26 அவனுக்காக

919 63 8
                                    

26 அவனுக்காக...

ருத்ரன் தன்னை தவறாக புரிந்து கொண்டதை எண்ணி மனம் வருந்தினாள் சக்தி. அதற்கு காரணம் அவளே தான். அதே நேரம், அவனுக்கு அவள் மீது  நம்பிக்கை வரவழைக்க வேண்டிய பொறுப்பு அவளுடையது தான் என்பதை அவள் உணர்ந்தாள்.

மதிய உணவிற்கு பிறகு, அவள் தங்கள் அறைக்குச் செல்லவில்லை. ருத்ரன் அவளுக்காகத் தான் காத்திருந்தான். அது அவளுக்கு தெரிந்திருந்தும் அவள் செல்லவில்லை. அது அவன் மீது இருந்த வருத்தத்தினால் அல்ல. அவள் ஒரு விஷயத்தை பற்றிய முடிவுக்கு வந்திருந்ததால். தன் கணவனுக்காக விரதம் இருப்பது என்பது தானே அவள் எடுத்த முடிவு. அது அவனுடைய நம்பிக்கையை பெறுவதற்காக அல்ல. அதை செய்ய வேண்டும் என்று அவள் மனதார விரும்பியதால்.

அந்த வீட்டின் காவலாளியிடம் வந்த சக்தி, அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். அவனும் தயக்கத்துடன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

"இங்க சும்மாவே உட்கார்ந்து இருக்க உங்களுக்கு போர் அடிக்கலையா?"

"பழகிடுச்சு மா"

"உங்க வீடு எங்க இருக்கு?"

"சென்னையில தான் இருக்கு"

"உங்களுக்கு குடும்பம் இல்லையா?"

"இருக்கு. அவங்களும் சென்னையில தான் இருக்காங்க"

"ஓ... நீங்க கல்யாணம் ஆனவரா?"

"ஆமாம் மா"

"அப்படியா? உங்க வைஃப் எப்படி இருக்காங்க? என்ன செய்றங்க?"

"நல்லா இருக்காங்க. அவங்க தான் குழந்தைகளை பாத்துக்குறாங்க"

"ஓ, எத்தனை குழந்தைங்க?"

"இரண்டு குழந்தைங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன்"

"அவங்களுக்கு என்ன வயசு?"

"பொண்ணுக்கு ஏழு வயசு, பையனுக்கு அஞ்சு வயசு"

"அப்படின்னா அவங்க ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிருக்கனுமே...?"

"ஆமாம். போறாங்க"

"நீங்க அவங்களை பார்க்க வீட்டுக்கு போறதில்லையா?"

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now