42 இனிய இதயம்

910 57 6
                                    

42 இனிய இதயம்

ருத்ரனின் முகத்தில் சொல்ல முடியாத அதிர்ச்சி தெரிந்தது. இருந்தாலும் அவன் அவளை குறுக்கீடு செய்யவில்லை.

"நான் உங்க வீட்டுக்கு போனேன். அங்க தான் நான் உங்களைப் பத்தியும் உங்களோட செயல்களுக்கான காரணத்தையும் தெரிஞ்சுகிட்டேன். நீங்க எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். உங்க குடும்பத்தை சேர்ந்தவங்க, உங்க வாழ்க்கையில் நடந்த விஷயங்களை என்கிட்ட சொன்னாங்க. நான் உங்ககிட்ட திரும்பி வந்துட்டேன். அது நிச்சயமா பரிதாபத்துனால கிடையாது. என் வாழ்க்கையில நடக்கிற சம்பவங்களை நெனைச்சி நான் ரொம்ப குழம்பிப் போயிருந்தேன். உங்க கிட்டயிருந்து தப்பிச்சு போகணும்னு நினைச்சேனே தவிர, எங்க போறதுன்னு எனக்கு தெரியல. அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு எந்த திட்டமும் என்கிட்ட இல்ல. உங்க குடும்பத்தை சந்திச்சதுக்கு பிறகு, உங்க கூடயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணேன். ஏன்னா, நீங்க என்கிட்ட எதிர்பார்த்தது வெறும் அன்பை மட்டும் தான்னு நான் புரிஞ்சுகிட்டேன். என் வாழ்க்கையில அப்படிப்பட்ட தூய்மையான இதயம் தான் தேவைன்னு நான் நெனச்சேன். நீங்க என்கிட்ட ரூடா நடந்துக்கிட்டாலும், அது கலப்படம் இல்லாம இருந்தது. அதனால தான் நான் உங்களை மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டு உங்ககிட்ட திரும்பி வந்தேன்"

எச்சில் விழுங்கினான் ருத்ரன்.

"நான் இதை உங்ககிட்ட வேணுமின்னு மறைக்கல. உங்ககிட்ட சொல்லனும்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா ஒன்னு பின்னாடி ஒன்னு, எல்லாம் ரொம்ப வேகமாக நடந்துடுச்சி" 

"ஆனா, எங்க வீட்டுக்கு போகணும்னு நீ என்னை ஃபோர்ஸ் பண்ணவே இல்லையே...? எங்க ஃபேமிலியை சேர்ந்தவங்க யாரும் என்னை திரும்ப கூட்டிக்கிட்டு வர சொல்லி உன்கிட்ட சொல்லலையா?"

"சொன்னாங்க. நானும் கூட உங்களை அங்க கூட்டிக்கிட்டு போகணும்னு தான் நினைச்சேன். ஆனா உங்க மனசுல இருக்குற போராட்டத்தை தெரிஞ்சுக்கிட்ட பிறகு, உங்க மன நிம்மதியை தவிர வேற எதுவுமே எனக்கு முக்கியமா தெரியல.  எல்லாத்தையும் விட அதிகமா, உங்களுக்கு தேவைப்பட்ட நம்பிக்கையை உங்களுக்கு நான் கொடுக்க நினைச்சேன். நான் உங்ககிட்ட திரும்பி வந்த போது, என் முன்னால இருந்த வாழ்க்கையை ஏத்துக்க மட்டும் தான் முடிவு பண்ணி இருந்தேன். ஆனா உங்க கிட்ட நெருங்கி பழக பழக, நான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்த காதல், ஒவ்வொரு நிமிஷமும் அதிகமாயிட்டே இருந்துச்சி. நீங்க என்னை மனசார நம்புனிங்க. அந்த நம்பிக்கைக்கு முழு தகுதியோடு இருக்கணும்னு நான் நெனச்சேன். அதனால தான் எதையும் உங்ககிட்ட இருந்து மறைக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்"

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now