35 தூய்மை காதல்

936 60 6
                                    

35 தூய்மை காதல்

தனது கார் சீட்டில்  சாய்ந்தமர்ந்து, கண்களை மூடி ஆழமாய் யோசித்தான் சிவா. ருத்ரன் எங்கே? பரமேஸ்வரனின் பேச்சை ஒட்டு கேட்பது யார்? இந்த விஷயத்தில் ருத்ரன் சம்பந்தப்பட்டிருக்க, ஏதாவது வாய்ப்பு இருக்குமோ? தனது நண்பன் உமாபதிக்கு ஃபோன் செய்தான் சிவா.

"சொல்லு சிவா"

"ருத்ரன் கேஸ்ல ஏதாவது பிராக்ரஸ் இருக்கா?

"இல்ல மச்சான்... சென்னை ரொம்ப பெரிய சிட்டி... அதுவும் பாப்புலேஷன் வேற எக்கச்சக்கம். எல்லாத்துக்கும் மேல, உங்க அண்ணன் இன்னும் சென்னையில தான் இருப்பார்னு நான் நம்பல. ஏன்னா,, அவர்கிட்ட ரொம்ப நல்ல கார் இருக்கு. இந்தியாவுல எங்க வேணும்னாலும் அவர் அந்த கார்ல போய்ட முடியும். உங்க யார் கையிலயும் சிக்க கூடாதுன்னு அவர் நினைச்சா, நிச்சயமா அவர் சென்னையில் இருக்க மாட்டாரு. ஏன்னா, அவருக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்"

"அதுக்கு என்ன தான் செய்றது?"

"அவருடைய கார் நம்பர் கிடைச்சா, நான் மேற்கொண்டு ப்ரொசிட் பண்ண சௌகரியமா இருக்கும்"

"அப்படின்னா, நீ இன்னும் வேலையை ஆரம்பிக்கலையா?"

"உங்க அண்ணனோட ஃபார்ம் ஹவுஸ்க்கு முன்னாடி தான் இருக்கேன்..."

"தட்ஸ் குட்"

அந்த இடத்தில், வெகு சொற்ப வீடுகளே இருந்தன... அதுவும், இங்கொன்றும், அங்கொன்றுமாய் வெகுவான இடைவெளியில் இருந்தன. ஃபோனில் பேசியபடி, தனக்கு வெகு அருகாமையில் இருந்த ஒரு வீட்டை நோக்கி நடக்க துவங்கினான் உமாபதி.

"நான் ருத்ரனோட கார் நம்பரை பத்தி மாமா கிட்ட கேட்டு பாக்குறேன். அவர் நிச்சயம் நோட் பண்ணியிருப்பார்னு நினைக்கிறேன்"

"அதை சீக்கிரம் செஞ்சா நல்லா இருக்கும்"

"இன்னொரு விஷயம் உமா, மாமா ஃபார்ம் ஹவுஸ்ல இருந்து வீட்டுக்கு வந்த போது  அவரோட பாக்கெட்ல ஒரு மைக்ரோஃபோன் இருந்திருக்கு"

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now