44 எதிர்பாராத திருப்பம்

914 58 8
                                    

44 எதிர்பாராத திருப்பம்

ருத்ரனின் குரலை கேட்ட தக்ஷிணாமூர்த்தி, அலமாரியை நோக்கி ஓடிச் சென்று, அதிலிருந்த துப்பாக்கியை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு, தன் மகளின் மரணத்திற்கு காரணமான மனிதனை சந்திக்க தரைதளம் வந்தார். அங்கு, சிவந்த விழிகளுடன் ருத்ரன் கொதிக்கும் தணல் போல் நின்றிருந்ததை கண்டார். அவனது சிவந்த விழிகளே கூறின அவன் எவ்வளவு கோபமாய் இருக்கிறான் என்பதை. ஏன் அவன் கோபமாய் இருக்க மாட்டான்? அவர் கொல்ல நினைத்தது அவனது மனைவியை ஆயிற்றே...!

ஆம், அதை செய்ய நினைத்தது அவர் தான். தனக்கு பிரியமானவர்களை இழக்கும் போது, அந்த வலி எப்படி இருக்கும் என்பதை ருத்ரனுக்கு உணர்த்துவதற்காக அவர் அதை செய்ய நினைத்தார். மாயா இறந்த போது அவருக்கு அப்படித் தான் வலித்தது.

அவரது மகள் மாயா சுட்டித்தனமும், சுறுசுறுப்பும் நிறைந்த பெண். அப்பா, அப்பா என்று அவரை சுற்றி சுற்றி வந்தவள். அவரது வாழ்க்கையாய் இருந்தவள். சில வருடங்களுக்கு முன்பு, அவரது மனைவி உடல்நல குறைவினால் இறந்து போனார். அதற்குப் பிறகு, மாயா தக்ஷிணாமூர்த்தியின் உலகமாக மாறினாள். அவருக்கு எல்லாமுமாய் இருந்தாள். அவள் விருப்பப்பட்ட அனைத்தையும் அவர் அவளுக்காக கொண்டு வந்து கொடுத்தார்... ஒன்றே ஒன்றைத் தவிர... ருத்ரன்.

முதல் சந்திப்பிலேயே ருத்ரனிடம் மனதை பறி கொடுத்தாள் மாயா. அவனை மணந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். தன்னை மணந்து கொள்ளும் படி கேட்டு, அவனை சுற்றி சுற்றி வந்தாள். ஆனால், ஏனோ ருத்ரனுக்கு அவள் மீது எந்த ஒரு ஈர்ப்பும் ஏற்படவே இல்லை. எதிர்பாராத விதமாய், மாயா ஒரு விபத்தில் காலமானாள். அவளது மரணத்திற்கு ருத்ரன் தான் காரணம் என்று தட்சிணாமூர்த்தி ஆணித்தரமாய் நம்பினார். அதற்கு பழி தீர்க்க வேண்டும் என்றும் நினைத்தார். யாரும் எதிர்பாராத வண்ணமாய்,  மாயாவின் மரணத்தினால், ருத்ரன் மன ரீதியாய் வெகுவாய் பாதிக்கப்பட்டான். அது ஓரளவிற்கு தட்சிணாமூர்த்திக்கு சந்தோஷத்தை தந்தது. ருத்ரன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து விடாமல், அவனை அங்கேயே வைத்திருக்க, பணத்தை வைத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். தனக்கு ருத்ரனின் மீது மிகுந்த அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டு, ருத்ரனின் குடும்பத்தாரை, அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி, மருத்துவமனையிலேயே அவனை இருக்க செய்தார். ஒருவேளை, ருத்ரன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாலும், அவனை கொன்று விட வேண்டும் என்று திட்டவட்டமாய் முடிவெடுத்திருந்தார். ஆனால், மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ருத்ரன், அனைவருக்கும் *தண்ணீர் காட்டிவிட்டு* சக்தியை தேடி சேலத்திற்கு பறந்தான். ருத்ரனை தேடி கண்டுபிடிக்க, மகேஷை நிர்ணயித்தார் தக்ஷிணாமூர்த்தி. அதன் பிறகு நடந்தவை நாம் அறிந்ததே...!

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now