13 சந்தர்ப்பம்

954 60 9
                                    

13 சந்தர்ப்பம்

இதற்கிடையில்,

ருத்ரனை தேடி சேலம் வந்தடைந்தான் சிவா. ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக்கொண்டு ருத்ரனை தேட துவங்கினான். இறுதியில் ருத்ரன் தங்கி இருந்த ஹோட்டலை கண்டுபிடித்தான். காலதாமதம் செய்யாமல், அந்த ஹோட்டலை நோக்கி விரைந்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம் அளிக்கும் வண்ணம், ருத்ரன் அங்கு இருக்கவில்லை. அது அவனுக்கு எரிச்சலை தந்தது. ருத்ரன் அங்கு எவ்வளவு நாள் தங்கி இருந்தான் என்ற விவரம் மட்டும் தான் அவனுக்கு கிடைத்தது. ருத்ரனை எங்கே தேடுவது எப்படி தேடுவது என்று அவனுக்கு புரியவில்லை. ஓயாத அலைச்சலினால் சோர்ந்து போயிருந்த அவன், கட்டில் விழுந்தான்.

அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு பரமேஸ்வரனுடையது. சிவா எதுவும் கூறும் முன்,

"பெரிய மச்சானை பத்தி ஏதாவது தெரிஞ்சிதா சிவா?" என்றான் பரமேஸ்வரன்.

"உங்க பெரிய மச்சான் ஒன்னும் அவ்வளவு சுலபமான ஆள் இல்ல... அவன் சேலத்துலேயே இல்ல" என்றான் சிவா.

"என்ன சொல்றீங்க சிவா?" என்றான் பரமேஸ்வரன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம், நேத்து சாயங்காலம் தான் இங்கிருந்து ரூமை காலி பண்ணிக்கிட்டு போனானாம்"

"அது உண்மை தானா?" என்றான் பரமேஸ்வரன் நம்ப முடியாமல்.

"ஆமாம்"

"நிச்சயமா தெரியுமா?" என்று பரமேஸ்வரன் கேட்க, துணுக்குற்றான் சிவா.

ஆம்... ஒருவேளை ருத்ரன் அவனை திசைத்திருப்புவதற்காக கூட அப்படி செய்திருக்கலாம்.

"நான் மறுபடியும் செக் பண்ணி பார்க்கிறேன்" என்றான் சிவா.

"அதை சீக்கிரம் செய்யுங்க" என்றான் பரமேஸ்வரன்.

"சரிங்க மாமா" என்று அழைப்பை துண்டித்தான் சிவா.

சென்னை

சக்தியை தன் அறையில் விட்டுவிட்டு வெளியேறினான் ருத்ரன். அவன் செல்லட்டும் என்று காத்திருந்த சக்தி, ஓடி சென்று கதவை உள்புறம் தாளிட முயன்றாள். கதவை சாத்திக் கொண்டால், ருத்ரனாள் உள்ளே நுழைய முடியாது என்பது அவளது நினைப்பு. ஆனால் அவளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அந்த கதவில் தாழ்ப்பாளே இல்லை. அது கைப்பிடியை திருகி திறக்கும் கதவு. அதில் சாவியும் இருக்கவில்லை. குளியல் அறைக்குச் சென்று அதன் கதவை பரிசோதித்த போது, அதிலும் திருகு கைப்பிடி தான் இருந்தது. ஆனால் அவளுக்கு நிம்மதி அளிக்கும் வண்ணம், அதில் ஒரு சாவியும் பொருத்தப்பட்டு இருந்தது.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now