51 சூழ்ச்சிக்காரன்

923 60 9
                                    

51 சூழ்ச்சிக்காரன்

"தக்ஷிணாமூர்த்தி" என்றான் சிவா.

அவனை சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, ருத்ரன் மட்டும் சாதாரணமாய் நின்றான். அவனுக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நிச்சயம் சிவா தக்ஷிணாமூர்த்தியை பற்றி ஆராய்ந்து இருப்பான். சாதாரணமாய் நின்ற ருத்ரனை பார்த்து சக்திக்கு வியப்பாக இருந்தது.

"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"நான் சிவா... டிடெக்டிவ் ஏஜென்ட். தக்ஷிணாமூர்த்தியோட பொண்ணு மாயா, ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா. அவ ருத்ரனை ரொம்ப ஆழமா காதலிச்சவ. அவளோட சாவுக்கு ருத்ரன் தான் காரணம்னு தக்ஷிணாமூர்த்தி நினைச்சுகிட்டு இருக்காரு. அதுக்கு பழிவாங்க, ருத்ரனுடைய வைஃப் சக்தியை  கொல்ல ஒரு ஷூட்டரை  அனுப்பினாரு. ஆனா, யாரும் எதிர்பாராத விதமா சக்தி, தக்ஷிணாமூர்த்தியோட மகள்னு தெரிய வந்தது. மாயாவும் சக்தியும் இரட்டை பிறவிங்க. அதை தட்சிணாமூர்த்தியே சக்தி கிட்ட சொன்னாரு. சக்தி, ருத்ரன் கூட இருக்கிறது தக்ஷிணாமூர்த்திக்கு பிடிக்கல. ருத்ரனை விட்டுட்டு சக்தி தன் கிட்ட வந்துடனும்னு அவர் நினைச்சாரு. சக்தி கிட்ட அவர் நேரடியாக கேட்கவும் செஞ்சாரு. ஆனா, சக்தி அதற்கு ஒத்துக்கல. அதனால, ருத்ரனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பணும்னு முடிவு பண்ணாரு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் அவனை எப்படி ஹாஸ்பிடலுக்கு அனுப்பினாரோ அதே மாதிரி. அவருக்குத் தெரியும், ஹாஸ்பிடல் ஸ்டாஃபை இங்க பார்த்தா நிச்சயம் ருத்ரனுக்கு கோபம் வரும், அவன் வெறி பிடிச்ச மாதிரி நடந்துக்குவான், அவனோட கோபத்தையே காரணமா வச்சு, ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அவனை ஈசியா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிட முடியும்னு அவர் நினைச்சாரு. ஆனா, சக்திக்கு ருத்ரனை பத்தி நல்லாவே தெரியும். அவனை எது கோபப்படுத்தும்னு அவங்க புரிஞ்சு வச்சிருந்தாங்க. அதனால, புத்திசாலித்தனமா அவன் எதுக்காகவும் கோவப்பட கூடாதுன்னு அவன்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க. அதனால ஹாஸ்பிடல் ஸ்டாப்பை பார்த்ததுக்கு பிறகும், ருத்ரன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கிட்டான்"

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now