😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

அவனும் அவளும்

11.2K 160 56
By creativeAfsha

அந்த அரசு அலுவலகத்தின் முன் நிறைய மக்கள் தங்களது பலவிதமான தேவைகளை நிறைவேற்ற காத்திருந்தனர். சிலர் பரபரப்புடனும் சிலர் பரவசத்துடனும் சிலர் ஒரு வித பதட்டத்துடனும் அங்கு குழுமியிருந்தனர். அரசு அலுவலகம் என்பதனை நிரூபிக்கும் பொருட்டு உயர் அதிகாரியின் வருகைக்காக காத்திருந்தோரின் பட்டியல் அதிகரிக்கத்தொடங்கியிருந்த வேலை அந்த அலுவலக வளாகத்தில் தென்பட்ட ஒரு அரச மரத்தின் நிழலில் தனது கைகடிகாரத்தை நொடிக்கொரு முறை நோக்கிய வண்ணமிருந்தான் ஜீவா.

அவன் அவ்வாறு பார்பதனால் நேரம் ஓடப்போவதில்லை என்பதனை புரிந்திருந்த போதும் அவனது அந்த அன்னிசையான செயலை அவனால் தடுக்க முடியவில்லை.

சிறிது தொலைவில் இரு பெண்கள் இவனை போலவே யாருக்காகவோ காத்திருக்க அவர்களை நெருங்கியவன் அவர்களின் சம்பாஷனையை கேட்டு அங்கேயே நின்றான், அந்த இரு  பெண்களில் ஒருத்தி மிகவும் பயத்துடன் மற்றவளை நோக்கி," இப்ப கூட ஒன்னும் கெட்டுப்போயிடலை மது ப்ளீஸ்  உன் முடிவை மாத்திக்க, " என்று மன்றாடும் தொனியில் கேட்டாள்.

மது என்கிற மதுமிதாவிடமிருந்து எந்த வித பதிலும் வராமல் இருக்க மீண்டும் அவள்," ஆத்திரத்திலயும் அவசரத்திலயும் எடுக்கிற முடிவு எப்பவும் சரியானதா இருக்காது , எப்பவும் எதுலயும் பொறுமை இழக்காத நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கேனு தான் எனக்கு புரியலை, நீ எடுக்குற இந்த முடிவு மட்டும் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சது உன்னை வெட்டி போட கூட தயங்க மாட்டாரு," என்று இம்முறை சிறு காட்டமாகவும் மிரட்டும் நோக்குடனும் கூறினாள். அவள் இவ்வளவு தூரம் கூறியும் மதுவிடம் சிறு அசைவும் தெரியவில்லை தன் முயற்சியில் தோற்றுபோனவள் ஒரு சிறு பெருமூச்சுடன் தன் தோழியை  கவலையுடன் நோக்கினாள்.

அவளது சிந்தனையை தடை செய்தது  ஒரு ஆணின் குரல்  "எக்ஸ்கியூஸ்மீ.... மிஸ்......உங்களோட கீதா உபதேசமெல்லாம் முடிஞ்சதா ?இல்லை இன்னும் பாக்கி இருக்கா?? என்று கோபத்துடன் வினவினின்.அவனை இதற்கு முன் கண்டிராத அந்த பெண் அவனை புரியாத பார்வை பார்தாள் , அவளின் பார்வையை கண்டுகொள்ளாத ஜீவா மேலும் தொடர்ந்தான்,"  அவங்களோட வாழ்க்கையை பத்தி அவங்க ஏற்கனவே ஒரு  முடிவு  எடுத்த நிலையிலயே  இப்படி கடைசி நிமிஷத்துல அவங்களை குழப்பாதிங்க  ," என்று கோபத்துடனும் கண்டிப்புடனும் கூறிய  ஜீவா மதுமிதாவை நோக்கினான்.அவளோ தனக்கும் அங்கே நடந்த சம்பாஷனைகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாதது போல மிக முக்கியமாக அவளின் விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அவளை அன்று தான்  முதல் முறையாக பார்க்கும் ஜீவாவிற்கு அவளின் இச்செயல் குழப்பத்தை உருவாக்க அவளை ஆராய்ச்சி பார்வையுடன் நோக்கினான்,  சிறிது பூசினார் போல உடலமைப்பு கொண்டிருந்த அந்த பெண் மாநிறத்தில்  பார்பவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க தூண்டூம்  ஒரு வித வசீகரிக்கும் அழகுடன் இருந்தாள்.

பேபி பிங்க் நிறத்தில் கோல்டன் ஜரீகையிட்ட சில்க் காட்டன்  புடவையில்  மிதமான ஒப்பனையுடன் கழுத்தில் மெலிதாக ஒரு தங்க செயின் மட்டும்  அணிந்திருந்தாள். அவளின் இந்த எளிமை ஜீவாவிற்கு சிறு சந்தேகம் கொடுத்தாலும் அவன் செய்ய முடிந்தது எதுவும் இல்லை என்பதனை உணர்ந்தவன் தன் நண்பனை தொலைபேசியில் அழைத்தான்,  " டேய்.வினோத் .   எங்கடா....இருக்க??" சுறுக்கமாகவே வினவினான் அந்தபுறம் கூறிய பதிலில் சிறு ஆசுவாசமடைந்தவன் அந்த அலுவலக வாசலை நோக்கி சென்றான்.

************

தனது ராயல் என்ஃபீல்ட் வாகனத்தில் சிம்மம் போல வந்துகொண்டிருந்தான் ஆதி என்கிற ஆதித்யன்  கருப்பு நிறத்தில் ஜீன்ஸும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் டீ ஷர்ச்டும் அணிந்திருந்தான்.  அவன் பின்னே அமர்ந்திருந்தவனோ ," டேய் சீக்கிரமா போ... ஜீவா கத்திக்கிட்டு இருக்கான்," என்று கூறி அவனை துரிதப்படுத்தினான். அதற்கு பதிலெதுவும் கூறாமல் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டியவனின் முகத்தில் ஒரு வித இறுக்கம் மட்டுமே குடியிருந்தது .அவனது உணர்ச்சிகளை அவன் அணிந்திருந்த கூலர்ஸ் மறைத்திருக்க அவன் வாகனம் புயல் போல சீறி அந்த அலுவலகத்தினுள்ளே நுழைந்தது. வாகனங்கள் நிறுத்தத்தில் பார்க் செய்தவன் தன் பின்னே வந்தவனை சட்டையும் செய்யாமல் நேரே ஜீவாவிடம் சென்றான்.

அவனது வருகைக்காக காத்திருந்த ஜீவா," வாடா எல்லாம் ரெடி உனக்காகதான் காத்திருக்கோம் என்று கூறி ஆதியையும் மதுவையும் அலுவலகத்தின் உள்ளே அழைத்து சென்றான் , அங்கே ஏற்கனவே ஜீவாவின் முன்னேற்பாடின்படி அனைத்தும் தயாராக இருக்க மதுவிடமும் ஆதிய்தனிடமும் ஒரு மாலை வழங்கப்பட்டது , இருவரும் தத்தமது கழுத்தில் அதை இட்டுக்கொள்ளும் போதும் கூட மறந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை இதனை கவனித்த ஜீவாவின் மனதில் முதன்முறையாக தன் நண்பனின் வாழ்க்கை குறித்து கவலை தோன்றியது.

ஜீவாவின் கைகளிருந்து மாலையை வாங்கிய மது அதை தன் கழுத்தில் இடும் பொழுது அவளின் கண்கள் முதல் முறையாக இரண்டு சொட்டு கண்ணீரை சிந்தியது.அவளது மனமோ ஊராரிற்கு அழைப்பு விடுத்து சொந்தங்கள் யாவும் சூழ கெட்டிமேளம் முழங்க தோழிகளின் கேலிகள் காதில் ரீங்காரமிட தன்னருகிலே அமர்ந்திருக்கும் தன்னவன் தன்னை சில்மிஷங்களால் சீண்டி சிவக்க வைக்க அந்த இடைவெளியில் ஐயர் மாலை மாற்றும் சடங்கை தொடங்கி வைக்கும்போது  இருவரும் ஒரு வித எதிர்பார்புடனும் காதலுடனும் மாலைமாற்ற வேண்டும் என்பன போன்ற எந்த நிகழ்வுகள் இங்கில்லை என்பதனை ஒரு பொருட்டாக தன் மனம் கருதவில்லை ஆனால் ஒரு சராசரி பெண்ணின் ஆசையோ எதிர்பார்போ தனக்கு ஏற்படவில்லையே என்று கவலை கொண்டவளது மனதில் தன் முடிவினை குறித்து தாமதமாக ஐயம் எழுந்து  அவளை நடுங்க செய்யதது.இனி தனது கையில் எதுவும் இல்லை என்று எண்ணியவள் கண்களை மூடி  மானசீகமாக இறைவனிடம் வேண்டிக்கொண்டு திருமண பதிவேட்டில்  கையெழுத்திட்டாள்.

முதல் நாள் நண்பர்கள் இருவரும் சென்று வாங்கிய சிறு செயினில் கோர்க்கப்பட்டிருந்த அந்த மாங்கல்யம் அவனின் கைகளில் கொடுக்கப்பட்டது அதை வாங்கியவன் ஒரு நொடி  கண்  மூடி பின் ஒரு பெருமூச்சுடன் அவளின் கழுத்தில் அணிவித்தான் .

அவன் அவளின் கழுத்தில் அந்த செயினை அனிவிக்கும் பொழுது  கைகள் தாலியினை மட்டுமே பற்றியிருக்க அவன் மூச்சு காற்று கூட அவளை தீண்டாமல் மிகவும் கவனமாகவே இருந்தான்.

தாலியை அவளது கழுத்தில் கட்டியவன் தனது வேலை முடிந்தது என்று எண்ணி வேகமாக தன் கழுத்திலிருக்கும் மாலையை எடுத்து தன் நண்பனின் கைகளில் கொடுத்தான்.அவனை தொடந்து அவளும் அவ்வாறே செய்தாள் பின்பு இருவரும் ஒரே ஒரு நொடி அர்தத்துடன் பார்த்துக்கொண்டனர்.மீண்டும் பழைய இறுக்கம் இருவரின் முகத்திலும் தெரிய நண்பர்களிடம் விடைபெற்றுவிட்டு தத்தமது வாகனத்தில் அந்த அலுவலகம் விட்டு வெளியேறினர்.

அவர்கள் இருவரும் வெளியேறும் வரை அமைதி காத்த அவர்களது நண்பர்கள் பின் அமைதியாக கலைந்து சென்றனர்.ஜீவாவை பின் தொடர்ந்து வந்த வினோத்," இங்க என்னதான் டா நடக்குது எனக்கு சுத்தமா ஒன்னும் புரியலை தலையே வெடிச்சிடும் போல இருக்கு நீயாவது சொல்லேன்டா," என்று மிகவும் பரிதாபத்துடன் கேட்டான்.

அவனை நோக்கி ஒரு சிறு புன்னகையை சிந்திய ஜீவா நடந்த அனைத்து விஷயங்களையும் கூறி முடிக்க இப்பொழுது முகம் இறுகி நிற்பது வினோத்தின் முறையானது .

Continue Reading

You'll Also Like

250K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
69.3K 2.7K 46
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
141K 4.7K 54
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....
15.7K 781 14
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும்...