😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

நலமறிதல்

2.3K 99 56
By creativeAfsha

தன்னை நோக்கி வந்த அந்த இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ஆதித்யன் தன் கைமீறி காரியங்கள் சென்றுவிட்டதை உணர்ந்து அமைதியாக நின்றான்.

அந்த இருவரில் ஒருவர்," ஏன் ஆதித்யா...எதையும் எடுத்தோம் கவிழ்தோம் னு முடிவு எடுக்காத னு உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?? நீ என்ன பண்ணி வெச்சிருக்க னு உனக்கு தெரியுதா??"என்று குரலில் கோபமும் அதைவிட ஆதங்கமும் மேலிட கூற அவரை நிமிர்ந்து பார்த்த ஆதித்யனோ," நான் செஞ்சது தப்பும் இல்லை, அதை நினைச்சு நான் வருத்தப்படவும் இல்லை, இது ஒரு விபத்து அவ்வளவு தான், நீங்க இந்த சின்ன விஷயத்தை ஊதி பெரிசாக்காதீங்க, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என் வாழ்க்கையை நானே பார்த்துக்கிறேன், நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க," என்று உணர்ச்சியற்ற  குரலில் கூறி
முடித்து நிலாவை தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

இதற்கு மேல் என்ன பேசினாலும் அவன் கேட்கமாட்டான் என்பதை உணர்ந்தவர் போல அந்த இரண்டாமவர்," சரி நாங்க பேசுற எதையும் நீ கேட்கிற மனநிலையில இல்லை னு எங்களுக்கு நல்லாவே புரியது ஆனால் இது ஒரு மருத்துவமனை இங்க குழந்தை இருக்க வேணாம் அவ முகத்தை பாரு ரொம்ப பயந்து போயிருக்கு  நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.நீ எல்லா சரியானதும் குழந்தையை வாங்கிக்கோ ," என்று கூறி நிலாவின் அருகே சென்றார்," நிலா கண்ணு வாங்க வாங்க ," என்று அவளை தூக்க முயற்சிக்க அவரிடமிருந்து இரண்டு அடி பின்னே சென்ற ஆதித்யன்," என் பொண்ண பார்த்துக்க எனக்கு தெரியும்,  நீங்க யாரும் வேண்டாம் நானே எல்லாத்தையும் சமாளிச்சுக்குவேன் , நீங்க கிளம்பளாம்," என்று கூறினான்.

அவன் கூறியதை கேட்ட முதலாமவர்," டேய்... எத்தனை தடவை சொன்னாலும் நீகேட்க மாட்டியா?? ,அவ எனக்கு பேத்தி, அவளை நான் பத்திரமா பாத்துக்குவேன் , உன்கிட்ட யாரும் உத்தரவு கேக்கலை," என்று கூறியவர் அவன் கைகளிருந்த நிலாவிடம்," நிலாகுட்டி பாட்டி கிட்ட வாங்க... கொஞ்ச நேரம் நம்ம வீட்டுக்கு போயிட்டு அப்பறமா இங்க வரலாம்," என்று கூறி லாவமாக அவனிடமிருந்து அவளை வாங்கியவர் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு அந்த இரண்டாமவரை நோக்கி," ,உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா வாங்க வீட்டுக்கு போகலாம்," என்று கூறி முன்னே நடக்க அவரின் கணவர் பவ்யமாக அவரின் பின்னே  சென்றார்.

அவர்கள் வெளியேறவே காத்திருந்தது போல உள்ளே நுழைந்தான் ஆதித்யனின் நண்பன் ஜீவா.பதட்டத்துடன் ஆதியை நெருங்கியவன," என்னாச்சு ஆதி ......," என்று கேள்வியை அவன் முடிக்கும் முன்னே அந்த மருத்துவமனை தளத்திற்குள் வேகமாக இருவர் ஓடி வர எல்லோரும் அவர்களை நோக்கி திரும்பினர்.

வந்த அந்த இருவரில் நடுத்தரவயதுடைய பெண் அங்கு நின்றிருந்த செவிலியரிடம் ," என் பொண்ணு மது எங்க இருக்கா??" என்று வினவ ,அடுத்த நொடி ஆதியின் உடல் இறுகுவதை உணர முடிந்தது ஜீவாவினால், ஜீவா அழைத்துக்கொண்டு வேகமாக மது இருந்த அறையின் வாயிலை அடைந்தவன், உள்ளே நுழைய முற்படுகையில் அவனை தடுத்து பிடித்துக்கொண்டான் ஜீவா," நீ பண்றது முட்டாள் தனம் ஆதி கைமீறி போன விஷயத்தை கொஞ்சம் விட்டுதான் பிடிக்கனும்."என கூறி அவனை தன்னுடன் நிறுத்திக்கொண்டான்.

இவர்கள் இங்கு வாதம் செய்து கொண்டிருந்த நேரத்தில் மதுவின் பெற்றோர்கள் அவளை அனுமதிக்கப்பிடிருந்த அறைக்குள் சென்றுவிட்டிருந்தனர்.அங்கே வாடிய கொடிபோல தலையில் கட்டுடன் மருந்துவ உபகரணங்களின் நடுவே அமைதியான நித்திரையில் உறங்கும் தங்கள் மகளை பார்த்த அந்த பெற்றோர் நெஞ்சம் பதறியது.

" மது ......எந்திரிடா....உனக்கு என்ன ஆச்சு??"என்று பதறிய அந்த தாயின் குரல் கேட்டு உள்ளே வந்த செவிலியர்," மேடம் அவங்க நினைவு இல்லாம இருக்காங்க அவங்களை தொந்தரவு செய்யாதீங்க கொஞ்சம் அமைதியா வெளிய நில்லுங்க ,"என்று குரலை உயர்த்தி கூற வேறு வழியில்லாத அவர்கள் வெளியே வந்தனர்.

" மது யாரு கூட போனா சரசு?"

"தெரியலைங்க யாரு தோழி னு சொன்னா.."

" ஊருக்கு யாரு கூட போகிறதா சொன்னா??

" அதுவும் தெரியலைங்க..."இந்த உரையாடலை அவர்களுக்கு அருகில் நின்றிருந்த அந்த இருவராலும் மிக தெளிவாக கேட்க முடிந்தது.அவரது பார்வையில் உஷ்ணம் பரவுவதை கண்ட ஜீவா," ஆதி...நம்ம இங்க இன்னும் நிக்கனுமா?"ஏதாவது பிரச்சனை ஆகிடபோகுது, " என்று பதற , அவனை முறைத்து பார்த்த ஆதியோ,"டேய் அவன் என் மனைவி அவளோட நிலை என்னனு தெரியாம நான் இங்க இருந்து நகர மாட்டேன்.எனக்கு எல்லா வித உரிமையும் இருக்கு யாரும் என்னை தடுக்க முடியாது," என்று வாதிட ," இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை," என்று சலித்துக்கொண்டவன் அமைதியாக அவன் அருகில் நின்றான்.

நொடிகள் நிமிடங்கள் ஆக நிமிடங்கள் கடந்து போக அனைவரையும் காக்க வைத்த மது இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு கண்களை திறந்தாள்.

அவளது அறையினுள்ளே அமர்ந்திருந்த செவிலியர்," மது பேஷன்ட் கண் முழிச்சிட்டாங்க , யாரு அவங்க கூட வந்தது சத்தம் போடமா வந்து பாருங்க ," என்று கூறி விட்டு செல்ல, மதுவின் பெற்றோர்கள் வேகமாக உள் நுழைந்தனர் அவர்கள்  இடைவெளிவிட்டு நண்பர்களும் பின் தொடர்ந்தனர்.

அந்த அறை பெரிதாக இருக்க  நுழைந்ததும் ஒரு தடுப்பு இருந்தது அதனை கடந்து சென்றால் நடுவில் கட்டில் போடப்பட்டு அதன் அருகே சிறு மேஜையும் ஒரு சிறிய படுக்கையும் இருந்தது.

முதலில் உள்ளே நுழைந்த மதுவின் பெற்றோர்கள் அவளின் கட்டிலின் அருகே செல்ல பின் வந்த இருவரும் அந்ந தடுப்பின் பின்னே நின்றுகொண்டனர்.

கண்ணில் நீருடன் தன் மகளை நெருங்கிய அந்த தாய்அவளின் தலையை வருடி ,"மது கண்ணா.....இப்ப எப்படி இருக்கு??" என்று வினவ, அவரை புரியாத பார்வை பார்த்த மது," ஹாய் மாம்.....வாட்ஸ்அப் ( Hi mom whatsapp)?)ஏன் இப்படி அழுது வழியுறீங்க , ஐம் ஃபைன் ,இட்ஸ் ஜஸ்ட் அன் மைனர் ஆக்ஸிடென்ட்( It's just an minor accident), கம் ஆன் சில்....(come on chill...), என்று கூறி தன் தந்தையை பார்தவள் , "ஹாய் பா நீங்களுமா வொரி(worry) பண்றீங்க...எனக்கு ஒன்னும் இல்லை இன்னும் ஒன் அவர்ல வீட்டுக்கு போயிடளாம் ," என்று கூறிவிட்டு கண்களை மூடி கொண்டாள்.

அவள் இரண்டு நிமிடங்கள் பேசிய பேச்சு அந்த பெற்றோரை ஒரு யுகம் உறைய வைக்க போதுமானதாத இருந்தது.தங்கள் மகள் கண் திறந்து பேசிவிட மாட்டாளா....என்று இதுவரை ஏங்கி இருந்த அவர்களை அவள் ஏன் கண் திறந்தாள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.இருவரும் பொருள் பொதிந்த பார்வையை பரிமாறி கொண்டு டாக்டரை காண விரைந்தனர்.

இவர்கள் நிலை இப்படி இருக்க திறைக்கு பின்னால் நின்றிருந்த ஆதியின் நிலையோ இதைவிட மோசமாக இருந்தது.அவன் இதுவரை பார்திராத கேட்டிராத மதுவாக அவள் தெரிந்தாள்.

அவனது நிலை உணராத ஜீவாவோ பிரச்சனை வந்துவிடும் என்ற பயத்தில் அவனை மருத்துவமனையை விட்டு வெளியே இழுத்து வந்தான்.

வெளியே வந்தும் கூட அவனால் சுயநினைவுக்கு வர இயலவில்லை.அவனை உலுக்கிய ஜீவா," டேய் என்னாச்சு உனக்கு ,"

" இல்லை ஜீவா இப்ப  மது பேசுனது ....," என்று பாதியில் நிறுத்த, " சொல்லு மது பேசுனதுக்கு இப்ப என்னாச்சு??"

" அய்யோ ஜீவா மது இப்படி பேச மாட்டா..இப்ப பேசுனது மதுவே இல்லை...அவளோட பேச்சுல ஒரு சாந்தம் இருக்கும் ஆனால்  இப்ப பேசுன மதுவோட பேச்சுல ஒரு வித ஒட்டாத தன்மைதான் தெரிஞ்சது..." என்று கூறி தான் குழம்பியதும் மட்டுமில்லாமல் தன் நண்பனையும் தெளிவாக குழப்பினான்.

அதே நேரம் மதுவை அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே வந்த  மதுவின் பெற்றோர் டாக்டரை காண அவரின் அறைக்குள் சென்றனர்.அவர்களை வரவேற்றவர்," பயப்பிட ஒன்னும் இல்லை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவங்க இப்ப கண்ணு முழிச்சிட்டாங்க அதனால கவலைபடாதீங்க," என்று கூற," டாக்டர் நீங்க ஏற்கனவே என்ன சொன்னீங்க??"என இருவரும் வினவினர்.

"உங்ககிட்ட சொல்லலை உங்க மருமகன் கிட்ட உங்க பொண்ணோட நிலையை சொன்னேன் ஆனால் நான் நினைச்சதைவிட சீக்கிரமே கண் முழிச்சிட்டாங்க,"என கூறினார்.

" டாக்டர் நீங்க வேற பேஷன்டோட டீடெய்ல்ஸ் சொல்றீங்கனு நினைக்கிறேன்," என்று தயங்கிய மதுவின் தந்தையை பார்த்த  டாக்டர் குழப்பத்துடன் ," நீங்க அந்த ஸ்பெஷல் வார்ட்ல அட்மிட் ஆகியிருக்கிற மதுமிதா ஆதித்யனோட அப்பாதானே??"என்றவரை குறுக்கிட்ட மதுவின் தந்தை ," அவ பேரு மதுமிதா மட்டும்தான் ஆதித்யன் இல்லை," என்று தெளிவுபடுத்தினார்.

அப்பொழுது அங்கே இருந்த செவிலியர்," அவங்க ஹஸ்பன்ட் தான் மதுமிதா ஆதித்யனு சொன்னாரு," என்று தங்கள் நிலையை உறுதிபடுத்த, " ஆனால் அது எப்படி முடியும் டாக்டர் அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே?"என்று கூறினார் அவரது முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது.

" என்ன சொல்றீங்க நீங்க??" என்று வினவிய டாக்டர் குரலிலும் அது எதிரொலிக்க அவர்களை அதுவரை அமைதியாக நோக்கிய வண்ணம் இருந்த மதுவின் தாய் சரஸ்வதி," ஒரு வேளை எமர்ஜென்சி அப்படீங்கிறதால மனைவினு பொய் சொல்லி சேர்த்திருப்பாங்களோ??"என்று வினவினார்.

" அப்படி சொல்லிருந்தா உண்மையான  பேரு எப்படி அவருக்கு தெரியும் அதுமட்டுமில்லாம அவங்க கழுத்தில மாங்கல்யம் இருந்துச்சே அதை நான்தான் அவங்க கணவர்கிட்ட கொடுத்தேன்," என்று அமைதியாக அந்த பெற்றோரின் நிம்மதியை குழைக்கும் பெரும் உண்மையை போட்டு உடைத்தார் அந்த செவிலியர்.

" என்ன சொல்றீங்க நீங்க ," என்று பதைபதைக்கும் நெஞ்சோடு இருவரும் அடுத்த நொடி தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர்.

(தொடரும்......)

Continue Reading

You'll Also Like

15.7K 781 14
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும்...
255K 8.9K 39
அவள் புரியாத புதிர்
10.2K 600 14
ஹாய் நட்புகளே!!!!! என்னுடைய இரண்டாவது கதையோடு சந்திக்க வந்துவிட்டேன் செல்லம்ஸ்!!!!! முதலாவது கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற...
27.9K 1.2K 48
உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை இதுல காதல் நிச்சயம் இருக்கும் போக போக கதை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும்