😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

Door creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். Meer

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

பகுதி 40

261 17 0
Door creativeAfsha

"உள்ளே வரலாமா....."என்று தன் வீட்டு அடுக்களைக்குள் தயங்கியபடி நுழைந்த மதுமிதாவை அங்கே சமையல் செய்து கொண்டிருந்த பெண்," அட உள்ள வாங்கம்மா எதுக்கு தயங்குறீங்க ,"என்று அழைத்தார் .

"சரோஜா அக்கா நீங்க பண்ற சமையல் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா?" என்று மதுமிதா கேட்டாள்.

" என்ன சொல்லு மா. உனக்கு என்ன வேணும் சொல்லுங்க ."

" எனக்கு சமையல் பண்றதுக்கு கொஞ்சம் கத்துக் கொடுக்க முடியுமா?"

"நான் எப்படி மா உங்களுக்கு சமையல் கத்துக் கொடுக்க முடியும்? பெரியம்மாவுக்கு தெரிஞ்சா ஒன்னு தப்பாகாதா "

" அதெல்லாம் ஒன்னும் ஆகாது கா. நான் அம்மா கிட்ட ஏற்கனவே இதை பத்தி சொல்லிட்டேன் அம்மா உங்க கிட்ட கத்துக்க சொன்னாங்க .எனக்கு இன்னைக்கு தான் லீவு சனிக்கிழமை மதியானத்துக்கு மேல தான் என்னால் வரமுடியும் அப்போ அம்மா கோயிலுக்கு போயிடுவாங்க அதனால அவங்களால சொல்லிக் கொடுக்க முடியாது."

"சரிங்க அம்மா அப்ப நான் சொல்லி தரேன் இன்னிக்கி தொடங்கலாமா?? முதல்ல காய்கறிகளை கட் பண்றதுக்கு நான் சொல்லித்தாரேன் அதுக்கப்புறம் படிப்படியா ஒன்னொன்னா சொல்லித்தரேன் சரியா?"

"ஓ... சரிங்க அக்கா."

புதிதாக பள்ளி செல்லும் குழந்தை போல மிக குதூகலமாக தன் வேலையை செய்யத் தொடங்கினாள்.
அவர் கொடுத்த வேலையை மிகவும் உற்சாகத்துடன் செய்த மதுமிதா மிக விரைவாகவே காய்கறிகளை நறுக்குவதற்கு கற்றுக்கொண்டாள்.

"அக்கா டீ எப்படி டேஸ்டா போடுறீங்க எனக்கு அது சொல்லிக் கொடுங்களேன்."

"அது ரொம்ப ரொம்ப ஈஸி மதும்மா நம்ம வீட்ல தம் டீ தான் போடுவேன். தம்டீக்கு பாலு டீ தூளு தண்ணி சக்கரை எல்லாத்தையும் ஒண்ணா போட்டு நல்லா கொதிக்க விடணும். நல்லா மல மலனு கொதிச்சு வரும்போது அடுப்பை சின்னதாக வச்சு ரெண்டு நிமிஷம் கொதிநிலையில் வைத்து வடிகட்டி கொடுத்திடனும்."

"ஓ அப்போ வேறெனனெல்லலாம் டீ இருக்கு?"

"அது நிறைய இருக்கு கண்ணு.ஏலக்காய் போட்டா ஏலக்காய் டீ இஞ்சி போட்டா இஞ்சி டீ எல்லாம் சேர்ந்து மசாலா போட்டா மசாலா டீ புதினா தட்டி போட்டா புதினா டீ இது மாதிரி நிறைய இருக்கு நான் உங்களுக்கு ஒன்னு ஒண்ணா சொல்லி தரேன் சரியா "

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கா. "

"இதுல தேங்க்ஸ் சொல்ல என்ன இருக்கு கண்ணு எனக்கு தெரிஞ்சு தான் நான் உனக்கு சொல்லி தரேன். ஆமா என்ன திடீர்னு சமையல் மேல இவ்வளவு ஆர்வம்?"

"பெருசா ஒன்னும் இல்லக்கா சும்மா கத்துக்கணும்னு தோணுச்சு அவ்வளவுதான் சரிக்கா நான் வரேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு," என்று கூறியவாறு சரோஜா அக்காவிடம் இருந்து விடைபெற்ற சென்றாள் மதுமிதா.

மதுமிதா காலேஜ் செல்ல தொடங்கி இன்றுடன் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நிலாவிற்கு ஆறு மாதங்கள் முடிவடைந்திருந்தது 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு என்னென்ன சாப்பாடு சமைத்து கொடுக்க வேண்டும் என்பதை ஆன்லைனில் ஆராய்ந்து கொண்டிருந்த மதுமிதாவுக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது ,"நாம் ஏன் சமைத்துக் கொடுக்க கூடாது பாவம் தாயில்லாக் குழந்தை தானே," என்று யோசிக்க எனக்கு சமையல் தெரியாது என்பது அப்போதுதான் மதுமிதாவின் தலையில் உரைத்தது. அதன் முதல் படியே இன்று சமையலறை சென்று சரோஜாவிடம் சமையலை கற்றுக் கொள்ள தொடங்கியிருந்தாள்.

இந்த இரண்டு மாதங்களும் இரண்டு நிமிடங்களாக ஓடிவிட மதுமிதா காலை 9 மணி தொடங்கி ஒரு மணி வரை டே கேரிலும் பின்பு மூன்று மணி தொடங்கி 8 மணிவரை காலேஜிலும் என மாறி மாறி அவளது நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. ஆயினும் அவள் மனதளவில் மிகவும் முன்னேறி இருந்தாள் தன் கவலைகளை மறந்து சிரிக்கக் கற்றுக் கொண்டாள் மனம் ஒதுங்கி இருப்பதை மறந்து மற்றவருடன் கலந்து பேச தொடங்கியிருந்தாள் தன் கூட்டை விட்டு வெளிவர தொடங்கியிருந்தாள். இவை எல்லாம் அவளுக்கு சந்தோஷமாகவே தோன்றியது இதற்கு காரணமான நிலாவை அவள் மிகவும் நேசித்தாள்.

ஒரு குழந்தைக்கு ஆறு மாதம் நிறைவடைந்து இருக்கும் நேரத்தில் அவளுக்கு என்னென்ன உணவுகள் மாற்றங்கள் தேவை என்னென்ன ஊட்டச் சத்துக்கள் தேவை என்பதை ஆராய்ந்து உண்மையான லிஸ்டு ரெடி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொண்டாள். மறக்காமல் திங்கள்  காலையில் சென்று நிலாவின் தந்தையிடம் சேர்க்க வேண்டும் என்று உறுதி கொண்டு தன் கைப் பையில் பத்திரப் படுத்திக் கொண்டாள் மதுமிதா.

******

மதுமிதா என்று ஒரு ஜீவன் தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருப்பது அறியாத ஆதித்யா தன் லேப்டாப்பில் முக்கிய வேலையில் மூழ்கியிருந்தான்.அவன் முன்னே விளையாட்டு பொருட்கள் சிதறி கிடக்க அதன் நடுவே நிலா அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். தன் பிஞ்சு கைகளால் ஒரு சிறிய விளையாட்டு பொருளை எடுத்தவள் தன் தந்தையை பார்த்தாள். ஆதியின் விழிகள் லேப்டாபில் பதிந்திருக்க அவன் நிலாவை கவனிக்கவில்லை.

" ஊ.....ஆ....ஊ....." என சப்தம் எழுப்பிய நிலாவை நிமிர்ந்து பார்த்தவன்,அவளை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினான்.இரண்டு மூன்று முறை முயன்றும் தோல்வகயுற்ற குழந்தை அடுத்த கட்டமாக சிறிய பொருட்களை அவன் மீது தூக்கி எறிந்தது.

" ம்ச்....நிலா...அப்பா வேலை பார்க்குறேன் மா.கொஞ்ச நேரம் அப்பறம் உங்கூட விளையாட வரேன்."என்றுவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினான்.தன் தந்தை தன்னை கவனிக்க வில்லை தன்னுடன் விளையாடவில்லை என்பதை புரிந்து கொண்ட அந்த குழந்தை ," ப்....பா....ப்...பா...அப்பா....."
என்றது.

அடுத்த நொடி," என்ன சொன்ன நிலா....அப்பா னா கூப்பிட்ட .என் குழந்தை என்னை அப்பானு கூப்பிட்டிடுச்சு..."லேப்டாப்பில் பார்த்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு நிலாவை தூக்கி முத்தம் கொடுத்தான்.அவன் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல பரவசம் கொண்டான்.

" நிலா நிலா இன்னொரு தடவை என்னை அப்பானு கூபாபிடுடா...ப்ளீஸ் டா..."

தன் பொக்கை வாயை திறந்து குழந்தை சிரித்ததே தவிர அப்பா என்று அழைக்கவில்லை.மனம் தாளாத ஆதி ," சாரிடா சாரிடா என்தப்பு தான்.உன் கூட விளையாடாம உன்னை கண்டுக்காம இருந்திருக்க கூடாது ப்ளீஸ் டா ஒரே ஒரு தடவை கூப்பிடுடா,"

" ஆ.....ஊ.....ஹி...ஹி...ஹி...மா...மா..."இவ்வாறு அர்த்தமற்ற வாக்கியங்களை பேசி சிரித்த நிலாவை பார்த்த ஆதிக்கு மனம் குளிர்ந்தது. அக்குழந்தையின் அழகை ரசித்தவாறே அதை தன் தலைக்கு மேல் தூக்கி சுற்றினான். அவன் மனம் நிறைந்திருந்தது.

அன்று முழுவதும் நிலாவுடனே தன் நேரத்தை செலவழித்தவன் அவளுக்கு பால் புகட்டி தூங்க வைத்தான்.நிலாவின் கண்கள் தூக்கத்தை தழுவ அவனது கைகள் லேப்டாப்பை திறத்தது மறு நொடி தூங்கிக்கொண்டிருந்த நிலா ,"பா....பா..."என்று தூக்கத்தில் கூற மீண்டும் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு நிலாவின் அருகே படுத்தான் அவள் மீண்டும் அழைப்பாள் என்று எதிர்பார்த்து.

அவள் அருகே படுத்தவன் தன்னையும் அறியாமல் உறங்கி போனான்.மீண்டும் கண் திறந்து பார்க்க நேரம் காலை ஆறு எனக் காட்ட ,"இவ்வளவு நேரமா நம்ம தூங்குனோம்?"என்று அவனாலே நம்ப இயலவில்லை இந்த ஆறு மாத காலமாக ஏற்பட்ட மன உளைச்சலால் அவனால் தூங்க இயலவில்லை நெடு நாளைக்கு பிறகு நீண்ட நேரம் உறங்கிய நிம்மதி அவன் கண்களில் தெரிய தான் செய்ய வேண்டிய அடுத்த வேலையை நினைத்தவன் சோம்பலை துடைத்தெரிந்து படுக்கையில் இருந்து எழுந்தான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் செல்ல வேலையில்லை நிலாவும் டே கேர் செல்ல வேண்டாம் குழந்தையுடன் வேறு எங்கு செல்லலாம் என்று யோசித்தவன் இணையதளத்தை ஆராய்நதான்.

அவனுக்கு தேவைப்பட்டது போல குழந்தைகளுக்கான பொழுது போக்கும் விளையாட்டுகளும்  கட்டிடகலை கண்காட்சியும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்தவன் மாலை நிலாவுடன் அங்கு சென்றான்.

சென்னை வந்த இந்த இரண்டு மாதங்களில் நிலாவை வெளியே அழைத்து செல்ல அவனால் இயலவில்லை. புதிய இடம் புதிய அலுவலகம் என்பதால் வேலைகள் நிறைய இருந்தன.இன்றோ மனம் நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் லேசாக இருப்பது போல தோன்றியது.

நிலாவின் அப்பா என்ற அழைப்பு ஆதியின் மனதை ஏதோ செய்தது. தொலைந்து போன உறவு மீண்டும் கிட்டயது போன்ற உணர்வை உண்டு பண்ணியது.

நிலாவுடன் முதலில் வெளியே வருவதால் அவன் மனமே குதூகலமாக இருந்தது.

முதலில்  நேராக குழந்தைகளுக்கான பகுதிக்கு நிலாவை அழைத்து சென்றான்.ஆறு மாதக்குழந்தைக்கென நிறைய விளையாட்டுகள் இல்லாமல் இருந்தது. பேட்டரியில் இயங்கும் சின்ன கார், ஹெலிகாப்டர், வாத்து போன்றவைகளில் நிலாவை அமரவைத்தான்.முதலில் பயந்த குழந்தை பிறகு சிரிக்கத்துவங்கியது.
அவளது சிரிப்பை தன் செல்பேசியில் பதிவு செய்தான்.

ஒரு மணி நேரம் நிலாவிற்கான விளையாட்டுகளில் நேரம் செலவழித்தவன்.அவளது சிரிப்பில் தன்னை தொலைத்தான்.அவள் ஒரு மணி நேரமாக எதுவும் சாப்பிடாததால் அவளது பேபிபேகை திறந்து ஃபிளாஸ்கில் இருத்த வெண்ணீரை குழந்தை பால் பாட்டிலில் ஊற்றினான் பின்பு தேவையான பால் பவுடரை அதில் கலந்து நன்றாக கலக்கினான் பின் சூடு சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சமாக கையில் ஊற்றி பார்க்க அது சரியாக இருக்கவும் நிலாவின் வாயின் அருகே கொண்டு செல்ல விருப்பத்துடன் அதை வாங்கிய குழந்தை தன் தந்தையை பார்த்து சிரித்துக்கொண்டே பால் அருந்தியது.

அவனின் அக்கறையான கவனிப்பு அருகே உள்ள சிலரை திரும்பி பார்க்க வைத்தது.ஆறடி உயரத்தில் மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறத்தில் ஆளை கவர்ந்திழுக்கம் வசீகரத்தில் இருக்கும் இளம் ஆண்மகன் வெளிர் நீல நிற ஜீன்ஸும் கரு நீல நிற டீஷெர்டும்  அணிந்து இருந்தான். வயது இருபதுகளிலிலே இருப்பது போல தோன்றியது. அத்தகையவன் கையில் சிறு குழந்தையையும் மறு கை தோளில் குழந்தைக்கு தேவையான பொருட்கள்நிறைந்த பையையும் வைத்திருந்தான்.அதுவே சிலரை வியக்க வைத்தது. மேலும் அவன் சுற்று புற கண்களை புறக்கணித்து  பொறுமையாக குழந்தைக்கு பால் கலந்து கொடுத்தது அங கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.பலரும் அவனை வியப்பாக பார்க்க ஒருத்தி மட்டும் அவனின் தாய்மை உணர்வை கண்டு வியந்தாள்.வியந்தவளின் மனிதில் சத்தமில்லாமல் உள்புகந்தான் அவன். அவனை அருகே சென்று பார்க்க ஆவல் தோன்ற அவனை நெருங்கினாள்.அவன் குழந்தையை பிராமில் அமர வைத்திருந்ததால் அவளால் நிலாவை காண இயலவில்லை. இருந்தபோதிலும் நிலாவின் கையிலிருந்த விளையாட்டு பொருள் கீழே விழ அது அறியாமல் அவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அந்த பொருளை கையில் எடுத்தவள் ," ஹலோ சார் ...."என்று அழைத்தாள்.
அவள் அழைப்பை அவன்  கவனிக்கவில்லை. இம்முறை குரலை உயர்த்தியவள்,"சார் மிஸ்டர் ப்ளு டீ ஷெர்ட்..."என்று கத்த அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர் அவன் உள்பட  .

"பாப்பாவோட விளையாட்டு சாமான்...கீழே விழுந்திடுச்சு.சாரி உங்க பேர் தெரியாது அதான் அப்படி கூப்பிட்டேன்."

அவளை பார்த்து அதிர்ந்தவன் மனதில் இதமாக தென்றல் அடித்தது,பரவாயில்லை மிஸ்...,தேங்க்ஸ்."

அவளிடமிருந்து பொருளை வாங்கியவன் மனதில் மேலும் அவள் ஆழபதிய .பொருளை தந்தவள் மனதிலோ அவன் பார்வை ஏதோ செய்தது.இருவர் மனமும் மற்றவரிடம் இடமாற துவங்கியது.

Ga verder met lezen

Dit interesseert je vast

15.7K 781 14
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும்...
17.2K 1.3K 40
சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.
250K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
97.9K 509 3
Removed for book publishing. No.#1 in Non-Fiction From [23|12|17 to 02|01|2018] [04|01|18 to 11|01|18] [13|01|18 to 22|01|18] [24|01|18 to 04|02|18]...