14 தந்திரம்

948 56 7
                                    

14 தந்திரம்

அந்த வீடு முழுக்க சுதந்திரமாய் சுற்றித் திரிய அனுமதிக்கப்பட்டாள் சக்தி. மேலும் அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம், அந்த வீட்டின் தலைவாசல் திறந்தே வைக்கப்பட்டிருந்தது. ருத்ரனிடம் தெரிந்த தன்னம்பிக்கை அவளை அசைத்து தான் பார்த்தது. அவளை எதற்காகவும் அவன் கட்டுப்படுத்தவே இல்லை. மொட்டை மாடிக்குச் சென்று, அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டாள் சக்தி. அந்த வீட்டிலிருந்து வெகு தூரத்தில் பிரதான சாலை புலப்பட்டது.  அந்த சாலை, அந்த வீட்டிலிருந்து எப்படியும் இருனூறு மீட்டர் தொலைவு இருக்கும். தரைதளம் வந்த அவள், நேரே சமையலறைக்கு சென்றாள். அவளை அங்கு பார்த்த காமாட்சி, ஆச்சரியப்பட்டாள்

"எனக்கு டீ கிடைக்குமா?" என்றாள் காமாட்சியிடம்.

கிடைக்கும் என்பது போல் தலையசைத்த காமாட்சி, பாலை காய்ச்சினாள்.

"கொஞ்சம் இஞ்சி போடுங்க" என்றாள் சக்தி.

சரி என்று அதில் சற்று இஞ்சி சேர்த்தாள் காமாட்சி.

"ரெண்டு ஸ்பூன் சர்க்கரை வேணும்"

இரண்டு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்து, அந்த தேனீரை அவளிடம் கொடுத்தாள் காமாட்சி. தேனீர் குவளையுடன் வரவேற்பறைக்கு வந்த சக்தி, தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்து, ஏதோ ஒரு திரைப்படத்தை பார்க்க துவங்கினாள்.

தங்களுடைய சவாலை மறந்து அவள் திரைப்படத்தில் லயித்திருந்ததை கண்ட ருத்ரன், குழப்பமடைந்தான். அவள் இங்கிருந்து தப்பிச் செல்லப் போவதில்லையா? காமாட்சிக்கும் அதே குழப்பம் இருந்தது. நம்ப முடியாமல் சக்தியை பார்த்துக் கொண்டு நின்றாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சென்றது. சிரிப்பு, சோகம், அதிர்ச்சி, புன்னகை,  போன்ற ஏகப்பட்ட முக பாவங்களுடன் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. அவள் அந்த திரைப்படத்தில் எந்த அளவுக்கு மூழ்கி இருந்தாள் என்பதை அது காட்டியது.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now