😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

புரியாத புதிர்

3.6K 120 43
By creativeAfsha

அந்த அழகிய அரண்மனை போன்ற வீடு தனது காலை நேர பரபரப்பை இழந்து நிதானத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தது. அந்த வீட்டின் தலைவரும் தன் கணவருமான  திரு சௌந்தரனை அலுவலகத்திற்கும் அந்த வீட்டின் குட்டி தேவதை மதியழகியை கல்லூரிக்கும் அனுப்பிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்த அந்த வீட்டின் தலைவி சரஸ்வதி தன் மூத்த மகள் மதுமிதாவின் வருகையை உணர்ந்து எழுந்து வெளியே வந்தார்.

" என்னடா...நீ எப்போ வந்த?? நான் உன்னை கவனிக்கலையே ?" என்று வாஞ்சையுடன் வினவியவர்  தன் மகளை ஆசையுடன் நோக்கினார், பேபி பிங்க் நிறத்தில் சில்க் காட்டன் புடவையில் அலங்காரம் எதுவுமில்லாமல் கழுத்தை சுற்றி கோல்டன் நிற துப்பட்டாவை சுற்றியபடி முகத்தில் ஒரு வித தயக்கம் குடிகொள்ள நின்ற தன் மகளை பார்த்த தாயின் மனது எப்பொழுதும் போல இப்பொழுதும் பெருமை கொண்டது.

மனதில் குற்ற உணர்வு எழுந்தாலும் அதை அடக்கியவள்," இப்பதான்மா வந்தேன் , அப்பறம் அம்மா .....நான் என் ஃபிரென்டோட கல்யாணத்துக்கு போகனும் னு கேட்டிருந்தேனே??அப்பா எதாவது சொன்னாங்களா?? என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

தன் மகளை பார்த்து சிரித்தவர் ," அப்பா உன்னை பத்திரமா போய்டு வர சொன்னாங்க , அடிக்கடி ஃபோன் பண்ணி பேச சொன்னாங்க  ," என்று கூறிவிட்டு பின் ஒரு சிறு இடைவெளி விட்டு," ஆறுமுகம் தாத்தாகிட்ட சொல்லிருக்காங்க அவரு உன்னை கொண்டு போய் விட்டுட்டு அங்கயே இருந்து இரண்டு நாளுக்கு அப்பறம் உன்னை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுவாரு  ," என்று கூறினார்.
தன் அன்னையை ஒரு வித பயத்துடன் நோக்கிய மது பின்பு ஒரு வித தயக்கத்துடன் ," இல்லை மா அதுவந்து நான் என் ஃபிரெண்ட்ஸ் கூட போறேன் அவளோட கார்லயே போய்டு வந்திடறேனே ," என்று ஒருவிதமாக கூறி முடித்தாள்.

அவளது பதிலில் ஒரு நொடி திகைத்த சரஸ்வதி ," என்னடா இது புது பழக்கமா இருக்கு. அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க  மாட்டாங்கனு உனக்கு தெரியாது டா ," என்று சிறு கவலையுடன் வினவினார் .

" அம்மா...ப்ளீஸ்.....இந்த ஒரு தடவை மட்டும் எனக்காக அப்பா கிட்ட அம்மா ப்ளீஸ்....," என்று கெஞ்சும் குரலில் கேட்ட மகளின் நிலை அந்த அன்பு தாயின் மனதை உருக வைக்க," சரிடா பாத்து பத்திரமா போய்டு வரனும் , சரியா ??எல்லாமும் எடுத்துட்டியா?? எதையும் மறக்கலையே??" என்று வெகுளியாய் கேட்ட தாயை நேரிட்டு நோக்க தைரியம் இல்லாதவள் அவரை கட்டி அணைத்து கண்ணத்தில் முத்தமிட்டு தன் அறையை நோக்கி சென்றாள்.

தனது உடைமைகளிலிருந்து மிக முக்கியமானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டவள் அவளது அறையில் மாட்டியிருந்த  அவளின் தாய் தந்தையின் புகைப்படத்தை பார்த்தாள் , பின் அதன் அருகே சென்றவள் ," அப்பா....., அம்மா....., நான் செய்யுறது சரியா??தப்பா னு ஏனக்கு சொல்ல தெரியலை , ஆனால் இதுல இருந்து வெளிய இனி வரமுடியாது னு மட்டும் எனக்கு புரியுது. என்னை நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க ," என்று கூறூ கண் கலங்கியவள் பின் நேரமாகிவிட்டதை உணர்ந்து வேகமாக தன் அறையை கடைசி முறை நோக்கிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள.

கீழே இறங்கி வந்த மகளை நோக்கி புன்முறுவல் செய்த அவள் தாயிடம் ஓரு சிறு தலையசைப்புடன்  விடைபெற்ற மதுமிதா வாசலை நோக்கி சென்றாள்.

அவளை பின் தொடர்ந்த சரஸ்வதி ," ஆறுமுகத்தை கூப்பிட்டு  ப்ரெண்டோட வீட்டுல விட்டுட்ட வரசொல்லுமா ," என்று கூற அவரை  இடைமறித்தவள்," இல்லைமா என் ப்ரெண்ட் வாசல்ல காத்திருக்கா நான் போய்டு வரேன்," என்று கூறிவிட்டு கையில் சிறு ஏர்பேகுடன் விறுவிறுவென்று வாசலை நோக்கி சென்ற தன் மகளின்   செயல் புதிராக தோன்ற மனதில் சிறு நெருடலுடன் உள்ளே சென்றார் அந்த தாய்.

வாசலில் தனக்காக காத்திருந்த அந்த கால்டாக்சியில் ஏறியவள் செல்ல வேண்டிய முகவரியை கூறி விட்டு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். காலையிலிருந்தே படபடப்பும் பயமும் அவளை சூழ்ந்திருக்க இப்பொழுதோ ஒரு பாதுகாப்பின்மை மனதில் குடிகொள்வதை உணர்ந்தவள் தன் கைபேசியில் யாருக்கோ மெசேஸ் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவளின் மெசேஜுக்கு பதில் வர அதை நோக்கியவள் பின் அமைதியாக வந்தாள்.

*********

அது ஒரு தனி வீடு மிகவும் பெரிதானதாக இல்லாமலும் சிறிதாக இல்லாமலும்  அளவான கலை நயத்துடன் கட்டப்பட்டிருந்தது அதன் வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி கால்டாக்சியிலிருந்து இறங்கிய மதுமிதாவை பார்ததும் மிகவும் சந்தோஷத்துடன் அவளிடம் வந்தான்," வாங்கம்மா உங்களுக்கு தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன் ," என்று கூறியவன் அவளின் கைகளில் இருந்த அந்த ஏர்பேகை வாங்கிக்கொண்டான்.

அவனுக்கு ஒரு புன்னகை பதிலாக கொடுத்தவள்,  , அந்த வீட்டை நோக்கினாள்  , என்றும் தோன்றும் அதே சந்தோஷ உணர்வு அவளுக்கு இன்றும் தோன்ற அதனுடன் பரவசமாகவும் உணர்ந்தாள்.தனது கைபையிலிருந்த வீட்டின் சாவியை வைத்து கதவை திறந்தவள் வீடு அலங்கோலமாக இருப்பதை பார்த்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டு வீட்டை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினாள்.

அரைமணிநேரத்தில் வீட்டை அழகாக மாற்றியவள் பின் ஏதோ நினைவு தோன்ற வேகமாக அடுப்படிக்கு சென்று
நோக்கினாள் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்பதனை உணர்ந்தவள் வாட்ச்மேனை அழைத்தாள் ," பரமு அண்ணே நான் கொடுக்கிற லிஸ்ட் ல இருக்கிற சாமான கொஞ்சமா சீக்கிரமா வாங்கிட்டு வாங்க ," என்று கூறியவள் , விரைவாக சமையல் வேலையில் ஈடுபட்டாள். ப்ரிட்ஜிலிருந்த காய்கறிகளை கொண்டு விரைவாக பிரியாணி செய்தவள் ரவையை வறுத்து அதில் கேசரியையும் செய்து முடித்தாள்.நேரத்தை நோக்க அது அவள் வந்து இரண்டு மணி நேரங்கள் கடந்ததை காட்ட எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து தான் கொண்டு வந்த அந்த ஏர் பேகை எடுத்து படுக்கை அறையினுள் உள்ள ஒரு கப்போர்டில் அடுக்களானாள்.

மும்முரமாக வேலை செய்தவள் வீட்டின் முன் வந்த நின்ற வண்டியின் சத்தத்தையோ சாவி கொண்டு கதவு திறக்கும் சத்தத்தையோ கவனிக்கவில்லை , அவள் கப்போர்ட் புறம் திரும்பி இருக்க பூனை நடையுடன் மெதுவாக வந்து அவளின் இரு கால்களையும்  பின்புறமிருந்து அணைத்துக்கொண்டது இரு கைகள், அந்த தொடுகையை  உணர்ந்த அவள் முகத்தில் சந்தோஷத்துடன் வேகமாக திரும்பி அந்த நபரை அணைத்துக்கொண்டு ஆனந்தத்தில் திழைத்தாள்.

" எப்போ வந்தீங்க நீங்க எனக்கு சத்தமே கேட்கலையே???" என்று ஆச்சரியமாக அவள் வினவ.," உங்களுக்கு சத்தம் கேட்க கூடாது னு நாங்க மெதுமா வந்தோம் இல்லையா அப்பா ??," என்று தன் பின்னே நின்றிருந்தவனை  நோக்கி கேட்டாள் அந்த நான்கு வயது சிறுமி நிலா.

அந்த அறையில் அப்பொழுது தான் ஆதித்யனை  கவனித்தவள் வேகமாக எழுந்து நின்றாள் , அவனை நிமிர்ந்தும் பார்காமல் நிலாவை  நோக்கியவள் ," குட்டிமா சீக்கிரமா ட்ரெஸ் மாத்திட்டு வாங்க  நம்ம சாப்பிடலாம் அம்மா உங்களுக்கு பிடிச்ச வெஜிடபிள் பிரியானி  சமைச்சிருக்கேன்," என்று கூற அதில் குஷியான நிலா ," ஐ.....அம்மா னா அம்மா தான், அம்மா....இந்த அப்பா காலையில எனக்கு உப்புமா தான் செஞ்சு கொடுத்தாங்க எனக்கு பிடிக்காது னு தெரியும் ல திட்டுங்க மா அப்பாவ," என்று தன் தந்தையை மாட்டிவிட்டவள் அவனை நோக்கி பழிப்பு காட்டிவிட்டு தன் தாயிடம் அடைக்கலமானாள்.

" பரவாயில்லை பா நான் உப்புமாவே சாப்புட்டுகிறேன் நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க னு காலையில டயலாக் பேசிட்டு இப்ப உங்க அம்மா வந்ததும் போட்டு கொடுக்குறியா அடிங்க.... ," என்று கூறி நிலாவை  துறத்த துவங்கினான் ஆதித்யன்.

" அப்பா அப்பா ப்ளீஸ்பா.....," என்று கூறியவள் அந்த வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள்.இதை பார்துக்கொண்டிருந்த மதுமிதா சிரிக்கத்துவங்க அந்த வீட்டின் வாசலில் எதற்கோ வந்த வாட்மேனின் காதில் இந்த மூவரின் சிரிப்பு சத்தமும் விழுந்தது.

" இவங்க இப்பவும் போல எப்பவும் சந்தோஷமா இருக்கனும் இவங்க வாழ்கையில  பட்ட கஷ்டமெல்லாம் போதும் ," என்று மானசீகமாக கடவுளை வேண்டியவர் அந்த மகிழ்சியை கலைக்க விரும்பாமல் திரும்பி சென்றார்.

சிரித்து கோண்டே நிலாவை அடிக்கத்துறத்தும் ஆதித்யனினை தொடர்ந்தது மதுமிதாவின்   ஏக்கப்பார்வை.

      (தொடரும்....)

Continue Reading

You'll Also Like

11.9K 725 21
#2 07.10.2017 #3 06.10.2017 #4 in non fiction story about ..... senior junior and teacher student . idu different story teacher and student...
51.1K 3K 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
88.3K 2.7K 16
ஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி...
15.7K 781 14
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும்...