரைந்தான்.

" பரமு அண்ணா...."

" சொல்லுங்க தம்பி....ஏன் இவ்வளவு பதட்டமா வறீங்க??"

"அதெல்லாம் ஒன்னுமில்லை மதியம் சமைச்ச சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு நீங்க  உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை யாருக்காவது கொடுத்திடுங்க...,"என்று கூறி அவரிடம் பாத்திரத்தை ஒப்படைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

நடந்தவற்றை ஒரு ஓரமாக நின்று பார்த்த ஜீவா மனதில்," மது சமைச்ச சாப்பாட்ட கூட வீணாக்க நினைக்காத நீ மது வாழ்கையை வீணாக்குற மாதிரி காரியம் செய்வியா??" என சிரித்துக்கொண்டு நண்பனை பின்தொடர்ந்து சென்றான்.

" ஆதி....அடுத்து என்ன பண்ண போற?" என வினவியபடி உள்ளே நுழைந்தவன் ஆதி தனது உடைமைகளை அடுக்குவது கண்டு திகைப்படைந்தான்.

" அடுத்து என்ன?? ஒன்னுமில்லை நிலா அவங்க பாட்டிவீட்டில கொஞ்சநாள் பத்திரமா இருக்கட்டும் அங்களுக்கும் அவ கூட இருக்க முடியலைனு ரொம்ப ஆதங்கம்."

" சரி நிலா பாட்டிவீட்டில விட்டுட்டு நீ என்ன பண்ண போற?"

" நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்," என்று அடுத்த வெடியை போட்டான்.

" எப்படா? என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும் னு தோணலையா உனக்கு?"

" நான் நேத்தே ரிசைன் பண்ணிட்டேன் .நான் வேற ஒரு காரணத்துக்காக ரிசைன் பண்ணேன், இப்ப வாழ்க்கை என்ன வேற மாதிரி கொண்டு போகிடுச்சு,"என்று பெருமூச்சு விட்டவன்," வேற என்ன கேட்கனும், அதையும் கேட்டிரு ஏன் தயங்குற?"

" வேலையை விட்டுட்டு என்ன பண்ண போற? இப்ப எதுக்கு உன் திங்கஸெல்லாம் பேக் பண்ணிட்டு இருக்க??"

" நான் இந்த வீட்டைவிட்டு போக போறேன்.எங்க போறேன் என்ன செய்ய போறேன் எதுவும் நான் இன்னும் முடிவு பண்ணலை , இப்ப முதல்ல நிலாவோட திங்க்ஸ அவ பாட்டிவீட்ல கொடுக்கனும் அதுக்கப்பறம் தான் மத்த வேலை,"

" ஏன் ஆதி இப்படி பண்ற?"

"ஜீவா ப்ளீஸ் என்னை என் போக்குல விட்டிடு , ரொம்ப நேரம் ஆகிடுச்சு நீ வீட்டுக்கு கிளம்பு , நான் உனக்கு கால் பண்றேன், அனேகமா வேற புது சிம் வாங்கிடுவேன்," என கூறியவன் அவன் போக மறுத்தும் வலுக்கட்டாயமாக அவனை அனுப்பி வைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

நிலாவின் உடைமைகளையும் தனது உடைமைகளையும் எடுத்து கொண்டு வீட்டை பூட்ட போனவன் ஹாலில் இருந்த செல்பேசியை கண்டு நின்றான்.அது மதுவின் தொலைபேசி என்பதை உணர்ந்தவன் பத்திரமாக தன் உடைமைகளுடன் அதை வைத்துவிட்டு வாசலை நோக்கி சென்றான்.

அவனை அந்த ராத்திரியில் எதிர்பார்காத செக்யூரிட்டி," எங்க தம்பி இந்நேரத்தில ?"

" பரமு அண்ணே நான் இப்ப வீட்டை காலி பண்ணிட்டு போறேன், நீங்க எப்பவும் போல இங்க இருங்க உங்களுக்கு மாசாமாசம் உங்க அக்கவுண்ட் ல சம்பளம் வந்திடும், மாசத்தில ஒரு.நாள் ஆளை வச்சு சுத்தம் பண்ணி வெச்சிடுங்க, நான் எப்ப வருவேனு சொல்ல முடியாது," என்று நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு வாசலில் இருந்த கால் டாக்ஸி யில் மறைந்தான்.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரை காரை பார்த்துக்கொண்டிருந்த அந்த செக்யூரிட்டி தன் கண்களை துடைத்துக்கொண்டு தன் கடமையை செய்ய துவங்கினார்.

************

"மிஸஸ்.மதுமிதா ஆதித்யன்.." மருத்துவர் கூறிய பெயர் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.சாலையில் தென்பட்ட எதுவும் மதுவின் கண்களுக்கு புலப்படவில்லை , மதுவின் இதயம் அவர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை விட வேகமாக அடித்தது. அவள் மனம் ஒரு நிலையிலில்லாமல் தவித்து கொண்டிருக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

" வீடு வந்திடுச்சுடா ....," என்ற தாயின் குரல் கேட்டு கண்விழித்தவள் அந்த பிரமாண்ட வீட்டை பார்த்து அசந்து போனாள்.அமைதியாக உள்ளே சென்றவளை அவளது அன்னை அவள் அறைக்கு  கூட்டி சென்றார்," இதுதான் உன்னோட ரூம்டா மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம ரெஸ்ட் எடு அம்மா உனக்கு சாப்பாடு அனுப்பறேன்," என்று கூறி சென்றார்.

அந்த அறையை முதன்முதலாக பார்க்கும் எண்ணம் தோன்றவே அறையை சுற்றி நடந்தாள் அங்குள்ள பொருட்களை தொட்டு பார்த்தாள் அங்கிருந்த எந்த ஒரு.பொருளும் தன் ரசனைக்கு சற்றும் பொறுந்துவதாக தோன்றாததால் அலமாரியை திறந்து அங்குள்ள உடைகளை ஆராய்ந்தாள் புடவைகளும் சுடிதார்களும் குப்பைபோல் குழுமியிருந்தது.தான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தவள் வேகமாக அந்த குப்பையிலிருந்து மிகுந்த சிரமத்துடன் ஒரு சுடிதாரை எடுத்து வேண்டா வெறுப்பாக அணிந்து கொண்டாள். பின் வேகமாக கதவை திறந்து வெளியேறி கீழே தன் தந்தையிடம் விரைந்தாள்.

" டாட்....." என்ற கூவிக்கொண்டு வந்த மதுவை அங்குள்ளோர் அனைவரும் விசித்திரமாக பார்த்தனர்.அவர்களின் பார்வை மதுவை காயப்படுத்த அமைதியானாள்.

மதுவின் குரல் கேட்டு அங்கு வந்த அவள் தந்தை நிமிடத்திற்குள் சூழ்நிலை புரிய,"வாமா....," என்று வாஞ்சையுடன் அவளை அழைத்து அவரது அறைக்குள். சென்றார்.

அவள் அருந்த சிறிது தண்ணீர் கொடுத்தவர்," ஏன் மா இவ்வளவு டென்ஷன் ஆகுற கொஞ்சம் நிதானம்.."

" எப்படி டாட் நிதானமா செயல்படனும் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆனது 2015 ல இன்னைக்கு வருஷம்  2019 என் வாழ்க்கையில நாலு வருஷம் என்னாச்சுனே எனக்கு தெரியலை எப்படி நிதானமா இருக்கிறது."

" ஷ்....நீ தைரியமான பொண்ணு நீ இப்படி கலங்கலாமா சொல்லு??"

" ஆமா டாட் நான் தைரியமான பொண்ணுதான் இப்பவாச்சும் என்னாச்சுனு சொல்றீங்களா?"

" நீ பயப்படுற மாதிரி ஒன்னும் ஆகலைமா அந்த ஆக்ஸிடென்ட்ல உனக்கு பழசெல்லாம் மறந்திடுச்சு அவ்ளோதான்."

" இல்லை டாட் நீங்க என்கிட்ட எதையோ மறைக்கறீங்கனு எனக்கு தோனுது."

"உன்கிட்ட மறைக்க ஒன்னும் இல்லைடா உனக்கு பழசெல்லாம் மறந்துபோச்சு அதனால உனக்கு உன் கூட படிச்சவங்க பழகுனவங்க யாரையும் அடையாளம் தெரியலை ஏன் எங்களையே உனக்கு அடையாளம் தெரியல்லை அதனால கோயமுத்தூர்ல இருந்தா உன் மனசு ரொம்ப பாதிக்கும்னு நான் நம்ம குடும்பத்தை இங்க ஷிப்ட் பண்ணிட்டேன் அவ்ளோதான்."

" சரி டாட் நீங்க சொல்றதெல்லாம் நான் நம்புறேன் .எனக்கு எதுக்கு அவசரமா கல்யாணம் பண்ணி வெச்சீங்க??"

" அது.... வந்து....."

" ஏன் டாட் தயங்குறீங்க??

" ஏன்ங்க தயங்குறீங்க சொல்ல வேண்டியதுதானே," என்றவாறு உள் நுழைந்தார்  மதுவின் அன்னை.

" என்ன மாம் சொல்ல சொல்றீங்க?"

"உனக்கு நடந்த கல்யாணத்தை பத்தி இப்ப நீ யோசிக்காத டாக்டர் என்ன சொல்லிருக்காரு மறந்துட்டியா ," என அவர் கூற மதுவின் மனதில் அவள் மருத்துவமனையை விட்டு வெளியே வரும்பொழுது அவளை அழைத்த டாக்டர் கூறிய நினைவில் ஆடியது," மிஸஸ் மது உங்களுக்கு தலையில அடிபட்டு உங்க நினைவுகள் பாதிக்கப்பட்டிருக்கு நீங்க கொஞ்ச நாள் ஸ்ரெயின் பண்ணிக்காதீங்க மனசு ஒரு கண்ணாடி பெட்டகம் அத கஷ்டப்படுத்தாதீங்க உங்களுக்கு நாலு வருஷமா நடந்தது நினைவில்லைனு வருத்தப்பட்டு இப்போ உள்ள நிம்மதியை கெடுத்துக்காதீங்க,அதுமட்டுமில்லை அது உங்க ஹெல்துக்கு நல்லது இல்லை. டேக் கேர்," இதுவே அந்த டாக்டரின் வாக்கியம் .

ஒரு பெருமூச்சு விட்டவள்," என்னால முடியலையே மாம், ஏற்கனவே நான் பழகுனவங்க யாரு என் எதிரி யாருனு என்னால பிரிச்சு பார்க்க முடியலையே,"என கலங்கிய தன் மகளை தன்னோடு அனைத்துக்கொண்ட அந்த தாய்,"  வாழ்கையில நடக்குறது எதுவும் நம்ம கையில இல்லை தண்ணீரோட சேர்ந்த போகிற படகு மாதிரி வாழ்க்கையோட ஓட்டத்துக்கு நம்ம போய்தான் ஆகனும்.இதுதான் நிதர்சனம்னு புரிஞ்சிக்கிட்டனா எதுவும் சிரமமா இருக்காது," என அறிவுரை கூறியவர்," எங்க வெளிய கிளம்பிட்ட?"என வினவினார்.

" எனக்கு போட்டுக்கிற நல்ல ட்ரெஸ் இல்லை மொபைல் இல்லை அதான் பர்சேஸ் பண்ணலாம்னு கிளம்புனேன் மாம், ஆமா வேர் இஸ் மை கார்??"

" அன்னைக்கு நடந்த ஆக்ஸிடென்ட்ல அது ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு அதனால அதை சேல் பண்ணிடேன்டா," என்ற தன் தந்தையை இயலாமையுடன் பார்த்த மது ,"வேறு என்னலாம் பண்ணிருக்கீங்கனு மொத்தமா சொல்லிடுங்க டாட் எல்லா அதிர்ச்சியும் ஒரேதான் தாங்கிக்கறேன்,"என்று கூறி மீண்டும் அங்கிருந்த சோஃபாவில் தள்ளாடி அமர்ந்தாள்.

"ஒரு காரை மாத்துனதுக்கே இவ்ளோ ஃபீல் பண்றாளே இன்னும் நடந்தது எல்லாம் தெரிஞ்சா என்னா ஆகுமோ ,"என்று அந்த இருவரும் மனதால் சோர்ந்து போயினர்.

அங்கே நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக திடீரென நினைவுவந்தவள் போல," டாட் அப்ப என் ஸ்டடீஸ்??அது என்னாச்சு நான் என் கோர்ஸ் கம்ளீட் பண்ணி ஒன் இயர் ஆகியிருக்கனுமே??" என்று எதிர்பார்புடன் தன் தந்தையை நோக்க அவரோ அவளது கண்களை சந்திக்கும் தைரியமின்றி வேறுபுறம் திரும்பியவாறு," உன்னோட இன்டீரியல் டிசைன் கோர்ஸ் முடிஞ்சிடுச்சு நீ கேம்பஸ்லயும் செலக்ட் ஆகிட்ட ." என்றவரை கொலைவெறியுடன் பார்த்த மது," என்னோடு கனவு லட்சியம் எல்லாம் பிசினஸ்தானு தெரிஞ்சும் ஏன்பா என் வாழ்க்கையை நாசம் பண்ணீங்க??"

இவ்வாறு கேட்ட மது நீண்ட மூச்சுகள் எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ," சரி இந்த நாலு வருஷம் நான் உபயோகிச்ச வண்டி எது அதோட சாவி கொடுங்க நான் வெளிய போய்ட்டு வந்திடறேன் ,"

" மது இது உனக்கு புது இடம் டிரைவர் கூட ,"

" மாம் ப்ளீஸ் எனக்கு மூச்சு முட்டுது என்னை தனியா விடுங்க," என்று கூறி தந்தையிடம் ஏடிஎம் கார்டையும்  தான் உபயோகித்த ஸ்கூட்டியின் சாவியையும்  அலட்சியத்துடன் வாங்கியவள் அந்த அறையை விட்டு வேகமாக விரைந்தாள்.

புபலடித்து ஓய்ந்தது போல அந்த இடம் அமைதியாக இருந்தது.

" ஏன்ங்க இப்ப என்ன செய்யறது? அவ இவ்வளவு கேள்வி கேட்குறாளே?"

" ம்....என்ன செய்யுறது இந்த நிலையை சந்திச்சு தான் ஆகனும் அவளோட கேள்விகள்ல இருந்து  நம்ம ஓடி ஒளிய முடியாது , ஆனால் ஒன்னுமட்டும் நியாபகம் வச்சுக்கோ எக்காரணத்தை கொண்டும் உண்மையை அவ தெரிஞ்சுக்கக்கூடாது , அவ எந்த அளவு தைரியமான பொண்ணோ அதே அளவு சென்சிடிவ் கூட. இப்போ அவளோட மறதியால தான் நம்ம ஊர்விட்டு ஊர்வந்து வாழறோம்னே அவ நினைக்கிறா அது அப்படியே இருக்கட்டும்.உனக்கும் எனக்கும் தெரிஞ்ச விஷயம் ரகசியமாவே இருக்கட்டும்," என்று அவர் கூற அதை ஆமோதிப்பது போல அவரது மனைவி தலையாட்டினார்.

எதையோ கேட்கவேண்டும் என்று உள்ளே நுழைந்த மது அவள் தந்தை கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் இறுகிய மனதுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

Continue Reading

You'll Also Like

250K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
40.8K 1.7K 22
கணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
11.9K 725 21
#2 07.10.2017 #3 06.10.2017 #4 in non fiction story about ..... senior junior and teacher student . idu different story teacher and student...