30 இது உண்மையா?

1K 68 8
                                    

30 உண்மையா?

வேகநடை நடந்து, கோபத்துடன் சக்தியை நோக்கி சென்ற ருத்ரன், அவளது மேற்கரத்தை பற்றி தன்னை நோக்கி திருப்பினான்.

"என்ன வேலை செஞ்சிருக்க சக்தி நீ? எதுக்காக இப்படி எல்லாம் செய்ற? நேத்து தானே எனக்காக விரதம் இருந்த...! இன்னைக்கு, தாலியை கழட்டி வச்சிட்டியா...? அப்புறம் நீ விரதம் இருந்ததுக்கு என்ன அர்த்தம்? இது தானா நீ இந்த கல்யாணத்துக்கு கொடுக்கிற மரியாதை? வாயை திறந்து பேசு சக்தி" என்று கோபமாய் கத்தினான் ருத்ரன்.

"எந்த ஒரு உறவுக்குமே நம்பிக்கை தான் அடித்தளம். நீங்க என்னை நம்பாத போது, நான் வேற என்ன செய்ய முடியும்?"

"தாலியை கழட்டி வைக்கிறதுக்கு பதில், என்னோட நம்பிக்கையை எப்படி சம்பாதிக்கிறதுன்னு நீ யோசிச்சிருக்கணும்..."

"அதைத் தான் நான் செய்றேன்... உங்களோட நம்பிக்கையை சம்பாதிக்க தான் நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுக்காக தான் இப்படி செஞ்சேன்"

"பேசிப் பேசியே என்னை சமாளிச்சிடலாம்னு நினைக்காத சக்தி"

"நான் பேசிப் பேசி உங்களை சமாளிக்க நினைக்கல. நீங்க தான் என் கழுத்துல தாலி கட்டுன அன்னைக்கு என்ன பேசினீங்கன்னு மறந்துட்டீங்க"

"நான் எதையும் மறக்கல"

"இல்ல, மறந்துட்டீங்க"

"நீ எதை பத்தி பேசுற சக்தி?" என்றான் தன் பொறுமையை மொத்தமாய் இழந்து.

"நான் தாலியை கழட்டினா, அன்னிக்கு நமக்கு முதல் ராத்திரியா இருக்கும்னு நீங்க சொன்னீங்க இல்ல?"

"ஐயோ, நீ அதைக் கழட்ட கூடாதுன்னு தான் நான் அப்படி சொன்னேன்..."

"அப்படின்னா நீங்க சொன்ன வார்த்தை நிஜம் இல்லையா?" என்றாள் அவனது கண்களை ஊடுருவி.

"நான் அப்படி..." மேலே பேசாமல் நிறுத்திய ருத்ரன், பெயர் கூற முடியாத ஒரு முக பாவத்துடன் அவளை ஏறிட்டான். அவளை இறுக்கமாய் பற்றி இருந்த அவனது கரங்கள் தளர்ந்தன.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now