😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

மீண்டும் மீண்டும்

1.8K 97 11
By creativeAfsha

தன் மகளை குறித்து கவலை கொண்ட அந்த தாய் கண்கள் மூடி இறைவனை பிராத்திக்க தொடங்கினார். ஏதோ ஒரு வித முனகல் சத்தம் அவரது செவியை எட்ட அவசரமாக கண் திறந்து பார்த்தவரால் தன் மகளின் இதழ்கள் லேசாக அசைவதை உணரமுடிந்தது கூடவே  மெல்லிய முனகல் சத்தமும் கேட்டது. சந்தோஷம் கொண்டவராக  வேகமாக தன் மகளின் அருகே சென்றவர் மெதுவாக அவளின் செவிகளில் பேசலானார்," அம்மாடி....எந்திரிமா...உனக்கு ஒன்னுமில்லை கண்ணு திறந்து பாருமா நாங்களாம் ரொம்ப பயந்து போயிருக்கோம்," என்றுரைத்தார்.

அவரது பயம் கலந்த அக்கரை புரிந்தோ என்னவோ மது மெதுவாக தன் கண்களை திறந்து அந்த அறையை ஆராயத்துவங்கினாள்.அவள் கண்களில் வேதனையைவிட குழப்பம் மேலோங்கி இருக்க அதை புரிந்து கொண்ட அந்த தாய் ," என்னாச்சுடா..ஏன் அப்படி பார்குற?" என்று வினவ அதற்கு மதுவோ," என் மேல இவ்வளவு கரிசனம் காட்டுர நீங்க யாரு என்னை ஏன் இங்க கொண்டு வந்திருக்கீங்க??இது என்ன இடம்," என்று கேள்விகள் கேட்க துவங்க  அந்த தாயும் அதே நேரத்தில் மருத்துவருடன் உள்ளே நுழைந்த அவளது தந்தையும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெற்றோர் ஏதும் கூறும் முன் மருத்துவரோ," ஹலோ மிஸ்....குட் மார்னிங் ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்க கண்ண மூடி நல்லா ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு மயக்கமருந்து கொடுத்திருக்கிறதனால அப்படி தோணுது," என்று கூறியவர் அந்த பெற்றோர் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

அந்த அறைவாயிலை பார்த்தபடியே நின்றிருந்த ஆதித்யன் அவர்கள் மூவரும் பதட்டத்துடனும் குழப்பத்துடனும் வெளியேறுவதை பார்த்து அவர்களை பின்தொடரலானான்.அவர்கள் மூவரும் ஒர் இடத்தில் நிற்க அவர்களின் சம்பாஷனைகள் கேட்கும் தொலைவு நின்றவன் அவர்கள் அறியாமல் அவர்களை கவனித்தான்.

அமைதியாக தன்னை நோக்கி நின்றிருந்த அந்த பெற்றோரை பார்த்தவர் மருத்துவர்," அவங்களுக்கு பழைய விஷயம் எதுவும் ஞாபகத்தில இல்லை, ,அதுக்கு காரணம் அவங்க பின்தலையில நல்லா அடி பட்டிருக்கு அதனால ஏற்பட்ட பாதிப்பா இருக்கலாம்," என்று கூறி முடிக்க ," என்ன சொல்றீங்க டாக்டர்? அப்போ எங்களை கூட மறந்திடுவாளா?" என்று பதட்டத்துடன் வினவினார் அவளின் தாய்.

ஞாபக மறதில நிறைய வகைகள் இருக்கு சிலருக்கு மொத்தமா எல்லாமே மறந்திடும், சிலருக்கு ஆக்ஸிடென்ட் இல்லை அந்த தலைகாயம் ஏற்பட்ட சம்பவம் மட்டும் மறக்கும் இன்னும் சிலருக்கு புது விஷயங்களை கிரகிக்க முடியாது பழைய விஷயங்கள் அவங்க மனசுல இருக்கும், இப்போ காலையில சாப்பிடுஇருப்பாங்க ஆனால் சாப்டோமா இல்லையா னு மறந்திடுவாங்க ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் ஞாபகம் இருக்கும், இதுல உங்க மகளுக்கு ஏற்பட்ட விஷயம் என்ன? அப்படீனு தெரியனும்னா நம்ம ஸ்கேன் பண்ணி தான் பார்கனும்," என்று கூறி ஆராயும் விதத்தில் அவர்களை பார்தார்.

" நீங்க என்ன என்னமோ சொல்றீங்க டாக்டர் எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு," என்று கவலை தோய்ந்த குரலில் முடித்தார் தந்தை.

" ம்....பயப்பட ஒன்னுமில்லை மெடிக்கல் சையின்ஸ் எவ்வளவோ முன்னேற்றம் அடைஞ்சிருக்கு அதனால எல்லாத்துக்கும் சொலூஷன் இருக்கு," என்று கூறியவர்  மேலும் ," சரி அந்த ஸ்கேன் எடுக்க ஏற்பாடு பண்றேன் அதுவரை நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசுங்க அவங்களுக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேணாம்," என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

அவர் கண்களில் படாமல் அப்புறம் நகர்ந்த ஆதித்யன் தன் நண்பனிடம் விஷயத்தை கூற விரைந்தான்.

மது வின் அன்னையோ அவளின் அருகே சென்று கவலையுடன் அமர்ந்தார்.

********

கடந்த கால நினைவில் மூழ்கியிருந்த மதுவின் அன்னையை சுயநினைவடைய செய்தது உள்ளே கேட்ட பேச்சுக்குரல்.

" அப்பா அக்காக்கு இப்ப எப்படி இருக்கு?"

" இன்னும் முழுசா தெரியலடா அவ கண்ணு முழிச்சா தான் எதுவும் சொல்ல முடியும்."

" நம்ம பாட்டிகிட்ட சொல்ல வேணாமா?"

" அந்த தப்ப மட்டும் நான் திரும்ப செய்யவே மாட்டேன்.இங்க நடக்குற எதுவும் அவங்களுங்கு தெரிய வேணாம் ," என்று இதுவரை குரலில் இருந்த கவலை மாறி கண்டிப்புடன் கூறினார் மதுவின் தந்தை.

அனைவரையும் கவலையில் ஆழ்த்தியிருந்த மதுவோ மெதுவாக கண்கள் திறந்து நோக்கினாள்.தன்னை சுற்றி தன் குடும்பத்தினரை கண்டவள் முகத்தில் புன்சிர்ப்புடன்," ஹாய்...என்ன எல்லோரும் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க எனக்கு ஒன்னுமில்லை ஜஸ்ட் ரிலாக்ஸ் கைஸ்.டாட் நீங்க மதியையும் சேர்த்து பயமுறுத்தறீங்க, ஜஸ்ட் சில் டாட்,"என கூறியவளை கண்ட அம்மூவரது முகமும் அப்பட்டமாக கவலையை வெளிக்காட்டியது.

அவர்களை கவனியாத மது
தன்னை சுற்றி நோக்கினாள் தன் கைகளில் சலைன் ஏறிக்கொண்டிருக்க  தலையில் கட்டுபோடப்பட்டிருந்தது.   தன் படுக்கையை விட்டு எழ முயற்சித்தவளை தடுத்த அவளது தாய்," மது மெதுவா டா பார்த்து என்று பதற,"தன் தாயை விசித்திரமாக பார்த்தவள்," மாம் ஏன் என்னை அந்த பேர்ல கூப்படறீங்க நான் மஹா தானே," என்று கூறி  தன் பெற்றோர் மற்றும் தங்கையை சந்தேகத்துடன் நோக்க அவர்களுக்குள் நடந்த  ரகசிய கண் சமிஞ்சை  கண்டுகொண்டாள்.நிமிடத்திற்குள் அவளது மூளை ஏதோ தவறு இருப்பதாக உணர்த்த ," எங்கிட்ட எதுவும் மறைக்கறீங்களா??எனக்கு என்னாச்சு ?  கார் வேகமா போய் கவிழ்ந்தது மட்டும்தான் என் நினைவில இருக்கு , எனக்கு என்னாச்சு ," என்று கேட்டுக்கொண்டே தன்னை நோக்க கசக்கிய சில்க் காட்டன் சேலையின் வெளியே தெங்கிக்கொண்டிருந்தது தங்கத்தினாலான தாலி.

தன் கழுத்தில் தொங்கிய தாலியை வெறித்து பார்த்தவள் பேச்சற்று அனைவரையும் நிமிர்ந்து நோக்க அவர்களும் சொல்வதறியாத திணறியதை நொடியில் யூகித்தவள் மீண்டும் எதுவும் பேசாத கண்களை மூடிக்கொண்டாள்.

தன் மகளின் அருகே சென்ற அந்த தாய்," எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதடா கண்ணை மூடி அமைதியா படுத்துக்கோ , எல்லாம் சரியாகிடும்."

" அம்மா ப்ளீஸ் எனக்கு என்னாச்சு எப்போ கல்யாணம் ஆச்சு எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை என் ஹஸ்பன்ட் யாரு??" என பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக அதே கேள்விகள் தான் தங்களையும் வதைக்கிறது அவற்றிற்கான விடைதான் மர்மமாக உள்ளது என்பதை கூற முடியாத அந்த தாய் மனம் கண்ணீர் சிந்த அவரின் கைகளோ ஆதரவாக மதுவை தன்னுடன்  அனைத்துக்கொண்டது.



Continue Reading

You'll Also Like

149K 5.4K 36
No1 : 29.4.2018 to 2.5.2018😍 hiii friends..!! ? This is my first story ... ? wattpad la stories read panna start pannathuku aprm nammalum eluthala...
97.9K 509 3
Removed for book publishing. No.#1 in Non-Fiction From [23|12|17 to 02|01|2018] [04|01|18 to 11|01|18] [13|01|18 to 22|01|18] [24|01|18 to 04|02|18]...
88.3K 2.7K 16
ஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி...
255K 8.9K 39
அவள் புரியாத புதிர்