😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

By creativeAfsha

70.5K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். More

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -45
பகுதி -46

பகுதி 39

776 28 9
By creativeAfsha

அபூர்வாவும் புகழும் இறந்த செய்தி கேட்டவுடன் அதன் அதிர்வை தாங்காத முடியாத புகழின் தாயார் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்து விட்டார்.

ஒரே நேரத்தில் மூன்று மரணங்களை சந்திந்த அந்த இல்லம் மயான அமைதியில் மூழ்கியிருந்தது.துக்கம் தொண்டையை அடைத்த போதும் ஆதி வாய்விட்டு கதறவில்லை. தாய்க்கு தலைமகனாய் குடும்பத்தின் தூணாய் தாய் தந்தையரை சமாதானம் செய்தான்.ஊரிலிருந்து தூரத்து சொந்தத்தில் ஒரு பாட்டியை வரவழைத்து சமையல் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தான். நிலாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்.

இரண்டு மாதங்கள் இரண்டு யுகங்களாக கடந்திருந்த வேளையிலும் அந்த குடும்பத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கவில்லை .

நிலாவின் தேவைகள் அனைத்தையும் ஆதித்யாவே பார்த்து விடுவான் வேறு ஒருவ அவளை அருகில் இருந்த விடமாட்டான்

நிலா பிறந்து இரண்டு மாதங்கள் கழிந்து இருந்த நிலையில் ஒரு நாள் காலை வேளையில் ஜீவா  "ஆதி....ஆதி....." அலறிய வண்ணம் ஆதியின் வீட்டினுள் நுழைந்தான்.

"நிலா தூங்குறாள்,"
என்று கூறியவன் உணர்ச்சியை துடைத்து முகத்துடன் ஜீவாவை நோக்கி "என்ன விஷயம்?" என்று கேட்டான்.

" நீ வேலைக்கு போகப் போறியா?"

" இதென்ன கேள்வி? கண்டிப்பா."

" சென்னைக்கு வேலைக்கு போகப் போறியா?"

"ஆமா ."

" அப்பா, அம்மா,நிலா  இவங்கள தனியா விட்டுட்டு எப்படி போவ"

"நிலாவை  இங்க விட்டுட்டு போறேன் நான் இப்போ உன்கிட்ட சொன்னேன்?"

" அப்புறம் ?"

"நானும் நிலவும் அடுத்த மாசம் சென்னைக்கு கிளம்பறோம். "

" நிலா உன் கூட உன் கைய புடிச்சிட்டு வருவாளா? அவள்  கழுத்து நிற்காத குழந்தை அவளை எப்படி உன்னால சமாளிக்க முடியும்? "

ஜீவாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்த ஆதி அவன்  கையை பிடித்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தான். வீட்டின் வெளியே முன்புறம் ஒரு சிறிய பூந்தோட்டம் அமைந்திருந்தது அதில் வண்ண வண்ண பூக்கள் அழகாக பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன அவை யாவையும் அபூர்வாவின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்த அழகிய மலர்கள் .அந்தப் பூக்கள் ஒவ்வொரு முறை அவனை பார்த்த தலையசைக்கும் பொழுதும் அபூர்வா தன்னை நோக்கிச் சிரிப்பது  போன்ற உணர்வை ஏற்படுத்தும். என்றும் போல அன்றும்  அந்த  உணர்வு கொடுக்க அபூர்வாவின் பிரிவை ஏற்க முடியாத அவன் நெஞ்சம் கலங்கியது.

"என்னால முடியலை ஜீவா. என் தங்கையும் என் கூட ஒட்டிபிறந்த இரட்டையன் மாதிரி இருந்த புகழும் இப்ப இந்த உலகத்தில இல்லைனு யோசிக்கவே மனசு வேதனையா இருக்கு.இந்த இடத்தைவிட்டு தூரமா போனாலாவது அவங்க இரண்டு பேரும் கோயமுத்தூர் ல இருக்காங்கனு மனசு பொய்யா சமாதானம் சொல்லிக்கிரும்னு ஒரு நப்பாசைதான்."

"உனக்கே இவ்வளவு கஷ்டமா இருந்தா  அம்மா அப்பா இரண்டு பேரும் பாவம் இல்லையா?"

"அவங்களையும் என் கூட கூட்டிட்டு போலாம்னு தான் முதல்ல தோனுச்சு ஆனால் அப்படி அவங்க இரண்டு பேரும் ஒவ்வொரு.தடவையும்  நிலாவை பார்க்கும் போது திரும்ப திரும்ப அவங்க மறக்க நினைக்கிறது நினைக்க வைக்கும்.அதனாலதான் பழகுன ஊருல அவங்க கொஞ்சநாள் இருக்கட்டும். புது ஊருக்கு போனா பாப்பா யாரு ?அவங்க அம்மா எங்கே இப்படி பல கேள்விகளை தாங்க ஷக்தி அவங்களுக்கு இல்லை."

"நீ ஏதோ சொல்ற ஆனால அ என்னால முழுசா சமாதானம் ஆக முடியலை."

"அதை நான் பார்த்துக்கறேன் ஜீவா.உன்கிட்ட எனக்கு ஒரு சின்ன உதவி கேட்கணும்."

"என்ன திடீர்னு மூணாவது மனுஷன் மாதிரி பேசுற? என்ன னு சொல்லு?"

" அன்னைக்கு அபூவும் புகழும் போன காருக்கு என்ன ஆச்ச? நீ டிபார்ட்மென்ட் ல தானே  இருக்க  நீ விசாரிச்சு சொல்ல முடியுமா? "

"அபூர்வா எனக்கும் தங்கைதான் ஆதி நான் விசாரிக்காமலா இருப்பேன் இந்த இரண்டு மாதங்களில் நான் எவ்வளவு விசாரிக்க முயற்சி செய்தேன் ஆனால் ...."

"ஆனால் எந்த கார் உடனும்  மோதவில்லை   வண்டி கட்டுப்பாடு இழந்து வந்திடுச்சு ஓவர் ஸ்பீடுலெ ட்ரை பண்ணி இருக்கீங்க போல இருக்கு அப்புறம்...."

"சொல்லவேண்டியதை முழுசாக சொல்லி முடித்து விடு."

"  புகழின் அ ஜாக்கிரதை தான் விபத்துக்கு காரணம் என்று கேசை  முடித்து விட்டார்கள்."

" ஜீவா கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஆதியில் மனதிற்குள்  பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. புகழ் எப்படிப்பட்ட சூழலிலும் நிதானத்தை இழக்காத அவன் தன் கர்ப்பமான   மனைவியுடன் செல்கையில் அவன் வேகமாக சென்று இருக்கவோ அஜாக்கிரதையாக நடந்து இருக்கவோ வாய்ப்பு சிறிது கூட இல்லை. இருப்பினும் வழக்கை இவ்வாறு முடித்து இருப்பதற்கு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும் என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட ஆதி ,"இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ஜீவா?" என வினவினான்.

"நான் ஆபிஸ் ல உள்ள நிலவரத்தை தான் உனக்கு தெரியப்படுத்தினேன்.என்னோட சந்தேகம் என்ன னா யாரோஒரு.பெரும்புள்ளி இதில சம்மந்தப்பட்டிருக்கனும் அதனால.தான்.எந்த சுவடும் இல்லாம அவசரம் அவசரமா கேஸை மூடிட்டாங்க."

" ம்....நானும் அதான் யோசிச்சேன்."

" நீ கவலைபடாத நான் ரகசியமா விசாரிச்சிட்டு தான் இருக்கேன்.என் பதவியும் அதற்கு உதவி பண்ணும் கூடிய சீக்கிரம் அந்த நபரை நம்ம பிடிச்சிடலாம்."

ம்....ரொம்ப.....நன்றிடா .நிலா எந்திரிக்கிற நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்,"என்றவாறு வீட்டை நோக்கி சோர்வுடன் நடந்து சென்ற நண்பனை பார்த்த ஜீவா,"உன்னை இந்த நிலையில பார்க்க என்னால முடியலைடா.உன்னை இந்த நிலைக்கு ஆளாக்குனது யாரா இருந்தாலும் அவங்களை நான் கண்டுபிடிச்சு உன் முன்னால கொண்டு வந்து நிறுத்தறேன்,"என்று மனதிற்குள் சபதம் செய்து கொண்டான்.

***********

தூங்கும் குழந்தையை மெதுவாக தூளியில் கிடத்தியவள்குழந்தையின் மீது ஒரு சிறிய துணியை போர்த்தினாள். அவளது  செயலை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி நீங்க குழந்தைக்கு சொந்தமா என வினவினார்.

இல்ல மேடம் இந்த குழந்தை யார் என்றே எனக்கு தெரியாது அப்புறம் ஏன் இவ்வளவு கரிசனம் காட்டுறீங்க.

எனக்கே தெரியவில்லை ஏதோ ஒருவித ஈர்ப்பு தோன்றுகிறது இந்த குழந்தையை பார்க்கும் பொழுது சரி மேடம் நான் கிளம்புகிறேன் என்றவாறு விடைபெற போன மதுமிதாவை கொஞ்சம் நில்லு மா  உன்னை இதற்கு முன் யார் என்று  தெரியாது உன் பெயர் அட்ரஸ் செல்பேசி எண் கொடுத்து விட்டு செல் என்று கூறினார் அந்த நடுத்தர வயது பெண்மணி.

ஒரு நிமிடம் யோசித்தவள் பின் தன் பெயர் செல்பேசி எண் மட்டும் கொடுத்தால் அட்ரஸ் வேண்டாம் மேடம் ப்ளீஸ் சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் உங்களுக்கு அதை தர இயலாது என்று கூறினார் சரி கீதா அந்த செல்பேசி எண் செக் செய்து கொள் என்று கூறியவுடன் அவரது உதவியாளர் டேக் கேர் எண்ணில் இருந்து மதுமிதாவின் என்னை அழைக்க அவள் செல் அழகாக பாடியது இது எங்களுடைய பார்மாலிட்டி நீங்க தப்பா எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற உதவியாளரை பார்த்து சிரித்தது எனக்கு புரிகிறது இது குழந்தை சம்பந்தப்பட்ட விஷயம் நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி புன்னகையுடன் விடைபெற்றாள்.

அன்றிலிருந்து மதுமிதா டேக் கேர் சென்டர் வருவதை வழமையாக்கிக் கொண்டாள் யோகா வகுப்புகளை புறக்கணித்த மதுமிதா அந்த நேரத்தில் டேக் கேர்  வர தொடங்கினாள் தினமும் நிலாவை மட்டும் பார்த்துக் கொண்டாள் அவளுடன் பேசினாள் அவளை கொஞ்சி விளையாடினாள் குழப்பமடைந்த அவளின் மனதிற்கு மருந்தாக நிலா இருந்தால் தாயில்லாத நிலாவிற்கு தாயாகமது  மாறினாள்.

ஒரு வாரம் கடந்த இருந்த நிலையில் அன்று ஞாயிற்றுகிழமை  டேக் கேர்   வருவதற்கு மதுவினாள் இயலவில்லை நிலாவின் தந்தைக்கு அன்று விடுமுறை என்பதால் நிலாவும் வரவில்லை. தினமும் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவுக்கு நிலாமை காணாமல் இருக்க இயலவில்லை என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்த மதுமிதாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்ற செல்பேசியை எடுத்து ஏதோ தேடினாள் சில நிமிடத்திற்கு பிறகு தான் செய்ய வேண்டிய வேலையை குறித்துக்கொண்டு முதல் முறையாக தன் தந்தையை காண அவரது அறைக்கு சென்றாள்.

விபத்து நடந்து முடிந்த இந்த நான்கு மாதங்களில் உணவு உண்பதற்கு தவிர்த்து எதற்கும் அறையைவிட்டு வெளியே வருவதில்லை. இன்று முதல் முறையாக காலை வேளையில் வெளியே வந்த மது வை பார்த்த பணியாட்கள் ஆச்சரிய  பார்வை பார்க்க தவறவில்லை. ஆனால் இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாத மது நேராக தன் தந்தையின் அறையை  அடைந்தாள். ஒரே ஒரு நொடி தயங்கிய பின் மெதுவாக கதவை தட்டினாள்.

" யாரது .....?"
கம்பீரமாக ஒலித்த தன் தந்தையின் குரலில் ஒரு நிமிடம் பெருமிதம் கொண்டவள் ,"நான் தான்பா மதுமிதா," என்றாள் தயங்கியபடி. அடுத்த நொடி அந்த அறையின் வாசல் திறந்து வெளியே வந்த அவள் தந்தை ," நேராக உள்ளே வந்து விட வேண்டியதுதானே மூன்றாவது மனிதர் போல் இங்கு ஏன் நிற்கிறாய்?" என்று கூறிய வண்ணம் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். தயங்கியபடி உள்ளே நுழைந்த மதுமிதா அதே தயக்கத்துடனேயே தன் தந்தை சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமர்ந்தாள்.

"சொல்லும்மா என்கிட்ட எதுவும் சொல்லனுமா "

"ஆமாப்பா நம்ம சென்னை வந்து கிட்டத்தட்ட நான்கு மாதம் ஆகிடுச்சு நான் காலேஜ் போகலாம்   னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று வினவினாள்.

"எனக்கு ரொம்ப சந்தோசம் டா நானும் இதை பத்தி யோசிச்சு கிட்டு தான் இருக்கிறேன்.சரி சொல்லு என்ன படிக்கலாம் இருக்க? "

"எனக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி நான் என்ன படிச்சிகிட்டு இருந்தேன் எந்த காலேஜ்ல படிச்ச இப்படி எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை "

"நீ பிசினஸ் மேனேஜ்மென்ட் அதாவது பிபிஏ படிச்சிக்கிட்டு இருந்த இப்போதான் இரண்டாவது செமஸ்டர் முடிந்தது."

" நான் இப்பவும் அதான் படிக்கணுமா?"

" அது உன் இஷ்டம் நான் உன்னை எப்பவும் கட்டாயப்படுத்துவது இல்லை அதே போல இப்பவும் கட்டாயப்படுத்த மாட்டேன் ."

"எனக்கு என்னமோ பிசினஸ் அவ்வளவாக பிடிக்கல பா. "

"சரிமா உனக்கு வேற என்ன படிக்கணும்னு நினைக்கிறாயோ அது படி.ஏதாவது யோசிச்சு இருக்கியா இல்ல இனிமேதான் யோசிக்கணுமா?"

"எனக்கு என்னமோ இன்டீரியல் படிக்கலாம் தோணுது பா ஆனா அதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு. "

"பிரச்சனையா அதுல என்னமா பிரச்சினை? "

"நான் ஆன்லைன்ல தேடி பார்த்தேன் இன்டீரியர் காலேஜ் சாயந்திரம் காலேஜ்  மட்டும் தான் இருக்கு  டைமிங் வந்து மூணு மணிக்கு தான் ஆரம்பிக்குது 8 மணி வரை காலேஜ் இருக்கும் ரொம்ப நைட் ஆயிடும் அதான் ரொம்ப யோசனையா இருக்கு ஆனா அது தவிர வேறு ஏதும் படிக்கணும் எனக்கு தோணல."

"இதுல இப்படி ஒரு சிக்கல் இருக்கா?"

"ஆமாப்பா அதான் உங்கள பார்த்து ஏதாவது யோசனை கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்."

"நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாமா உன்னை டிரைவர் கொண்டு போய் விட்டுட்டு திரும்ப அவரை உன்ன கூட்டிட்டு வந்துருவாரு.உனக்கு ஏத்த காலேஜ் எதுன்னு நான் செலக்ட் பண்ணட்டுமா இல்ல நீ பாக்குறியா? "

"இல்லப்பா நான் இப்போ யோகா கிளாஸ் போறேன் இல்லையா அந்த ஏரியாவிலேயே ஒரு காலேஜ் இருக்கு அதுவும் நல்ல காலேஜ் தான் நான் நெட்ல ரிவ்யூஸ் எல்லாம் பார்த்துட்டேன். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் விசாரிக்கவும் செஞ்சுட்டேன் அங்கேயே படிக்கலாம் நினைக்கிறேன் காலையில யோகா கிளாஸ் முடிச்சுட்டு அப்படியே மதியம் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்கு காலேஜ் அட்டண்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வரலாம்னு தோணுது நீங்க என்ன நினைக்கிறீங்க ?"

"எனக்கு கொஞ்சம் டைம் கொடு மா நான் யோசனை பண்ணி விசாரிச்சுட்டு உனக்கு நாளைக்கு என்ன ன்னு சொல்றேன் சரியா.காலையில போயிட்டு நைட் வந்ததுன்னா உங்க அம்மாவை ஒத்துக் கொள்ள வைக்கணும்  இல்லையா ?"

"சரிப்பா. "விடைபெறுகிறேன் என்று உணர்த்தும் விதமாக தலையை மேலும் கீழும் ஆட்டி மதுமிதா தன் தந்தையின் அறையை விட்டு வெளியேறினாள். போகும் தன் மகளை யோசனையுடன் பார்த்தவர் தன் வேலையில் மூழ்கினார்.

"என்ன சொன்னீங்க மதுமிதா ஈவினிங் காலேஜ்ல படிக்க போறேனு உங்க கிட்ட வந்து கேட்டாளா ?"

"ம்..ஆமா காலையில யோகா கிளாசுக்கு போக போறேன் அப்புறமா காலேஜ்க்கு படிக்க போறேன் அப்படின்னு சொல்லிட்டு என் கிட்ட வந்து பர்மிஷன் கேட்கிறாள். ஒருவேளை  அப்படி நான் பர்மிஷன் கொடுத்தா 8 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பறப்ப பொண்ணு வீட்டுக்கு வர திரும்பி நைட்டு ஒன்பது மணி ஆயிடும் 12 மணி நேரம் வெளியே இருக்கும் எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல மா...."

"அவ யோகா கிளாஸ் இருக்கு போகவே இல்லை ங்க.இந்த ஒரு வாரமா கிளாஸ் லீவு ஆனா அவ தினமும் காலையில் கிளம்பும் யோகா கிளாஸ் கு போறா . நான் நம்ம சின்ன பொண்ணுகிட்ட அனுப்பி. என்ன ஆச்சுன்னு கேட்கிறேன்."

"அவளுக்கு என்னம்மா தெரியும் "

"நான் நேத்து மதுமிதா  பின்னாடி அவளை அனுப்பி வைத்தேன் அவள் எங்க போற என்ன பண்றான்னு பார்த்துட்டு வா ன்னு சொல்லி அதனால் அவகிட்ட கேட்கிறேன் கொஞ்சம் இருங்க ,"என்றவாறு தன் சிறிய மகளை அழைத்து வந்தார்.

"மதி உன்ன நா அக்காவா ஃபாலோ பண்ணி போக சொன்னேனே போனியா என்ன ஆச்சு அக்கா எங்க போனா?"

"அம்மா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல அக்கா யோகா  கிளாசுக்கு தான் போனா அங்க வாட்ச்மேன் இன்னிக்கு கிளாஸ் இல்லன்னு சொன்னதும்  பக்கத்துல இருக்குற பார்க்குல போய் உட்கார்ந்து இருந்தா. அங்கே நிறைய குழந்தைகள் விளையாடிட்டிருந்தாங்க அவங்களை பார்த்து சந்தோஷமாக சிரிச்சுகிட்டே இருந்தாலே தவிர வேறு எதுவும் செய்யல நானும் ஒரு அரை மணி நேரமா  பார்த்ததேன் அவ தான் உட்கார்ந்திருந்தா  அந்த குழந்தைகளை பார்க்கும் போது அவன் மனசுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்  அதனால அங்க உக்காந்து இருக்கா அப்படின்னு நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லமா ,"என்று கூறினாள்.

"நீ தேவையில்லாம மனசு போட்டுக் குழப்பிக்கிற னு நினைக்கிறேன்மா."

"முடியலைங்க ரொம்ப பயமா இருக்கு ஒன்னும் தெரியாத பொண்ணா இருக்கா.  முதலில் இருந்த  கோபம் எங்க போச்சுன்னு தெரியல இப்ப ரொம்ப சாந்தமாக மாறிட்ட. "

"எல்லாம் நன்மைக்கே நான் எதைப் பற்றியும் கவலைப்படாத. ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுவிடு நடப்பது நடக்கும். நாமன்  காலேஜுக்கு  அட்மிஷனுக்கு என்னன்னு ஏற்பாடு பண்றேன்."

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வீட்டிலிருந்தபடியே யோசனை செய்த மதுமிதா அடுத்த நாள் எப்பொழுது விடியும் என்று காத்திருந்தாள் என்றும் போவதையும் விட அன்று முன்னதாகவே வீட்டிலிருந்து புறப்பட்டு நேராகப் சென்று நின்றது யோகா கிளாஸில் தான் அங்கே இருந்த ஆசிரியரிடம் ,"மேடம் சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் கிளாசுக்கு வர முடியல உங்ககிட்ட ஒரு சின்ன உதவி மட்டும் கேட்டு வந்து இருக்கேன் எனக்கு அந்த ஒரு சின்ன உதவி மட்டும் செய்வீர்களா, "என்று வினவினாள்.

"சொல்லுமா உன்னை இங்க சேர்க்கும்போது உங்க அம்மா உன்னை பத்தி எல்லாம் விஷயம் சொல்லிட்டாங்க என்ன செய்யணும்னு சொல்லு மா."

"எனக்கு மனசு யோகா பண்ணி அமைதியாக ஆகல ஆனா பக்கத்துல இருக்குற பார்க்குல விளையாடிக்கிட்டு இருக்க குழந்தைகளைப் பார்க்கும்போது மனசு ரொம்ப அமைதியா இருக்கு எந்தவிதமான குழப்பமும் இல்லாம ரொம்ப தெம்பா இருக்கு ஆனா வீட்ல அத புரிஞ்சிக்க மாட்டாங்க அதனால ..."

"அதனால? "

" நான் யோகா கிளாசுக்கு வரப் போவதாக சொல்லிட்டு இந்த வந்தர்றேன் மேடம் எனக்கு கொஞ்சநாள் மனதை அமைதிப்படுத்தியதுக்கு   அப்புறமாத்தான் எதையும் என்னால செய்ய முடியும். அதுக்கு எனக்கு யோகா சிறந்த மருந்தா தெரியல .அந்த குழந்தைங்களோட சிரிப்பும் அவங்களுடைய சேட்டைகளும் தான் தெரியுது. எனக்காக எங்க அப்பா அம்மா கேட்டா நான் இங்கு தான் வந்துட்டு போறேனு  உங்களால் சொல்ல முடியுமா ப்ளீஸ்...."

"சாரிமா என்னால அப்படி பண்ண முடியாது "

" ப்ளீஸ்..மேடம் நீங்க பொய் எதுவும் சொல்ல வேணாம் நான் அவங்க கிட்ட சொல்லி சமாளிச்சுகறேன்."

"ம்....." என்று அவர் யோசிப்பதை கண்டவள்,"ப்ளீஸ் மேடம் என் நிலையை புரிஞ்சுக்கோங்க என்னால எந்த வேலையும் செய்யமுடியலை. சாப்பிடம்போது வேலை செய்யும் பௌது இப்படி ஒவ்வொரு நொடியும் மறந்த போனஞாபகங்களைமனசும் மூளையும் தேடுது. நண்பர்கள் யாருஎதிரிகள் யாரு இப்படி எதுவும் ஞாபகம் இல்லாம யார்கிட்டயும் பழகவும் முடியலை."

"சரி மா நீ இவ்வளவு தூரம் சொல்ற அதனால நான் ஒத்துக்குறேன்.ஆனா ஒரு கண்டிஷன் நான் பொய் சொல்ல மாட்டேன்அவங்களா என்கிட்ட உன்ன பத்தி கேட்டா நான் உண்மையை சொல்ல வேண்டியது வரும்   அதேசமயம் நானா அவங்களை  காண்டக்ட் பண்ணி உன்னை பத்தி எதுவும் சொல்ல மாட்டேன் சரியா. "

"ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேடம். இது போதும் எனக்கு  அம்மா உங்ககிட்ட கேட்காத மாதிரி நான் பாத்துக்குறேன் அவ்வளவு நாளெல்லாம் நான் இந்த பொய்யை தொடர மாட்டேன் கூடிய சீக்கிரம் என் மனசை நான் சரிப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட முயற்சி பண்றேன்." ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று கூறியவாறு அவ்விடம் விட்டு வெளியேறி நேராக டேக் கேர் சென்டர் நோக்கி சென்றாள்.

டேக் கேர் நடத்துனரின் அண்ட் அறையை அடைந்த மதுமிதா அவரிடம் பேச முயன்றாள்.மதுமிதாவை அடையாளம் கண்டு கொண்டவர் அவரை வரவேற்கும் விதமாக சிரித்தார்.
"குட் மார்னிங் மேடம் "

"வெரி குட் மார்னிங் மிஸ் மதுமிதா. என்ன காலையிலேயே இந்தப்பக்கம் வந்து இருக்கீங்க ஏதாவது சொல்லனுமா? "

"எனக்கு உங்ககிட்ட ஒரு சின்ன உதவி வேணும் மேடம் "

"சொல்லுங்க மது என்ன உதவி வேணும் "

"எனக்கு ஒரு பார்ட் டைம் வேலை கிடைக்குமா மேடம்? "

"என்ன? பார்ட் டைம் வேலையா?நீங்கள் இப்படிக் கேட்பதற்கு காரணம் நிலா குழந்தை இல்லையே?"

"நிலாவும் ஒரு காரணம்தான் ஆனால் நிலா மட்டும் காரணம் இல்லை."

"எனக்கு புரியல? "

" சில மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு ஆக்ஸிடெண்ட்ல எனக்கு கொஞ்சம் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு அதுல இருந்து என்னால  வெளி வர முடியல ரொம்ப டிப்ரஷன் ஆகிடுச்சு. இங்க வந்து நிலாவை பார்த்ததுக்கு அப்புறம்தான் கொஞ்சம் நிம்மதியா.  இருக்கு அதனால இங்க  கொஞ்ச நாள் வேலை பார்க்கலாம் என்று யோசிச்சேன் அதுக்கு தான் உங்க கிட்ட பர்மிஷன் கேட்டு வந்து நிற்கிறேன்."

"ம்....ஆனா இப்போ ஸ்டாப்ஸ் யாரையும் நாங்க எடுக்கலையே? "

இதைக் கேட்டதும் மதுமிதாவின் முகம் சோர்ந்துவிட்டது. இவர்கள் பேசியவற்றை கேட்டுக்கொண்டிருந்த வேறு ஒரு பெண் உள்ளே வந்து அவரின் காதுகளில்,"மேடம் நிலா பாப்பா காலையில வந்ததிலிருந்து அழுதுக்கிட்டே இருக்கு யார் தூக்கினாலும் அழுகுவதை நிறுத்தவில்லை  யாரு சமாதானப்படுத்தினாலும் சமாதானமே ஆகல. ஒருவேளை மதுமிதா தூக்குனா சமாதானப்படுத்தினா குழந்தை சரியாகுமோ அப்படி இருந்தா இந்த பார்ட் டையம் வேலை கொடுக்கிறது நல்லது தானே மேடம். நல்ல யோசனை பண்ணிக்கோங்க ,"என்று கூறினார்  அவள் கூறிய உடன் அந்த. ப்ரின்சிபல் மதுவிடம் ," சரிம்மா நீங்க சொல்றது நாளா நான் உனக்கு பார்ட் டைம் ஜாப் தரேன்.  காலைல ஒன்பது மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரைக்கும் நீங்க இருக்கணும். "

"ரொம்ப தேங்க்ஸ் மேடம் ."

" 9 மணிக்கு ஷார்ப்பா வந்துடணும்  மதியம் ஒரு மணி வரைக்கும்   இங்க இருக்கணும்.அப்புறம் உங்களுக்கு சேலரி."

"இல்ல மேடம் நான் சாலரி எதிர்பார்த்து இந்த வேலைக்கு வரல ஒரு சோஷியல் சர்வீஸ் தான் நினைச்சுக்கோங்க நானும் சுயநலமா தான் வந்து இருக்கேன் அதனால எனக்கு சேலரி  வேண்டாம் மேடம்"

" நீங்க அப்படி சொல்லலாம் மதுமிதா ஆனால் அது சரியாக வராது."

"சரி மேடம் உங்க மனசு திருப்திக்கு நீங்க எது கொடுத்தாலும் சரி."

"நிலா அழுகுறா நீங்க முதல்ல போய் நிலாவை சமாதானப் படுத்துங்கள் மத்த விஷயங்களை அப்புறமா பேசிக்கொள்ளலாம்," என்று கூறிவிட்டு மதுவை நிலாவில் அறைக்கு அனுப்பி வைத்தார்.

நிலாவில் அறைக்குள் நுழைந்தபோது காதுகளில் நிலாவில்  அழுகை சத்தம் பலமாக கேட்டது வேகமாக குழந்தையின் அருகே ஓடி சென்ற மதுமிதா"... குட்டி... குட்டி ...குட்டி ,"என்று கூறியவாறு குழந்தையை எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் என்ன ஒரு ஆச்சரியம் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு இருந்தது.

ஆதித்யா மற்றும் மதுமிதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக நி லா அமைந்தாள் தந்தை இல்லாத பொழுதுகளில் தாயுடனும் தாய் இல்லாத நேரங்களில் தந்தையிடமும் அக்குழந்தை வளர்ந்தது. அழகிய குடும்பம் அங்கே யாருமறியாமல் உருவெடுத்தது.

(தொடரும் ....)


Continue Reading

You'll Also Like

98K 509 3
Removed for book publishing. No.#1 in Non-Fiction From [23|12|17 to 02|01|2018] [04|01|18 to 11|01|18] [13|01|18 to 22|01|18] [24|01|18 to 04|02|18]...
257K 9K 39
அவள் புரியாத புதிர்
253K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
52.4K 3K 32
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா