37

480 64 22
                                    

💖 K💞M 💖

Ups! Ten obraz nie jest zgodny z naszymi wytycznymi. Aby kontynuować, spróbuj go usunąć lub użyć innego.


💖 K💞M 💖

Part (1-2)

கேக்
வெட்டு...ப்பா முல்ல💞.....

ஆஹான்....
சரி மாமா..!!

வெளியே பைக் சத்தம் கேட்டு ஆர்வத்துடன் வேகமாக நிமிர்ந்தவள்...

வேற யாரோ ப்பா...என்ற ஜீவாவின் பதிலில் மனதில் மீண்டும் துக்கம் படர...

இதயம் பலமாக நொறுங்க போகும் நிமிடம்... வாசலில்  காலணியை அகற்றியவனை பார்த்ததும்...

கண்களில் நீர் படர்ந்து விழித்திரையில் பார்வை தடை பட... வேகமாக கண்களை துடைத்தவள்... வந்து கொண்டிருக்கும் கதிரை பார்த்தாள்...

டேய்...!!!! வாடா...
எவ்ளோ நேரம்டா.?
உனக்கு போன் போடறது.....

டேய்...!!! எங்கடா போய் இருந்தே..?

டேய்...!!!சொல்லிட்டு போக மாட்டியாடா....??

அண்ணா...!!! எங்கண்ணா போன..?

என்ற பல கேள்வி கணைகளை காதில் வாங்க மறுத்தவன்...

ஸ்தம்பித்து முல்லை💞யின் முகத்திலே கண்களை நிலை குத்தி வைத்திருந்தான்...

இதயத்தை தவிர எந்த புலன்களும் செயல் படாமல் போனது போல் இருவரும் சிலையென நிற்க...

முல்ல💞..
என்ற தனத்தின் குரலுக்கு நிஜ உலகிற்கு நுழைந்தாள்...

கேள்வி எல்லாம் அப்புறம் கேக்கலாம்...

முருகன் ரொம்ப நேரம் Wait
பன்றான் பாரு...அவன் வீட்டுக்கு போக வேண்டாமா..???

கதிர்..!! இப்டி வா...ப்பா
முல்ல💞பக்கத்துல வந்து நில்லு... என்ற அம்மாவின் குரலுக்கு...

கால்கள் நடந்ததே தவிர கண்கள் அவளிடமிருந்து விலகவில்லை..

முல்ல💞 நீ
கேக் வெட்டுமா...என்ற அத்தையின் குரலுக்கு செவி சாய்த்தவள்...

மெழுகுவர்த்திக்கு
தன் சுவாசத்தை பரிசளித்து...
அதற்கு பிரதிபலனாய்..

கேக்..கிற்கு நெகிழி ஆயுதத்தால்... காயத்தை உண்டாக்கினாள்...

அனைவரும்
பிறந்தநாள் வாழ்த்து பாட...
மன நிறைவாய் முதல் கேக் பாகத்தை எடுத்தவள்....

யாருக்கு கொடுப்பது என்று தடுமாற...

சிறிதும் கதிர் தயங்காமல்..
அவள்💞 கைகளிலிருந்து வாங்கி அவளுக்கே ஊட்டி விட்டான்...

இருவர் கண்களும் மீண்டும் கலங்க...

நீ ஊட்டி விடு...ப்பா முல்ல💞 என்றதும்...

அவளும் கதிருக்கு ஊட்டி விட....
விரல் நுனி அவன் உதட்டில் பட..இனம் புரியா உணர்வால் தடுமாறினாள்...

அனைவருக்கும் கேக் பரிமாற..

அதுவரை இருந்த  இறுக்கம் இருவருக்கும் மெல்ல குறைந்தது ...

அம்மாடி முல்ல💞 அப்பா கிளம்புறேன்.. ம்மா அம்மா தனியா இருப்பா... என்றவர்

முல்லை💞யை வாழ்த்தி
இருவரையும் ஆசீர்வதித்து....
பாத்துக்கோங்க மாப்ள என்றவர்
முக மலர்ச்சியுடன்..

கண்களில் கசிந்த நீரை துடைத்தவாறு அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினார்...

அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல...

இருவரும் சில நொடி தங்களை கண்களால் சிறைபிடித்திருந்தனர்..

ஒருவாறு  நிகழ்காலத்திற்கு வந்தவன்....

லேசாக தொண்டையை கணைத்து... உள்ள வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று.....

ஒரு வித தீர்மானத்துடன் Shirt பட்டனை நீக்கியவாறு தங்கள் அறைக்கு செல்ல...

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விடுவித்தவள்...அதே தீர்மானத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்..   
                      முல்லை💞

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

K💞M (One Shots)#KM Stories Opowieści tętniące życiem. Odkryj je teraz