53 இறுதி பகுதி

1.4K 71 27
                                    

இறுதி பாகம்

அது சக்திக்கு ஐந்தாவது மாதம்.  ருத்ரன் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான், தன் மனைவியை இறுக்கமாய் கட்டிக் கூட பிடிக்க முடியாமல். 'கர்ப்பமாய் இருக்கும் பெண்ணை இறுக்கமாய் அணைப்பது என்பது அவளுக்கு நல்லதல்ல' என்ற ஒற்றை வரி, அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியது. தன் கையும் காலும் கனமான இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை போல் உணர்ந்தான் ருத்ரன். அவனால் சக்தியிடமிருந்து விலகி இருக்கவே முடியவில்லை. நமக்குத் தான் தெரியுமே, எந்த அளவிற்கு அவன் தன் மனைவியிடத்தில் பைத்தியமாய் இருந்தான் என்று... ஆனால் அவனுக்கு வேறு வழி இல்லை. சக்தி விஷயத்தில் அவன் எந்த தவறையும் செய்ய துணியவில்லை. இவற்றையெல்லாம் எண்ணியபடி தன் அறையில் உலவி கொண்டிருந்தான்.

அப்பொழுது, அறையின் கதவை சாத்தி தாளிட்டுவிட்டு வந்தாள் சக்தி.

"பால் குடிச்சியா சக்தி?" என்றான் அக்கறையுடன்.

"குடிச்சிட்டேன்"

"அதுல குங்குமப்பூ போட்டுகிட்ட இல்ல?"

"போட்டுக்கிட்டேங்க"

"மாத்திரை சாப்பிட்ட இல்ல?"

"ஆங், சாப்பிட்டேன்... எல்லாத்தையும் தவறாம எடுத்துக்கிட்டேன். இப்போ உங்களை எடுத்துக்க போறேன்"

சில நொடி திகைத்து நின்றான் ருத்ரன். அவன் தொண்டையில் இருந்து மெல்லிய சிரிப்பொலி, நம்பகத்தன்மை இல்லாமல் வெளியேறியது. அவன் முக பாவத்தை படித்தபடி அவன் அருகில் அமர்ந்த சக்தி, குழப்பமே வடிவாய் இருந்த அவனைப் பார்த்து சிரித்தாள்.

"என்ன அப்படி பாக்கறீங்க?" என்றாள் அவன் கன்னத்தில் கோடு வரைந்த படி.

"நீ... என்... ன சொன்ன?"  அதே முகபாவத்துடன் கேள்வி எழுப்பினான் ருத்ரன்.

"உங்களை எடுத்துக்க போறேன்னு சொன்னேன்... அப்படின்னா என்ன அர்த்தம்னு உங்களுக்கே தெரியும்"

"சக்தி, உனக்கே நல்லா தெரியும், நீ பிரக்னண்டா இருக்க... நம்ம அஞ்சு மாசமா டிஸ்டன்ஸ்ல இருக்கோம்... நீ சொல்றதை நான் சீரியஸா எடுத்துக்குவேன், அது விளையாட்டா இருந்தாலும் கூட..." என்றான் தடுமாற்றத்துடன்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now