😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

மருத்துவமனை

2.3K 95 33
By creativeAfsha

மருத்துவரை பின்தொடர்ந்து மனதில் சொல்லொன்னா துயரத்துடன் மதுமிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கி சென்றனர் அந்த பெற்றோர்கள் மதுவின் அறை வாசலில் வெள்ளை சீறுடை அணிந்த ஒருவன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து மனதில் மருத்துவரின் அக்கறையை எண்ணி சிறு ஆறுதல் கொண்டனர்.

" என்ன காளி யாரும் உள்ள போக அனுமதி கேட்டாங்களா??"

" அது...... இல்.... லை...ங்க... ஐயா யா...ரும் உள்..ளே... போகலை , எப்..படி இந்த காளியை தாண்டி..... யாரும் போயிடமுடியுமா..என்ன??"என்று கூறினான்.அவன் கண்களில் இருந்த கள்ளத்தனத்தையும் வார்த்தைகளிலிருந்த தடுமாற்றத்தையும் கண்டுகொள்ள அவர் காவல்அதிகாரி அல்லவே ஆகையால் அவனை கடந்து உள்ளே நுழைந்தார்.

அவரது பின்னே வந்த மதுவின் அன்னை தன் மகளை நெருங்கி அவள் தலையை கோதியவர் கைகள் நடுங்கியது அதே நடுக்கத்துடன் தன் கணவரை பார்க்க அவரோ மதுமிதாவின் பரிசோதனை பதிவை பார்த்துக்கொண்டிருந்த மருத்துவரின் அருகே கவலையுடன் நின்றுகொண்டிருந்தார்.

" என்னங்க....இங்க கொஞ்சம் வாங்களே..." குரல் நடுங்க அழைத்தார்.

" என்னாச்சுமா??"அவர் கேள்விக்கு பதில் கூறாமல் மதுவை நோக்கினார். தன் மனைவியின் கண்கள் போன திசையில் பார்த்த அவர் அதிர்ந்தார்.

இவர்கள் இருவரின் சம்பாஷனைகளையும் கேளாமல் கேட்டுக்கொண்டிருநாத மருத்துவரோ,"என்னாச்சு??எதாவது பிரச்சனையா??"

" டாக்டர் மதுவோட கழுத்தில தாலி இருக்கு," அதற்கு மேல் கூற முடியாமல் மதுவின் தாய் கண்ணீர் வடிக்க தொடங்கினார்.

" என்ன சொல்றீங்க? இது எப்படி சாத்தியம்??" அதிர்ச்சியுடன் அவர் மதுவை நோக்க அங்கே அவளோ அழகு தேவதையென கண்கள் மூடி கழுத்தில் தங்கத்தாலான புதிய தாலி மின்ன முகத்தில் புன்சிரிப்புடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

அப்பொழுது உள்ளே நுழைந்த செவிலியரை பார்த்தவர்," சிஸ்டர்...இவ்வளவு நேரம் நீங்க இங்க இல்லையா??"

"இல்லை டாக்டர் உங்க ரூம்ல இருந்து நேரா ஹெட்நர்ஸ பார்க்க போய்டு இப்பதான் வரேன்,என்னாச்சு??"என்றுவினவியபடியே மதுவை நோக்கியவர்," இவங்க கழுத்தில எப்படி தாலி வந்துச்சு ? நான் இதை அவங்க ஹஸ்பன்ட் கிட்டதானனே கொடுத்தேன்," என்ற கேள்வியுடன் அங்கு நின்றிருந்த அனைவரையும் பார்தார்.

" அதை தான் நானும் கேட்கிறேன், உள்ள வந்து ஒருத்தன் தாலி கட்டிட்டு போயிருக்கான் ஆனால் உங்க யாருக்கும் எதுவும் தெரியலை," என்று கோபத்தில் கத்தியவர் மதுவின் தந்தையிடம்," சாரி மிஸ்டர் ......?"

"மிஸ்டர் சௌந்தரன்,"

"ம்..எஸ் சாரி நான் மறந்துட்டேன், சாரி மிஸ்டர் சௌந்தரன், எங்க பக்கம் கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டோம், நான் என்ன னு விசாரிக்கறேன்," என்று கூறியவரை இடைமறித்த மதுவின் தந்தையோ," தப்பு உங்க மேல இல்லை டாக்டர் நீங்க சாரிலாம் கேட்க வேண்டாம், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் எங்க பொண்ணும் அவளை சரியா கவனிக்காத நாங்களும் தான்,"என்று கூறினார்.

" ம்...நான் என்னனு விசாரிக்கிறேன் சார் எதுக்கும் நீங்க யாராவது இவங்க பக்கத்திலயே இருங்க ," என்று கூறிவிட்டு செவிலியரிடம்," நீ..காளியை கூட்டிட்டு வந்து என்னை பாரு,"என்று அவருக்கு மட்டும் புரியும்படி கர்ஜித்துவிட்டு சென்றார்.

மருத்துவர் வெளியேற காத்திருந்தது போல மது மெதுவாக கண்களை திறந்து தன் தாயை நோக்கினாள்," ஹேய்...மாம்... எனக்கு ரொம்ப ஹெட்ஏக்கா (headache)இருக்கு ??வாட்ஸ் ஹாப்பனிங்(happening)??"என்று தன் தாயை பார்த்தபடி வினவ அவரோ மது அறியாவண்ணம் தன் கண்ணீரை புடவையால் வேகமாக துடைத்துவிட்டு," ஒன்னுமில்லை மா தலையில அடி பட்டதால அப்படி இருக்கும் உனக்கு நல்லா ரெஸ்ட் வேணும்னு டாக்டர் உனக்கு கொடுத்த மாத்திரைல நல்லா தூக்கம் வரும் அதனால உனக்கு அப்படி தோணுது நீ கண்ண மூடி படுத்துக்கோ," என்று விட்டு அவளின் தலையை கோதிவிட்டார்.

மதுவும் மறுப்பு எதுவும் கூறாமல் தன் கண்களை மூடி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

" என்னங்க மது இன்னும் மயக்கத்தில இருக்கிறதால பிரச்சனை இல்லை ஆனால் அவளுக்கு மயக்கம் தெளிஞ்சா என்ன நடக்குமோனு நினைச்சு என் மனசு இப்பவே அடிச்சுக்குது," என்று புலம்ப ," சரசு மனச போட்டு குழப்பிக்காத இப்படி ஒரு நாள் வரும்னு நமக்கு ஏற்கனவே தெரியும்தானே , என்ன ஒன்னு நம்ம எதிர்பார்த்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நான் நினைக்கல," அவரது கணவன் அவருககு ஆறுதல் கூறினார்.

" ஆமாங்க நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஏற்கனவே நாம பயந்துகிட்டுதான் இருந்தோம் ஆனால் நிலைமை அதை.விட.மோசமாதான் ஆகியிருக்கு, இப்ப அவ கழுத்தில தாலியும் சேர்த்து பிரச்சனை பெரிசா வெடிக்கும்னு என் உள்மனசு சொல்லுதுங்க ."

" என்ன சரசு நீ?மனச தளரவிடளாமா என்னோட தைரியமே நீதான் நீயே சோர்ந்து போய்டா எப்படி நடந்தது எல்லாமே நல்லதுக்கேனு நினைச்சுக்கோ, நம்ம சின்ன பொண்ணுக்கு இன்னும் விஷயம் தெரியாது நான் போய் அவகிட்ட பேசிட்டு வந்திடறேன் நீ மது பக்கத்தில இருந்து அவளை பார்த்துக்க," என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.

தன் மகளுடன் தனியே விடப்பட்ட அந்த தாயின் நினைவுகள் நான்கு வருடங்களுக்கு பின்னோக்கி சென்றது.

அன்றும் கோவை மருத்துவமனையில் இதே போல தலையில் பெரிய கட்டுடன் சோர்வாக படுத்திறந்த தன் மகளின் அருகே அவர் அமர்ந்திருந்தார்.சூழல் ஒன்றுபோல இருந்தாலும் மனநிலை முற்றிலும் மாறாக இருந்தது, இன்று அவள் கண்கள் திறந்தாள் என்ன நடக்குமோ என்ற பதட்டம் இருக்க அன்றோ அவள் கண்கள் எப்பொழுதும் திறக்கும் என்ற எதிர்பார்பில் அவர் இருந்தார்.

******
தன் நண்பனை கூட்டிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ஆதித்யன் தனது நினைவுகளில் மூழ்கி இருந்தான்.அவனை சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தது போல அவன் செல்பேசி அழைக்க அதில் தெளிந்தவன் தன்னை அழைத்தது யாரென்று பார்க்க அதில் மின்னிய ஜீவாவின் பெயரை கண்டு குழம்பி தன் அருகே நோக்க அங்கே அவனை எரிக்கும் பார்வையுடன் அவன் அருகே ஜீவா நின்றுகொண்டிருந்தான்.

" இங்க தானே நிக்கிர அப்பறம் ஏன்டா கால் பண்ற கூப்டா நான் ஏன்னு கேட்க மாட்டேனா???"

" ஆமாங்க சார் கிட்டதட்ட பத்து நிமிஷமா உன்ன கூப்டு நான் சோர்ந்து போயிட்டேன் பசி.வேற வயித்த கிள்ளுது உன் மனசோட நீ சாவகாசமா பேசிக்கோ கொஞ்சம் வந்து என் வயித்துக்கு தீனி போடு," என்று அவனை அழைக்க ," கொஞ்சம் கூட மனசாட்சி யே இல்லையாடா உனக்கு நண்பன் இப்படி உடஞ்சுபோயிருக்கானே என்னாச்சுனு கேட்க தோனுதா?என்னைவிட பசிதான் முக்கியமா போச்சா உனக்கு."

" என்னது உடஞ்சு போயிட்டியா? நல்லாதானேடா இருக்க , வயிற்றுக்கு உணவு இல்லாதபோது சிறிது செவிக்கும் ஈயப்படும் அப்படீனு வள்ளுவரே சொல்லிருக்காரு, அதனால முதல்ல போய் சாப்பிட்டுடு , உடஞ்சுபோயிருக்குற உன்னை ஃபெவிகுவிக் போட்டு ஒட்டவச்சு அப்பறம் நீ சொல்றத கதையெல்லாம் கேட்குறேன் சரியா??" என்று கூறி நிறுத்தியவன் பின் ஏதோ நினைவு வந்தவனாக ," ஆமா உடஞ்சுபோயிருக்கனா சாப்பிடற சாப்பாடெல்லாம் வெளிய கொட்டிடுமே அப்ப ஒன்னு செய்வோம் முதல்ல ஃபெவிகுவிக் போட்டு ஒட்டிட்டு அப்பறமா சாப்பாடளாம் சரியா," கேள்வியும் நானே பதிலும் நானே என்பதுபோல கூறயவன் கோபத்தில் கொதிக்கும் ஆதித்யனை இழுத்துக்கொண்டு அந்த மருத்துவமனை வளாகத்தை விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் வெளியேறினான்.

இரு சக்கர வாகனம் முன்னே செல்ல ஆதித்யனின் நினைவுகளோ நான்கு வருடங்கள் பின்னோக்கி சென்றது.

நான்கு வருடங்களுக்கு முன்பு

தனது மேற்படிப்பை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான கோவைக்கு தன் குடும்பத்தினரை காண ஆவலுடன் விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு தன் நண்பனுடன் பயணித்துக் கொண்டிருந்தான்.

" என்ன மாப்பிள்ளை அமைதியா வர ஊரெல்லாம் எப்படி இருக்கு ? என்ன யோசனை?"

" ஒன்னுமில்லை டா நான் போய் திடீருனு நின்னா வீட்டில எல்லோரும் எவ்ளோ சந்தோஷப்படுவாங்க?அப்படீனு நினைச்சிக்கிட்டே வந்தேன்,"

" சே..இவ்ளோதானா நான் கூட உன் காதலியோட நினைப்பில வர்றேனு நினைச்சேன்,"

" உனக்கு எப்பவுமே இதே நினைப்பாடா?"

"நீதானேடா சொன்ன ஒரு பொண்ண பார்தேன் பார்ததுமே மயங்கிட்டேனே,"

".....ம்...ஆமாடா அவளை ஒரு பத்துநிமிஷம் தான் பார்த்திருப்பேன் மனசுல அப்படியே பதிஞ்சிட்டா ,"என்று கூறியவனை இடைமறித்த அவன் நண்பன்," அதுக்கப்பறம் அவளை நீ பார்க்கலையா??"என்று வினவ,ஒரு பெருமூச்சுடன் ," இல்லைடா ஒரு வருஷமா அவளை தேடுறேன் என் கண்ணுல அவ அதுக்கப்பறம் படவே இல்லை ,இப்ப எங்க எப்படி இருக்காளோ தெரியலை,"என்று அவன் கூறி முடிக்கவும் அவன் நண்பன் ஷங்கர் சடன் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது.

" என்னாச்சுடா??"

" தெரியலை ஏதோ கூட்டமா இருக்கு ,நீ இரு நான் போய் பார்த்திட்டு வரேன்," என்று இறங்கியனினை தடுத்தவன் ," நீ இரு டா நான் போறேன்,"என்று கூறி வண்டியை விட்டு கீழே இறங்கி அங்கு கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சென்றான் ஆதித்யன்.

அங்கே அவன் கண்டதோ ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த தன்னவளை," என்னாச்சு யாராவது ஆம்புலன்ஸ் க்கு கால் பண்ணுங்க," என்று அவன் கூற ," தம்பி கால் பண்ணோம் தம்பி மொத்தம் மூனு பேருக்கு அடி அதனால அந்த ரெண்டு பேரை கூட்டிட்டு போயிருக்காங்க ,"என்று முடித்தவரை கொலை வெறியுடன் பார்த்தவன் வேகமாக தன் நண்பனின் உதவியுடன் அவளை மருத்துவமனையில் சேர்த்தான் அந்த பதட்டத்திலும் அவளின் அருகே சிதறியிருந்த அவள் பர்ஸை எடுக்க அவன் மறக்கவில்லை.

மருத்துவமனையில் ஒரு சிறு போராட்டத்திற்கு பிறகே அவளை அனுமதித்துக்கொண்டனர்.அவளுக்கு உள்ளே சிகிச்சை நடந்துகொண்டிருந்த வேளையில் ஒரு செவிலியர் அவன் அருகே வந்து," சார் பேஷன்டோட டீடெய்ல்ஸ் லாம் ஃபில் பண்ணி ரிசப்ஷன்ல பணம் கட்டிருங்க," என்று கூற அப்பொழுது தான் நினைவு வந்தவனாக அவளது பர்ஸை ஆராய்ந்தான்,அதில் ஒரு விசிட்டிங் கார்டும் சிறு பணமும் இருக்க அதில் உள்ள தொலைபேசி எண்ணில் அழைக்க எண்ணி தன் மொபைலை எடுத்தவனுக்கு அப்பொழுது தான் தன்னிடம் சென்னை சிம் இல்லாதது  அப்பொழுது தான் நினைவு வர தன் நண்பனை.அழைத்தான்.

" என்னடா ஆச்சு ?"

" இல்ல அந்த பொண்ணோட வீட்ல.சொல்லலாம்னு பார்தேன் என்கிட்ட  லோகல் சிம்  இல்லை ,"

" உனக்கு தெரிஞ்ச பொண்ணா ஆதி அது?"

"நான் சொல்லல ஊர்ல மெட்ரோல பார்த்த பொண்ணு,"

" அந்த பொண்ணா இவங்க?"

"ஆமா அவளை நான் இங்க இந்த நிலையில பார்பேனு நினைச்சு கூட பார்கலை, சரி உன் மொபைல குடு," என்றவன் அவனிடமிருந்து மொபைலை வாங்கி அதிலுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினான்.பின் ரிசப்ஷனிற்கு சென்றவன் முன்தொகையை கட்டிவிட்டு வருகையில் அந்த பெண் அனுமதிக்கப்படிருந்த அறையிலிருந்து மருத்துவர் வெளியே வருவதை பார்த்தவன் அவரிடம் விரைந்தான்.

" டாக்டர் அவங்களுக்கு இப்ப எப்படி இருக்கு??

" நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?"

" நான்தான் இங்க கொண்டுவந்து சேர்த்தேன் மத்தபடி அவங்களை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது டாக்டர்."

" ஓ...குட் நல்ல நேர்த்தில கொண்டுவ்நதீங்க பின்தலையில நல்ல அடி ரத்தம் நிறைய போயிருக்கு கொஞ்சம் க்ரிடிகல் தான் இப்பதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும் நினைவு வந்ததுக்கு அப்பறம் தான் அவங்களோட நிலை என்னனு சரியா சொல்ல முடியும் ," என்று கூறியவர் நில்லாமல் மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

தன் மனதில் பெரிய துயரம் அப்பியது போல உணர்ந்தவன் சோர்வாக சென்று அமர்ந்துகொணடான்.அவன் அருகே அமர்ந்த ஷங்கர் அவன் கைகளை பிடித்து தைரியம் கூறினான்.

சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயதுடைய மனிதரும் பெண்ணும் பதட்டத்துடன் உள்ளே வர அவர்கள் தன்னை பார்காத வண்ணம் மறைததுகொண்ட ஆதி ஷங்கரிடம்," ஷங்கர் அவங்க பொண்ண காப்பாதினது நீ னு அவங்க நினைக்கட்டும் என்னை பத்தி எதுவும் சொல்லிடாத காரணம் என்னனு உங்கிட்ட அப்பறமா சொல்றேன்,"என்று கூறியவன் அங்கே வேறு ஒருவன் போல அமர்ந்து நடப்பதை பார்க்கலானான்.

உள்ளே வந்த அந்த இருவரில் அந்த மனிதர் தன் போனை எடுத்து அதிலுள்ள ஷங்கரின் எண்ணை அழைக்க அவர் முன்னே வந்தவன்," சார் நான்தான் கால் பண்ணேன்.உங்க பொண்ணு உள்ளதான் இருக்காங்க போய் பாருங்க," என்று கூற அந்த பெண் வேகமாக உள்ளே சென்றார் அந்த மனிதரோ ஷங்கரின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு ," தம்பி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை," என்க ," அட சார் அதெல்லாம் அப்பறமா வெச்சுகளாம் நீங்க போய் உங்க பொண்ண பாருங்க ," என்று கூறி அவரையும் உள்ளே அனுப்பினான்.

உள்ளே சென்றவர்கள் தங்களது மகளை கண்டு மிகுந்த வேதனை அடைந்தனர் .தன் மனைவியை நோக்கிய அந்த மனிதர்," சரசு நீ இங்கயே இரு நான் போய் டாக்டர் கிட்ட கேட்டுட்டு வரேன்," என்று கூறி சென்றார்.

தன் மகளுடன் தனியே விடப்பட்ட அந்த தாயின் மனம் தன் மகளுக்காக கண்ணீருடன் இறைவனை பிராத்தனை செய்ய துவங்கியது.அவரது பிரார்த்தனையை செவிமடுத்தது போல அவரது மகள் கண் திறந்தாள்.திறந்தவள் கேட்ட முதல் கேள்வி அவள் அருகே அமர்ந்திருந்த தாயையும் அப்பொழுதுதான் மருத்துவருடன் உள்ளே நுழைந்த தந்தையையும் அதிர்ச்சி கடலில் மூழ்க செய்தது.

Continue Reading

You'll Also Like

68.5K 6.1K 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும்...
69.3K 2.7K 46
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
28K 1.2K 48
உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை இதுல காதல் நிச்சயம் இருக்கும் போக போக கதை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும்
202K 9.2K 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம்...