8

558 73 15
                                    

Part (2-2)

❤️❤️❤️❤️❤️❤️❤️

கொஞ்ச நேரம் உன் மடியில...
படுக்க வா
என்று கேட்டதும்....
சில வினாடி சிலையாய் இருந்தவள்..

சுதாரித்து...

ம்ம்ம்
என்று... விரித்த பாயை மறுபடியும் அதன் இடத்திலே வைத்து...
இதழில்💞 சிறிய வெட்கபுன்னகையுடன்..

புடவையின் கொசுவத்தை பிடித்தபடி... மெதுவாய் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்..

வாங்க..

மெதுவாக நடந்து...
கட்டிலில் அமர்ந்து... அவள் மடிமீது தலையை வைத்து கால் நீட்டி படுத்தான்...

உலகத்தில் நிம்மதியான இடத்தை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சி
அவன் முகத்தில்...

முல்லை💞க்கு உள்ளுக்குள்ளே... ஏதோ செய்தது...

கை விரல்களை தயக்கத்துடன்...
அவன் தலைமுடியில் நுழைத்தாள்...

அது அவனுக்கு மேலும் ஆறுதலாக இருந்தது....

தூங்குங்க... அப்டியே...
என்று சொல்லியவள்...

இவ்வளவு நேரம் அவகள அணைத்திருந்தோம்....
அது ஒன்றும் தோணவில்லை...
மடி மீது படுத்திருக்கும் போது.. என்னென்னவோ செய்கிறதே... என்று எண்ணி கொண்டாள்...

அந்த நினைவை... கொண்டு வந்து ஆராய்ச்சி செய்து பார்த்தாள்...

அணைக்கும் போது... இருந்த உணர்வு ஒன்று கூட இப்போது நியாபகத்துக்கு வர வில்லை....

அவளுக்கே ஆச்சரியம்...
அப்போது நாம் எந்த மன நிலையில் இருந்திருப்போம் என்று தனக்கு தானே வினா எழுப்பினாள்...

மடிமீது நெளிந்தவனை பார்த்து..
தன் கேள்வியை ஒதுக்கி வைத்து..

என்னங்க தூங்கலயா?...
கண்ண மூடி படுங்க..
என்றவள்..

அப்போது தான்.. கையில் உண்டான
லத்தி அடியின் காயத்தை கண்டாள் ..
ரத்தம் கண்ணி போய் இருந்தது..

சட்டென்று ஒரு துளி நீர் விழியிலிருந்து வெளிப்பட்டு... படுத்திருந்த அவனின்
நெற்றியில் பட்டது...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now