12 சென்னையில் சக்தி

1K 58 9
                                    

12 சென்னையில் சக்தி

சக்தி நினைவின்றி பின் இருக்கையில் இருக்க, மின்னல் வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன். குளோரோஃபார்மின் தாக்கம் இன்னும் அவளது உடலில் இருந்தது. ருத்ரன் சேலம் எல்லையை கடந்த போது, நடராஜனின் அப்பா அருணாச்சலம், திருமண தேதிகளை குறித்து வாங்கிக் கொண்டு, சக்தியின் வீட்டிற்கு வந்தார். பூட்டப்பட்ட வீட்டை பார்த்து அவர் குழப்பம் அடைந்தார். சக்தி கிளம்பி சென்று விட்டாளா? ஆனால் தன்னிடம் கூறாமல் அவள் போக மாட்டாளே...

அவர் விசாலாட்சிக்கு ஃபோன் செய்தார். அழைப்பை ஏற்ற விசாலாட்சி, வேலை முடிஞ்சுதா என்றார்.

"முடிஞ்சது. ஐயர் நாலு தேதி குறிச்சி கொடுத்து இருக்காரு. நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி நம்ம கல்யாண தேதியை வச்சுக்கலாம்"

"சரி"

"சக்தி உனக்கு ஃபோன் பண்ணாளா?"

"இல்லையே... அவ எனக்கு கால் பண்ணலையே. நீங்க இன்னும் ஐயர் வீட்ல தான் இருக்கீங்களா?"

"ஆமாம், இதோ வந்துடறேன்"

"சரி" என்று அழைப்பை துண்டித்தார் விசாலாட்சி.

விசாலாட்சியிடம் சக்தி வீட்டில் இல்லாத விஷயத்தை அருணாச்சலம் கூறவில்லை. கூறினால், அவர், லாபோதிபோ என கத்த துவங்குவார். சக்தியை அக்கம் பக்கத்தில் தேட துவங்கினார் அருணாச்சலம். ஆனால் எல்லோரும் சக்தியை பார்க்கவில்லை என்று கூறி விட்டார்கள். அது ஒரு பரபரப்பான தொடர் நாடகத்தின் நேரம் என்பதால் அனைவரும் தொலைக்காட்சியே கதி என்று இருந்தார்கள்.

அருணாச்சலத்தை பதட்டம் பீடித்தது. சக்தி எங்கே சென்றாள்? அவள் தேவையில்லாமல் சுற்றி திறியும் பெண் அல்லவே. என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை. வீட்டின் கதவு,à வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அதை நிச்சயம் சக்தி தான் செய்திருக்க வேண்டும். அப்படி என்றால், அவள் எங்கே போனாள்? அவளது தோழியின் வீட்டிற்கு சென்றிருப்பாளோ? அவளது தோழி யார் என்று கூட தெரியாதே... இப்பொழுது விசாலாட்சிக்கு என்ன பதில் கூறுவது? அவள் என்ன செய்யப் போகிறாளோ தெரியவில்லை என்ற பயத்துடன் வீட்டை நோக்கி சென்றார் அருணாச்சலம்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now