33

503 70 7
                                    

K💞M

வெளியே திட்டுனாலும்... உள்ளுக்குள்ள.. எவ்ளோ பாசம் வச்சிருக்கா...க

அவுக தூங்கியிருப்பாகளா....?
போய் பாக்கலாமா..?

வயிற்றை பிடித்தபடி..
மெதுவாக எழுந்தவள்...
பாதங்களை பூனை போல் வைத்து... அவர்கள் இருவரின் நித்திரையை கலைக்காமல் வெளியே வந்தாள்...

ஹாலில் கண்ணன் தூங்க...
கதிர் தூணில் சாய்ந்தவாறு...
அமர்ந்து இருப்பதை கண்டவள்...ஆச்சரியத்துடன்

ஏங்க தூங்கலையா...?
என்று குரல் கொடுத்தாள்...

அதிர்ந்து திரும்பியவன்..
ஹேய்!! நீ என்ன..? பண்ற..
இன்னும் தூங்கலையா..?

அ.....து தூக்கம் வரல...
அதான்.. நீங்க தூங்கிட்டிகளானு
பா...ர்...க்...க என்று இழுத்தாள்..

கண்ணன் இருவரின் பேச்சு சத்தத்தில் லேசாக நெளிந்தான்...

உஷ்!! என்று தன் உதட்டில்
ஆள் காட்டி விரலை வைத்தவன்...

வெளிய வா!! என்று அவளுக்கு சைகை செய்து... எழுந்தான்....

இருவரும் மெல்ல நடந்து...
வாசற் கதவை திறந்து...வெளியே வந்தனர்...

வா இப்டி உட்காரு என்று தன் அருகே அவளுக்கு கைகளை காட்டினான்...

இருவரும் அருகருகே திண்ணையில் அமர்ந்தனர்...

குளிர் காற்று உடலை தழுவியது..... கைகளை குறுக்காக கட்ட முடியாமல்... லேசான வயிறு வலியில் சிரம பட்டாள்...

ஹேய்!! என்னாச்சு குளிருதா???

இல்லேங்க..

இன்னுமா வயிறு வலிக்குது...

இப்போ ரொம்ப இல்லேங்க.. அப்பப்போ லேசா வலி வருது..

நாளைக்கு சரியாகிடுமா..?

ஆஹான்.. சரியாகிடும்ங்க...

ப்ச்..ரொம்ப கஷ்டம்ல இந்த வலி.. இவ்வளவு நாள் இதெல்லாம் தெரியாமலேயே இருந்து இருக்கேன்.. பாரு...

பொண்ணுங்களா பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சு தானே ஆகணும்.. என்ன பண்றது...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now